என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூஜை நடைபெற்றபோது எடுத்தபடம்.
    X
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூஜை நடைபெற்றபோது எடுத்தபடம்.

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 வடை மாலையுடன் தொடங்கிய பூஜை

    நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் நேற்று திறக்கப்பட்டு வழக்கமான பூஜை நடத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கொரோனா 2-ம் அலை காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத்தலங்களும் கடந்த மே மாதம் மூடப்பட்டன. தொற்று பாதிப்பு எண்ணிக்கை, தற்போது படிப்படியாக குறைந்து வருவதால், அரசின் நிலையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றி வழிபாட்டுத்தலங்களை நேற்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

    அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் நேற்று திறக்கப்பட்டு வழக்கமான பூஜை நடத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அந்த வகையில் நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலிலும் காலை 1,008 வடை மாலையுடன் பூஜை தொடங்கியது. பின்னர் சாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முககவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர் சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர். அர்ச்சனை பொருட்களை கோவிலுக்கு எடுத்து வர பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. சுமார் 1½ மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டாலும், பக்தர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.
    Next Story
    ×