என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் நேற்று கோவில், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பக்தர்கள் ஆர்வமுடன் சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதையொட்டி கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன.

    இதில்,புலியகுளம் மற்றும் ஈச்சனாரி விநாயகர் கோவில்கள், சித்தாபுதூர் அய்யப்பன் கோவில், கோனியம்மன், தண்டு மாரியம்மன், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் உள்பட அனைத்து கோவில்களும் நேற்று அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோபூஜை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. 2 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களின் உடல்வெப்ப நிலையை கண்டறிய மலைப்பாதை படிக்கட்டு அருகே தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் வைக்கப்பட்டது.

    அதில் பக்தர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் கிருமிநாசினி மருந்து மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு உள்ளே செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு ஆர்வமுடன் சென்று சாமி தரிசனம் செய்தனர். ஊரடங்கு தளர்வில் நேற்று முதல் நாள் கோவிலுக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருந்தது.இது போல் கோவில்களில் பூஜை பொருட்கள் கொண்டு வர பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. முகக்கவசம் அணிந்தவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    கோவையை அடுத்த காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆனி மாத தேய்பிறை ஏகாதசி முன்னிட்டு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற் றது. இதையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி சப்பரத்தில் வெண்பட்டு குடையுடன் கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதை தொடர்ந்து உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில் அர்ச்சகர் கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். காலை 6 மணி முதல் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை வரையும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
    வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு கைகழுவும் வசதி செய்யப்பட்டுள்ளதா? என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. புதிய ஊரடங்கு தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

    அதன் காரணமாக 70 நாட்களுக்கு பிறகு கோவில்களில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு கைகழுவும் வசதி செய்யப்பட்டுள்ளதா? என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிற வழிபாட்டு தலங்களிலும் பிரார்த்தனை நடைபெற்றது.

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6 மணி முதலே பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். வேலூர் கோட்டை மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு பிறகு கோட்டையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவிர மற்ற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.
    நாகராஜா கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், வடசேரி காசி விஸ்வநாதர் ஆலயம், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் மற்றும் சிறிய கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்து வருவதால் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நேற்று முதல் வழிபாட்டு தலங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டன.

    அதே போல குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதத்தினரின் வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில், தோவாளை முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    நாகர்கோவிலை பொறுத்த வரையில் நாகராஜா கோவில், ஒழுகினசேரி சோழராஜா கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், அழகம்மன் கோவில், வடசேரி காசி விஸ்வநாதர் ஆலயம், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் மற்றும் சிறிய கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    நாகராஜா கோவிலில் காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதே போல கிறிஸ்தவ ஆலயங்களிலும் பிரார்த்தனைகள் மற்றும் ஆராதனைகள் நடந்தன. அதே சமயம் கோவில்களில் அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் நடத்த அனுமதியில்லை. சாமி தரிசனம் செய்ய மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த அனுமதிக்கப்பட்டனர். காது குத்தவோ, பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபடவோ அனுமதி வழங்கப்படவில்லை.
    தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவியதை தொடர்ந்து வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 26-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் கோவில் கடற்கரை, நாழிக்கிணறு போன்ற பகுதிகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தினமும் பூஜைகள் மட்டும் நடந்தது.

    இந்த நிலையில் தமிழக அரசு நேற்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்கவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதி அளித்து ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது.

    இதையடுத்து, 70 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது.

    பின்னர் காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்ச தீபாராதனை, 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை, தொடர்ந்து ஏகாந்த தீபாராதனை நடந்தது.

    நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் அமர வைக்கப்பட்டனர்.

    கோவிலுக்குள் சென்று குறிப்பிட்ட அளவு பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியே வரவர, அங்கு அமர வைக்கப்பட்டிருந்த பக்தர்கள் கொஞ்சம் கொஞ்சம் பேராக உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த அனுமதிக்கப்பட்டனர். இதனால் அங்கு கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காது குத்தவோ, பக்தர்கள் தேங்காய் உடைத்து வழிபடவோ அனுமதி வழங்கப்படவில்லை.

    கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் கடற்கரை மற்றும் நாழிக்கிணறு பகுதிகள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், www.palanimurugan.hrce.tn.gov.in என்ற கோவில் இணையதள முகவரியில் தங்களுக்கான தரிசன முறை, தேதியை தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.
    உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவில் நாளை முதல் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி கோவிலில் கிருமிநாசினி தெளித்தல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே கோவிலுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவிலுக்கு வரும் பக்தர்கள், பழனி அடிவாரத்தில் இருந்து குடமுழுக்கு அரங்கம், படிப்பாதை வழியே மலைக்கோவிலுக்கு ஒருவழிப்பாதையாக செல்ல வேண்டும். முன்னதாக பக்தர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு இருந்தால் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். கோவிலுக்கு வரும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.

    மேலும் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், www.palanimurugan.hrce.tn.gov.in என்ற கோவில் இணையதள முகவரியில் இலவச, கட்டண தரிசனம் என தங்களுக்கான தரிசன முறை, தேதியை தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும். இணைய வசதி இல்லாதவர்கள், சாதாரண செல்போன் வைத்திருப்பவர்கள் 04545-242683 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெயர், முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண்ணை தெரிவித்து முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் தரிசனத்துக்கான தேதியில் ஒருநாள் முன்னதாக பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்து வரும் பக்தர்கள் கட்டாயம் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டும்.

    ஒரு மணி நேரத்துக்கு 1,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். பக்தர்கள் தேங்காய், பழம், பூ ஆகியவற்றை கொண்டுவர அனுமதியில்லை. காலபூஜை, அபிஷேகம் நடைபெறும்போது உபயதாரர்கள், பக்தர்கள் என யாரும் அமர்ந்து தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.

    கோவிலில் அன்னதானம் பொட்டலமாக வழங்கப்படும். அதேபோல் லட்டு, பஞ்சாமிர்தம், முறுக்கு, அதிரசம், சர்க்கரை பொங்கல் ஆகிய பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும். ஆனால் மேற்கண்டவற்றை கோவில் வளாகத்தில் அமர்ந்து உண்ணுவதற்கு அனுமதியில்லை.

    கோவிலில் மின்இழுவை ரெயில் மட்டும் நாளை முதல் செயல்படும். ரோப்கார் சேவை இல்லை. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக கோவிலில் வரையப்பட்டுள்ள குறியீட்டுகளில் நின்று தரிசனம் செய்ய வேண்டும். தங்கரதம், தங்கத்தொட்டில் ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை நிலையத்தில் தங்களது இருப்பிட விவரம், தொலைபேசி எண்ணை தெரிவிக்க வேண்டும். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் சாமி தரிசனம் மற்றும் முடிக்காணிக்கை செலுத்த வருவதை தவிர்க்க வேண்டும். மேலும் அரசின் கொரோனா விதிகளை பக்தர்கள் அனைவரும் முழுமையாக பின்பற்ற வேண்டும்.
    ‘அபரா’ என்பதற்கு ‘அபாரமான’, ‘அளவில்லாத’ என்று பொருள். இந்த அபரா ஏகாதசி விரதமானது அனைத்துவிதமான பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லாத செல்வத்தையும் அளிக்கக்கூடியது என்கின்றன புராணங்கள்.
    பெருமாளை வழிபடுவதற்கு உகந்த தினமாக ஏகாதசி திதி உள்ளது. தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக, ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும். சில நேரங்களில் வருடத்திற்கு 25 ஏகாதசிகள் வருவதும் உண்டு. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் ஆனி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசி, ‘அபரா ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஏகாதசி தினத்தில் நோன்பை கடைப்பிடித்து இறைவனை வழிபாடு செய்து வந்தால், சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

    ‘அபரா’ என்பதற்கு ‘அபாரமான’, ‘அளவில்லாத’ என்று பொருள். இந்த அபரா ஏகாதசி விரதமானது அனைத்துவிதமான பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லாத செல்வத்தையும் அளிக்கக்கூடியது என்கின்றன புராணங்கள்.

    அம்பரீஷன் எனும் மன்னன் திருமாலின் அதிதீவிர பக்தன். வருடம் முழுவதும் தவறாமல் ஏகாதசி விரதமிருந்து விஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்து அருளைப் பெற்று வந்தான். ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதமிருந்து, அதை முடிக்கும் தறுவாயில் துர்வாச முனிவர் அங்கு வந்துவிட்டார். விரத வேளையிலும் துர்வாச முனிவரை ஓடிச்சென்று வரவேற்ற மன்னன், அவரை உணவருந்த அழைத்தான். முனிவரும் அம்பரீஷனின் வேண்டுகோளை ஏற்று நதியில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், நீராடப்போன துர்வாச முனிவர் குறித்த நேரத்துக்குள் திரும்பி வரவில்லை. விரத காலம் முடிவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து, உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஏகாதசி விரதத்தின் பலனைப் பெறமுடியாமல் போய்விடும். இதனால், மன்னன் திருமாலை நினைத்தபடியே துளசி தீர்த்தத்தை அருந்தி தனது உபவாசத்தை முடித்துக்கொண்டான்.

    இதைத் தனது ஞான சக்தியால் அறிந்த துர்வாசர், கடும் கோபம் கொண்டு தனது தலைமுடியைப் பிடுங்கி ஆயுதமாக்கி எறிந்தார். அது பூதமாக மாறி மன்னனைத் துரத்தத் தொடங்கியது. மன்னன் திருமாலின் பாதங்களைச் சரணடைந்தான். திருமால், தன் பக்தனைக் காக்க சக்கராயுதத்தை ஏவினார். சக்கராயுதம் துர்வாச முனிவர் ஏவிய பூதத்தை அழித்துவிட்டு அவரையும் விரட்டியது. வேறு வழியில்லாமல் திருமாலிடமே சரணடைந்தார் துர்வாசர். திருமால், “என் பக்தனுக்கே நான் அடிமை. என் பக்தன் உன்னை மன்னித்தால் நானும் உன்னை மன்னிக்கிறேன்” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

    துர்வாசர் வேறு வழியின்றி, அம்பரீஷனிடம் சென்று மன்னிப்பு கேட்டார். மன்னன் சக்கரத்தாழ்வாரிடம் வேண்டி அவரைக் காப்பாற்றினான். அன்றைய தினத்தில் அம்பரீஷன் மேற்கொண்ட விரதம்தான் ‘அபரா ஏகாதசி’ விரதம். அந்த விரதம் அவனைக் காப்பாற்றியதுடன் அளவற்ற செல்வத்தையும், புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. துர்வாச முனிவரும் அபரா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, திருமால் பக்தனைத் தாக்க பூதத்தை ஏவிய தனது பாவத்தைப் போக்கிக்கொண்டார்.

    அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து திருமாலை, திரிவிக்ரமர் (உலகளந்த திருக்கோலம்) உருவத்தில் வழிபட்டால், எல்லா வளங்களும் வந்து சேரும். அவர்கள் இல்லங்களைத் தேடிவந்து லட்சுமி தேவி அருள்புரிவாள். லட்சுமி கடாட்சம் நிறையும், செல்வ வளமும் சேரும்.
    கிணத்துக்கடவு அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு விதிகளை கடை பிடிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது.
    கிணத்துக்கடவு அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன், விநாயகர் கோவில் உள்ளது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், இன்று (புதன்கிழமை) முதல் வழிபாட்டு தலங்களுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இது குறித்து கோவில் செயல் அலுவலர் சுந்தர்ராஜ் கூறியதாவது:-

    கோவில்களுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு விதிகளை கடை பிடிக்க இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்களுக்கு கோவிலுக்குள் அனுமதி இல்லை. மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
    ராமேசுவரம் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2 மாதத்திற்குமேல் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் செல்ல தடை அமலில் இருந்து வந்தது. ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் யாரும் தரிசனத்திற்கும், தீர்த்தத்தில் நீராடுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கொரோனா பெருமளவில் குறைந்து வருவதன் எதிரொலியாக இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    இந்து சமய அறநிலையத் துறை மூலம் அதிகாரப்பூர்வமாக தீர்த்த கிணறுகள் திறப்பது குறித்து எந்த ஒரு உத்தரவும் இது வரை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் உத்தரவு வரும் வரையில் தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திருக்கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
    சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள்.

    விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, வழிபாடு செய்ய பின்னர் இந்த மந்திரத்தை செல்ல வேண்டும்.

    மந்திரம்: ‘ஓம் நமோ பகவதே மஹா சுதர்சனாய நமஹ’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
    ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள் காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    கொரோனா தொடர் ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிப்பாட்டு தலங்களில் இயல்பாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    அந்த வகையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) என்பதாலும், அதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள் காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பஸ் போக்குவரத்து இல்லாத காரணத்தால், கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் வந்த ஏராளமான பக்தர்கள், கடந்த இரு தினங்களாக நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம். செய்தனர். பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளி குறைவாகவே காணப்பட்டது. அடுத்து வரும் நாளில் பஸ் போக்குவரத்து இருக்கும் என்பதால், சமூக இடைவெளியை கோவில் நிர்வாகம் கண்காணித்து தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ஊரடங்கில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டதால் இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர்.
    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வழிபாட்டுத்தலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பக்தர்கள் அனுமதியின்றி வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன.

    இந்நிலையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டதால் இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை, காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

    பூஜை பொருட்கள் கொண்டு வர அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக கோவில் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும் என்றும் சாமிகளுக்கு நடைபெறும் பூஜைகள் மட்டும் தொடரும் என்றும் இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்றும் அரசு அறிவித்து இருந்தது.

    இதன் காரணமாக சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடை சாத்தப்பட்டது. இரண்டாம் அலையின் காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கடந்த வாரம் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து தொடங்கியது.

    இதற்கிடையே கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி தளர்வுகள் அமல்படுத்த உத்தரவிடப்பட்டது. இதில் கோவில்களிலும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும் என்றும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு ஆகியவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை இன்று (திங்கட் கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி கோவில் கொடிமரம் மற்றும் பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வளாகம், பக்தர்கள் தங்கும் மண்டபம், முடிகாணிக்கை மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் கோவில் பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.

    மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்யப்படும் என்றும், முககவசம் அணிந்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே சமூக இடைவெளியை கடைப்பிடித்து கோவிலுக்குள் சென்று அம்மனை வழக்கம் போல் காலை 5.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதேபோல், ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
    ×