என் மலர்
ஆன்மிகம்

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவரை பக்தர்கள் தரிசனம் செய்வதை படத்தில் காணலாம்.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த பக்தர்கள்
வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு கைகழுவும் வசதி செய்யப்பட்டுள்ளதா? என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. புதிய ஊரடங்கு தளர்வுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
அதன் காரணமாக 70 நாட்களுக்கு பிறகு கோவில்களில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு கைகழுவும் வசதி செய்யப்பட்டுள்ளதா? என மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பிற வழிபாட்டு தலங்களிலும் பிரார்த்தனை நடைபெற்றது.
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 6 மணி முதலே பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். வேலூர் கோட்டை மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு பிறகு கோட்டையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவிர மற்ற இடங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.

Next Story