என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போன்ற பிரச்சனைகள் உடனே நீங்கும்.
    அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல் சிலருக்கு இருக்கும் அப்படிபட்டவர்கள்

    ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய |
    தேவ தானவ யக்ஷ ராக்ஷஸ பூத ப்ரேத பிசாச|
    டாகினி சாகினி துஷ்ட க்ரஹ
    பந்தனாய ராமதூதாய ஸ்வாஹா ||

    இம்மந்திரத்தை மனதுக்குள் ஜெபிக்க அவை உடனே நீங்கும். உங்களுக்கு படுபட்சி இல்லாத நல்ல நாளாகத் தேர்ந்தெடுத்து ஒரு நல்ல வெற்றிலையில் செந்தூரம் கொண்டு “ஹ்ராம்” என்று எழுதி இம்மந்திரத்தை 1008 உரு ஜெபித்து அந்த வெற்றிலையைச் சுருட்டித் தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் அணிந்து கொள்ள பூத, ப்ரேத, பிசாசு, துர்சக்திகளின் பாதிப்புகள் நிரந்தரமாக நீங்கும்.

    தனி நபருக்கு இல்லாமல் ஒரு வீடு, கடை, தொழிற்சாலை போன்றவற்றுக்கு துஷ்ட சக்திகளால் பாதிப்பு என்றால் மேற்கண்ட வெற்றிலையை ஒரு சிகப்புத் துணியில் முடிந்து வீடு, கடை, தொழிற்சாலை வாசலில் கட்டி வைக்கவும்
    கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி மதுரை மீனாட்சி அம்மன், கள்ளழகர் கோவில்களில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிப்படுகிறார்கள்.
    தமிழகத்தில் இன்று முதல் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி வழிபாட்டுத்தலங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத்தலங்கள் தயார்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோவில், இம்மையிலும் நன்மை தருவார் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், கூடலழகர் பெருமாள் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில், திருமோகூர் காளமேக பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

    இதுகுறித்து மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்காக இன்று காலை 6 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தரிசனத்திற்கு அம்மன் சன்னதி கிழக்கு நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ரூ.100, ரூ.50 விரைவு தரிசன கட்டணசீட்டு பெறும் பக்தர்கள் தெற்கு கோபுர நுழைவு வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேற்கு மற்றும் வடக்கு நுழைவுவாயில் வழியாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். கோவிலின் தெற்கு, கிழக்கு அம்மன் வாசலில் வெப்பநிலை பரிசோதனைக்குப்பின் கிருமி நாசினியை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திய பின்பே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    10 வயதிற்கு குறைவானவர்கள், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க கேட்டு கொள்ளப்படுகிறது. கோவிலில் நடக்கும் காலபூஜைகள் மற்றும் அபிஷேகங்களை காண பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு எந்த ஒரு இடத்திலும் உட்கார அனுமதி கிடையாது. பக்தர்கள் கோவிலுக்குள் தேங்காய், பழம், கொண்டு தடை செய்யப்பட்டுள்ளது. அர்ச்சனை செய்வதற்கு அனுமதி இல்லை. கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கும் வழக்கம்போல் நிர்வாகத்தின் மூலம் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். கூடலழகர் பெருமாள் கோவிலில் காலை 7 மணி முதல் பிற்பகல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
    ஊரடங்கு தளர்வுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படுகின்றன. இதையொட்டி வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு, அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டன. கோவில்களுக்குள் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வழிபாட்டு தலங்களில் வழிபட அனுமதி இல்லாத காரணத்தால் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர். எப்போது வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பிலேயே மக்கள் இருந்து வந்தனர்.

    தற்போது கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை இன்று (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தி உள்ளது.

    அதன்படி வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து வழிபாட்டு தலங்கள் அனைத்தும் இன்று திறக்கப்பட உள்ளது. நாகை மாவட்டத்தில் உலக பிரசித்திப்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, நாகை நெல்லுக்கடை மாரியம்மன்கோவில், நீலாயதாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளன.

    இந்த வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட இருப்பதால், மக்கள் அதிக எண்ணிக்கையில் திரள வாய்ப்பு உள்ளது. எனவே வழிபாட்டு தலங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அதன்படி வேளாங்கண்ணி பேராலயம் உள்பட பெரும்பாலான வழிபாட்டு தலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும் இரும்பிலான தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    புகழ்பெற்ற நாகூர் தர்கா இன்று திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு நேற்று அங்கு தூய்மை பணிகள் நடந்தன. தொழுகை பந்தல் அமைக்கும் பணியும் நடந்தது. தர்காவின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள தூண்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதேபோல வழிபாட்டு கூடம், ஆண்டவர் சமாதி செல்லும் வழி, பக்தர்கள் அமரும் இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன.

    நாகை மாவட்ட வழிபாட்டு தலங்களில் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையாக வந்து வழிபாடு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்குள் செல்லும்போது கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.
    தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று (திங்கட்கிழமை) முதல் சாமி தரிசனம் செய்யலாம் என தமிழக அரசு ஊரடங்கு தளர்வு அறிவித்துள்ள நிலையில் பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் செல்ல வனத்துறை தொடர்ந்து தடை விதித்துள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிப்பது குறித்து அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை.

     எனவே சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றனர்.
    இயேசு கிறிஸ்து தம் பணி வாழ்வில், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” (மாற்கு 4:9) என்று அழைப்பு விடுத்தார். காது கேளாமலும் பேச முடியாமலும் இருந்த சிலருக்கு இயேசு நலம் அளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.
    இயேசு கிறிஸ்து தம் பணி வாழ்வில், “கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” (மாற்கு 4:9) என்று அழைப்பு விடுத்தார். காது கேளாமலும் பேச முடியாமலும் இருந்த சிலருக்கு இயேசு நலம் அளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.

    பேய் பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர். (மத்தேயு 9:32-33)

    பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர். அவர் பார்வையற்றவரும் பேச்சற்றவருமாக இருந்தார். இயேசு அவரைக் குணமாக்கினார். பேச்சற்ற அவர் பேசவும் பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது. திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய், “தாவீதின் மகன் இவரோ?” என்று பேசிக்கொண்டனர். (மத்தேயு 12:22-23)

    இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்தில் இருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.

    பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள்.

    அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , “இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!” என்று பேசிக்கொண்டார்கள். (மாற்கு 7:31-37)
    80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரியகோவில் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
    கொரோனா 2-வது அலை காரணமாக தஞ்சை பெரிய கோவில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி மூடப்பட்டது.

    அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கோவிலில் தினமும் 4 கால பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தன. இதே போல் பெரியகோவிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கும் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்று வந்தது.

    இந்த நிலையில் தமிழகத்தில் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நினைவு சின்னங்கள், வழிபாட்டு தலங்கள் திறக்க அரசு அனுமதி அளித்ததையடுத்து, தஞ்சை பெரிய கோவில் இன்று (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் வழிபாட்டுக்காக திறக்கப்படுகிறது. 80 நாட்களுக்கு பிறகு பெரிய கோவில் திறக்கப்பட உள்ளதால் பெருவுடையார் சன்னதி, பெரியநாயகி அம்மன் சன்னதி மற்றும் வராகி அம்மன் சன்னதி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கருவூரார், முருகன் சன்னதிகள் ஆகிய சன்னதிகளுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 2 அடி இடைவெளி விட்டு வட்டம் வரையப்பட்டு உள்ளது. பக்தர்கள் வந்து செல்வதற்கு வசதியாக 2 வழிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    கோவிலுக்குள் வரும் பக்தர்கள் அனைவருக்கும் நுழைவு வாயிலில் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டு வெப்ப பரிசோதனையும் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முககவசம் அணிந்து வரும் பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அனுமதி கிடையாது. மேலும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு தளர்வினால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    கொரோனா தொற்றின் 2-ம் அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி மீண்டும் ஊரடங்கு உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. அதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுர நுழைவு வாயில்கள் மூடப்பட்டது. இருப்பினும் கோவிலில் சாமிக்கு ஆகம விதிகளின் படி பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கோவில்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    அதைத்தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று கோவிலில் தங்க கொடி மரம், நந்தி, உள்ளிட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

    கோவிலில் பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக சாமியையும், அம்மனையும் தரிசனம் செய்து விட்டு கோவில் பின் வழியாக சென்று திருமஞ்சன கோபுர வாசல் வழியாக வெளியே செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு பக்தர்கள் சமூக இடைவெளியுடன் செல்லும் வகையில் வட்டமிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கோவில் வளாகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்றது. நாளை கோவில்கள் திறப்பையொட்டி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் அமர்வு தரிசனம் செய்யவும், அர்ச்சனை செய்யும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கோவிலில் அமர்வு தரிசனத்திற்கும், அர்ச்சனை செய்யவும் தடை செய்யப்பட்டு உள்ளது என்று கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
    இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது. கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. இதேபோல் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது.

    இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றுநோய் குறைந்து வருவதையொட்டி பஸ் போக்குவரத்து கடந்த வாரம் தொடங்கியது. இதைதொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் கோவில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் இன்று (திங்கட்கிழமை) சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக கோவில்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவில், சந்திப்பு கைலாசநாதர் கோவில், குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில், நெல்லை சந்திப்பு சாலை குமாரசாமி கோவில், பாளையங்கோட்டை சிவன் கோவில், மேலவாசல் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சுத்தப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    நெல்லையப்பர் கோவிலில் சமூக இடைவெளியை கடைபிடித்து செல்லவேண்டும் என்பதற்காக பக்தர்கள் வரிசையில் செல்ல தடுப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் உள்ள செடி, கொடிகளை வெட்டி ஊழியர்கள் நேற்று சீரமைத்தனர். கோவில் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவிலின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கோவிலில் ஆங்காங்கே சானிடைசர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் கிறிஸ்தவ ஆலயங்களும், பள்ளிவாசல்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன.

    இதையொட்டி அங்கும் தூய்மை பணி நடைபெற்றது. கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.
    ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் 21 பேர் தலைமையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு அறிவிப்பின்படி வெளியாட்கள் மற்றும் யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் 847-ம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நேற்று மிக எளிமையாக நடந்தது. மாலை 6.45 மணி அளவில் ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாவுதீன் ஆலிம் தலைமையில் மவுலிது ஓதப்பட்டு இரவு 10 மணி அளவில் மகான் சுல்தான் செய்யது இப்ராகிம் ஷஹீதின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் 21 பேர் தலைமையில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பெரும் தொற்று காரணமாக தமிழக அரசு அறிவிப்பின்படி வெளியாட்கள் மற்றும் யாத்திரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை. முன்னதாக உலக நன்மைக்காகவும் உலக மக்களுக்காகவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து வருகிற 11-ந்் தேதி மாலை 5 மணி அளவில் கொடி இறக்கப்படும் என்று ஹக்தார்கள் தெரிவித்துள்ளனர்.

    தர்கா உள்புறம் வெளியாட்கள் அனுமதிக்கப்படாததால் வெளியூர்களில் இருந்து வந்த யாத்திரீகர்கள் தர்கா நுழைவாயில் முன்பு காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
    சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    சென்னை

    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டன.

    அதே வேளையில் கோவில்களை திறந்து அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று ஆகம விதிப்படி, வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் மிகுந்த ஏமாற்றத்தில் இருந்து வந்தனர்.

    ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் இன்று (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் முழுமையாக திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதிகாலையிலேயே கோவில்களில் திரண்ட திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடித்து வழிபாடு செய்து வருகின்றனர்.

    வழிபாடு செய்த பக்தர்கள்

    கோவில் நுழைவு வாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை சரிபார்க்கப்பட்டு கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்கும் அனுமதிக்கப்படுகின்றனர்.

    மேலும் பக்தர்கள் பூ, பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வர அனுமதி கிடையாது. விபூதி, குங்குமம் ஆகியவை பிரசாத தட்டில் வைக்கப்பட்டு இருக்கும். அதை பக்தர்கள் எடுத்துக்கொள்ளலாம். கொரோனா தடுப்பு விதிகளை பக்தர்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது,

    சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன்  கோவில்பழனி முருகன் கோவில்திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு தனி வழியும், செய்யாதவர்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ராமேஸ்வரம் கோவிலில் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    அதே போல் வேளாங்கண்ணி பேராலயத்தில் நடந்த சிறப்பு திருப்பலியில் பக்தர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
    இந்த கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வதற்கு 908 படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோவிலில் உள்ள கோமதேஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேகம் நடத்தப்படும்.
    புகழ்பெற்ற கோமதேஸ்வரர் ஆலயம், கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம் சரவணபெலகோலாவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் ஆன 57 அடி உயர கோமதேஸ்வரர் சிலை பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இங்குள்ள சிலையின் வடிவமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை. வித்யகிரி என்று அழைக்கப்படும் குன்றின் மீது இந்த பிரமாண்டமான கோமதேஸ் வரர் சிலை நிறுவப்பட்டு உள்ளது.

    இந்த கோவிலுக்கு மேலே ஏறிச் செல்வதற்கு 908 படிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த கோவிலில் உள்ள கோமதேஸ்வரர் சிலைக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேகம் நடத்தப்படும். அப்போது கோமதேஸ்வரர் சிலைக்கு மஞ்சள், குங்குமம் என பல்வேறு அபிஷேகங்கள் நடைபெறும்.

    இந்த திருவிழா 20 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கோமதேஸ்வரரை வழிபடுகிறார்கள். இங்குள்ள கோமதேஸ்வரரின் சிலையின் கலைநயம் உலகில் வேறு எங்குமில்லை.

    எனவே சிறந்த ஆன்மிக தலமான இதன் புகழ் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கிறது. ஹாசனில் இருந்து 54 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோவில் உள்ளது. அதுபோல, பெங்களூருவில் இருந்து துமகூரு மாவட்டம் குனிகல், எடியூர் வழியாக காரில் பயணம் செய்தால் 2 மணி நேரம் 40 நிமிடத்தில் இக்கோவிலை சென்றடையலாம்.
    அனைத்து வழிபாட்டு தலங்களும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறக்கப்படுகின்றன. ஆனால் பூஜை பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தது. பக்தர்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

    ஆனால் கோவில்களில் அந்தந்த பணியாளர்கள் மட்டும் சென்று வழக்கமான பூஜைகளை செய்து வந்தனர். வழிபாட்டு தலங்கள் திறக்கப்படாமல் இருந்ததால் பக்தர்கள் கவலையில் இருந்தனர்.

    இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) முதல் தமிழகத்தில் இந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் உள்பட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள கோவில்கள், மசூதிகள், கிறிஸ் தவ ஆலயங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் பணிகள் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகி றது.

    இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கோவை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 273 கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்ய 5 -ந் தேதி (நாளை) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். கோவில் நுழைவு வாயிலில் உள்ள கிருமி நாசினியால் பக்தர்கள் கைகளை சுத்தம் செய்து விட்டு உள்ளே வர வேண்டும்.

    பக்தர்களின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் மூலம் சரி பார்க்க ப்படும். இதில், உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பூ, பழம், மாலை உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வர அனுமதி கிடையாது. சாமி தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அபிஷேகத்தின் போது பக்தர்கள் கோவிலுக்குள் அமர அனுமதிக்கப் பட மாட்டார்கள். விபூதி, குங்குமம் ஆகியவை பிரசாத தட்டில் வைக் கப்பட்டு இருக்கும். அதை பக்தர்கள் எடுத்துக்கொள்ளலாம். கொரோனா தடுப்பு விதிகளை பக்தர்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இபோல மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்களிலும் வழிபாடு நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
    ×