என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருச்செந்தூர் ஆலயத்தை திருப்பணி செய்து பலம் மிக்கதாக மாற்றியவர்கள் 5 அடியார்கள். அவர்களில் மூவருக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே சமாதி உள்ளது.
    பெரும்பாலான ஆலயங்கள், கடற்கரையில் இருந்து கொஞ்சம் தொலைவிலேயே அமைக்கப்பட்டிருக்கும். கட்டிடத்தின் பலம் கருதியும் இதுபோல் செய்வார்கள். ஆனால் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோவில், கடற்கரையில் இருந்து வெறும் 67 மீட்டர் தொலைவில்தான் அமைந்திருக்கிறது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோவிலின் ராஜகோபுரம் இருப்பதும் கடற்கரையில் இருந்து வெறும் 140 மீட்டரில்தான்.

    எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோவிலின் கருவறை. இது தரைமட்டத்தில் இருந்து 15 அடியும், கடல் மட்டத்தில் இருந்து 10 அடியும் தாழ்வான இடத்திலும் அமையப்பெற்றுள்ளது. திருச்செந்தூர் பற்றிய தகவல்கள், சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. அதன்படி இந்த ஆலயம் கட்டப்பட்டு சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதைக் கட்டியவர்கள் யார் என்று தெரியவில்லை என்றாலும், இந்த ஆலயத்தை திருப்பணி செய்து பலம் மிக்கதாக மாற்றியவர்கள் 5 அடியார்கள். அவர்களில் மூவருக்கு திருச்செந்தூர் ஆலயத்தின் பகுதியிலேயே சமாதி உள்ளது. மற்ற இருவருக்கும் வேறு இடங்களில் சமாதி இடம்பெற்றுள்ளது. அந்த ஐவரைப்பற்றி சிறிய குறிப்பாக இங்கே பார்க்கலாம்.

    மவுனசுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி, வள்ளி நாயக சுவாமி, தேசிய மூர்த்தி சவாமி. இவர்கள் ஐவர் தான், திருச்செந்தூர் கோவிலின் திருப்பணியைச் செய்தவர்கள். இதில் முதல் மூன்று நபர்கள்தான், ஆலயத்தின் ராஜகோபுரத்தைக் கட்டியவர்கள் என்று சொல்லப்படுகிறது.

    முதல் மூவர்களான மவுன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவில் அருகிலேயே இருக்கிறது. அதாவது கோவிலில் எதிரில் சற்று தூரம் சென்றால் நாழிக்கிணறு இருக்கும். இது முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட நன்னீர் ஊற்று என்று புராணம் சொல்கிறது. இந்த நாழிக்கிணற்றின் தெற்கேதான், மவுன சுவாமி, ஆறுமுக சுவாமி, காசி சுவாமி ஆகியோரின் சமாதி அமைந்திருக்கிறது.

    நான்காவதாக, வள்ளிநாயகசுவாமியின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவில் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்தில் இருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது. ஐந்தாவதாக, தேசிய மூர்த்தி சுவாமியின் ஜீவசமாதியை தரிசிக்க, திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்ல வேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அங்குதான், தேசிய மூர்த்தி சுவாமிகளின் ஜீவ சமாதி உள்ளது.

    முதல் மூன்று அடியார்களின் ஜீவசமாதியை பெரும்பாலானவர்கள் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் மற்ற இருவரின் ஜீவ சமாதியை பலரும் அறிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை என்பதுதான் உண்மை. அடியாருக்கு அடியாரான முருகப்பெருமானின், கோவில் திருப்பணி செய்தவர்களை தரிசிக்கும் அந்த நல்ல வாய்ப்பை அனைவரும் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
    செய்யாற்றில் கயிலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் பல யுகங்களைக் கடந்தவர் என்று சொல்லப்படுகிறது.
    போளூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் கலசப்பாக்கம் என்ற ஊரில் உள்ள செய்யாற்றின் பாலத்தைக் கடந்து 3 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை சென்றடையலாம்.

    இங்கு கயிலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் பல யுகங்களைக் கடந்தவர் என்று சொல்லப்படுகிறது. எனவே யுகத்தின் கணக்குகளுக்கு உட்படாத லிங்க மூர்த்தி என்று இத்தல இறைவனை சிறப்பிக்கிறார்கள்.

    இறைவன்- கயிலாசநாதர், இறைவி- கனகாம்பிகை. இந்த திருத்தலத்திற்குச் செல்வதற்கு பார்வதிக்கு, மகாவிஷ்ணு வழிகாட்டினாராம். இதனால் இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாளுக்கும் சன்னிதி அமைந்துள்ளது.

    இதன் காரணமாகவும் இந்த ஊருக்கு ‘தென்பள்ளிப்பட்டு’ என்ற பெயர் வந்தது என்கிறார்கள். ஈசனை வணங்கி வந்த, ஸ்ரீமத் சபாபதி ஞானதேசிகர் சுவாமிகளின் சமாதி இங்கு அமைந்துள்ளது.
    சோழவந்தான் என்ற ஊரில் இருந்து வாழைப்பழம் வாங்கி அங்கிருந்து தலைச்சுமையாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
    மதுரை அடுத்த உசிலம்பட்டிக்கு அருகில் உள்ளது கோவிலாங்குளம். இங்கு பட்டசாமி தொண்டியாபிள்ளைசாமி கோவில் உள்ளது.

    இங்கு மாட்டுப் பொங்கல் அன்று வாழைப்பழத் திருவிழா நடைபெறும். அன்று வாழைப்பழம் சமர்ப்பிப்பார்கள்.

    சோழவந்தான் என்ற ஊரில் இருந்து வாழைப்பழம் வாங்கி அங்கிருந்து தலைச்சுமையாக கோவிலுக்கு கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    வீட்டுக்கு ஒருவர் வாழைப்பழம் எடுத்துவர வேண்டும். வழிபாட்டிற்கு பின்னர், வாழைப்பழம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
    திங்கட்கிழமை இரவில் மட்டும் நடைதிறந்து வழிபாடு செய்யப்படும் இந்தக் கோவிலில், வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பகலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும்.
    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது, பரக்கலக் கோட்டை. இங்கு பொது ஆவுடையார், மத்தியபுரீஸ்வரர் என்ற பெயர் கொண்ட இறைவனின் தலம் உள்ளது.

    இங்கே வெள்ளால மரமாகவே இறைவன் காட்சி தருகிறார். சோமவாரத்தில் முனிவர்களுக்கு உபதேசித்ததால் அன்று பூஜை நடக்கிறது.

    சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்த பிறகு ஈசன் இங்கு வந்தால், இரவு 10.30 மணி முதல் 12 மணி வரை பூஜை நடக்கும்.

    திங்கட்கிழமை இரவில் மட்டும் நடைதிறந்து வழிபாடு செய்யப்படும் இந்தக் கோவிலில், வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பகலில் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். அது தைப் பொங்கல் திருநாள்.
    திருவெண்ணீற்று உமையம்மை உடனாய சிவலோகத் தியாகர் ஆலய அம்மன் சன்னிதியில் விபூதியே முதன்மை பிரசாதமாக உள்ளது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது ஆச்சாள்புரம். இங்கு திருவெண்ணீற்று உமையம்மை உடனாய சிவலோகத் தியாகர் கோவில் இருக்கிறது.

    இந்த ஆலயத்தில்தான் தனது மனைவி தோத்திரப் பூர்ணாம்பிகை (சொக்கியார்) மற்றும் உறவினர்களுடன் திருஞானசம்பந்தர் தன்னுடைய 16-வது வயதில் சிவஜோதியில் ஐக்கியமானார்.

    இந்த திருமணத்திற்கு வந்த அனைவருக்கும், இத்தல அம்பாள் பாரபட்சமின்றி திருநீறு கொடுத்து ஜோதியினுள் புகச் செய்ததால், இந்த ஆலய அம்மன் சன்னிதியில் விபூதியே முதன்மை பிரசாதமாக உள்ளது.

    சிலருக்கு மட்டும் எந்த ஒரு வேலை, தொழிலில் நிரந்தரமாக இல்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள். இவற்றிற்கான காரணங்களும், அதை நிவர்த்திக்கும் பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    நிறைந்த வேலை, தொழில், வியாபாரம் போன்றவை அமைத்து நல்ல பொருள் வரவு கிடைக்க மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் பூர்வீக சொத்துக்கள் உருவாக காரணமாக இருக்கும் கிரகங்களான “சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி” கிரகங்களுக்குரிய கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபட்டு வர வேண்டும். வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒரு சனிக்கிழமையாவது நவகிரக சந்நிதியில், ஒன்பது கிரகங்களுக்கும் தீபம் ஏற்றி வழிபடுவது உங்களின் கிரக தோஷங்களை போக்கும். தினந்தோறும் விநாயக பெருமானை வழிபட்டு வந்தாலும் நன்மைகள் உண்டாகும்.

    வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று, படையல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டாலே உங்களுக்கு பல விதமான நன்மைகள் ஏற்பட தொடங்கும். மேற்கூறிய பரிகாரங்களை செய்ய முடியாதவர்கள் உங்களுக்கு வரும் வருமானத்தில், உங்களால் முடிந்த அளவு தொகையை சேமித்து, மாத இறுதியில் கோவில்களுக்கு சென்று அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் யாசகர்களுக்கு உணவு பொட்டலங்களை தானமாக வழங்கினால் உங்களின் தோஷங்கள் விலகி, நீங்கள் விரும்பிய விடயங்கள் நிறைவேற தொடங்கும்.

    நீங்கள் யாரை குருவாக ஏற்றுக்கொண்டு இருக்கிறர்களோ அவருக்கு ஒரு மஞ்சள் வேஷ்டி ஒரு துண்டு குரு பெண் ஆக இருந்தால் மஞ்சள் நிற சேலை மற்றும் காலணி
    (செறுப்பு) இவற்றை தானமாக அளித்து அவரிடம் ஆசி பெற நல்ல உத்யோகம் அல்லது தொழில் அமையும்.

    மஞ்சள் நிற புஷ்பராக கல் தங்க மோதிரத்தல் பதித்து வலது கை நடுவிரலில் அணிந்து கொண்டால் வேலை வாய்ப்புகள் தேடி வரும் தொழில் சிறக்கும்

    தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.

    கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

    கீழ்கண்ட நட்சத்திரங்களில் அவற்றிற்குரிய தெய்வங்களை உள்ளன்போடு வழிபட்டால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நடக்கும் செயல்கள் நல்லதாகவே நடைபெறும்.
    ஓணத்தில் விஷ்ணு,

    ஓர்ஆதிரையில் சிவன்,

    தேனான புனர்பூசம் ஸ்ரீராமன்,

    திருப்பூரம் ஆண்டாள்,

    மேலான கண்ணன் ரோஹிணி,

    மிகுதொண்டன்

    வாலுள்ள அனுமன் மூலம்,

    வழிபட்டால் வளர்ச்சியுண்டாம்

    என்பது ஒரு பாடல்.

    அந்த அடிப்படையில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நட்சத்திரங்கள் வருமாறு:

    விஷ்ணு-திருவோணம், சிவன்-திருவாதிரை, நரசிம்மர்-சுவாதி, ராமபிரான்-புனர்பூசம், கிருஷ்ணர்-ரோகிணி, ஆண்டாள்-பூரம், ஆதிசேஷன்-ஆயில்யம், ஆஞ்சநேயர்-மூலம், ஸ்ரீரங்கநாதர்-ரேவதி.

    மேற்கண்ட
    நட்சத்திரங்களில் அவற்றிற்குரிய தெய்வங்களை உள்ளன்போடு வழிபட்டால் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். நடக்கும் செயல்கள் நல்லதாகவே நடைபெறும்.
    பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்ப்பவர்களுக்கு நாம் குளிப்பது தெரியாது.
    தஞ்சாவூர் மாவட்டம் தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர் கோவில், கட்டிடக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த ஆலயங்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலின் நுழைவு வாசலில் உள்ள நந்தி அருகே இசைப்படிகள் இருக்கும். இந்தப் படிகளைத் தட்டினால் ‘சரிகமபதநிச’ என்ற சுவரங்கள் தோன்றுவதை கேட்கலாம்.

    கோயம்புத்தூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வெள்ளியங்கிரி மலை. இது ‘தென் கயிலாயம்’ என்றும் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 3500 அடி உயரத்தில் இருக்கும் வெள்ளியங்கிரி மலையின் உச்சியில், சிவபெருமானின் பஞ்சவாத்திய ஒலி கேட்பதாக சொல்கிறார்கள்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர். இங்கு நூற்றி ஒன்று சாமிமலை குகை உள்ளது. இந்த குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு இருக்கிறது. இதில் இளநீர் விட்டு தீபம் ஏற்றினால், அது பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.

    சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவிலில், மூலவர் மீது காலை, மதியம், மாலை என மூன்று வேளைகளிலும் சூரிய ஒளி படும் அதிசயம் நிகழ்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது சுசீந்திரம். இங்கு சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் ஓர் உருவாக இருக்கும் தாணுமாலயன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள ஒரு சிற்பத்தின் ஒரு பக்க காது வழியாக குச்சியை நுழைத்தால், மறு காது வழியாக வரும்.

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது, கங்கைகொண்ட சோழபுரம். இங்கு தஞ்சை பெரிய கோவில் போன்றே, மிக பிரமாண்டமாக கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் இருக்கிறது. இதனை தஞ்சை கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலே இருந்து பார்ப்பவர்களுக்கு நாம் குளிப்பது தெரியாது.

    சேலம் அருகே உள்ள தாரமங்கலத்தில் பெருமாள் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தின் ஒரு தூணில் ராமர் வில்லோடு இருப்பது போன்ற சிற்பம் காணப்படுகிறது. அங்கிருந்து பார்த்தால், மற்றொரு தூணில் வாலியும், சுக்ரீவனும் சண்டையிடுவது போன்ற சிற்பம் இருப்பதைக் காணலாம். ஆனால் வாலி இருக்கும் தூண் அருகில் நின்று பார்த்தால், ராமர் வில்லோடு இருக்கும் சிற்பத்தைக் காண முடியாது. புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு செதுக்கப்பட்டுள்ள இந்த அபூர்வ சிற்ப முறையை நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.
    மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமாக இந்த ஸ்ரீசக்கரம் விளங்குகின்றது. உலகை காத்தருளும் அம்பிகையானவள், ஈசனோடு சேர்ந்து மகா மேருவில் வீற்றிருப்பவள்.
    அம்பாளின் திருத்தலங்கள் பலவற்றில், ஸ்ரீசக்கரம் அமைக்கப்பட்டிருப்பதை நாம் அறிந்திருப்போம். இந்த ஸ்ரீசக்கரங்களை அம்பிகையின் திருக்கோவில்களில் பிரதிஷ்டை செய்தவராக ஆதிசங்கரரை நாம் பார்க்கிறோம். அம்பிகையின் உக்கிரத்தை தணிப்பதற்காக, சிவபெருமானால் உருவாக்கப்பட்டது, இந்த ஸ்ரீசக்கரம் என்று சொல்லப்படுகிறது. ஒன்பது கட்டுகள் கொண்ட அமைப்பாக இந்த ஸ்ரீசக்கரம் காணப்படுகிறது. நம் பார்வைக்கு சாதாரணக் கோடுகளும், முக்கோணங்களுமாகத் தெரியும் இந்த ஸ்ரீசக்கரம், அம்பிகையின் சர்வ சக்தியும் பொருந்தியதாக திகழ்கிறது.

    ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும், அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர். மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் உபாயமாக இந்த ஸ்ரீசக்கரம் விளங்குகின்றது. உலகை காத்தருளும் அம்பிகையானவள், ஈசனோடு சேர்ந்து மகா மேருவில் வீற்றிருப்பவள். எனவே அந்த மகாமேருவின் உருவத்தையே இந்த ஸ்ரீசக்கரத்திலும் பொறிக்கிறார்கள். அன்னையின் அருளைப் பெற, ஸ்ரீ சக்கர வழிபாடே சிறந்தது என்கிறது தேவி புராணம்.

    ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில், ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன.

    பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது.

    கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன்பாகவும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன்பு உள்ள மகாமேரு, சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது.

    ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன்பு இருக்கும் ஸ்ரீசக்கரத்தை, ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

    சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரத்தால் தணிக்கப்பட்டது.

    திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி தன்னுடைய ஒரு காதில் ஸ்ரீசக்கர தாடங்கத்தையும், மற்றொரு காதில் சிவசக்கர தாடங்கத்தையும் அணிந்துள்ளார்.

    கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம், அந்த அன்னையின் முன்பாக ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ஸ்ரீசக்கரம் தான்.

    சென்னை-காளிகாம்பாள் ஆலயத்திலும் ஸ்ரீசக்கரம் நிறுவப்பட்டுள்ளது.

    சென்னை-திருவல்லிக்கேணி அனுமந்தலாலா தெருவில் உள்ள காமகலா காமேஸ்வரி சன்னிதியிலும் ஸ்ரீசக்கரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை-நங்கநல்லூரில் ராஜராஜேஸ்வரி ஆலயம் உள்ளது. இங்கு திதி நித்யா தேவிகளின் சக்கரங்களும், விக்கிரகங்களும் இரு புறமும் இருக்க, 16 படிகளின் மேல் மகாமேருவுடன் வீற்றிருக்கிறாள், அன்னை.

    திருப்போரூர் முருகன் ஆலய பிராகாரத்தில் சிதம்பர சுவாமிகள் நிறுவிய சக்கரத்தை தனி சன்னிதியில் தரிசிக்கலாம்.

    தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூர் பாதையிலுள்ள பண்ருட்டிக்கண்டிகை தலத்தில் பூரணமகாமேருவிற்கு இருபுறங்களிலும் வராஹி, மாதங்கி மற்றும் திதி நித்யா தேவியர் பதினைந்து பேரும் எந்திர வடிவாக அருள்கிறார்கள்.

    திருச்சி மலைக்கோட்டையில் சுகந்த குந்தளாம்பாளின் சன்னிதி ஸ்ரீசக்கர வடிவில் அமைந்திருக்கிறது.

    மன்னார்குடி ராஜகோபாலன், தேவியின் அம்சமான கோபாலசுந்தரியாக விளங்குகிறார். அதனால் அவர் திருவடிகளில் ஸ்ரீசக்கரம் வைத்து வழிபடப்படுகிறது.

    திருவிடைமருதூரில் மூகாம்பிகை முன்பு மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தேவி உபாசகரான பாஸ்கரராயர் பூஜித்தது இந்த மகாமேரு.

    புன்னைநல்லூர் மாரியம்மனின் முன்பாகவும் ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. இதனை பிரதிஷ்டை செய்தவர், சதாசிவபிரம்மேந்திரர் என்ற மகான்.
    பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களுக்குச் சென்று ஈசனுக்கும், நந்திக்கும் அர்ச்சனை செய்து, அங்கு நடைபெறும் அபிஷேகங்களைக் கண்ணார கண்டுகளித்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
    வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் வரும் திரயோதசி திதி அன்று மாலை வேளையில் பிரதோஷம் கொண்டாடப்படுகிறது. இது சிவபெருமானுக்கும், அவரது வாசல் காப்பாளனாக இருக்கும் நந்திக்கும் நடைபெறும் அற்புத வழிபாடாகும். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டி, திருப்பாற்கடலைக் கடைந்த போது கடலுக்குள் இருந்து முதலில் வெளிப்பட்டது, ஆலகால விஷம். அந்த விஷம் உலக உயிர்களை துன்புறுத்தாமல் இருப்பதற்காக, சிவபெருமானே அதை அருந்திவிட்டார்.

    அது அவரது கழுத்துப் பகுதியில் போய் நின்றுகொண்டது. அதனால் அவர் கழுத்து நீல நிறமாக மாறியது. இதனாலேயே அவர் நீலகண்டன் என்ற பெயரையும் பெற்றார். விஷத்தை அருந்தியதால் சற்றே மயக்க நிலைக்குச் சென்ற சிவபெருமான், மயக்கம் தெளிந்து நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த நடனம் புரிந்தார். அவர் நடனம் ஆடிய அந்த தினம் திரயோதசி திதி ஆகும். நேரம் மாலை 4.30 முதல் 6 மணி வரையான பிரதோஷ காலம். இதனாலேயே பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கிறது.

    பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களுக்குச் சென்று ஈசனுக்கும், நந்திக்கும் அர்ச்சனை செய்து, அங்கு நடைபெறும் அபிஷேகங்களைக் கண்ணார கண்டுகளித்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பிரதோஷ தினம், சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வருவது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. சோமவாரம் எப்போதுமே சிவபெருமானுக்கு உகந்த தினமாகும். அந்த நாளில் வரும் பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால், பல கோடி புண்ணியத்தை பெறலாம் என்கிறார்கள்.

    பிரதோஷங்களில் மொத்தம் 20 வகை இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றின் பெயர்களை இங்கே நாம் பார்ப்போம்.

    1. தினசரி பிரதோஷம்

    2. பட்சப் பிரதோஷம்

    3. மாதப் பிரதோஷம்

    4. நட்சத்திரப் பிரதோஷம்

    5. பூரண பிரதோஷம்

    6. திவ்யப் பிரதோஷம்

    7. தீபப் பிரதோஷம்

    8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்

    9. மகா பிரதோஷம்

    10. உத்தம மகா பிரதோஷம்

    11. ஏகாட்சர பிரதோஷம்

    12. அர்த்தநாரி பிரதோஷம்

    13. திரிகரண பிரதோஷம்

    14. பிரம்மப் பிரதோஷம்

    15. அட்சரப் பிரதோஷம்

    16. கந்தப் பிரதோஷம்

    17. சட்ஜ பிரபா பிரதோஷம்

    18. அஷ்ட திக் பிரதோஷம்

    19. நவக்கிரகப் பிரதோஷம்

    20. துத்தப் பிரதோஷம்
    கே.வி.குப்பம் அருகே கெங்கையம்மன் கோவில் திருவிழா மிக எளிமையான முறையில் நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
    கே.வி.குப்பம் தாலுகா வேப்பங்கனேரி கிராமத்தில் 129-ம் ஆண்டாக கெங்கையம்மன் திருவிழா மிக எளிமையான முறையில் நடந்தது. விழாவையொட்டி அம்மன் சிரசு பிள்ளையார் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டு கெங்கையம்மன் கோவிலில் அலங்கரித்து வைத்திருந்த அம்மன் உடலில் பொருத்தப்பட்டு கண்திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை நடந்தது. விழாவையொட்டி பக்தா்களுக்கு அன்னதானம், அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. கே.வி.குப்பம் போலீசார் மேற்பார்வையில் திருவிழா நடந்தது.

    ஏற்பாடுகளை விழா குழுவினர் வேப்பங்கநேரி கிராம மக்கள் உதவியோடு செய்திருந்தனர்.
    தேய்பிறை அஷ்டமியையொட்டி திருவாதவூர் சனீஸ்வர பகவான் கோவிலில் குபேர கால பைரவர், தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காலபைரவர், எஸ்.ஆலங்குளம் கற்பகவிநாயகர் கோவிலில் கால பைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.
    தேய்பிறை அஷ்டமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

    தேய்பிறை அஷ்டமியையொட்டி திருவாதவூர் சர்வமங்கள சனீஸ்வர பகவான் கோவிலில் குபேர கால பைரவர், தெற்குமாசி வீதி காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் காலபைரவர், எஸ்.ஆலங்குளம் கற்பகவிநாயகர் கோவிலில் கால பைரவருக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    அதன் பின்னர் பைரவர் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.

    கொரோனா பரவல் தொற்று காரணமாக கோவில் நடை அடைக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த வழிபாட்டில் கோவில் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
    ×