என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி மலர் மாலைகள் சூழ வெள்ளி கவசத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.

    அதே போல் ஆனிமாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இதனை முன்னிட்டு நேற்று  ஆனி மாத வெள்ளிக்கிழமையொட்டி சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி சந்தனம், தேன், பன்னீர், பால் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.

    அதனையடுத்து சுவாமி மலர் மாலைகள் சூழ வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.
    நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனிக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும்.
    நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கத்தை பொருத்துதான் ஒருவரின் ஆயுள் காலத்தை நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துபவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட உகந்த நாட்கள்.

    சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து குளித்து முடித்த பின்னர் நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமோ நாராயணாய என்று உச்சரித்து விரதத்தை ஆரம்பிக்கலாம். அன்றைய தினம் முழுவதும் உணவு அருந்தாமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்துவிட்டு பெருமாளை வணங்கிய பின்பு எப்போதும் போல உணவுகளை உண்ணலாம்.

    அருகில் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாளின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.

    ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து விரதம் கடைபிடித்து வந்தால் சனி பகவானின் முழு அருளும் கிடைக்கப்பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை வழங்குவார். 

    புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.

    இப்படி விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். ஜாதகத்தில் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, சனிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.
    வாடிப்பட்டி 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
    வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி கால பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.

    இந்த சிறப்பு பூஜையில் அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டு கால பைரவர் வெள்ளி கிரீட அலங்காரத்திலும், வடை மற்றும் ரோஜா, மல்லிகை மாலையோடும் அருள்பாலித்தார்.

    மேலும் ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி நடந்த பூஜையினை கோவில் நிர்வாகி கோபிநாத் செய்திருந்தார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று (சனிக்கிழமை) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதியில்லை.
    ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 23-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் ரெங்கநாதருக்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி தாயார் சன்னதி மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் பெருமளவில் சாதம் பரப்பி வைக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகளை கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதி இல்லை.
    இயேசு கிறிஸ்து கலிலேயக் கடல் மீது நடந்து சென்றதாக நற்செய்திகளில் வாசிக்கிறோம். நற்செய்தியாளர்கள் மாற்கு, மத்தேயு ஆகியோர் இந்நிகழ்வை எடுத்துரைக்கும் விதத்தை இங்கு காண்போம்.
    இயேசு தம் சீடரை உடனே படகேறித் தமக்கு முன் அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினார். அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு, இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார். பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது. ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார். அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, “அது பேய்” என்று எண்ணி அவர்கள் அலறினார்கள். ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்; பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள். (மாற்கு 6:45-51)

    இயேசு சீடரை உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினார். மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. இரவின் நான்காம் காவல்வேளையில் இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு அவர்களிடம், “துணிவோடிருங்கள். நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார்.

    பேதுரு அவருக்கு மறுமொழியாக, “ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார். அவர், “வா” என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, “ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார். அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர். (மத்தேயு 14:22-33)

    பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியை அடுத்த தாடகை மலை அடிவாரம் ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகை காலசம் ஹார பைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியை அடுத்த தாடகை மலை அடிவாரம் ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகை காலசம் ஹார பைரவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலசம்ஹார பைரவர்அருள்பாலித்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
    சனிபகவானின் தண்டனையில் இருந்து விடுபட அவரிடம் மனமுருகி வேண்டி கீழே உள்ள மந்திரத்தை சனிக்கிழமை அன்று ஜபித்து வாருங்கள். இதோ அந்த மந்திரம்.
    சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்:

    சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
    சச்சரவின்றி சாகா நெறியில்
    இச்சகம் வாழ இன்னருள் தா தா!!

     சனிக்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று நவகிரக சந்நிதியில் இந்த மந்திரத்தை ஜபித்து மனதார வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும். அதோடு உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு உதவுங்கள். நாம் பிறருக்கு உதவினால் நிச்சயம் இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு உதவுவார்.

     சனிக்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று நவகிரக சந்நிதியில் இந்த மந்திரத்தை ஜபித்து மனதார வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும். அதோடு உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு உதவுங்கள். நாம் பிறருக்கு உதவினால் நிச்சயம் இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு உதவுவார்.

    சனி மூல மந்திரம்:

    ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ

    சனி பகவான் மூல மந்திரத்தை 40 நாட்களில் 19000 முறை ஜபித்தால் நிச்சயம் சனிபகவானின் கோவத்தில் இருந்து விடுபடலாம்.
    முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.
    திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது. முருக பக்தரான அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலமும் கோயிலும் புகழோங்கித் திகழ்ந்திருந்தன என்பது திண்ணம்.

    தவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பே வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் "மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே" என்று பாடியுள்ளார்.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் "கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்" என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர்கொண்டு பூசித்தான் என்பது தலவரலாறு.

    முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.

    தேவர்களின் அச்சம் தணிந்த இடம். முனிவர்கள் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்ததாகவும் கூறப்படுகிறது.

    தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும் ஒரு பொருளாதலின், "அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை" என்று கொள்ளுதலும் பொருந்தும்.
    ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
    ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 23-ந்தேதி தொடங்கி 2 நாட் கள் ரெங்கநாதருக்கு நடை பெற்றது.

    இதனை தொடர்ந்து இன்று தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு கருட மண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான் தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு கோவில் வழக்கப்படி அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

    பின்னர் காவிரி ஆற்றில் 1 தங்கக்குடம், 28 வெள்ளிக்குடங்களில் புனிதநீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 6.30 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனித நீர் கோவில் யானை ஆண்டாள் மீது வைத்தும், வெள்ளிக்குடங்களை திருமஞ்சன ஊழியர்கள், ஸ்ரீ பாதம் தாங்கிகள், நாச்சியார் பரிஜனம் ஆகியோர் தோளில் சுமந்தும் கோவிலை வந்தடைந்தனர்.

    பின்னர் தாயார் சன்னதிக்கு காலை 9.30 மணிக்கு புனித நீர் எடுத்துவரப்பட்டு மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச் சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

    முன்னதாக தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ரெங்கநாச்சியார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன.

    இதையடுத்து பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பி ராணி, அகில், வெட்டி வேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் ஸ்ரீதேவி, பூதேவி மீது பூசப்பட்டது.

    ஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    நாளை (3-ந்தேதி) தாயார் சன்னதியில் திருப்பாவடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனையொட்டி தாயார் சன்னதி மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப் பட்ட துணியில் பெருமளவில் சாதம் பரப்பி வைக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

    இந்தாண்டு கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
    உங்கள் வீட்டில் நெகடிவ் எனர்ஜி இருப்பதை எப்படி அறிந்து கொள்வது என்பதையும், நெகடிவ் எனர்ஜி குறைய செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    உங்கள் வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் நிரப்பி முழு எலுமிச்சம்பழத்தை அதில் போட எலுமிச்சை மிதந்தால் நெகடிவ் ஆற்றல் இல்லை எனவும், மூழ்கி போனால் நெகடிவ் எனர்ஜி உள்ளதாகவும் கொள்ளலாம்.

    வீட்டில் நெகடிவ் எனர்ஜி குறைய செய்ய வேண்டிய பரிகாரங்கள்...

    1. தினமும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுதல்
    2. சாம்பிராணியுடன் குங்க்லியம் சேர்த்து தூபம் போடுதல்
    3. கோமியத்துடன் கோமுக நீர் கலந்து வீடு முழுவதும் தெளித்தல்
    4. பழைய பொருட்களை அகற்றுதல்
    5. ஓடாத கடிகாரங்களை சரிபார்த்தல்
    6. ஒழுகும் பைப்புகளை சரி செய்தல்
    குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்
    பிரம்மா , விஷ்னு , சிவன் இம்மூவரை வணங்கும் போது , சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும். மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும். குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும். அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.

    பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும். தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும். மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும். ஆனால் பெண்கள் , மாதா , பிதா , குரு , தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது!
    இயேசு கிறிஸ்துவின் பணி வாழ்வில் அவர் செய்த மாபெரும் அற்புதமாக மக்கள் மனதில் நின்றது, அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்து ஆயிரக்கணக்கானோருக்கு உணவளித்த நிகழ்வாகும்.
    இயேசு கிறிஸ்துவின் பணி வாழ்வில் அவர் செய்த மாபெரும் அற்புதமாக மக்கள் மனதில் நின்றது, அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்து ஆயிரக்கணக்கானோருக்கு உணவளித்த நிகழ்வாகும். அவர் இத்தகைய அற்புதத்தை இரண்டு முறை செய்ததாக நற்செய்திகள் எடுத்துரைக்கும் நிகழ்வுகளை இங்கு காண்போம்.

    இயேசு செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். இயேசு நிமிர்ந்து பார்த்து பெருந்திரளான மக்கள் தம்மிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார்.

    இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். (யோவான் 6:2-14)

    அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள். உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை. இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம், “நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன். ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள். உண்பதற்கும் இவர்களிடம் எதுவும் இல்லை. நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் தளர்ச்சி அடைவார்கள். இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்” என்று கூறினார். அதற்கு அவருடைய சீடர்கள், “இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?” என்று கேட்டார்கள்.

    அப்போது இயேசு அவர்களைப் பார்த்து, “உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?” என்று கேட்டார். அவர்கள் “ஏழு” என்றார்கள். தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்; பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு, பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க, அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள். சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன. அவற்றின்மீது அவர் ஆசிகூறிப் பரிமாறச் சொன்னார். அவர்கள் வயிறார உண்டார்கள். மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள். (மாற்கு 8:1-8)
    ×