என் மலர்
ஆன்மிகம்

வெள்ளி கவசத்தில் சித்தர் முத்துவடுகநாதர்
வெள்ளி கவசத்தில் சித்தர் முத்துவடுகநாதர்
சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி மலர் மாலைகள் சூழ வெள்ளி கவசத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதே போல் ஆனிமாத வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இதனை முன்னிட்டு நேற்று ஆனி மாத வெள்ளிக்கிழமையொட்டி சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி சந்தனம், தேன், பன்னீர், பால் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடைபெற்றது.
அதனையடுத்து சுவாமி மலர் மாலைகள் சூழ வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.
Next Story






