search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குலதெய்வ வழிபாடு
    X
    குலதெய்வ வழிபாடு

    நிரந்தர வேலை, தொழில் அமைய பரிகாரம்

    சிலருக்கு மட்டும் எந்த ஒரு வேலை, தொழிலில் நிரந்தரமாக இல்லாமல் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பார்கள். இவற்றிற்கான காரணங்களும், அதை நிவர்த்திக்கும் பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    நிறைந்த வேலை, தொழில், வியாபாரம் போன்றவை அமைத்து நல்ல பொருள் வரவு கிடைக்க மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் மற்றும் பூர்வீக சொத்துக்கள் உருவாக காரணமாக இருக்கும் கிரகங்களான “சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி” கிரகங்களுக்குரிய கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்து வழிபட்டு வர வேண்டும். வாரந்தோறும் அல்லது மாதத்தில் ஒரு சனிக்கிழமையாவது நவகிரக சந்நிதியில், ஒன்பது கிரகங்களுக்கும் தீபம் ஏற்றி வழிபடுவது உங்களின் கிரக தோஷங்களை போக்கும். தினந்தோறும் விநாயக பெருமானை வழிபட்டு வந்தாலும் நன்மைகள் உண்டாகும்.

    வருடத்திற்கு ஒரு முறையாவது உங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று, படையல் வைத்து பூஜைகள் செய்து வழிபட்டாலே உங்களுக்கு பல விதமான நன்மைகள் ஏற்பட தொடங்கும். மேற்கூறிய பரிகாரங்களை செய்ய முடியாதவர்கள் உங்களுக்கு வரும் வருமானத்தில், உங்களால் முடிந்த அளவு தொகையை சேமித்து, மாத இறுதியில் கோவில்களுக்கு சென்று அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் யாசகர்களுக்கு உணவு பொட்டலங்களை தானமாக வழங்கினால் உங்களின் தோஷங்கள் விலகி, நீங்கள் விரும்பிய விடயங்கள் நிறைவேற தொடங்கும்.

    நீங்கள் யாரை குருவாக ஏற்றுக்கொண்டு இருக்கிறர்களோ அவருக்கு ஒரு மஞ்சள் வேஷ்டி ஒரு துண்டு குரு பெண் ஆக இருந்தால் மஞ்சள் நிற சேலை மற்றும் காலணி
    (செறுப்பு) இவற்றை தானமாக அளித்து அவரிடம் ஆசி பெற நல்ல உத்யோகம் அல்லது தொழில் அமையும்.

    மஞ்சள் நிற புஷ்பராக கல் தங்க மோதிரத்தல் பதித்து வலது கை நடுவிரலில் அணிந்து கொண்டால் வேலை வாய்ப்புகள் தேடி வரும் தொழில் சிறக்கும்

    தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.

    கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

    Next Story
    ×