என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில்
    X
    திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில்

    திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் கோ பூஜையுடன் நடைதிறப்பு

    திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதசாமி கோவிலில் கோ பூஜை செய்து கோவில் நடை திறக்கப்பட்டது. கோவிலில் அர்ச்சனை, அபிஷேகம் நடைபெறவில்லை.
    திருவாடானை சிநேகவள்ளி சமேத ஆதிரெத்னேசுவரர் கோவில் திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதசாமி கோவில் உள்பட தாலுகாவில் பிரசித்தி பெற்ற தீர்த்தாண்ட தானம், தொண்டி, எஸ்.பி.பட்டினம், புல்லூர் உள்பட பல்வேறு ஊர்களில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டன.

    பக்தர்கள் கோவில்களில் மனம் உருக சாமி தரிசனம் செய்தனர். திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதசாமி கோவிலில் கோ பூஜை செய்து கோவில் நடை திறக்கப்பட்டது. சுவாமி, அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றன. கோவிலில் அர்ச்சனை, அபிஷேகம் நடைபெறவில்லை.

    கோவில் ஸ்தானிகம், மணிகண்ட குருக்கள் பக்தர்களுக்கு விபூதி, குங்குமம் போன்ற அருட்பிரசாதங்களை வழங்கினார். சிவகங்கை தேவஸ்தான சரக கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆலய கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×