என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
ஆடி மாதத்தில் கிராம காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனார், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.
* ஆடி மாதம் பிறந்ததும் தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும். இது மார்கழி மாதம் வரை நீடிக்கும். இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விசேஷமானது.
* ஆடி மாதத்தில் கிராம காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், ஐயனார், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.
* ஆடி மாதத்தில்தான், ‘ஆடித் தபசு’ கொண்டாடப்படும். ‘அரியும் சிவனும் ஒன்றே' என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.
* ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பலன் கிடைக்கும்.
* ஆடி பவுர்ணமி தினத்தன்றுதான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

யானையின் பசிக்கு ஒரு கரும்புத் தோட்டமே தேவைப்படும். ஆனால் எறும்புக்கு கரும்பின் சிறிய சக்கை பாகமே போதுமானது.
ஒரு மனிதன், இறைவனை வேண்டினான். “என்னுடைய வாழ்க்கையில் அனைத்துமே துன்பமாகத்தான் இருக்கிறது. இன்பத்தையே என்னால் காண முடியவில்லை. இப்படியொரு வாழ்க்கையை எனக்கு எதற்காகக் கொடுத்தாய்?” என்று கேட்டான்.
அவன் முன்பாகத் தோன்றிய இறைவன், “உனக்கு நான் ஒரு வாழ்க்கையைக் கொடுத்திருக்கிறேன். அதனை இன்பமானதாக மாற்றிக்கொள்வது உன் கையில்தான் இருக்கிறது. அதற்கான முயற்சியைத்தான் நீ எடுக்க வேண்டுமே தவிர, என்னை குறை கூறுவதால் என்ன பயன்” என்று கேட்டார்.
“இறைவா.. தாங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லை. கொஞ்சம் புரியும்படியாக விளக்குங்கள்” என்றான், அந்த மனிதன்.
உடனே இறைவன், அங்கே ஒரு அறையை உருவாக்கினார். அந்த அறை முழுவதும் கண்ணாடிகளால் ஆனதாக இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்ணாடிகள் நான்கு புறங்களிலும், மேற்பகுதியிலும் அமைக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு ஒரு சிறுமியை அழைத்து வந்த இறைவன், அந்த அறைக்குள் அச்சிறுமியை அனுப்பி வைத்தார். அறைக்குள் சென்ற சிறுமிக்கு மனம் குதூகலித்தது. ஏனெனில் அந்த அறையில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்ணாடிகளிலும் தன்னுடைய உருவமே தெரிவதைக் கண்டு அவள் ஆனந்தக் கூத்தாடினாள். அவளை வெளியே அழைத்து வந்த இறைவன், “உள்ளே சென்றாயே.. உனக்கு எப்படி இருந்தது?” என்று கேட்டார்.
அதற்கு அந்தச் சிறுமி, “இந்த அறையைப் போல ஒரு மகிழ்ச்சியான இடத்தை இதுவரை நான் பார்த்ததில்லை” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
இறைவன் இப்போது ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனை அழைத்து வந்தார். அவனையும் அந்த அறைக்குள் அனுப்பி வைத்தார். அறைக்குள் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட மனிதன், அந்த அறைக்குள் கண்ணாடியால் பிரதிபலிக்கப்பட்ட தன்னைப் போன்ற ஆயிரம் மனிதனையும் கண்டு மிரண்டு போனான். கத்தி கூப்பாடு போட்டான். தனக்கு ஏதோ பெரிய ஆபத்து வந்துவிட்டதாக கருதினான். என்ன செய்வதென்று தெரியாமல், தன்னைச் சுற்றி இருந்த உருவங்களைத் தாக்க கையை ஓங்கினான். கண்ணாடி அதையும் பிரதி பலித்தது. ஆயிரம் உருவங்களும் இணைந்து, அவனைத் தாக்க வந்தன.
கொஞ்ச நேரத்தில் அவனை வெளியே அழைத்த இறைவன், “இந்த அறையைப் பற்றி நீ என்ன நினைக் கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “இந்த இடத்தைப் போல துன்பகரமான இடத்தை நான் இதுவரை பார்த்ததில்லை” என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து ஓடினான்.
இப்போது இறைவன், தன்னிடம் வேண்டிய மனிதனை நோக்கி, “பார்த்தாயா.. அறை ஒன்றுதான். ஆனால் அங்கு சென்றவர்களின் மனநிலைக்கு ஏற்ப, அது இன்பத்தையும், துன்பத்தையும் வழங்குகிறது. நான் எல்லோரையும் போலத்தான் இந்த பூமியில் உன்னையும் படைத்திருக்கிறேன். அதை இன்பமாக மாற்றிக்கொள்வதும், துன்பகரமானதாக ஆக்கிக்கொள்வதும் உன் செயலால் நடைபெறுபவை.
யானையின் பசிக்கு ஒரு கரும்புத் தோட்டமே தேவைப்படும். ஆனால் எறும்புக்கு கரும்பின் சிறிய சக்கை பாகமே போதுமானது. உனக்கு கரும்பு தோட்டம் கிடைத்தால், நீ யானையாக வாழலாம். ஆனால் உனக்கு கிடைத்திருப்பது கரும்பின் சக்கைதான். ஆகையால் நீ எறும்பாக மாறினால்தான் இன்பத்தைக் காண முடியும்” என்றார்.
மனம் தெளிவடைந்த மனிதன், தன்னுடைய செயலால் இன்பம் காண, தன் அன்றாட கடமைகளை சரிவரச் செய்ய கிளம்பினான்.

அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்துக்கு, முடிசூட்டு விழா நடைபெற இருந்தது. பிரம்மச்சாரியான ஒருவர் சூட்டினால்தான், அவனது தலையில் மணிமுடி நிற்கும் என்ற விதி இருந்தது.
மகாவிஷ்ணு ஏராளமான அவதாரங்களை எடுத்திருந்தாலும், அவற்றுள் குறிப்பிடத்தக்க அவதாரங்கள்தான் ‘தசாவதாரம்’ என்று போற்றப்படுகிறது. அதேபோல அவருக்கு எண்ணற்ற திருநாமங்கள் இருந்தபோதிலும், குறிப்பிட்ட 12 திருநாமங்களே சிறப்புக்குரியவையாக போற்றப்படுகின்றன.
கேசவன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், நாராயணன், ரிஷிகேசன், வாமனன், ஸ்ரீதரன், தாமோதரன், பத்மநாபன். இவைதான் அந்த 12 திருநாமங்கள்.
இந்த 12 திருநாமங்களிலும் ‘கோவிந்தன்’ என்ற திருநாமம் மிகச்சிறப்பு வாய்ந்தது. இதற்கு ‘ஆசையில்லாதவன்’ என்று பெயர். மனதளவில் பிரம்மசாரி ஆனவன் என்று பொருள்.
‘கோபியர்களுடன் பல லீலைகள் புரிந்தவன் எப்படி பிரம்மச்சாரியாவான்?’ என்ற கேள்விதான் பலரது மனதில் எழும். இங்கே லீலை என்பது, ‘விளையாட்டை’ குறிக்கும். கோபியர்களுடன் கண்ணன் ஆடிப்பாடி மகிழ்ந்திருந்தபோது, அவனுக்கு வயது 9. அந்த பாலகனின் வயதில் அவனது விளையாட்டு, சிறு குழந்தைக்குரிய செயல்பாட்டு அளவிலேயே இருக்கும் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், கண்ணனை அந்த 9 வயதில் வாலிபனைப் போல் சித்தரிக்கக்கூடாது.
திரவுபதிக்கு, துரியோதன சபையில் அவமானம் நடந்தபோது, அவள் கிருஷ்ணனை ‘கோவிந்தா..’ என்று கூறித்தான் அழைத்தாள். அதனால்தான் கிருஷ்ணன், அந்த சபைக்கு நேரடியாக வந்து திரவுபதிக்கு உதவவில்லை. வெறும் ஆடையை மட்டும் அனுப்பி அவளது மானத்தைக் காத்தான். நேரடியாக வந்தால், துரியோதன சபையில் இருப்பவர்களைப்போலவே, கண்ணனும் திரவுபதி மானத்தை இழந்து நிற்கும் அந்த அலங்கோல காட்சியைக் காண நேரிடும். அதுமட்டுமின்றி அந்த நேரத்தில், திரவுபதிக்கு தேவைப்பட்டது அவளது மானத்தைக் காப்பதற்கான ஆடை மட்டுமே. ஆகையால்தான் கண்ணன், அந்த சபைக்கு நேரடியாக வராமல் தன்னுடைய அருளால் ஆடையை மட்டும் அவளுக்கு வழங்கினான்.
அர்ச்சுனனின் பேரனான பரீட்சித்துக்கு, முடிசூட்டு விழா நடைபெற இருந்தது. பிரம்மச்சாரியான ஒருவர் சூட்டினால்தான், அவனது தலையில் மணிமுடி நிற்கும் என்ற விதி இருந்தது. அப்போது அதை சூட்டியவர் கிருஷ்ணன்தான்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா வருகிற 2-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது.
திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தையொட்டி 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம்.
விழாவில் தினந்தோறும் இரவு பெருமாளும், ஆண்டாளும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10-ம் திருவிழா அன்று மாலை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இந்த விழா வருகிற 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. முன்னதாக முதல் நாள் 1-ந்தேதி மாலையில் பூர்வாங்க பூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மறுநாள் காலையில் பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி கொடியேற்றத்துடன் விழா மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிகளின்படி விழா நடைபெறும். 10 நாட்களும் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது. தினந்தோறும் இரவு கோவில் உள்பிரகாரங்களில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனா விதிமுறைகளின்படி 10-ம் நாள் நடைபெறும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா வருகிற 1-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடி திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா வருகிற 1-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி 17-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி நேற்று கோவிலின் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலாவதாக அம்மன் சன்னதி திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னதி முன்பு புனித நீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து கோவிலில் அம்மன் சன்னதி நுழைவு வாசல் அருகே முகூர்த்தகால் நடப்பட்டது. பின்னர் முகூர்த்தகாலுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் பழனி குமார், மேலாளர் சீனிவாசன் மற்றும் பேஷ்கார்கள் கலைச்செல்வன், கமலநாதன், காசாளர் ராமநாதன், இளநிலை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவிழாவின் முதல் நாளான வருகிற 1-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கோவிலில் அம்மன் சன்னதி பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 11-ந்தேதி ஆடி தபசு வழிபாடும், 12-ந்தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
அதுபோல் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் உள்ள காரணத்தால் இந்த ஆண்டும் ஆடித்திருக்கல்யாண திருவிழாவின்போது சாமி ரத வீதிகளில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெறாது. அவை கோவிலில் உள்பகுதி பிரகாரத்தில் நடைபெறும் என்றும் திருக்கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறாது என்பதுடன் திருவிழாவின் அனைத்து நாட்கள் நிகழ்ச்சியும் கோவிலின் உள் பகுதி மூன்றாம் பிரகாரத்திலேயே வைத்து நடைபெறும்.
மேலும் வழக்கமாக ஆண்டுதோறும் ஆடித்தபசு அன்று நடைபெறும் சுவாமி அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியானது ராமர்தீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகப்படியில் வைத்து நடைபெறுவது வழக்கம்.ஆனால் கொரோனா தடுப்பு கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டும் கோவிலின் உள்ளேயே வைத்து சாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அதுபோல் திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக சாமி, அம்பாள் ராமர் பாதம் செல்லும் மண்டகப்படி நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டு அந்த நிகழ்ச்சியும் கோவிலின் உள்ளேயே நடைபெறுகின்றது.

இந்த ஸ்லோகத்தை கர்ம சிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.
இழப்புகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், தாங்கிக்கொள்ள இயலாதவை! இழந்த பதவியைப் பெறுவதற்காக அப்பேர்ப்பட்ட பிரம்மதேவரே கடும் தவம் புரிந்து, வரம் பெற்றார். நாம் இழந்ததைப் பெறுவதற்கும் தொலைத்ததை மீட்டெடுப்பதற்கும் ஒரு ஸ்லோகம் இருக்கிறது.
இந்த ஸ்லோகத்தை கர்மசிரத்தையுடன் சொல்லச் சொல்ல... நம் வாழ்வில் தொலைந்த பொருளை மீட்டெடுக்கலாம். இழந்த வாழ்க்கையைக்கூட திரும்பப் பெற்று வாழலாம்.
அந்த ஸ்லோகம் இதுதான்!
ஸ்ரீகார்த்தவீர்யாஜுன மந்திரம்
அபூர்வ ராஜ்ய ஸம்ப்ராப்திம் நஷ்டஸ்ய புனராகமம்,
லபதே நாத்ர ஸந்தேஹ ஸத்யேமேதந் மயோதிதம்
ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாம:
ராஜா பாஹூ ஸஹஸ்ரவாந் ||.
யஸ்ய ஸ்மரந மாத்ரேன நஷ்டம் த்ரவ்யம் ச லப்யதே

கோட்டார் உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் ஆடிமாத 3-வது செவ்வாய் சிறப்பு வழிபாடு வருகிற 3-ந்தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோட்டார் வீரசைவ சமுதாய முன்னேற்ற கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
கோட்டார் வீரசைவ சமுதாய உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் ஆடிமாத 3-வது செவ்வாய் சிறப்பு வழிபாடு வருகிற 3-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி அன்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு நாதஸ்வர இசை, 10 மணிக்கு சித்தி விநாயகர், உஜ்ஜயினி மாகாளி, சுடலைமாடன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அன்னபடைப்பு, தீபாராதனை, 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோட்டார் வீரசைவ சமுதாய முன்னேற்ற கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு வந்து அன்னையின் திருமுகம் பார்த்து மனமுருகி வேண்டினால் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தேவி தரிசனம் பாவ விமோசனம் என்பார்கள். மனித வாழ்க்கையில் தெரிந்தும், தெரியாமலும் பாவங்கள் செய்து வருகிறோம். அதிலிருந்து விடுபட தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலுக்கு வந்து அன்னையின் திருமுகம் பார்த்து மனமுருகி வேண்டினால் விமோசனம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் வளாகத்தில் ஒரு வீடு உள்ளது. இதனை ‘கோவில் வீடு’ என்று அழைப்பர். இங்கு செவ்வாய்க்கிழமைதோறும் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருவார்கள். பெரியசாமிக்கு பூஜை முடிந்த பிறகு பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அங்கு கூடி இருப்பர். அவர்கள் மீது பூசாரி தீர்த்தத்தை தெளிப்பார். அன்று மதியம் சாம்பார் சாதம் தயார் செய்து, அதை பனை மர ஓலையில் செய்த பட்டையில் படைப்பார்கள். இவ்வாறு படைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை உடல் நலம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் உடற்பிணி நீங்கி குணமடைவதாக ஐதீகம். இந்த சாம்பார் சாதத்தை பெற இன்றும் செவ்வாய்க்கிழமைதோறும் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கூடி இருப்பதை காணலாம்.
இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில். திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் அமைந்து உள்ள தென்திருப்பேரை என்ற ஊரில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் இக்கோவிலை அடையலாம்.

கொரோனா தொற்று குறைந்துள்ளதால் பக்தர்களின் தரிசனத்திற்கு மீனாட்சி அம்மன் கோவிலில் அனைத்து வாசல்களையும் திறக்க வேண்டும் என்று இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி பக்தர்கள் வழிபாட்டிற்காக கோவில் திறக்கப்பட்டது. மேலும் பக்தர்கள் அனைவரும் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கொரோனா தொற்றை தடுக்கும் வண்ணம் இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் கிழக்கு கோபுரம், அம்மன் சன்னதி வழியாகவும், கட்டண தரிசனம் செய்யும் பக்தர்கள் தெற்குகோபுரம் வழியாகவும் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் போது அவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் நிலை உள்ளது. தற்போது திருவிழா அதிகம் வரும் ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் அதிகஅளவில் கோவிலுக்கு வருகிறார்கள். எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த அனைத்து வாசல்களையும் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் கோவில் நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதில் கொரோனா குறைந்து வரும் நிலையில் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 4 வாசல்கள் வழியாகவும் பக்தர்களை வழிபாட்டிற்கு அனுமதிக்க வேண்டும். மேலும் இலவச தரிசனத்திற்கு ஒரே வாசல் வழியாக பக்தர்கள் கூட்டத்தை அனுமதிப்பதன் மூலம் அது கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்து விடக்கூடாது.
தமிழகத்தின் எந்த ஒரு பெரிய கோவிலும் இத்தகைய சூழ்நிலை இல்லாத நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மட்டும் அனைத்து வாசல்களையும் பக்தர்களுக்கு திறந்துவிட மறுப்பது கண்டித்தக்கது. எனவே நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்து அனைத்து வாசல்களையும் பக்தர்கள் தரிசனத்திற்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதவிர மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிக்கு ஆன்மிக சிந்தனையும், இறைநம்பிக்கையும் கொண்ட, திருப்பணி போன்ற தொண்டுகளில் அனுபவமும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்டவர்கள் திருப்பணி குழு தலைவராகவும், குழு உறுப்பினராகவும் நியமனம் செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகளையோ, அமைச்சர் என்ற அரசின் பொறுப்பில் உள்ளவரையோ திருப்பணிக்குழுவில் இடம் பெற செய்யக்கூடாது.
மேலும் கோவில் நலனில் அக்கறை கொண்டோர் துறவியர், இந்து அமைப்புகளில் பணி செய்வோர், கல்வியாளர், மருத்துவர், வக்கீல்கள், வியாபாரிகள் என இந்து சமயத்தின் மீது மாறாத பக்தியும் ஆன்மிக ஈடுபாடு கொண்டவர்களை இந்த பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறையை கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அழகர் மலை உச்சியில் உள்ள முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் ஆடி மாத சஷ்டி பூஜைகள் நடந்தன.
அழகர் மலை உச்சியில் உள்ளது முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு எனும் சோலைமலை முருகன் கோவில். இந்த கோவிலில் ஆடி மாத சஷ்டி பூஜைகள் நடந்தன. இதில் மூலவர் வள்ளி தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கும், வித்தக விநாயகர், வேல்சன்னதில் விசேஷ பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன.
அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் உற்சவர் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நெய் விளக்கேற்றி அரசு வழிகாட்டுதல்படி சாமி கும்பிட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

இந்த மலையில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
பர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.
பர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை, மலைகளின் அரசன் என்று பொருள். பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறுபெயர்களும் உண்டு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப்பற்றியும், அப்பகுதி மக்களைப்பற்றியும் குறிப்பிடும் ஒரே சங்க நூல் மலைபடுகடாம் ஆகும். பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது.
இம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து மலையடிவாரத்தை அடையலாம். இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர். மலைஏறும் வழி ஓரளவிற்கே வசதியான வழியாக அமைந்துள்ளது. பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியிலிருந்து வரும் பாதையும் தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும் பாதையும் ஒன்று சேர்கின்றன. இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாக காணப்படும் இதற்கு குமரி நெட்டு என்று பெயர்.
இந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த சுனை (நீர் ஊற்று) உள்ளது, நீர் எடுப்பதற்கு கீழே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து உள்ளது கடப்பாறை நெட்டு. இம்மலையின் சிறப்பம்சமாக விளங்குவதே இந்த கடப்பாறை நெட்டாகும். ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலே அமைந்துள்ள பாறைப் பாதையைக் கடக்க இந்த கடப்பாறை நெட்டு வழியாக ஏறிச் செல்லவேண்டும். இந்தக் கடப்பாறை நெட்டை ஏறியவுடன் இதற்கு அப்பால் இரண்டு பெரிய பாறைகள் காணப்படுகின்றன.
அதில் ஒன்றில் (மல்லிகார்ஜுனர்) சிவன் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள இலிங்கம்,சிலைகளுக்கு பக்தர்களே நேரடியாக அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். மேலும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகனும் உள்ளார். இயற்கையான சூழலில் சுமார் 4560 அடி உயர மலையில் காணப்படும் இயற்கைக் காட்சிகளுக்காகவும், மூலிகைக் காற்றை சுவாசிக்கவுமே தற்போது அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.
இம்மலைக்கு வர வருடத்தின் அனைத்து நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் முழு நிலவன்று மலையேறுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மாலை வேளையில் மலையேறத்தொடங்கி இரவில் மலைக்கு வந்து இரவு முழுவதும் தங்கி மறுநாள் காலையில் மலையிலிருந்து இறங்கி விடுவது ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். மற்றும் மலை பாதையில் வழி துணையாக நாய்கள் (பைரவர்) வருகிறது என்பது சிறப்பம்சமாகும். இந்த நாய்கள் இந்த மலையில் வாழும் சித்தர்கள் என்று கூறப்படுகிறார்கள்.
இந்த மலையில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.

நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி மாத சஷ்டி பூஜையையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி மாத சஷ்டி பூஜை நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார். இதனையடுத்து பூஜைகளும் தீபாராதனைகள் நடந்தது.
மேலும் அருகே உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் சஷ்டியையொட்டி பூஜைகள் நடந்தது.