என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    உஜ்ஜயினி மாகாளி அம்மன்
    X
    உஜ்ஜயினி மாகாளி அம்மன்

    உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் ஆடி செவ்வாய் சிறப்பு வழிபாடு

    கோட்டார் உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் ஆடிமாத 3-வது செவ்வாய் சிறப்பு வழிபாடு வருகிற 3-ந்தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோட்டார் வீரசைவ சமுதாய முன்னேற்ற கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
    கோட்டார் வீரசைவ சமுதாய உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவிலில் ஆடிமாத 3-வது செவ்வாய் சிறப்பு வழிபாடு வருகிற 3-ந்தேதி நடக்கிறது.

    இதையொட்டி அன்று அதிகாலை 5.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8 மணிக்கு நாதஸ்வர இசை, 10 மணிக்கு சித்தி விநாயகர், உஜ்ஜயினி மாகாளி, சுடலைமாடன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு பொங்கல் வழிபாடு, மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை, மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு அன்னபடைப்பு, தீபாராதனை, 8.30 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோட்டார் வீரசைவ சமுதாய முன்னேற்ற கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×