என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
இதையொட்டி சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. கோவில் முன் மண்டபத்தில் உள்ள வெள்ளி கொடிமரத்தில் கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தபாண்டிய நாடார் கொடியேற்றினார். தொடர்ந்து சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு குறைந்த அளவு பக்தர்கள் மட்டும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். இரவு சப்பர பவனி நடந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் சங்குமுக தீர்த்தம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. விழா நாட்களில் தினமும் இரவில் கோவில் வளாகத்தில் பல்வேறு அலங்காரங்களில் சப்பரத்தில் சாமி எழுந்தருளும் காட்சி நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி அமாவாசசை திருவிழா வருகிற 8-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று மதியம் 1 மணிக்கு சாமி உருகு பலகை தரிசனம், சிறப்பு அபிஷேகம், மாலை 5 மணிக்கு இலாமிச்சைவேர் சப்பரத்தில் சேர்மதிருக்கோலக்காட்சி, இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
9-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், மதியம் 1 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம், விழாவின் நிறைவு நாளான 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சாமி நீராடல் நடக்கிறது.
தொடர்ந்து மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவில் சாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் மருத்துவம் தொடர்பான எந்த செயலிலும் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நன்று. ஏனெனில் இந்த நாளில் மருத்துவம் சார்ந்த விஷயங்களை மேற்கொண்டால் தொடர்ந்து மருத்துவனை செல்ல வேண்டிய நிலை ஏற்படும். முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள். மேலும் பிரத்தியங்கரா தேவி, துர்கை அல்லது வாராஹி வழிபாடு மற்றும் துர்கா சப்தசதி பாராயணம், சண்டி பாராயணம் செய்ய மிகவும் உகந்த தினம்.
நவமி அன்று ....
இந்த நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க, நமக்கு வெற்றி நிச்சயம். மேலும் இந்த திதி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கி வேலையில் ஈடுபட்டால், அனைத்தும் சுபமாக முடியும். நாள் இனிமை சேர்க்கும்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்.
இந்த கோவிலில் பரணி மற்றும் ஆடிக்கிருத்திகை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
தற்போது கொரோனா ஊடரங்கு அமலில் உள்ளதால் அதிகளவில் மக்கள் கூடினால் கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால் திருத்தணி முருகன் கோவிலுக்கு இன்று முதல் 4-ம் தேதி வரை பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோவிலில் நடக்கும் விழாக்கள் அனைத்தும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்றும் கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2-ம் தேதிமுதல் 4-ம் தேதி வரை மலைக்கோவிலில் நடைபெறும் தெப்ப உற்சவத்தை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தெப்ப உற்சவத்தை மாலை 5 மணியளவில் யூ டியூப் உள்ளிட்டவற்றில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் ஆட்சியாளர் தெரிவித்தார்.
அழகர்மலை உச்சியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் ஆடி மாத 2- வது வெள்ளிக்கிழமையையொட்டி சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அமைவிடம் :
திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து மும்பை செல்லும் ரயில்பாதை வழியில், அரக்கோணத்திற்கு வடக்கே 13 கிலோ மீட்டரிலும், சென்னையில் இருந்து வடமேற்கே 84 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது திருத்தணி. “தொண்டை நாடு” என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.
தொண்டை நாட்டின் தலைநகரமாகிய காஞ்சிபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம் – வள்ளிமலை – சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; திருக்காளத்தி – திருப்பதி வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாகத் திருத்தணிகைத் தலம் அமைந்துள்ளது.
தணிகை :
முருகப்பெருமான் தேவர்களின் துயரம் நீங்கும் பொருட்டு சூரபதுமனுடன் செய்த பெரும் போரும், வள்ளியம்மையை மணந்துகொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறுபோரும் முடிந்து, தணிந்து அமர்ந்த தலம் என்பதால் தணிகை எனப் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.
தேவர்களின் அச்சம் தணிந்த இடம். முனிவர்கள் காம வெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம். அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும், இதற்குத் தணிகை என்று பெயரமைந்ததாகவும் கூறப்படுகிறது.
தணிகை என்னும் சொல்லுக்கு பொறுத்தல் (பொறை) என்பதும் ஒரு பொருளாதலின், “அடியார்களின் பிழைகளையும் பாவங்களையும் பொறுத்து அருள் புரியும் தலம், திருத்தணிகை” என்று கொள்ளுதலும் பொருந்தும்.
திருத்தணிகை மலை :
இத்தலத்தில், முருகப்பெருமான் மலைமீது எழுந்தருளி வீற்றிருக்கின்றார். ஒரு தனிமலையின் சிகரத்து உச்சியில், கோயில், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முருகன் எழுந்தருளி விளங்கும் மலையின் இருபுறங்களிலும், மலைத் தொடர்ச்சிகள் பரவிப் படர்ந்துள்ளன. வடக்கே உள்ள மலை சிறிது வெண்ணிறமாக இருப்பதனால் “பச்சரிசி மலை” என்றும், தெற்கே உள்ள மலை கருநிறம் வாய்ந்திருப்பதனால் “பிண்ணாக்கு மலை” என்றும் கூறப்படுகின்றன.
ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் மலையடிவாரம் உள்ளது. “சரவணப் பொய்கை” என வழங்கும் புகழ்மிக்க “குமார தீர்த்தம்” என்னும் பெரிய திருக்குளம், மலையடிவாரத்தில் உள்ளது. யாத்திரீகர்களும், பக்தர்களும் இதிலேயே பெரும்பாலும் நீராடுவது வழக்கம். இத்தீர்த்தத்தை சுற்றிப் பல மடங்கள் உள்ளன. அதனால் இப்பகுதிக்கு “மடம் கிராமம்” என்று பெயர் வழங்குகிறது. திருக்குளத்தின் தென்மேற்கு மூலையில், மலையடிவாரம் இருக்கின்றது.
திருக்குளத்தின் கிழக்குக் கரையினின்று மலையைப் பார்த்தால், வளைவாக இடம்பெற்ற ஒரு மாலை போலவும், மூவுருவம் எடுத்த ஒரு பரம்பொருள் போலவும்; மூன்று மலைகள் விளங்கும். அவற்றின் மத்தியில் திருமுருகன் திருக்கோயில் நடுநாயகமாகச் சிறந்தோங்கி விளங்குவது மிகவும் அழகு நிறைந்த காட்சியாகும்.
அருணகிரிநாதர் தனது பாடலில் “அழகுத் திருத்தணிமலை” என்று புகழ்ந்து போற்றியிருக்கின்றார். திருமுருகனுக்கு இணையான தெய்வங்கள் எதுவும் இல்லை என்பது போலவே, திருத்தணிகைக்குச் சமமான தலமும் வேறெந்த தலமும் இல்லை எனலாம்.
தணிகைக்கோயிலின் தொன்மைச்சிறப்பு :
திருத்தணிகை முருகன் திருக்கோயில், மிகவும் தொன்மை வாய்ந்தது. முருக பக்தரான அருணகிரிநாதர், 63 திருப்புகழ்ப் பாடல்களால் இத்தலத்தினைப் பெரிதும் போற்றித் துதித்துள்ளார். அதனால் 600 ஆண்டுகளுக்கு முன்பே, இத்தலமும் கோயிலும் புகழோங்கித் திகழ்ந்திருந்தன என்பது திண்ணம்.
தவிர, சுமார் 900 ஆண்டுகளுக்கும் முன்பே வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியார், தமது கந்தபுராணத்தில் “மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி போலவும், தலங்களில் காஞ்சிபுரம் போலவும், மலைகளிலெல்லாம் சிறந்தோங்கித் திகழ்வது திருத்தணிகையே” என்று பாடியுள்ளார்.
சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருநாவுக்கரசர், திருப்புறம்பயம் தலத்துத் திருத்தாண்டகத்தில் “கல் மலிந்தோங்கும் கழுநீர்க் குன்றம்” என்று திருத்தணிகையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். தேவேந்திரன் இங்கு முருகப் பெருமானை நீலோற்பலம் என்னும் கழுநீர் மலர்கொண்டு பூசித்தான் என்பது தலவரலாறு.
தலச்சிறப்பு :
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவர் பெருமான், முருகனைப் பற்றித் திருமுருகாற்றுப்படை என்னும் சிறந்த துதி நூலைப் பாடியிருக்கின்றார். அதன்கண் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழனி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை என்னும் ஆறு திருத்தலங்களும், முருகனின் ஆறுபடை வீடுகள் என்று சிறப்பாகப் போற்றப்பெறும்.
இவைகளுள் குன்றுதோறாடல் என்பது, முருகன் எழுந்தருளி விளங்கும் மலைத் தலங்கள் எல்லாவற்றையுமே குறிக்குமாயினும், திருத்தணிகை தலத்தையே தனிச்சிறப்பாகக் குறிக்கும் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.
முருகப்பெருமான், தன் கிரியா சக்தியாகிய தெய்வானையைத் திருப்பரங்குன்றத்தில் திருமணம் செய்து கொண்டாற்போல், திருத்தணிகையில் தன் இச்சா சக்தியாகிய வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்டு மகிழ்ந்து இனிது வீற்றிருந்தருள்கின்றார். திருத்தணிகையின் சிறப்பிற்கு இதுவே சிறந்த பெருங்காரணமாகும்.
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், கந்தப்ப தேசிகர், கச்சியப்பமுனிவர், கச்சியப்ப சிவாசாரியர், அருணகிரிநாதர் ஆகிய அருட்பெருஞ் சான்றோர்கள் பலரும், திருத்தணிகை முருகனைப் பெரிதும் புகழ்ந்துப் பாடியுள்ளனர்.
வள்ளலார் பெற்ற அருள் :
19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வடலூர் இராமலிங்க அடிகளார், திருத்தணி முருகப்பெருமானை நினைந்து உருகி அப்பெருமானையே ஞான குருவாகக் கொண்டார். வள்ளலார் இளம் வயதிலேயே கண்ணாடியில் திருத்தணி முருகப்பெருமானின் காட்சி கிடைக்கப் பெற்றவர். இதனால், பிரார்த்தனை மாலையில் திருத்தணி முருகனை போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்.
பல லட்சக்கணக்கான மக்கள், திருத்தணிகை முருகனைத் தம் குலதெய்வமாகக் கொண்டு வழிபட்டு நலம் பெற்று வருகின்றனர்…
ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு பண்டிகை கொண்டாடப்படுகிறது. வருகிற 3-ந்தேதி ஆடிப்பெருக்கு பண்டிகை வருகிறது. இந்த நாளில் பக்தர்கள் காவிரியில் நீராடுவது வழக்கம். பெண்கள் காவிரியில் நீராடி புதுத்தாலி மாற்றிக்கொள்வார்கள். இதேபோல் வருகிற ஆகஸ்டு 8-ந்தேதி ஆடி அமாவாசை நாளில் ஏராளமானோர் காவிரியில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆடி மாதம் 28-ந்தேதியான ஆகஸ்டு 13-ந்தேதியும் பக்தர்கள் காவிரியில் நீராடுவார்கள்.
சுற்றுலாத்தலமான மேட்டூருக்கு ஆடி மாத விசேஷ நாட்களில் சேலம் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அவர்கள் மேட்டூர் காவிரி ஆற்றுக்கு வந்து நீராடி அணைக்கட்டு முனியப்பன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள்.
மேலும் மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோயிலை ஒட்டி அமைந்துள்ள பூங்காவிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். இந்த 3 நாட்களுக்கும் மேட்டூருக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனிடையே கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டும், பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆடி 18, ஆடி அமாவாசை, ஆடி 28 ஆகிய 3 நாட்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை செய்ய பட்டுள்ளது.
மேட்டூர் காவிரி ஆற்றில் நீராடவும், அணைக்கட்டு முனியப்பன் கோவிலில் வழிபாடு செய்யவும், பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் போலீசார், வருவாய் துறையினர், பொதுப்பணித் துறையினர் இணைந்து பணியாற்றி பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்லாமல் கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதுமட்டுமின்றி மேட்டூர் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது இந்த தகவலை மேட்டூர் சப்-கலெக்டர் வீர் பிரதாப் சிங் தெரிவித்து உள்ளார்.
இந்தநிலையில், அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று காலையிலிருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் வந்தனர். அவர்களில் பலர் முடிகாணிக்கை செலுத்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து சென்றும், அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி, கோவில் முன்புறம் தீபமேற்றினர்.
தொடர்ந்து, அவர்கள் அம்மனை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தும், கைகளில் கிருமிநாசினி தெளித்தும், முக கவசம் அணிந்த பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் செல்ல பணியாளர்கள் அனுமதித்தனர்.
மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து முககவசம் அணிந்து வருகின்றனரா? என்று பேரூராட்சி பணியாளர்கள் சமயபுரம் நுழைவு வாயிலிலேயே கண்காணித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் சமயபுரம் போலீசார், ஊர்க்காவல் படையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதேபோன்று, இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில், மாகாளிகுடியிலுள்ள உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இயேசுநாதருடைய பன்னிரண்டு சீடர்களும் வேத சாட்சிகளாய் பல்வேறு இடங்களில் மரித்திருந்தாலும் அவர்களுடைய கல்லறைகளில் நினைவுச்சின்னங்கள் எழுப்பப்பட்டிருந்தாலும் அவர்களுள் மூன்று சீடர்களின் கல்லறைகள் மீதே ஆலயம் அமைக்கப்பட்டிருப்பது தனிச் சிறப்பாகும். அவைகள் ரோமில் வத்திக்கானில் தூய பேதுரு ஆலயமும் நம் இந்தியாவில் நம் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள தூய தோமா ஆலயமும் ஸ்பெயின் தேசத்திலுள்ள தூய சந்தியாகப்பர் ஆலயமும் ஆகும். இயேசு நாதருக்கு தன் பன்னிரெண்டு சீடர்களின் மீதும் பாசம் உண்டு என்றாலும் நம் சந்தியாகப்பர் மீது அதிகப் பாசம் கொண்டிருந்தார்.
இயேசுநாதர் இறந்து, உயிர்த்தெழுந்த பின்பு நம் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களும் ஒன்று கூடி இயேசுவின் நற்செய்தியை உலகம் அனைத்திற்கும் அறிவிக்க யார் யார் எந்தெந்த நாட்டிற்க்குப் போக வேண்டும் என்று தங்களுக்குள்ளே சீட்டுப் போட்டுக் கொண்டார்கள். நம் சந்தியாகப்பருக்கு இஸ்பானியா(ஸ்பெயின் ) தேசம் என்று வந்தது. இது தனக்கு ஆண்டவன் இட்ட கட்டளை என்று உணர்ந்த சந்தியாகப்பர் ஸ்பெயின் தேசம் புறப்பட்டார். தன்னோடு தன்னுடைய எட்டு சீடர்களை தெரிந்து கொண்டு ஸ்பெயின் தேசம் புறப்பட்டுவிட்டார்.
சந்தியாகப்பர் தேவமாதா தனக்கு கட்டளையிட்டபடி ஸ்பெயின் தேசத்தில் மாதாவுக்கு ஒரு சிற்றாலயம் அமைத்து தன் கடமை முடிந்தது என்று மீண்டும் தன் தாய்நாடான இஸ்ரேலில் உள்ள எருசலேம் வந்தார். அப்போது அங்கு வேத கலாபனை ஆரம்பத்திருந்தது. இயேசு நாதரின் மறைவுக்குப்பின் யூத குருமார்களின் செல்வாக்கும் கௌரவமும் மிகவும் குறைந்து போயிற்று. தங்கள் அதிகாரத்தை மீண்டும் நிலைநாட்டவும் மோயீசனின் திருச்சட்டத்தை நிலை நாட்டவும் மிகவும் கடுமையான சட்டங்களை பிறப்பித்தார்கள். இயேசுநாதரின் பெயரை கூட பொதுவில் உச்சரிக்கக்கூடாது என்று கடுமையாக உத்தரவிட்டார்கள்.
அப்போது அந்த நாட்டு அரசனாக இருந்தவன் ஏரோது அக்கரிப்பா. அவன் தன் பதவியை காப்பாற்றிக் கொள்ள யூத மதத்தலைவர்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி... என்று தலையாட்டிக் கொண்டிருந்தான். இந்த சூழ்நிலையில் நம் சந்தியாகப்பர் ஜெருசலேம்பட்டணத்தில் சுற்றி அதன் ஆரவாரமிக்க தெருக்களில் வல்லமையாக பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இவரது தைரியமான மற்றும் வல்லமையான பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் மலைத்துப் போயினர். அதே நேரத்தில் ஏரோது தன் படைகளோடு வந்து சந்தியாகப்பரை கைது செய்தான்.
ஜெருசலேம் நீதிமன்றத்தில் விசாரணையின் போது சந்தியாகப்பர் இயேசுநாதரைப் பற்றி கூறிய விளக்கங்களும் ஆதாரங்களும் வல்லமையான பதில்களும் அங்கு கூடியிருந்த யூத மத குருமார்களுக்கு பெரும் பயத்தை ஏற்படுத்தியது. இந்த விளக்கங்களை கேட்ட நீதிபதி அப்போதே தன் பதவியை ராஜினாமா செய்து இயேசுநாதரை தன் இரட்சகராக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். இதனால் மிரண்டுபோன அரசன் ஏரோது அக்கரிப்பா உடனே நம் சந்தியாகப்பருக்கும் அந்த நல்ல நீதிபதிக்கும் சிரச்சேதம் செய்ய கட்டளை இட்டான். அந்த இருவருக்கும் உடனே தலை வெட்டப்பட்டது. இதனால் இயேசுநாதருக்காக உயிர்த்தியாகம் செய்த முதல் அப்போஸ்தலர் என்ற பட்டமும் பெற்றார்.
ஸ்பெயின் தேசத்தில் நம் சந்தியாகப்பரால் தோற்றுவிக்கப்பட்ட கிறிஸ்துவம் வேகமாக பரவ ஆரம்பித்தது. பலப்பல கிறிஸ்துவ ராஜ்ஜியங்களும் தோன்றின. துரதிஷ்ட வசமாக அவர்களுக்குள்ளே சமாதானம் இல்லாததால் ஒரு ஒன்றுபட்ட கிறிஸ்துவ ராஜ்ஜியம் ஏற்படவில்லை. இந்த நிலையில் சந்தியாகப்பரின் சீடர்கள் நம் சந்தியாகப்பருக்கு என்ன நேர்ந்தது என்று அறிய ஆவல் கொண்டு ஸ்பெய்னிலிருந்து இஸ்ரேல் தேசத்திற்கு வந்தனர். அவருக்கு ஏற்பட்ட முடிவைக் கண்டு மிகவும் வருந்தினர்.
சரி... அவரது எலும்புகளையாவது எடுத்துச் செல்லலாம் என்று பார்த்தால் அவரது சமாதி இருந்த இடத்தில் நுற்றுக்கணாக்கான சமாதிகள் இருந்தது கண்டு திகைத்துப் போயினர். சந்தியாகப்பரே எங்களுக்கு காண்பிப்பீராக என்று மனம் உருகி வேண்டினர். அப்போது அந்த அதிசயம் நடந்தது. அவர் வல்லமையான இடியின் மைந்தர் என்று இயேசுவாலேயே கூறப்பட்டவர் அல்லவா... இதோ வானினின்று ஒரு இடி டமார் என்று இறங்கியது. அது சந்தியாகப்பரின் சமாதியை குழிபறித்து அடையாளம் காட்டியது. அங்கும் சோதனை மிஞ்சியது.
அந்தக் குழிக்குள் பல எலும்புக்கூடுகள் இருந்தன. யார் யாரோ எவ்விதமானவர்களோ... என்று கலக்கமுற்ற சந்தியாகப்பரின் சீடர்கள் மீண்டும் வேண்டுதல் வைத்து அவரது எலும்புக்கூட்டை அடையாளம் காட்ட வேண்டினர். அப்போது மீண்டும் அந்த அதிசயம் நடந்தது. மீண்டும் ஒரு இடியை இறக்கினார் சந்தியாகப்பர். அந்த இடியின் வல்லமையால் இரண்டு எலும்புகூடுகள் மின்னின. அவைகள் மட்டும் தனியே பிரிக்கப்பட்டன. சந்தியாகப்பரே இதில் உம்முடைய எலும்புக்கூடு எது என்று மீண்டும் வேண்டுதல் வைத்தனர்.
மீண்டும் அதிசயமாக ஒரு எலும்புக்கூடு மின்னியது. மற்றது அணைந்தது. மின்னிய எலும்புக்கூடு சந்தியாகப்பருடையது. சந்தியாகப்பர் தலை வெட்டப்பட்ட அதே இடத்திலேயே அவருக்கென்று ஒரு ஆலயம் எழுப்பி அவரது தலையை மட்டும் அங்கே புதைத்துள்ளனர். இன்றளவும் ஜெருசலேமில் அர்மீனியர்களின் ஆதிக்கத்தில் இந்த ஆலயம் மிகவும் பிரம்மாண்டமான ஆலயமாக உள்ளது. பிற்பாடு சந்தியாகப்பரின் சீடர்கள் சந்தியாகப்பரின் மற்றைய எலும்புகளை ஸ்பெயின் தேசத்துக்கு கொண்டு போய் புதைத்தனர். நாளடைவில் சந்தியாகப்பரின் சமாதி எங்கு உள்ளது என்று கூட தெரியாமல் போய்விட்டது. இப்படியாக எட்டு நூற்றாண்டுகள் ஓடி மறைந்தன.
கி.பி. 844 இந்த ஆண்டில் ஸ்பெயின் தேசத்தில் வடமேற்கு காட்டுப்பகுதி வழியே தன்னந்தனியே பயணித்தார் ஒரு துறவி. அப்போது அந்த இரவில் ஒரு மண்மேட்டிலிருந்து ஒரு ஒளி வெள்ளம் தோன்றுவதைக் கண்டு அதிசயித்தார். அருகில் சென்று பார்த்தபொழுது விண்ணகத்திலிருந்து ஒரு வினோதமான ஓர் ஒளி வெள்ளம் தோன்றி அந்த மண் மேட்டில் இறங்கியது கண்டு அதிசயித்தார். மேலும் வானோர் பாடலும் மிகத் தெளிவாக கேட்டதால் இந்த இடத்தில் ஏதோ அதிசயம் நடக்கப்போகிறது அல்லது மறைந்துள்ளது என்று கண்டு கொண்டார் . அந்த இடத்தை அடையாளம் வைத்துக்கொண்டு அந்த மண்மேட்டை தோண்டிப்பார்த்த பொழுது அங்கே நம் சந்தியாகப்பரின் எலும்புக்கூடு ஒரு பெட்டியில் ஒளிர்ந்தது. மேலும் அந்த பெட்டியில் இருந்து சில பொருட்களை முன்னிட்டு அவை சந்தியாகப்பரின் எலும்புக்கூடுதான் என்று நிச்சயித்தார்கள்.
அன்றிலிருந்து ஆரம்பமானது நம் சந்தியாகப்பரின் அதிசயங்களும் அற்புதங்களும். இதைப்பற்றி கேள்விப்பட்ட அரசன் 2-ஆம் அல்போன்சா ஓடோடி வந்தான். சந்தியாகப்பரை தெண்டனிட்டு வணங்கினான். நம் சந்தியாகப்பரை ஸ்பெயின் தேசத்தின் பாதுகாவலர் என்று அறிவித்தான். அவர் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தின் பெயர் கம்போஸ்த்தலா என்பதாகும். எனவே அதே இடத்தில் அவர் சமாதி மீது ஒரு மிகப்பிரம்மாண்டமான கோவில் ஒன்றை கட்டினான். அவரது காலத்தில் அதற்கு இணையான ஆலயம் உலகில் எங்குமே இல்லை என்னும் அளவிற்கு அது இருந்தது. அந்த கோவிலின் முகப்பும் சரி உள்கட்டமைப்பும் சரி பிரம்மாண்டம் தான் போங்கள். அந்தக் காலத்திலேயே இந்த ஆலயம் இயேசுவின் திருவிழாவுக்கு ஒப்பானது என்று யாத்திரிகர்கள் அறிய வந்தார்கள். இப்போதும் இந்த கோவில் SANTIAGO DE COMPOSTALA (சாண்டியாகோ டீ கம்போஸ்டலா) என்று அழைக்கப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டில் வடக்கிலிருந்து கிழக்கிலிருந்தும் தூய சந்தியாகப்பரை தரிசிக்க மக்கள் வெள்ளம் படையெடுத்து வந்தது. இதனால் வியாபாரம், தங்குமிடம், போக்குவரத்து என பல வழிகளிலும் நாட்டிற்கு வருமானம் பெருகியது. சிறு சிறு குட்டி சமஸ்தானங்கள். குட்டி ராஜாக்கள் தங்களின் நிலைகளை உயர்திக் கொள்ளவும், பாதுகாப்பை முன்னிட்டும் ஒன்று சேர்ந்தனர். இது பல வல்லரசு நாடுகளான சார்சானியர்களுக்கும், துருக்கி முஸ்லீம்களுக்கும் ஆப்ரிக்க இஸ்லாமிய நாட்டினர்களுக்கும் பிடிக்கவில்லை.
எனவே ஸ்பெயின் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் அடிக்கடி சண்டை வெடித்தது. அப்போது ஸ்பெயின் நாட்டில் அரசராக இருந்தவர் 1-ஆம் ரோமிரோ. இவர் அப்போது அஸ்துரியாஸ் என்னுமிடத்தில் தன் குறைந்த படையினரோடு இந்த மிகப்பெரும் சார்சானிய படைகளுடன் மோதுவதற்கு தயாராக இருந்தார். என்னதான் அவருக்கு கடவுள் நம்பிக்கையும் தன் படை மீது நம்பிக்கையும் இருந்தாலும் ஏனோ மனம் கலக்கமுற்றார். தன் படையினரை க்ளாவிஜோ என்னுமிடத்தில் நிறுத்தினார். அந்த இடத்தில் அன்றைய இரவில் புனித சந்தியாகப்பர் அரசன் ரோமிரோவின் கனவில் தோன்றி ரோமிரோ... நீ மனம் கலங்க வேண்டாம். நாளைய போரில் இந்த சார்சானியர்களை எதிர்த்து உன் சார்பாக நான் போராடுவேன்.
வெற்றி உனதே... நான் ஒரு வெள்ளைக் குதிரையில் வெள்ளை ஆடையில் சிலுவை அடையாளமிட்ட வெள்ளைக் கொடியோடு இந்த பெரிய சார்சானியர் படையோடு போராடுவேன். இதை நீயும் உன் வீரர்களும் மற்றும் சார்சானிய வீரர்களும் காண்பீர்கள் என்று கூறி மறைந்து போனார். அரசன் ரோமிரோ அடைந்த சந்தோஷமும் தைரியமும் சொல்ல வார்த்தை இல்லை. அப்போதே இந்த கனவைப் பற்றி தன் படைத்தளபதிக்கும் வீரர்களுக்கும் அறிவித்து அந்த இரவிலேயே அந்த ஊர் வந்திருந்த ஆயரிடம் சென்று தன் கனவைத் தெரிவித்து வெற்றிக்கான ஆசீரும் அவரிடம் பெற்றான்.
நம் புனித சந்தியாகப்பர் கொடுத்த தைரியத்தினாலும் அவருடைய வாக்குறுதியினாலும் உத்வேகம் பெற்ற அரசனும் படையினரும் போர்க்களத்தில் பயங்கரமாகப் போரிட்டனர். என்ன ஆயிற்று இந்த கிறிஸ்தவர்களுக்கு என்று ஆத்திரப்பட்டான். அந்த முஸ்லீம் படைத்தளபதி. இந்த சின்ன படையை வைத்துக் கொண்டு நம்மை எதிர்க்க இந்த கிறிஸ்தவர்களுக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம். நம் படைக்கு முன் இந்த கிறிஸ்தவர்களின் படை ஐந்து நிமிடங்களுக்கு கூட தாங்காது. மார்ரே என்று ஆணையிட்டான், பயங்கரப்போர் ஆரம்பமாயிற்று.
முஸ்லீம் படையான சார்சானியர்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் பலர் தலை இழந்தனர். பல கிறிஸ்த்தவ படையினரும் பல முஸ்லீம் வீரர்களும் புனித சந்தியாகப்பரை வெள்ளைக் குதிரையில் வெள்ளை உடையில் உருவிய கத்தியோடும் வெள்ளை கொடியுடனும் போர்க்களத்தில் சுற்றி சுற்றி வருவதைக் கண்டார்கள். புனித சந்தியாகப்பர் வாழ்க... என்று சந்தியாகப்பருக்கு ஜெயகோஷம் போட்டனர். அவ்வளவுதான் பெரும் படைகொண்ட சார்சானியப் படை பெரும் தோல்வி கண்டது. சந்தியாகப்பரை எதிர்க்க முடியாது. வாருங்கள் ஓடிப்போவோம் என்று குரல் கேட்டது. அவ்வளவுதான் சார்சானியப் பெரும் படை புறமுதுகு காட்டி ஓடியது. அன்றைய போரில் தலை இழந்தும் வெட்டப்பட்டு இறந்தவர்களும் குறைந்தது எழுபது ஆயிரம் பேர். இப்படியாக புனித சந்தியாகப்பர் போராளி அப்போஸ்த்தலர் என்றும் படைமிரட்டி அப்போஸ்த்தலர் என்றும் பேர் பெற்றார்.
இதுபோல் பிரசித்தி பெற்ற மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,அலங்கார பூஜைகள் நடைபெற்றது. நிகழ்ச்சியை யொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
அதன்பின்னர் அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் காலை 6 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் கொடிமரத்தின் முன்பு எலுமிச்சை தீபம் ஏற்றி அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர்.
இந்த நிலையில் நேற்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடைபெற்றது. மாசாணியம்மன் சிலைக்கு பூசாரி பூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது அம்மன் சிலையின் மடியில் எங்கிருந்தோ பறந்து வந்த கிளி திடீரென்று வந்து அமர்ந்தது. இதை பார்த்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பூசாரி பூஜைகள் செய்த போதும் அந்த கிளி அச்சம் இன்றி அம்மன் சிலையிலேயே தொடர்ந்து அமர்ந்து இருந்தது.
இது குறித்த தகவல் அறிந்த உடன் அந்த பகுதி பக்தர்கள் கோவிலுக்கு விரைந்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர். அம்மன் சிலை மேல் கிளி வந்து அமர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதல் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பெண்கள் விரதம் இருந்து கோவிலுக்கு வந்திருந்தனர். கோவை தண்டு மாரியம்மன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் முககவசம் அணிந்த பக்தர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது நுழைவுவாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் கோவில் வளாகம் முழுவதும் வாழைத் தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.காமாட்சியம்மன் அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் அருள் பாலித்தார்.
கோனியம்மன் கோவிலில் அம்மன் தங்கப் பாவாடை அலங்காரத்திலும், பெரியகடைவீதி மாகாளியம்மன் கோவிலில் 500 கிலோ பழங்களால், அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும், காட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
கோவை கணபதி அண்ணாநகர் பகுதியில் பழமையான ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கோவை சரவணம்பட்டி அம்மன் நகர் பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு. 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று அம்மனுக்கு 16 வகை திரவிய அபிஷேகங்களுடன் துர்க்கை அம்மன் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஊஞ்சலில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகாதீபாராதனையுடன் பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆனி மாதத்தில் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவர் வழிபாட்டிற்குரிய ஒரு சிறந்த தினமாகும். அதிலும் அந்த தேய்பிறை அஷ்டமி வியாழக்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும். வியாழக்கிழமை தேய்பிறை அஷ்டமி அன்று ராகு கால நேரமான 1.30 மணியிலிருந்து 3.00 மணிக்குள்ளாக பைரவர் கோயில் அல்லது சிவன் கோயிலில் இருக்கின்ற சந்நிதிக்கு சென்று பைரவருக்கு சிவப்பு நிற மலர்களை சமர்ப்பித்து, செவ்வாழை நைவேத்தியம் செய்து, தேங்காயை இரண்டாக உடைத்து அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி பைரவருக்குரிய மந்திரங்கள் துதித்து பைரவரை வணங்க வேண்டும். மேலும் இச்சமயத்தில் பைரவர் காயத்ரி மந்திரத்தை 108 அல்லது 1008 எண்ணிக்கையில் துதிப்பது நல்லது.
மேற்கண்ட முறையில் ஆடி மாத தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுபவர்களுக்கு சிறிது காலத்திலேயே எப்படிப்பட்ட பணக்கஷ்டங்களும் நீங்கும். தொழில், வியாபாரங்களில் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாமல் காக்கும். பொருட்கள் களவு போகாமல் பாதுகாக்கும். வருமானம் பெருகும். பெண்களுக்கு ஏற்படும் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். துஷ்ட சக்திகளினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். உங்களுக்கு செய்யப்படும் மாந்திரீக ஏவல்கள், செய்வினை தந்திரங்கள் பலிக்காமல் போகும். கொடிய நோய்கள் அனைத்தும் சிறிது சிறிதாக குணமாகும்.






