என் மலர்
ஆன்மிகம்

மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி
ஆடி 2-வது வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ஆடி 2-வது வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அம்மனுக்கு உகந்த மாதம் ஆடி. இதில் செவ்வாய், வெள்ளிக்கிழமை விசேஷமானது. இந்த நாட்களில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டும் கொரோனா 2-வது பரவல் தொடங்கி தற்போது தொற்று குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. கோவில்களில் திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி விழாக்களை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதல் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான பெண்கள் விரதம் இருந்து கோவிலுக்கு வந்திருந்தனர். கோவை தண்டு மாரியம்மன் கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் முககவசம் அணிந்த பக்தர்களுக்கு மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது நுழைவுவாயிலில் பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, கிருமிநாசினி வழங்கப்பட்டது. மேலும் கோவில் வளாகம் முழுவதும் வாழைத் தோரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.காமாட்சியம்மன் அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் அருள் பாலித்தார்.
கோனியம்மன் கோவிலில் அம்மன் தங்கப் பாவாடை அலங்காரத்திலும், பெரியகடைவீதி மாகாளியம்மன் கோவிலில் 500 கிலோ பழங்களால், அம்மன் அன்னபூரணி அலங்காரத்திலும், காட்டூர் முத்துமாரியம்மன் கோவிலில் அம்மன் மஞ்சள் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
கோவை கணபதி அண்ணாநகர் பகுதியில் பழமையான ஸ்ரீ சூலக்கல் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
கோவை சரவணம்பட்டி அம்மன் நகர் பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு. 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று அம்மனுக்கு 16 வகை திரவிய அபிஷேகங்களுடன் துர்க்கை அம்மன் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஊஞ்சலில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மகாதீபாராதனையுடன் பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story