என் மலர்

  ஆன்மிகம்

  திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில்
  X
  திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில்

  திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா 2-ந்தேதி தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா வருகிற 2-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது.
  திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தையொட்டி 10 நாட்கள் ஆடிப்பூர திருவிழா நடைபெறுவது வழக்கம்.

  விழாவில் தினந்தோறும் இரவு பெருமாளும், ஆண்டாளும் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். 10-ம் திருவிழா அன்று மாலை தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான இந்த விழா வருகிற 2-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. முன்னதாக முதல் நாள் 1-ந்தேதி மாலையில் பூர்வாங்க பூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  மறுநாள் காலையில் பெருமாள் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி கொடியேற்றத்துடன் விழா மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிகளின்படி விழா நடைபெறும். 10 நாட்களும் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது. தினந்தோறும் இரவு கோவில் உள்பிரகாரங்களில் பெருமாள் மற்றும் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் வலம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கொரோனா விதிமுறைகளின்படி 10-ம் நாள் நடைபெறும் தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
  Next Story
  ×