என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    இறைமறுப்பாளரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இறைவன் அவரை நேசிக்கிறான் என்பதற்காக அல்ல! தமது நீதியை அவரிடம் நிலைநாட்ட விரும்புகிறான் என்பதற்கே!
    “நபி (ஸல்) அவர்கள், முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களை ஏமன் தேச ஆளுநராக நியமித்து, வழியனுப்பும் போது, ‘முஆதே! அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளும். ஏனெனில், அவனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் எந்தத் திரையுமில்லை’ என்று கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி)

    உலக ஆளுநர்களுக்கு உத்தம நபி (ஸல்) அவர்கள் ஓர் அழகிய உபதேசத்தை, ஓர் அழகிய அறிவுரையை, ஓர் அழகிய செய்தியை ஆளுநர் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களின் வழியாக வழங்கியுள்ளார்கள்.

    ஆளுநர் என்பவர் நாட்டின் நீதி, நிர்வாகத்தை கவனிப்பவர். மேலும், அவர் மக்கள் பணியில் ஈடுபடுபவர். குடிமக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பவர். அவரால் குடிமக்களுக்கு எந்தப் பிரச்சினையும், எந்தவித அநீதியும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதினால் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஓர் அறிக்கையை நபி (ஸல்) சமர்ப்பித்துள்ளார்கள்.

    மக்களுடன் கலந்து வாழ்வோர், மக்களின் மீது படைபலம், பணபலம், உடல்பலம் மூலம் ஆதிக்கம் செலுத்துவோர், மக்கள் பணியில் ஈடுபடக்கூடிய ஆட்சியாளர்கள், அதிகாரிகள், நிர்வாகிகள், நீதியரசர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் யாவரும் மக்களின் மனம் கவர்ந்த நீதிவான்களாக செயலாற்ற வேண்டும். மக்கள் புண்படும் அளவுக்கு அநீதியாக நடக்கலாகாது. ஒருவேளை அநீதியாக நடந்தால், அநீதி இழைக்கப்பட்டோரின் சாபம் அவர்களை சும்மாவிடாது, துரத்திக் கொண்டே இருக்கும்.

    ‘மூவரின் பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும். இதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. 1) பெற்றோரின் துஆ, 2) பயணியின் துஆ, 3) அநீதி இழைக்கப்பட்டவனின் துஆ ஆகும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: திர்மிதி)

    மற்றொரு நபிமொழியில், “மூவரின் பிரார்த்தனைகள் மறுக்கப்படாது. 1) நீதியான ஆட்சியாளர், 2) நோன்பாளி அவர் நோன்பு திறக்கும் நேரம், 3) அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையாகும். இந்த பிரார்த்தனை மேகங்களுக்கு அப்பால் உயர்த்தப்படுகிறது; இதற்காக வானங்களின் கதவுகள் திறக்கப்படுகிறது. மகத்துவம் நிறைந்த இறைவன் கூறுவான்: ‘உனக்கு நான் நிச்சயம் உதவி செய்வேன்; அது எவ்வளவு காலம் இருந்தாலும் சரியே!’ என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: அஹ்மது)

    அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை கண்டு கொண்டு, அதை மேகங்களுக்கு அப்பால் சுமந்து கொண்டு, வானத்தை நோக்கி ஏற்றிக்கொண்டு செல்வதற்கென சில வானவர்களை இறைவன் நியமித்துள்ளான். அந்த பிரார்த்தனையை அனைத்து வானவர்களும் கண்டு கொள்கின்றனர். இதனால் அவர்களின் சிபாரிசும், இறைவனின் கிருபையும், உதவியும் அநீதி இழைக்கப்பட்டவனுக்கு கிடைத்து விடுவதுடன் அவனது பிரார்த்தனையும் அங்கீகரிக்கப்படுகிறது.

    “அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! அது நெருப்பின் ஜூவாலையைப் போன்று வானத்தை நோக்கி மேலே செல்கிறது என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஹாகிம்)

    “அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்கு பயந்து கொள்ளுங்கள்! அவன் பாவியாக இருந்தாலும் சரியே! மேலும், அவர் இறைமறுப்பாளராக இருந்தாலும் சரியே! ஏனெனில் அதற்கு திரையேதுமில்லை என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது)

    அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்குக் காரணம் அவனுக்கு இறைவனின் உதவி கிடைக்கும் என இறைவனின் வாக்குறுதியும், அவர் விஷயத்தில் இறைவன் தமது பொறுப்பை ஏற்கிறான் எனும் பெருந்தன்மைதான். மேலும், தமக்கு பாதிப்பை ஏற்படுத்தியவனுக்கு பதிலடி கொடுக்க இயலாத காரணமாக அவனுக்கு பதிலடியாக இவர் இறைவனிடம் இறைஞ்சும்போது உடனே இறைவன் இவருக்கு துணையாக இருந்து, இவரின் பிரார்த்தனையை உடனடியாக ஏற்கிறான்.

    இறைவன் இறைநம்பிக்கையாளரை நேசிக்கின்றான். ஆனால், நீதி என்று வரும்போது அவனின் நீதி நல்லவரையும், தீயவரையும், இறைவிசுவாசியையும், இறைமறுப்பாளரையும் அரவணைத்துக் கொள்கிறது. இறைமறுப்பாளரின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இறைவன் அவரை நேசிக்கிறான் என்பதற்காக அல்ல! தமது நீதியை அவரிடம் நிலைநாட்ட விரும்புகிறான் என்பதற்கே!

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    பக்தர்கள் திரளானோர் பல இடங்களில் இருந்து திரண்டு வந்து சாலையில் நின்று கொண்டு கற்பூர ஆராதனை செய்து கருடாழ்வாரை வழிபட்டனர்.
    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகில் உள்ள கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள தன்வந்திரி பெருமாள் கோவில் சர்ப தோஷங்கள், நாக தோஷம், திருமணத்தடை, ஏழரை சனி உள்ளிட்ட தோஷங்களை நிவர்த்தி செய்யும் புகழ்பெற்ற கோவிலாக திகழ்கிறது. இந்த கோவிலில் அமைப்பதற்காக 17 அடி உயர கருடாழ்வார் சிலை மாமல்லபுரம் வசந்தபுரியில் உள்ள ஒரு சிற்பக்கலை கூடத்தில் 15 டன் எடை கொண்ட கல்லில் வடிவமைக்கப்பட்டது.

    மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் பட்டம் பெற்ற சிற்ப கலைஞர் லோகநாதன் ஸ்தபதி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் இந்த சிலையை 3 மாதமாக ஆகம விதிப்படி வடிவமைத்து முடித்தனார். பின்னர் 100 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இந்த சிலை நேற்று காலை 7 மணிக்கு வைணவ முறைப்படி திருஷ்டி பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு கீழ்புதுப்பாக்கம் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

    முன்னதாக திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, வாலாஜாபாத், காஞ்சீபுரம், அய்யன்பேட்டை, காவேரிப்பாக்கம் போன்ற இடங்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய இந்த சிலையை ஏற்றி சென்ற லாரி நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் திரளானோர் பல இடங்களில் இருந்து திரண்டு வந்து சாலையில் நின்று கொண்டு கற்பூர ஆராதனை செய்து கருடாழ்வாரை வழிபட்டனர்.

    வருகிற பிப்ரவரி மாதம் 6-ந்தேதி தன்வந்திரி பெருமாள் கோவிலில் இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
    ஓவியத்தில் முருகர் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தர, அவரின் வலது பக்கம் வள்ளியும், இடப்பக்கம் தெய்வானையும் காட்சி தருகின்றனர்.
    திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும், வரலாற்று ஆய்வாளருமான ராஜ்பன்னீர்செல்வம் மற்றும் சுதர்சன், உதயராஜா ஆகியோர் இணைந்து நடத்திய ஆய்வில் அருணாசலேஸ்வரர் கோவிலின் தெற்கு கோபுரமான திருமஞ்சன கோபுரத்தின் விதானத்தில் பாதி அழிந்த நிலையில் ஒரு ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    இந்த ஓவியத்தில் முருகர் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தர, அவரின் வலது பக்கம் வள்ளியும், இடப்பக்கம் தெய்வானையும் காட்சி தருகின்றனர்.

    முருகர் தனது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு, தொடைவரை ஆடை அணிந்து தனது வாகனமான மயிலின் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து "சிகிவாகனராக" நீள்வட்ட பிரபையினுள் காட்சி தருகிறார். கந்தபுராணம் கூறும் முருகனின் 16 கோலங்களில் ஒன்று "சிகிவாகனர்" என்பது குறிப்பிடதகுந்தது.

    முருகரின் வலப்புறம் வள்ளியும், இடப்புறம் தெய்வானையும் சேதமுற்று இருப்பதால் தெளிவாகக் காணக்கிடைக்கவில்லை.

    இடப்புறம் தெய்வானையின் அருகே சேடிப்பெண் ஒருவர் அக்காலத்திய உடை மற்றும் கொண்டை அணிந்து சாமரம் வீசும் காட்சி உள்ளது. அதற்கு மேல் இடப்புறம் உள்ள ஓவியம் முற்றிலும் சிதைந்துள்ளது.

    அதே போல வலப்புறம் வள்ளியின் அருகே காட்டப்பெற்றுள்ள சாமரம் வீசும் சேடிப்பெண் மிகவும் சிதைந்து கால்கள் மட்டும் தெரிகிறது. அதற்கு மேல் வலப்புறமும் ஓவியம் சேதாரமாகி உள்ளது.இவ்ஓவியத்தில் சுண்ணாம்பு, கருப்பு மை மற்றும் உலோக வண்ணங்களான சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாகத் தீட்டியுள்ளனர்.

    இங்குள்ள ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ள வண்ணம் மற்றும் காட்டப்பட்டுள்ள ஆபரணங்கள் யாவும் தஞ்சை பெரிய கோவிலின் நாயக்கர்கால ஓவியத்துடனும், ஆந்திர மாநிலம் லேபாஷி வீரபத்திரர் கோவில் ஓவியத்துடனும் ஒத்துப் போவதால் இதனை நாயக்கர்கால ஓவியமாகக் கருதலாம்.

    திருவண்ணாமலை கோவிலின் ராஜகோபுர திருப்பணி மற்றும் மதில்களில் எல்லாம் தஞ்சை நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவையே ஆகும். எனவே இவ்ஓவியத்தை 16-ம் நூற்றாண்டின் கடை பகுதியான சேவப்ப நாயக்கர் காலத்தை ஓட்டியதாக இதனைக் கருதலாம்.

    400 ஆண்டு பழமையான இவ்ஓவியத்தை சிதைவிலிருந்து மீட்டு தமிழக தொல்லியல் துறையும், இந்து சமய அறநிலையத்துறையும் முறையாக ஆவணம் செய்து இதனை புனரமைத்து இவ்ஓவியத்தைப் பாதுகாத்திட முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    உங்கள் அனைவருக்கும் வீடு கிடைக்கும் வரை நானும் உங்களை போல் வெட்டவெளியிலேயே இருக்கிறேன் என்று அருளியதாக கோவில் புராணம் கூறுகிறது.
    திருச்சி நகரின் மேற்கு பகுதியில் மத்திய பஸ் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது உறையூர். இங்குள்ள வெக்காளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்து காவல் தெய்வமாகவும், கருணை மிகுந்தவளாகவும் அவர்களது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறாள்.

    தொழில் நஷ்டம், கடன் பிரச்சினை, குடும்ப பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீங்கவும், நோய், நொடியின்றி நலமாக வாழவும், கல்வி, பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடையவும், தங்களின் தீராத பிரச்சினைகளை நிறைவேற்றிட வேண்டி சூலத்தில் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை சீட்டுகளை எழுதி, கட்டுவதுதான் இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது. தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் கோவிலுக்கு தாங்கள் வேண்டியதை காணிக்கையாக செலுத்துவதுடன் அம்மனுக்கு புடவை எடுத்து, தேங்காய், பழம் உடைத்து பொங்கல் வைத்து வழி படுகிறார்கள்.

    தீராத நோயால் அவதிப்படுபவர்கள் வெக்காளியம்மனை மனமுருகி வழிபட்டால் அவர்களது நோய் தீருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பக்தர்கள் மாடு, ஆடு, கோழி ஆகியவற்றை கோவிலுக்கு நேர்ந்து விடுவார்கள். சில பக்தர்கள் வெக்காளியம்மனுக்கு கோவில் வெளியே ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.
    மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார்.
    திரேதாயுகத்தில் வாழ்ந்த சிவபக்தனான குஞ்சரன் என்பவர் குழந்தை வரம் கேட்டு ஈஸ்வரனை நோக்கித் தவம்புரிந்தார். ‘சர்வலட்சணமும் கொண்ட அழகிய மகள் உனக்குப் பிறப்பாள். அவளுக்குப் பிறக்கும் மகன் எனது அம்சமாகத் தோன்றி வலிமையும், வீரமும் கொண்டு சிரஞ்சீவியாக வாழ்வான்’ என்று ஈசன் வரமளித்து மறைந்தார். ஈசனின் அருளால் குஞ்சரனுக்குப் பிறந்த மகள், அஞ்சனை என்ற திருநாமம் கொண்டு வளர்ந்தாள்.

    மணப்பருவம் அடைந்த அஞ்சனை, கேசரி என்னும் வானர மன்னரை மணந்துகொண்டாள். திருமணம் முடிந்தும் அஞ்சனைக்குப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. இதனால் எந்நேரமும் ஈசனை எண்ணி கண்ணீர் வடித்தாள் அஞ்சனை. பக்தியும், நற்குணங்களும் கொண்ட அஞ்சனையின் நல்ல குணங்களை மெச்சி தர்மதேவதை அவளின் முன்தோன்றி, ‘அஞ்சனையே நீ மாலவன் வீற்றிருக்கும் திருவேங்கடமலைக்கு உன் கணவருடன் சென்று தங்கி, ஈசனைக் குறித்து தவம்செய். ஈசன் அருளால் எவராலும் வெல்ல முடியாத அழகிய மகனைப் பெறுவாய்’ என்று ஆசி கூறினாள்.

    தர்மதேவதை கூறியவாறே திருமலைக்குச் சென்று கடும் தவம் இருந்தாள் அஞ்சனை. பஞ்சபூதங்களும் வியக்கும் வண்ணம் அவள் இருந்த தவம் கண்டு வாயு தேவன் மகிழ்ந்தார். ஈசனின் ஆணைப்படி அஞ்சனையின் தவத்தை மெச்சி வாயுதேவன் ஓர் அற்புதக்கனியைப் பரிசளித்து ஆசிர்வதித்தார். அந்தக் கனியை உண்ட அஞ்சனை கருவுற்றாள். மார்கழி மாத மூல நட்சத்திர நன்னாளில் அனுமன் அவதரித்தார். சிவசக்தி அருளால் தோன்றிய அனுமன், வாயுபுத்திரன், அஞ்சனை மைந்தன், ஆஞ்சநேயன் என்று திருப்பெயர்கள் கொண்டார்.
    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.
    பிரம்ம முகூர்த்த நேரம் என்ற அதிகாலை நேரத்திலே படுக்கையை விட்டு எழ வேண்டும். அந்த நேரத்தில் தேவர்களும், பித்ருக்களும் நம் வீடு தேடி வருவார்கள். அப்போது நாம் உறங்கக் கூடாது.

    காலையில் எழுந்ததும் வீட்டுக் கதவைத் திறக்கும் போது மகாலட்சுமியே வருக என்று 3 முறை கூற வேண்டும். காலையில் 4.30லிருந்து 6.00 மணிக்குள் வீட்டு வாச லில் சாணம் தெளித்து அரிசி மாவினால் கோலம் போட வேண்டும். இவ்வாறு செய்வதால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்.

    காலையிலும், மாலையில் இருட்டுவதற்கு முன்பாக வீட்டில் விளக்கேற்ற வேண்டும். மாலையில் விளக்கு ஏற்றிய உடன் வெளியே செல்லக் கூடாது. விளக்கு வைத்த பிறகு தலைவாருதல், பேன் பார்த்தல், முகம் கழுவுதல் போன்றவை செய்யக்கூடாது. விளக்கு வைத்த பிறகு குப்பை, கூளங்களை வெளியே வீசக்கூடாது.

    பால், தயிர், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றை இரவில் கடன் வாங்குதல், கடன்கொடுத்தல் கூடாது. நெற்றியில் எப்பொழுதும் குங்குமம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுக்கும்முன் குடும்பத் தலைவி தான் குங்குமம் இட்டுக் கொண்டு பிறகு அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

    பால் பொங்கி வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு உப்பு வாங்குவது அதிர்ஷ்டம் மற்றும் எல்லாவித செல்வங்களையும் கொடுக்கும். வெள்ளிக்கிழமைகளில் பணம் கடன் கொடுப்பது, அரிசி வறுப்பது, புடைப்பது ஆகியவை செய்யக்கூடாது.

    செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். பெண்கள் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.
    விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.
    1. ஸ்ரீதனலட்சுமி:- நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

    2. ஸ்ரீவித்யாலட்சுமி:- எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.

    3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.

    4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும், நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.

    5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.

    6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.

    7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லை, ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.

    8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர் களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத் தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.

    9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.

    10. ஸ்ரீசாந்திலட்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.

    11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.

    12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.

    13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.

    14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

    15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.

    16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக்கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்.
    மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார்.
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் மூலம் சனி கிரக பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். தேவர்களும், அசுரர்களும் ஒன்று கூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தை பெற முயன்றனர். அப்போது பாற்கடலில் இருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன் தோன்றினர்.

    மகா விஷ்ணுவின் ஆனந்த கண்ணீர் பெருகி அந்த கண்ணீர் துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அந்த கலசத்தில் இருந்து பச்சை நிறத்துடன் துளசி மகாதேவி தோன்றினார். துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகா விஷ்ணு வைத்துக்கொண்டு மற்றவற்றை தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

    துளசியில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் வசிக்கின்றனர்.இலையின் நுனியில் பிரம்மன், நத்தியில் மாயோன்மற்றும், லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி, பார்வதி ஆகியோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும்.

    துளசி மாலை சாத்தி விஷ்ணுவை வழிபட்டால் மனதில் உள்ள குழப்பங்கள் யாவும் விலகும். மனக்கிலேசம் நீங்கும். புத்தியில் தெளிவும் காரியத்தில் வெற்றியும் உண்டாகும் என்பது ஐதீகம். இதன்படி விஷ்ணுவின் திருநாமத்தில் ஊறித்திளைக்கும் ஆஞ்சநேயருக்கும் பக்தர்கள் துளசி மாலை சாத்தி வழிபடுவது பிரதானமாக உள்ளது. துளசி மாலையுடன் உள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் ஆயுள் பலம் அதிகரிக்கும்.புகழ் கூடும், செல்வம் பெருகும், பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். துளசி தீர்த்தத்தை அருந்தினால் பரமபதம் செல்வார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது.

    வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும். ரவிக்கைத் துணி வைத்துக் கொடுத்தால் தட்சணையாக ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொடுக்கவும்.
    வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணெய் கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

    லட்சுமி கடாட்சம்

    தினமும் காலையில் குத்துவிளக்கு ஏற்றி- விளக்கிற்கோ அல்லது லட்சுமி படத்திற்கோ சந்தனம் குங்குமம் சாத்தவும், பிறகு இரண்டு கைகளிலும் பூவை எடுத்துக் கொண்டு லட்சுமி சுலோகத்தைச் சொல்லி, புஷ்பத்தை படத்திற்கோ அல்லது விளக்கு பாதத்திலோபோடவும். பால் அல்லது அன்னம் நிவேதிக்கவும் இதேபோல் தினமும் ஆராதித்து வந்தால் அஷ்ட ஐசுவரியங்களும் பொங்கி பெருகும்.
    வில்வ மரத்தைப் பிரதசிணம் செய்வது ஸ்ரீ லட்சுமியை வலம் வருவதற்குச் சமமாகும். திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமானுக்கு மார்கழி மாதம் வில்வார்ச்சனை செய்கிறார்கள்.
    ஸ்ரீலட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப் பக்கமாக பூஜிக்க வேண்டும். ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள். அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும்.

    ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.

    ஸ்ரீரங்க சேத்திரத்தின் தல விருட்சம் வில்வம், திருவகீந்தபுரத்து ஹேமாம் புஜநாயகி தாயாருக்கு வில்வார்ச்சனை தான் செய்து வருகிறார்கள்.

    வில்வ மரத்தைப் பிரதசிணம் செய்வது ஸ்ரீ லட்சுமியை வலம் வருவதற்குச் சமமாகும். திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமானுக்கு மார்கழி மாதம் வில்வார்ச்சனை செய்கிறார்கள். வைகாசன ஆகமத்தின் போது வில்வம் உபயோகப்படுத்தப்படுகிறது.

    ஸ்ரீ லட்சுமிக்கு வில்வம் விசேஷம் என்பதனை ஸ்ரீ சுக்தத்தில், ஆதித்ய வர்ணே தபஸோதி ஜாதோ வனஸ்பதி ஸ்தவ வ்ருஷோதபில்வ என்று சொல்லப்பட்டுள்ளது.

    சூரியனின் வர்ணத்தோடு கூடியவளே! தபஸ்சினாலே உணரப்படுவளே! உன்னுடைய வனஸ்பதி பில்வ விருசமாகும் என்பது பொருள்.

    இதேபோல் மற்றொரு சுலோகத்தில், தஸ்யபவானி தபாசானு தந்து மாயாந் தராயாஸ்ச பாக்யா அலட்சுமி என்று சொல்லப்பட்டுள்ளது.

    அதன் பழங்கள், மாயையான தடைகளை நீக்கி, அலட்சுமி நிலைக்கு (திருவின்மை) புறம்பானவர்களாக (லட்சுமிகரமாக) ஆக்கும்.

    ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது. வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள். இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.

    நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது. அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை ஹரி பலம் என்று கூறுவர். நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள்.

    ஒரு அந்தணன் மகாலட்சுமிக்கு ப்ரீ தியான நெல்லி மரத்தடியில் உயிர் நீத்த புண்ணியத்தால் வைகுண்ட பிராப்தியை பெற்றான். இதேபோல் நெல்லிக்கனியை பிசை இட்டதற்காக, கடும் வறுமையில் வாடிய குடும்பத்தவர்களுக்கு கனகமணி கட்டி களை வர்சித்தவள் மகாலட்சுமி.

    குபேர பட்டணத்தில் நெல்லி விருட்சங்களை நெடுகிலும் காணலாம். அதனால் தான் நெல்லி மர வழிபாட்டால் குபேர சம்பத்தைக் கொடுக்கும் என்பது திருஷ்டாந்தம் துளசி செடியிலும் லட்சுமி எழுந்தருளியுள்ளாள்.

    இதேபோல் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சள் செடியை வளர்ப்பது விசேஷம். மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது.

    மஞ்சள் கலந்த மந்திராசத்தை - மங்களார்த்தி என்று கூறப்படும் மஞ்சள் நீர், மஞ்சள் பூசிய மாங்கலய சரடு என்று பல மங்களகரமான பொருட்களோடு, மஞ்சள் கலந்து சர்வ மங்களமாகிறது.

    பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது. குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு.

    ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர். ஸ்ரீ சூர்ணத்தை ஹரித்ராசூர்ணம் என்று கூறுவர். மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி. அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள். திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது. திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் சிலாக்கியம். ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.

    ஸ்ரீ ராமச்சந்திர பிரபுவையும், சீதா பிராட்டியாரையும் சேர்த்துப் போற்றிப் பணிந்த ஆஞ்சநேய மகாப் பிரபுவும், அவரது திருவடியைச் சிந்தனையிலே கொண்ட பக்தர்களும் சகல சவுபாக்கியங்களுடனும் வாழ்கின்றனர். இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.

    வைகறைக் துயில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். கோலம் போடும் பழக்கம் என்பது பண்டுதொட்டு நமது பாரத நாட்டில் இருந்து வருவதால் தான் மாக்கோலம், இழை கோலம், புள்ளிக்கோலம், வர்ணப் பொடிகளைத் தூவி போடும் ரங்கோலி போன்ற கோலங்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. மாக்கோலத்தை சுற்றி காவி பூசுவதும் பழக்கத்தில் உள்ளது.

    புராண காலத்தில் யாக சாலைகளில் விதவிதமான வண்ணக் கோலங்களை போட்டு, அக்கோலங்களின் மீது ஹோம குண்டங்களை அமைப்பதை பழக்கமாக கொண்டிருந்தனர்.

    ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள். இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள்.
    அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள்.
    ஸ்ரீலட்சுமி திருமாலின் வட்சத் தலத்தில் நித்திய வாசம் புரிகின்றாள்.

    சுமங்கலிகள், பூரண கும்பம்-மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

    அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம், சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள்.

    தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர்களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் கிருஹங்களிலும், கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள்.

    வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீலட்சுமி வசிக்கிறாள்.
    பெண்கள் விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
    பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர்களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு மகன் பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அரியாத கரசந்திரிகா அவளை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாள்.

    அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக்கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டு போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றி கேட்டறிந்து சிரத்தையுடன் அதை கடைப்பிடித்து வரத்தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்கு சுபிட்சம் பொங்கிய அதே நேரத்தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங்களையும் இழந்தனர்.

    தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத்தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற்கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை பெற்றதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

    விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கலப்பொருட்களுடன் தட்சணையும் வைத்துக்கொடுத்து அனுப்ப வேண்டும்.
    ×