என் மலர்

  வழிபாடு

  மாமல்லபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு எடுத்து செல்லப்பட்ட 17 அடி உயர கருடாழ்வார் சிலையை படத்தில் காணலாம்.
  X
  மாமல்லபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு எடுத்து செல்லப்பட்ட 17 அடி உயர கருடாழ்வார் சிலையை படத்தில் காணலாம்.

  மாமல்லபுரத்தில் இருந்து வாலாஜாபேட்டைக்கு சென்ற 17 அடி உயர கருடாழ்வார் சிலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பக்தர்கள் திரளானோர் பல இடங்களில் இருந்து திரண்டு வந்து சாலையில் நின்று கொண்டு கற்பூர ஆராதனை செய்து கருடாழ்வாரை வழிபட்டனர்.
  ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகில் உள்ள கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள தன்வந்திரி பெருமாள் கோவில் சர்ப தோஷங்கள், நாக தோஷம், திருமணத்தடை, ஏழரை சனி உள்ளிட்ட தோஷங்களை நிவர்த்தி செய்யும் புகழ்பெற்ற கோவிலாக திகழ்கிறது. இந்த கோவிலில் அமைப்பதற்காக 17 அடி உயர கருடாழ்வார் சிலை மாமல்லபுரம் வசந்தபுரியில் உள்ள ஒரு சிற்பக்கலை கூடத்தில் 15 டன் எடை கொண்ட கல்லில் வடிவமைக்கப்பட்டது.

  மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் பட்டம் பெற்ற சிற்ப கலைஞர் லோகநாதன் ஸ்தபதி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் இந்த சிலையை 3 மாதமாக ஆகம விதிப்படி வடிவமைத்து முடித்தனார். பின்னர் 100 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் இந்த சிலை நேற்று காலை 7 மணிக்கு வைணவ முறைப்படி திருஷ்டி பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு கீழ்புதுப்பாக்கம் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

  முன்னதாக திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, வாலாஜாபாத், காஞ்சீபுரம், அய்யன்பேட்டை, காவேரிப்பாக்கம் போன்ற இடங்களில் பக்தர்கள் வழிபாடு செய்ய இந்த சிலையை ஏற்றி சென்ற லாரி நிறுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் திரளானோர் பல இடங்களில் இருந்து திரண்டு வந்து சாலையில் நின்று கொண்டு கற்பூர ஆராதனை செய்து கருடாழ்வாரை வழிபட்டனர்.

  வருகிற பிப்ரவரி மாதம் 6-ந்தேதி தன்வந்திரி பெருமாள் கோவிலில் இந்த சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டவுடன் பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
  Next Story
  ×