என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல்.
    • இவர் தமிழில் மின்சார கனவு, விஐபி -2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கஜோல். இவர் இந்தியில் பிரபல நடிகர்களாக வலம் வரும் ஷாருக்கான், சல்மான் கான் போன்ற டாப் நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். நடிகை கஜோல் நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

    இவர் தமிழில் மின்சார கனவு, தனுசுடன் விஐபி -2 ஆகிய படங்களிலில் நடித்து உள்ளார். இந்நிலையில், நடிகை கஜோல் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். எப்போழுதும் சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


    இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "என் வாழ்க்கையின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், "சமூக ஊடகங்களிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்கிறேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.

    சிலர் இதனை நடிகை கஜோல் நடித்து அடுத்து வரவிருக்கும் வெப் தொடரான' தி குட் வைப் - அமெரிக்க கோர்ட்ரூம்' நாடகத்தை விளம்பரப்படுத்துவதற்கான உத்தியாக இருக்கும் என்று கூறுகின்றனர். நடிகை கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏற்கனவே பதிவிட்ட அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு.
    • இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

    கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.


    வேட்டையாடு விளையாடு போஸ்டர்

    வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

    • இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

    அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை கேரளாவில் ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • நடிகர் ஷாகித் கபூர் நடிப்பில் ‘ப்ளடி டாடி’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
    • இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

    பிரபல பாலிவுட் நடிகரான ஷாகித் கபூர், நடிகர் பங்கஜ் கபூர் மற்றும் நீலிமா அசீமின் மகனாவார். முதலில் படங்களில் பின்னணி நடன கலைஞராக பணியாற்றிய ஷாகித் கபூர் அதன்பின்னர், கடந்த 2003-ஆம் ஆண்டு வெளியான 'இஷ்க் விஷ்க்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.


    2013-ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஷாகித் கபூர் நடித்த 'ஆர். ராஜ்குமார்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது 2015-ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'தூங்காவனம்'திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட 'ப்ளடி டாடி' என்ற இந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். அலி அப்பாஸ் ஜாபர் இயக்கியுள்ள இந்த திரைப்படம் இன்று (ஜூன் 9) ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.

    இந்நிலையில், நடிகர் ஷாகித் கபூர் தென்னிந்திய மக்கள் இந்தி திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "தென்னிந்திய மக்கள் இந்தி திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பாலிவுட் ரசிகர்கள் பெரிய மனம் படைத்தவர்கள். அவர்கள் எப்படி தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களை ரசிக்கிறார்களோ அதேபோல் தென்னிந்தியர்களும் ரசிக்க வேண்டும்" என்று கூறினார்.

    • இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ‘போர் தொழி’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'போர் தொழில்' திரைப்படம் இன்று (ஜூன் 9) திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'போர் தொழில்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் ஹரிஷ் கல்யாண் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "போர் தொழில் திரைப்படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வருகிறது. இது பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமையும் என்று நம்புகிறேன். வெற்றி விழாவிற்கு என்னை அழைக்கவும் அசோக் செல்வன்" என்று மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார்.

    மேலும், ஹரிஷ் கல்யாணுக்கு நன்றி தெரிவித்து அசோக் செல்வன் பதிவு வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


    • அருள்நிதி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டைரி’.
    • இப்படத்தை அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கியிருந்தார்.

    அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டைரி'. இப்படத்தை பொல்லாதவன், ஆடுகளம், ருத்ரன் படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்திருந்தார். உண்மையில் நடந்த கதையில் கொஞ்சம் கற்பனை கலந்து உருவாகி வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.


    புதிய அறிவிப்பு
    புதிய அறிவிப்பு

    இந்நிலையில் டைரி படத்தின் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்கவுள்ள 12அது படத்தை இன்னாசி பாண்டியன் இயக்கவுள்ளார். இதனை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

    • நயன்தாரா- விக்னேஷ் சிவன் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடி வருகின்றனர்.
    • இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர். விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது.


    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    நயன்தாரா - விக்னேஷ் சிவன்

    அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி அன்று திருமணம் செய்துக் கொண்டனர். திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.


    குழந்தைகளுடன் நயன்தாரா 

    குழந்தைகளுடன் நயன்தாரா 

    நயன்தாரா- விக்னேஷ் சிவன் இன்று தங்களது முதலாம் ஆண்டு திருமணநாளை கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக்-கின் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். நயன்தாரா குழந்தைகளை கையில் வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

    • சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'டக்கர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படம் குறித்து டக்கர் படக்குழு மாலைமலர் நேர்யர்களுக்காக பிரத்யேக பேட்டியளித்தனர்.

    கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டக்கர்'. இதில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிகை திவ்யான்ஷா கௌஷிக் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யூ சிங், முனிஷ்காந்த், ஆர்ஜே விக்னேஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.


    டக்கர்

    டக்கர்

    'டக்கர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டக்கர் படத்திற்காக நடிகர் சித்தார்த், இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் மாலைமலர் நேயர்களுக்காக பிரத்யேக பேட்டியளித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டனர்.


    டக்கர் படக்குழு
    டக்கர் படக்குழு

    அப்பொழுது நடிகர் சித்தார்த் பேசியதாவது, "இந்த படம் தியேட்டர்ல பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம். இது ஜனரஞ்சகமான கமர்ஷியல் படம். ஒரு சில படங்களில் மக்கள் இந்த கருத்தை ஏற்று கொள்வார்களா? இதில் பேசியிருக்கும் நீதி அநீதியை ஏற்று கொள்வார்களா? என்ற எண்ணம் இருக்கும். டக்கர் படம் மக்களோட அறியாமையை போக்குவதற்காக எடுக்கப்பட்ட படம் கிடையாது, நல்ல மனிதனை தூண்டி வெளியே கொண்டு வரும் நோக்கம் கிடையாது. ஜாலியாக படத்தை வந்து தியேட்டர்ல சந்தோஷமாக பார்ப்பதற்காக எடுக்கப்பட்ட படம். எனவே அனைவரும் டக்கர் படத்தை தியேட்டர்ல வந்து பாருங்கள்" என்றார்.



    • தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
    • இப்படத்தின் இடண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை சந்தோஷ் நாராயணன் கொடுத்துள்ளார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். திரையரங்கில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    வடசென்னை

    வடசென்னை

    இதில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாப்பாத்திரம் பலரின் பாராட்டுக்களை பெற்றது. மேலும் ராஜன் கதாப்பாத்திரத்தை தனி படமாக வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. அதேபோல் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரவேண்டும் என்றும் பலரின் கோரிக்கையாக உள்ளது.


    வடசென்னை

    வடசென்னை

    இந்நிலையில் 'வடசென்னை' படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்திய பேட்டியில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், 'வடசென்னை' படத்தில் அமீரின் ராஜன் கதாபாத்திரத்தை மட்டும் வைத்து 'ராஜன் வகையறா' என்ற படத்தை வெற்றிமாறன் தயாராக வைத்துள்ளார். 2 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கும் இந்த படத்தை தயவு செய்து வெற்றிமாறன் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த படம் ரிலீஸ் ஆனால் தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.

    • தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் ஆதிபுருஷ் வெளியாக உள்ளது.
    • இப்படத்தில் பிரபாஸ் ராமரை போல் இல்லை, கர்ணனைப் போல இருக்கிறார் என்று நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.

    இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் திரைப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தி சராயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. ஆனால், டீசரை பார்த்த நெட்டிசன்ஸ், படத்தின் கிராபிக்ஸ், கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. தொடர்ந்து வெளியான போஸ்டர்களும் விமர்சனத்திற்கு உள்ளானது.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே எஞ்சி உள்ளதால் அதன் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நேற்று முன்தினம் வெளியான இறுதி டிரெய்லரும் விமர்சனத்திற்கு உள்ளானது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரபாஸ் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்று தரிசனம் மேற்கொண்டார்.


    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்


    மேலும் இயக்குனர் ஓம் ராவத் மற்றும் கதாநாயகி கீர்த்தி சனோன் உள்ளிட்டோரும் திருப்பதி சென்று தரிசனம் செய்த நிலையில், கீர்த்தி சனோனை வழியனுப்பும்போது இயக்குனர் அவருக்கு முத்தம் கொடுத்ததால் அது சர்ச்சையானது. இதற்கு கோவிலுக்கு முன்பு இப்படி முத்தமிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என பாஜக கண்டனம் தெரிவித்தது.


    கஸ்தூரி

    கஸ்தூரி

    இந்நிலையில் நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தின் வாயிலாக கேள்வி ஒன்று எழுப்பியுள்ளார். அதில், "ராமர் மற்றும் லக்ஷ்மணன் மீசை மற்றும் தாடியுடன் சித்தரிக்கப்படும் பாரம்பரியம் ஏதேனும் உள்ளதா? ஏன் இந்த குழப்பமான புறப்பாடு? குறிப்பாக பிரபாஸ் இருக்கும் தெலுங்கு திரையுலகில், ஸ்ரீராமன் கதாபாத்திரத்தில் லெஜண்ட் நடிகர்கள் கச்சிதமாக நடித்துள்ளனர். ஆனால் இந்த போஸ்டரில் பிரபாஸை பார்க்கையில் ராமரை போல் தோன்றுவதற்கு பதில் கர்ணனைப் போல இருக்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.


    • 'தேவி 2', 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்து பிரபலமடைந்தவர் டிம்பிள் ஹயாதி.
    • டிம்பிள் ஹயாதிக்கும் போலீஸ் அதிகாரி ராகுல் ஹெக்டேவுக்கும் சமீபத்தில் மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பானது.

    பிரபல நடிகையான டிம்பிள் ஹயாதி 'தேவி 2', 'வீரமே வாகை சூடும்', அட்ரங்கிரே, கில்லாடி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஐதராபாத்தில் உள்ள ஜானர்லிஸ்ட் காலனி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் மாநகர போக்குவரத்து ஆணையர் ராகுல் ஹெக்டே என்பவரும் வசித்து வருகிறார்.

     

    டிம்பிள் ஹயாதி

    டிம்பிள் ஹயாதி


    டிம்பிள் ஹயாதிக்கும் போலீஸ் அதிகாரி ராகுல் ஹெக்டேவுக்கும் சமீபத்தில் மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பானது. ராகுல் ஹெக்டேவின் காரை டிம்பிள் ஹயாதி தனது காலால் எட்டி உதைத்ததுடன் டிம்பிள் ஹயாதியின் வருங்கால காதல் கணவர் டேவிட், தனது காரை பின்னால் எடுத்து மோதி சேதப்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரியின் கார் டிரைவர் புகார் அளித்தார். இதையடுத்து டிம்பிள் ஹயாதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.


    டிம்பிள் ஹயாதி

    டிம்பிள் ஹயாதி

    இந்நிலையில் வழக்கை எதிர்த்து டிம்பிள் ஹயாதி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். போலீஸ் அதிகாரியின் நெருக்கடியால்தான் ஜூப்ளி ஹில்ஸ் போலீசார் என் மீது தவறான வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளார். டிம்பிள் ஹயாதியின் கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்ததுடன் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிட்டார்.

    • ஓராண்டு ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

    தென்னிந்திய திரைத்துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் நடிகை நயன்தாரா. சொந்த வாழ்க்கையில் அடுக்கடுக்காக சர்ச்சைகளில் சிக்கியபோதிலும் அதை தகர்த்தெரிந்து ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்தவர்.

    விக்கேனஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன்பின்னர், நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி அன்று திருமணம் செய்துக் கொண்டனர்.

    திருமணம் முடிந்த சில மாதங்களில் இரட்டை குழந்தை பிறந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.

    இந்த விஷயம் சர்ச்சையாகி பூதாகரமாக வெடித்தது. பிறகு, சட்ட விதிப்படி வாடகைத் தாய் மூலம் தாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராகி இருப்பதாக தெரிவித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

    இதற்கு மத்தியில் நாட்கள் ஓடிவிட்டதை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வியப்புடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஆம்.. நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்து ஓராண்டு ஆகிறது. ஜூன் 9ம் தேதி (இன்று) தங்களது முதலாமாண்டு திருமண நாளை விக்னேஷ் சிவன்- நயன்தாரா கொண்டாடுகின்றனர்.

    இந்நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவுக்கு வாழ்த்து தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:-

    நேத்து தான் திருமணம் முடிந்ததுபோல் உள்ளது. திடீரென எனது நண்பர்கள் முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் என்று வாழ்த்தி வருகின்றனர்.

    லவ் யூ தங்கமே..! எல்லா அன்புடனும் ஆசீர்வாதங்களுடனும் நம் வாழ்க்கையைத் தொடங்குகிறோம்.

    இன்னும் பயணிக்க வெகுதூரம் உள்ளது..!

    ஒன்றாகச் சாதிக்க நிறைய இருக்கிறது..!

    நம் வாழ்வில் உள்ள நல்ல மனிதர்களின் அனைத்து நல்லெண்ணத்துடனும், கடவுளின் அனுகிரகத்துடனும் மிகப்பெரிய ஆசீர்வாதம், நம் திருமணத்தின் இரண்டாம் ஆண்டில் கொண்டு வரும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    ×