ஜெயிலர் படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’.இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
ஜெயிலர் படத்தின் ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
Published on

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் ரிலீஸ் உரிமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தை கேரளாவில் ஸ்ரீ கோகுலம் ஃபிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com