என் மலர்
சினிமா செய்திகள்
- விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
- இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'நரச்ச முடி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விக்ரமை ரித்து வர்மா வர்ணிப்பது போன்று உருவாகியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- சந்தானம் நடித்துள்ள திரைப்படம் '80-ஸ் பில்டப்'.
- இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'குலேபகாவலி', 'ஜாக்பாட்' , 'கோஸ்டி' போன்ற படங்களை இயக்கிய கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் '80-ஸ் பில்டப்'. இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, பேன்டசி டிராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காமெடியாக உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து அதிக லைக்குகளை குவித்து வருகிறது.
- விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் ‘ரெய்டு’.
- இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் 'ரெய்டு'. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும், அனந்திகா, ரிஷி ரித்விக், சவுந்தரராஜா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எஸ்.கே. கனிஷ்க் மற்றும் ஜிகே ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுத கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ரெய்டு' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது, நெகட்டிவிட்டியை வைத்துதான் இந்தப் படம் உருவாக்கியுள்ளோம். நல்ல கதைகளைதான் தேர்ந்தெடுப்பேன். இது கொஞ்சம் கமர்ஷியல் படம். எனக்கு ஆக்ஷன் பிடிக்கும். அதை கமர்ஷியலாக சில விஷயங்கள் எனக்காக சேர்த்து முயற்சி செய்து கொண்டு வந்துள்ளோம். ஸ்ரீதிவ்யாவை பல வருடங்கள் கழித்து சந்தித்துள்ளேன். இயக்குனர் கார்த்தி, வேலு பிரபாகரன் சார் என அனைவருடனும் வேலை பார்த்தது மகிழ்ச்சி. நான் லீனியர் முறையில்தான் ரெய்டு கதை எழுதப்பட்டுள்ளது. படத்தின் விஷூவலுக்காக இசையை சாம் சூப்பராக கொடுத்துள்ளார் என்றார்.

நடிகை ஸ்ரீ திவ்யா பேசியதாவது, 'ரெய்டு' படம் நான் முத்தையா சாருக்காகதான் நடித்தேன். 'மருது' படத்தில் எனக்கு அருமையான கதாபாத்திரம் முத்தையா கொடுத்தார். விக்ரம் பிரபுவுடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
- விஜய் சேதுபதி இந்தியில் அறிமுகமான திரைப்படம் 'மும்பைகர்'.
- இப்படத்தை இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கினார்.
புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'மும்பைகர்'. இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாநகரம்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ஹிருது ஹாரூண், ரன்வீர் ஷோரே, தன்யா மானிக்தலா, சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜோதி தேஷ்பாண்டே மற்றும் ரியா ஷிபு ஆகியோர் இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
மும்பையின் பரபரப்பான தெருக்களின் பின்னணியில் அமைக்கப்பட்ட 'மும்பைகர்' திரைப்படம் பல்வேறு தொடர்பற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையை பின்னிப்பிணைத்து சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. 24 மணி நேர காலகட்டத்தில் நடக்கும் பல நிகழ்வுகளை திடீரென ஒன்றிணைக்கும் முக்கிய கதாபாத்திரங்களின் பயணத்தை படம் விவரிக்கிறது.

இந்நிலையில், 'மும்பைக்கர்' திரைப்படம் முதல் முறையாக நவம்பர் 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ளது.
இப்படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, இந்திய நடிகர்களுக்கு இது ஒரு உற்சாகமான நேரமாக இருக்கிறது. பல்வேறு மொழிப் படங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் எங்களுக்கு வருகின்றன. வெப் சீரிஸில் நான் நடித்ததற்காக மக்களின் அன்பு, பாராட்டுகளை பெற்றுள்ளேன். இந்த திரைப்படம் எனது முதல் இந்தி திரைப்பட அறிமுகமாக அமைந்துள்ளது. இப்படம் தமிழில் வெளியாவதன் மூலம் தமிழ் ரசிகர்கள் இப்படத்தை விரும்புவார்கள் மற்றும் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
- முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைத்துள்ள திரைப்படம் 'டெவில்'.
- இப்படத்தை இயக்குனர் ஆதித்யா இயக்கியுள்ளார்.
சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, "எல்லாக் கதைகளும் ஒரே கதைகள் தான், "டெவில்" படத்தின் கதையும் அதே தான். ஒரு அமைதியான வீட்டிற்குள் கருப்பு உள்ளே வரும். வீடு சின்னாபின்னமாகி சிதிலம் அடையும், மீண்டும் அது புத்துயிர் பெற்று துளிர்க்கும். அன்னா கரீனா தொடங்கி எல்லாவற்றிலும் கதை இதுதான். நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன் அல்ல; ஆனால் பைபிளை பலமுறை படித்திருக்கிறேன். இப்பொழுதும் இயேசு கிறிஸ்து என் பின்னால் நிற்பதைப் போல் உணர்கிறேன். நானும் சிலுவையில் தொங்குபவன் தான். இப்படத்தில் சில பாடல்களை முயற்சித்து இருக்கிறேன்.

ஒரு எட்டு வயதாக இருக்கும் போது என் தந்தையின் தோள்களில் அமர்ந்து சவாரி செல்லும் போது, 'அன்னகிளியே உன்னத் தேடுதே…' பாடலைக் கேட்டு என் அப்பனின் தலைமுடியைப் பற்றி இழுத்து நிறுத்தி அப்பாடலைக் கேட்டேன். அன்று முதல் இளையராஜா எனக்கு குருநாதர் தான். பின்னர் ஏன் இசையமைக்க வந்தாய் என்று கேட்கிறீர்களா..? அவருடன் சண்டை போட்டுவிட்டேன்.. எனக்கு கொஞ்சம் கோபம் அதிகமாக வரும். மீண்டும் அவரிடம் போய் நிற்க முடியாது. மேலும் மிகவும் போர் அடிக்கிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதனால் தான் இசையமைக்க முடிவு செய்தேன்.

இந்த இசை பயணத்தின் மூலம் நான் எந்த இடத்திற்கும் சென்று சேர விரும்பவில்லை. அப்படி நான் சென்று சேரும் இடம் என்று ஒன்று இருக்குமானால் அது இளையராஜாவின் காலடிகள் தான். இந்த உலகின் மிகப்பெரும் இசை ஆளுமைகள் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும். அவர்கள் தான் இசையமைப்பாளர்கள். நான் அல்ல.
.சினிமாவில் சிலர் கூறுவார்கள் அதிர்ஷ்டத்தால் ஜெயித்து விட்டான் என்று. இவர்களைப் பொறுத்தவரை சோவிகளை குலுக்கிப் போட்டால் உடனே தாயம் விழுந்துவிடும், பூவா தலையா என்று சுண்டினால் உடனே பூ விழுந்து விடும் என்று நினைக்கிறார்கள். வெற்றி அவ்வளவு எளிதானது அல்ல. தன் வாழ்நாள் முழுக்க, 24 மணி நேரமும் சினிமா, சினிமா, சினிமா என்று ஓடிக் கொண்டிருக்கும் மகத்தான இயக்குனர் அல்ல, மகத்தான கலைஞன் அவன். அவன் தான் என் நண்பன் வெற்றிமாறன். அவனுக்கு கிடைத்த வெற்றிக்கு முழுமுதற் காரணம் அவனது அசராத உழைப்பும் ஆழ்ந்த அறிவும் தான்.

ஒரு படம் இயக்குனரின் உழைப்பும் அறிவும் வெளிப்படையாக தெரிவது போல் இருந்தால் மட்டுமே அப்படம் ஓடும். இல்லை என்றால் அது எப்பேர்ப்பட்ட திரைப்படமாக இருந்தாலும் ஓடாது. அதை மக்கள் நிராகரித்து விடுவார்கள். படத்தை பாருங்கள். அது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தூக்கிப் போடுங்கள். அவன் மீண்டும் அதைவிட நல்ல கதையோடு உங்களைத் தேடி வருவான். படம் நன்றாக இருந்தால் கொண்டாடுங்கள், ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.
- பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'.
- இந்த படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இந்த படத்தை உலக தரத்தில் உருவாக்க பிரசாந்த் நீல் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 'சலார்' படத்தின் சண்டைக் காட்சிகளில் ஜீப்புகள், லாரிகள் என 750 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக இந்தக்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- ஜியோ பேபி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'காதல்- தி கோர்'.
- இந்த படத்தை மம்முட்டி கம்பெனி தயாரித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காதல் தி கோர் போஸ்டர்
இந்நிலையில், காதல் - தி கோர்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர். மம்முட்டியை கட்டியணைத்தபடி ஜோதிகா இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- சதீஷ் நடித்துள்ள திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'.
- இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இயக்குனர் சிம்பு தேவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கான்ஜூரிங் கண்ணப்பன்'. இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்த்ராஜ், ரெஜினா கசன்ட்ரா, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லீ மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

திகில், ஃபான்டசி கலந்த திரைப்படமாக உருவாகும் இப்படத்தினை ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பெரும் பொருட்செலவில் பழங்கால அரங்குகள் அமைத்து நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 'நல்ல ஸ்கிரிப்ட் லாரன்ஸ் இல்ல சுந்தர்.சி கிட்ட சொன்னா சினிமால நல்ல பெயர் கிடைக்கும்' போன்ற காமெடியான வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இந்தியன் 2'.
- இந்த படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியானது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோவை திரைப்பிரபலங்கள் பலர் நேற்று பல மொழிகளில் வெளியிட்டனர்.

இந்தியன் 2போஸ்டர்
இந்நிலையில், இந்த வீடியோ வெளியான ஒரே நாளில் ஐந்து மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
- இயக்குனர் கல்யாண் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
- இந்த படத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ளார்.
'குலேபகாவலி', 'ஜாக்பாட்' , 'கோஸ்டி' போன்ற படங்களை இயக்கிய கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் '80-ஸ் பில்டப்'. இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, பேன்டசி டிராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

80-ஸ் பில்டப் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, '80-ஸ் பில்டப்' திரைப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
- தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
- இயக்குனர் பி. வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கங்கனா ரனாவத். இவர் ஜெயம் ரவி நடித்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பிறகு, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்ட தலைவி படத்தில் நடித்திருந்தார்.
இவர், இயக்குனர் பி. வாசு இயக்கிய சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். இதன்பிறகு, இந்தியில் உருவான தேஜஸ் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் துவாரகா கோவிலுக்கு சென்றிருந்தார். கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கங்கனா அவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.
அதன்படி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த கங்கனா ரனாவத், "கடவுள் கிருஷ்ணர் ஆசீர்வதித்தால், நான் போட்டியிடுவேன். பா.ஜ.க. அரசின் முற்சிகளால், இந்தியர்களாகிய நாம் 600 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றியை பார்க்க போகிறோம். உலகம் முழுக்க சனாதன தர்மத்தின் கொடியை பறக்க செய்ய வேண்டும்," என்று தெரிவித்தார்.
- 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்கியுள்ளார்.
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதையடுத்து 'இந்தியன் 2' படத்தின் அறிமுக வீடியோவை இன்று மாலை 5.30 மணிக்கு தமிழில் ரஜினி, தெலுங்கில் இயக்குனர் ராஜமவுலி, இந்தியில் நடிகர் அமீர்கான், கன்னடத்தில் கிச்சா சுதீப், மலையாளத்தில் மோகன் லால் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. 'எங்கு தப்பு நடந்தாலும் கண்டிப்பா நான் வருவேன்' போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.






