கமல்ஹாசனா.. ரஜினியா.. யார் ஜெயிக்கிறானு பாப்போம்- கவனம் ஈர்க்கும் சந்தானம் பட டீசர்

சந்தானம் நடித்துள்ள திரைப்படம் '80-ஸ் பில்டப்'.இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கமல்ஹாசனா.. ரஜினியா.. யார் ஜெயிக்கிறானு பாப்போம்- கவனம் ஈர்க்கும் சந்தானம் பட டீசர்
Published on

'குலேபகாவலி', 'ஜாக்பாட்' , 'கோஸ்டி' போன்ற படங்களை இயக்கிய கல்யாண் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் '80-ஸ் பில்டப்'. இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ராதிகா பிரீத்தி நடிக்கிறார். மேலும், கே.எஸ்.ரவிகுமார், ஆனந்த் ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, மயில்சாமி, முனீஸ்காந்த், கூல் சுரேஷ் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஜாக்கப் ரத்னராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 80-களில் நடக்கும் இந்தப் படத்தின் கதை, பேன்டசி டிராமாவாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. காமெடியாக உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து அதிக லைக்குகளை குவித்து வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com