என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை ராஷ்மிகா பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
    • இவர் 'புஷ்பா -2' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதையடுத்து புஷ்பா- 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.



    சமீபத்தில் 'டீப் ஃபேக்' (deepfake) மூலம் நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தி, அதனை சிலர் வீடியோவாக வெளியிட்டிருந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.


    வேறொரு பெண்ணின் உடலோடு பொருத்தப்பட்ட ராஷ்மிகா முகம்

    இந்நிலையில், இது குறித்து நடிகை ராஷ்மிகா இணையத்தில் வேதனையுடன் பதிவிட்டுள்ளார். அதாவது, "deepfake வீடியோ குறித்து பேசுவது மன வருத்தமாக உள்ளது. தொழில் நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது பயமாக இருக்கிறது. ஒரு பெண்ணாகவும் நடிகையாகவும் எனக்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் இருக்கும் எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.


    ராஷ்மிகா பதிவு

    இது என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் நடந்திருந்தால் எப்படி சமாளித்திருப்பேன் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை . இதனால் பலர் பாதிக்கப்படுவதற்கு முன் இது குறித்து தெரியப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு இதுபோன்ற தொழில்நுட்பத்தில் 'காவாலா' பாடலுக்கு சிம்ரன் ஆடுவது, மோடி சினிமா பாடல்கள் பாடுவது போன்ற வீடியோக்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • பிரித்விராஜ் தற்போது நடித்துள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'.
    • இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

    மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரித்விராஜ். இவர் தற்போது 'ஆடு ஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி இயக்கி உள்ளார். பென்யாமினின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.

    இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சவுதி அரோபியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு ஓட்டகம் மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞன் பற்றிய கதையே இந்த படம். பிருதிவிராஜ் ஒட்டகம் மேய்ப்பவராக நடித்து இருக்கிறார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    ஆடு ஜீவிதம் போஸ்டர்

    இந்நிலையில், 'ஆடு ஜீவிதம்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆடுகளுக்கு நடுவில் நீளமான முடி மற்றும் தாடியுடன் பிரித்விராஜ் இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கமல்ஹாசனின் 234-வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.
    • இப்படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். 36 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் அறிமுக வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து இன்று காலை முதல் இப்படத்தின் அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.


    இதற்கு முன்பு துல்கர்சல்மான் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்திருந்த படக்குழு தற்போது நடிகை திரிஷா இணைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் திரிஷா குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கமல்ஹாசன் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
    • இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். 36 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் அறிமுக வீடியோ இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதையடுத்து இன்று காலை முதல் இப்படத்தின் அப்டேட்டை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.


    கமல் 234 பட போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர்சல்மான், கமலின் 234-வது படத்தில் இணைந்துள்ளார். இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • நடிகர் வெற்றிமாறன் பல படங்களை இயக்கியுள்ளார்.
    • இவர் விடுதலை- 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

    தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்தை இயக்கி வருகிறார். தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.


    சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் 'வாடிவாசல்' படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, 'வாடிவாசல்' திரைப்படத்தில் அமீர் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வட சென்னையில் ராஜனாக அமீர் நடிக்கும் போது நான் சில விஷயங்கள் சொல்லி கொடுக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், வாடிவாசலில் இவர் இருந்தால் பல விஷயங்கள் எனக்கு தெரியும் என்பதற்காக நான் அவரை அணுகினேன் அமீரும் ஓகே சொல்லிவிட்டார் என்று பேசினார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'வடசென்னை' திரைப்படத்தில் அமீர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது.
    • பாரம்பரியம் மிக்க 'ரிச் பிளம் கேக்' உலகளவில் பிரபலமானது.

    கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், ஓட்டல்களில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க 'ரிச் பிளம் கேக்' உலகளவில் பிரபலமானது.


    சென்னை பார்க் எலன்சா ஹோட்டலில் 5-ஆம் வருட கேக் மிக்ஸிங் விழா நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நடிகர்கள் சுப்பு பஞ்சு, பிரித்வி பாண்டியராஜன், நடிகை ஷாலு சம்மு, இயக்குனர் சசி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

    • நடிகர் கமல்ஹாசன் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
    • இவர் நாளை பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் பல படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நாளை தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாட காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் சிவகுமார் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும்தான். அவர்கள் செய்த 'வெரைட்டி ரோல்களை' இதுவரை வேறுயாரும் செய்ய முடியவில்லை.



    சிவாஜி நடித்த சரித்திர, சமூக, புராண வேடங்களை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவு அவர் செய்துவிட்டார். கமல், நீங்கள் நடிப்பதோடு நில்லாமல், தேர்ந்த பரதக்கலைஞர், நடனக் கலையில் வல்லவர், பாடகர், திரைக்கதை ஆசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர்..

    'டூப்' போடாமல் அல்லாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் நீங்கள் சிங்கத்தோடு மோதியவர் .. 'மீண்டும் ஒரு சூர்யோதயம்' படத்தில் ரன்வே ரோட்டில் பாய்ந்து ஓடிய குதிரை சறுக்கி கீழே விழ 20 அடி தூரம் குதிரையின் அடியில் உங்கள் கால் மாட்டி எலும்பு நொறுங்க நடித்தவர் நீங்கள்.

    1973-ல் அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன் என்று துவங்கி தங்கத்திலே வைரம், மேல்நாட்டு மருமகள் என8 படங்களில் நாம் இருவரும் சேர்ந்து நடித்தோம். நான் கதாநாயகன், கமல், நீங்கள் பெரும்பாலும் வில்லனாக நடித்தீர்கள்.. வில்லன் வேடங்களில் நடித்து பெரிய ஹீரோவாக எங்கள் தலைமுறையில் உயர்ந்த முதல் நடிகர் நீங்கள் தான் கமல் !



    விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல உங்களுக்குள் இருந்த 'பொறி'யை கண்டவன் நான். அந்தச் செடி வளர்ந்து இன்று விருட்சமாகி 'நாயகன்', 'குணா', 'அன்பே சிவம்', 'ஒளவை சண்முகி', 'ஹேராம் ' என்று நடிப்பின் இமயத்தைத் தொட்டுள்ளது. நடிப்பில் இனி சாதிக்க உங்களுக்கு எதுவும் மிச்சம் இருப்பதாகத் தெரியவில்லை. அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது.

    அமெரிக்கா கொண்டாடிய ஆப்ரஹாம் லிங்கனே இரண்டு முறை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த பின்னரே அதிபரானார். அரசியலிலும், திரையில் சாதித்தத்தை, நீங்கள் சாதிக்க முடியும்.. துணிந்து இறங்குங்கள். நூறாண்டு நீவிர் வாழ்க..." என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எனக்கு வெற்றிமாறனோ, வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவது புதிதல்ல.
    • கொஞ்சம் கோபக்காரன் நான் சுயமரியாதையுடன் வாழ்பவன்.

    ரமேஷ் பாலகிருஷ்ணா இயக்கத்தில் அமீர், வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ள படம் 'மாயவலை'. வின்சென்ட் அசோகன், சஞ்சனாஷெட்டி, சரண், தீனா, சத்யா உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்துள்ளார். யுவன்சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

    இதில் அமீர் பேசியதாவது, சினிமா அறிவு உள்ளவர்களை ரசிப்பது தான் எனது வேலை. இந்த படத்தில் நடிப்பதற்கு நிறைய நடிகர்களிடம் சென்றோம். யாரும் நடிக்க வரவில்லை. அதனால் நான் நடித்தேன். இது எனக்கே புது அனுபவமாக உள்ளது. வெற்றிமாறன் படத்தை பார்த்துவிட்டு தானே வெளியிடுவதாக கூறினார். ரஜினிக்கும் விஜய்க்கும் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்கள் தேவைப்படுகிறார்கள். எனக்கு வெற்றிமாறனோ, வெற்றிமாறனுக்கு நானோ தேவைப்படுவது புதிதல்ல. கொஞ்சம் கோபக்காரன் நான் சுயமரியாதையுடன் வாழ்பவன். சூர்யாவிடம் இருந்து ஒதுங்கி விட்டேன். ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை யாரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை என்று கூறினார்.


    வின்சென்ட் அசோகன் பேசியதாவது, அமீர் அண்ணனுக்கு சினிமாமேல் இருக்கும் காதல் தான் எங்கள் இருவருக்கும் பொதுவானது. வட சென்னை படத்தில் அமீர் அண்ணனுடன் இணைந்து நடித்தது அனைவருக்கும் இன்றும் பிடித்த காட்சியாக உள்ளது. 'மாயவலை' படம் வித்தியாசமானதாக அமைந்தது என்று கூறினார்.

    நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி இரண்டையும் ஒரு சிலரால் தான் சமாளிக்க முடியும். ரமேஷ் மாயவலை படத்தை நன்றாக எடுத்துள்ளார். எனக்கு திருப்தியான படமாக இந்த படம் வந்துள்ளது என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடிகை அமலாபால் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

    சிந்து சமவெளி, மைனா, வேலையில்லா பட்டதாரி, தெய்வ திருமகள் உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.


    இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடித்து வந்த அமலாபால் கவர்ச்சியாக நடித்து வந்தார். சினிமா மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் ஆர்வம் கொண்ட அமலாபால் வெளிநாடு மற்றும் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அமலாபாலின் நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பவர் அவருக்கு லவ் புரோபோஸ் செய்தார் இது தொடர்பான வீடியோ வைரலானது.


    இந்நிலையில், நடிகை அமலாபால் தனது நண்பர் ஜெகத் தேசாயை திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்துள்ளது. இதனை அமலாபால் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார். இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
    • இப்படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். 36 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



    மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது. இதையடுத்து இப்படத்தின் முன்னோட்ட காட்சி இன்று (நவம்பர் 6) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    கே.எச்.234 போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. முகத்தை முழுவதுமாக மூடிய நிலையில் கமல்ஹாசனின் கண்கள் மட்டும் தெரியும் இந்த போஸ்டரில் டைட்டில் இன்று வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • எங்கள் குடும்பம் காந்தியை பின்பற்றும் குடும்பம் இல்லை. நேதாஜியை பின்பற்றும் குடும்பம்.
    • கட்டுப்பாடுகள் இருக்கும் வரைதான் தப்பு செய்ய பயப்படுவார்கள்.

    சென்னை:

    சென்னை போரூர் கெருகம்பாக்கத்தில் பஸ்சில் தொங்கிய படியே சென்ற மாணவர்களை அடித்து கீழே இறக்கிவிட்டதுடன், பஸ் டிரைவர்-கண்டக்டரை அவதூறாக பேசிய வழக்கில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நிபந்தனை ஜாமின் கிடைத்தது.

    தினமும் மாங்காடு போலீஸ் நிலையத்தில் காலை, மாலை இரு வேளையும் கையெழுத்து போட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஜாமினில் வெளியில் வந்த ரஞ்சனா நாச்சியார், நல்ல விஷயத்துக்காக கைதானதில் தப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    பஸ்சில் மாணவர்கள் தொங்கிச் சென்றதை பார்த்ததும் வந்த கோபம் எனக்கு மட்டுமானது இல்லை. எல்லோருக்குமான கோபம் தான். உங்களுக்கும் அது போன்று கோபம் வந்திருக்கும். பஸ்களில் தொங்கிக் கொண்டு செல்லும் மாணவர்களை பார்த்தால் எல்லா பெண்களுக்குமே கோபம் வரும்.

    ஏதோ நான் மட்டும்தான் கோபப்படுவது போல சிலர் பேசுகிறார்கள். படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை பார்க்கும் பலர், கோபம் வந்தாலும் நமக்கு எதுக்கு வேண்டாத வேலை என்று நினைத்து சென்று விடுவார்கள். பஸ்சை ஓட்டிச்செல்லும் டிரைவருக்கும் கோபம் இருக்கும். கேட்க மாட்டார்கள்.

    ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அப்படி இல்லை. எல்லோருமே தப்பை தட்டி கேட்கணும். அதனால்தான் நான் கேட்டேன். ஒருவரை பார்த்து வேறு ஒருவர் கேட்கணும். அவரை பார்த்து இன்னொருவர் கேட்கணும் என்று நினைக்கிறேன்.

    இந்த சம்பவத்துக்கு பிறகு போலீசார் என்னை கைது செய்த போது நல்ல விஷயத்துக்காக கைதானதில் தப்பே இல்லை என்று தான் நினைத்தேன்.

    எங்கள் குடும்பம் காந்தியை பின்பற்றும் குடும்பம் இல்லை. நேதாஜியை பின்பற்றும் குடும்பம். மாணவர்களை தாக்கியது, கண்டக்டரை பேசியது பற்றி மட்டும் விமர்சிக்கிறார்கள். என்றைக்கு ஒரு ஆசிரியர் மாணவரை கண்டிக்கக் கூடாது. ஒரு போலீஸ் தப்பு செய்பவர்கள் மீது கை வைக்கக்கூடாது, பெற்ற தாய்-தந்தையே பிள்ளைகள் மீது கை வைக்கக்கூடாது என்று பேசி அதனை கடுமையாக்கினார்களோ, அன்றே பயம் போய்விட்டது.

    அதனால்தான் இது போன்ற விஷயங்கள் நடக்கின்றன. இன்று நல்லதை செய்யப்போய் எனக்கு ஒரு நிபந்தனை தினமும் போலீஸ் நிலையத்தில் காலையிலும் மாலையிலும் கையெழுத்துப் போட வேண்டும். கட்டுப்பாடுகள் இருக்கும் வரைதான் தப்பு செய்ய பயப்படுவார்கள்.

    இதுபோன்று படிக்காமல் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்வதை தடுக்க மாணவர்களுக்கென்று தனி பஸ்சை இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாணவர்கள் தொங்கிக் கொண்டு சென்றதை பஸ்சில் யாரும் கண்டு கொள்ளவே இல்லை. நமது பிள்ளை இப்படி தொங்கிக் கொண்டு சென்றால் பார்த்துக் கொண்டு சும்மா இருப்போமா? அதனால் தான் மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்டேன்.

    பஸ்சில் தொங்கும் மாணவர்களிடம் சென்று செல்லப்பிள்ளை கீழே இறங்குடா. செல்லக்குட்டி கீழே இறங்குடா என்று சொல்லி பாருங்கள். ஒரு பையனும் கீழே இறங்க மாட்டான். தாய்மை உணர்வோடுதான் நான் இந்த செயலில் ஈடுபட்டேன். இதுபோன்ற உணர்வு எல்லா பெண்களுக்கும் வர வேண்டும். நமது அப்பா, அம்மா, தாத்தா, பாட்டியிடம் இருந்துதான் இந்த கோபத்தை அனைவரும் கற்றுக்கொண்டிருக்கிறோம். கிராமப்புறங்களில் இருந்து சென்னையில் வந்து குடியேறியவர்கள் கூட தற்போது அந்த கோபத்தை வெளிப்படுத்த தவறுகிறார்கள்.

    அடியாத மாடு பணியாது. 5-ல் வளையாதது 50-ல் வளையாது என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்ததை நம்மில் பெரும்பாலானவர்கள் மறந்தே போய் விட்டோம். உணவு பழக்க வழக்கங்கள் மாறி எப்படி பீட்சா, பர்கருக்கு மாறி விட்டோமோ அதே போன்று நமது சமூக பழக்க வழக்கங்களும் மாறிப் போய் விட்டது.

    மாணவர்களை நான் அடித்தது தவறுதான். என்னைப் போன்று எல்லோரும் செயல்பட வேண்டும் என்று சொல்லவில்லை. குறைந்தபட்ச எதிர்ப்பையாவது காட்ட வேண்டாமா? நான் மாணவர்களை கண்டித்த வீடியோவை பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் பார்த்திருப்பார்கள்.

    இதன் பின்னர் பள்ளிக்கு செல்லும் மகனை பார்த்து ஏய் பஸ்சில் தொங்கிக்கிட்டு வராதடா? என்று ஒரு பெற்றோர் கூறினாலே போதும். படிப்படியாக அனைவரும் சொல்ல தொடங்கி விடுவார்கள்.

    தப்பு செய்பவர்களை அடிப்பது தவறு என்று எப்போது பேசத் தொடங்கினோமோ? அப்போதே பயம் போய்விட்டது என்று தான் கூற வேண்டும். எனது செயலால் 2 மாணவர்களாவது இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தால் அதுவே எனக்கு கிடைத்த வெற்றியாகும்.

    இவ்வாறு ரஞ்சனா நாச்சியார் கூறினார்.

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.




    ×