என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • சமீபத்தில் ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது.
    • அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.

    முன்னணி நடிகையான நடிகை ராஷ்மிகா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ராஷ்மிகா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என தெரிய வந்தது.


    இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


    ஒரிஜினல் புகைப்படம்

    இந்நிலையில், தற்போது கத்ரீனா கைப்பின் டீப் ஃபேக் (deep fake) புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், கத்ரீனா கைப் 'டைகர் 3' படத்திற்காக ஒரு துண்டு அணிந்து ஒரு அதிரடி காட்சியை செய்கிறார். ஆனால் மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தில் நடிகை கத்ரீனா கைப் அதே போஸில் ஆனால் மாற்றப்பட்ட ஆடையுடன் காட்டப்படுகிறார். இந்த புகைப்படம் சில மணி நேரங்களில் சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இருந்தும் இந்த புகைப்படத்திற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    • அற்புதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘அற்புதம்’.
    • இந்த படம் ராகவா லாரன்ஸுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

    கடந்த 2002-ஆம் ஆண்டு இயக்குனர் அற்புதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அற்புதம்'. இந்த படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் ராகவா லாரன்ஸுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும், இந்த படத்தில் குணால், அனு பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    இதுமட்டுமல்லாமல், ஷாம் நடிப்பில் வெளியான 'மனதோடு மழைக்காலம்', தெலுங்கில் உதைக்கிரண் நடித்த 'செப்பவே சிறுகாளி' ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். 52 வயதான இயக்குனர் அற்புதன் விபத்து ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘தங்கலான்’.
    • இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.


    தங்கலான் போஸ்டர்

    இந்நிலையில், இந்த டீசர் யூடியூபில் ஒன்பது மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், திறக்கப்பட்ட வரலாற்றின் பெட்டகம் என்று குறிப்பிட்டுள்ளது.


    • நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது.

    கடந்த 2015-ஆம் ஆண்டு கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், நாசர், பார்வதி நாயர் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது.


    அஜித்தின் கதாபாத்திரத்தை இயக்குனர் கவுதம் மேனன் மெருகேற்றி இருப்பார். மழை வரப்போகுதே.. அதாரு அதாரு போன்ற பாடல்கள் கொண்டாடப்பட்டன. இப்படத்தில் அஜித்துக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த வில்லனாக அருண் விஜய் நடித்திருந்தார்.


    இந்நிலையில், இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாகவும் நடிகர் சல்மான்கான் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு 'வீரம்' படத்தின் ரீமேக்கில் சல்மான் கான் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.
    • இப்படத்திற்கு ஶ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார்.

    பிரபல எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி நடித்துள்ள திரைப்படம் "கட்டில்". மேப்பிள் லீப்ஸ் புரொடக்ஷன்ஸ் (Maple Leafs Productions) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஶ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார். வைட் ஆங்கிள் ரவிசங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவினில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது, கட்டில் மாதிரியான சிறு படங்கள் ஓடினால் தான் தமிழ் சினிமாவிற்கு நல்லது. இது மாதிரி படங்களில் தான் புதிய கலைஞர்கள் நமக்கு கிடைப்பார்கள். பெரிய படங்கள் திட்டமிட்டுப் பார்க்க வைக்கப்படுகிறது, துப்பாக்கி சத்தங்களுக்கு மத்தியில் கணேஷ்பாபு புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருக்கிறார். சிறு படங்கள் தான் நம்மைச் சிறகடித்துப் பறக்கவைக்கும் நம் சிந்தனையை வளர்க்கும். பழைய படங்களின் போஸ்டர் பார்த்தால் அதில் எல்லாமே பெண்களும் முக்கியமாக இடம் பெற்றிருப்பார்கள்.


    ஆனால், இப்போது சினிமாக்களில் பெண்களின் படங்களைப் பார்க்க முடிகிறதா? பெண்ணுக்கு சரிசமமான இடம் தந்த சினிமா தான் தமிழ் சினிமாவின் பொற்காலம், அந்த பொற்காலத்தை தன் கட்டில் மூலம் மீட்டுக்கொண்டு வந்திருக்கிறார் கணேஷ்பாபு . இது மாதிரியான சின்னப்படங்கள் ஜெயிப்பது தான் மக்களுக்கு மகிழ்வைத்தரும் என் போல் சமூக செயல்பாட்டாளர்கள் அதைத்தான் ஆசைப்படுகிறோம். கண்ணதாசன், வாலி இருந்தபோது அவர்களோடு போட்டி போட்டு அவர்களோடு நான் நின்றேன் அவர்களை ஜெயிக்க முடியாது எனத் தெரியும், ஆனால் அவர்களோடு நானும் இருக்கிறேன் என நின்றேன்.

    அது மட்டும் போதுமா ? இப்போது நான் மதன்கார்கியோடு போட்டிபோடுகிறேன். அவரை ஆஸ்திரேலியாவிற்கு படிக்க அனுப்பினேன். விஞ்ஞானம் படித்துவிட்டு வந்து பேராசிரியர் ஆனார். ஆனால் எனக்குப் போட்டியாக வருவார் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் அருமையான வரிகள் தந்துள்ளார். அவருக்கு இந்தப்படத்திற்குத் தேசியவிருது கிடைக்க வாழ்த்துக்கள். கணேஷ்பாபு நினைவுகளின் வலியை இப்படம் மூலம் பதிவு செய்துள்ளார். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று பேசினார்.

    • நடிகை ராஷ்மிகா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவரின் ஏஐ வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

    கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா, தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை நிகழ்த்தியது. இதையடுத்து புஷ்பா- 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி என பல மொழிகளில் ராஷ்மிகா பிசியாக நடித்து வருகிறார்.


    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ராஷ்மிகா மந்தனா ஆபாச உடையில் லிப்ட் ஒன்றில் செல்வது போன்ற வீடியோ ஒன்று வெளியானது. அதனை உண்மையான வீடியோ என்று நினைத்து பலரும் பகிர்ந்து வைரலாக்கினர். ஆனால் அது ஏஐ தொழில்நுட்பத்தால் மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்பது தற்போது தெரியவந்துள்ளது.


    இதைத்தொடர்ந்து நடிகை ராஷ்மிகா 'தொழில்நுட்பத்தை இவ்வாறு தவறாக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது எனக்கு பயமாக இருக்கிறது' என்று வேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ராஷ்மிகாவிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து நடிகர் அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ளதாவது, "'சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படக்கூடிய வலுவான வழக்கு இது' என்று பதிவிட்டிருந்தார்.


    அமிதாப் பச்சன் - சின்மயி

    மேலும், பாடகி சின்மயி, 'ராஷ்மிகாவின் டீப் பேக் (deepfake) வீடியோ வைரலாக பரவி வருகிறது. அவர் மனவேதனையுடன் வலைதளத்தில் பதிவிட்டதை நான் பார்த்தேன். தினமும் பெண்களின் உடல்கள் சுரண்டப்படும் ஒரு நாட்டில், பெண்களை குறிவைத்து துன்புறுத்தவும் மிரட்டி பணம் பறிக்கவும் அவர்கள் பயன்படுத்தும் அடுத்த ஆயுதம் டீப் பேக். சிறுமிகளுக்கு டீப் பேக்கின் ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தவும், இதுபோன்ற சம்பவங்களுக்கு புகாரளிக்கவும் நாடு தழுவிய ஒரு விழிப்புணர்வு பிரசாரம் தேவைப்படுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.


    • கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


    இந்நிலையில், 'ஜப்பான்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டச்சிங்.. டச்சிங்' பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


    • நடிகர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    • இவருக்கு திரைப்பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார்.

    1960-ஆம் ஆண்டு வெளியான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது என பல விருதுகளை குவித்துள்ள நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில், நடிகர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இயக்குனர் ஷங்கர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கமல்ஹாசன் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! 'சேனாபதியை'மீண்டும் திரையில் கொண்டு வர உங்களோடு இணைந்தது மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். நீங்கள் தொடர்ந்து எங்களை மகிழ்விப்பீர்கள், மேலும் மில்லியன் கணக்கானவர்களை ஊக்குவிப்பீர்கள் என்று நம்புகிறேன்!" என பதிவிட்டுள்ளார்.


    • இயக்குனர் பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.


    இந்நிலையில், இயக்குனர் பார்த்திபன் நடிகர் அமீர்கானை புகழ்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இந்தி'ய திரையுலகில் அவருடைய படங்கள் மூலம், மிக உயர்வாக மதிக்கப்படும் சிறந்த நடிகர். ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சர்ய ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் மனிதர். நேற்றிரவு கமல் சார் பிறந்த நாளில் … நடப்பவை(பவங்)களை ஒரு ஒதுக்கு புறமாக நின்று ரசித்துக் கொண்டிருந்த என்னை கண்டு ஓடி வந்து இறுக அனைத்துக் கொண்டு நெற்றியில் என்னவென்று விசாரித்து, தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சுகமில்லை என வருந்தி,அடுத்த படமென்ன?- தெரிந்துக் கொண்டு,பின்னர் திரும்பிச் செல்கையில் மறக்காமல் வந்து சொல்லிவிட்டு சென்றார்.


    எங்கே சென்றார் ? இதயத்தின் நாற்புறமும் ஆணியடித்து அங்குமிங்கும் நகரா நாற்காலியிட்டு அமர்ந்துக் கொண்டார். இத்தனைக்கும் சிற்சில சந்திப்பே இதற்குமுன்… என் விடாமுயற்சிகளை பற்றி கேட்டறிந்து என்னை அவர் பாராட்டவும்,அவரின் நல்ல படங்களை நான் புகழவும் பழகினோம். அவரின் அற்புத நட்பு அலாதியானது. மணி சார்+கமல் சார்+ ரஹ்மான் சார்+ ரவி k சந்திரன் கூட்டணி மிரட்டியது 'thug life'-ல்!" என்று பதிவிட்டுள்ளார்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் திரைப்படம் 'தக் லைஃப்' .
    • இந்த படத்தின் அறிமுக வீடியோ நேற்று வெளியானது.

    பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் 'தக் லைஃப்' (Thug Life). இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அறிமுக வீடியோவை நேற்று வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.


    தக் லைஃப் போஸ்டர்

    நடிகர் கமல்ஹாசன் இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கமலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'தக் லைஃப்' (Thug Life) படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • நடிகர் திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தி ரோட்’.
    • இப்படத்தை இயக்குனர் அருண் வசீகரன் இயக்கியிருந்தார்.

    தென்னிந்திய பிரபலமான நடிகை திரிஷா, இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் 'தி ரோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், டான்ஸிங் ரோஸாக கலக்கிய ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.


    தி ரோட் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'தி ரோட்' திரைப்படம் ஆஹா ஓடிடி தளத்தில் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.

    • கமல்ஹாசனின் 234-வது படத்தை மணிரத்னம் இயக்குகிறார்.
    • இப்படத்தின் அறிமுக வீடியோ இன்று வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் 234-வது படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். 36 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


    இந்த படத்தில் திரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.


    தக் லைஃப் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'தக் லைஃப்' (Thug Life) என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அதிரடி ஆக்ஷனுடன் 'என் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கன்.. ஞாபகம் வெச்சிக்கோங்க' போன்ற வசனங்களுடன் வெளியாகியுள்ள இந்த வீடியோவை ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




    ×