என் மலர்
சினிமா செய்திகள்
- அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சித்தா'.
- இப்படத்தை சித்தார்த் தயாரித்திருந்தார்.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'சித்தா'. இப்படத்தை நடிகர் சித்தார்த், தனது இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஹீரோ சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப்பிணைப்பு தான் கதை. மதுரை அருகே உள்ள சிறு நகரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவுகளை பகிர்ந்திருந்தனர்.

சித்தா போஸ்டர்
இந்நிலையில், 'சித்தா' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நவம்பர் 17-ஆம் தேதி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இது தொடர்பான போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மெர்குரி மூவிஸ் என்ற சிறப்பு பிரிவு செயல்பட உள்ளது.
- இதன் முதல் திரைப்படமாக இளையராஜா வாழ்க்கை வரலாறு உருவாகவுள்ளது.
மெர்குரி குரூப் இந்தியா, தென்னிந்தியப் பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொண்டு, கனெக்ட் மீடியாவுடன் இணைந்து மெர்குரி மூவிஸ் என்ற சிறப்புப் பிரிவாக செயல்பட உள்ளது. புதிய ஸ்ட்ரீமிங் கதைகள் , ஒரிஜினல் கதைகள், தென் சினிமாவில் பல புதிய வகை கதைகளின் வழியாக ஒரு புதிய உலகத்தை இந்த கூட்டணி ரசிகர்களுக்கு வழங்கும்.
இந்த கூட்டணி, தங்கள் முதல் திரைப்படமாக, தென்னிந்தியத் திரையுலகில் மாபெரும் சாதனையாளரான இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை உருவாக்க உள்ளது. இத்திரைப்படத்தில் பன்முக திறமையாளர், தென்னிந்தியாவின் பிரபல நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அக்டோபர் 2024-இல் தொடங்க உள்ளது, 2025-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இத்திரைப்படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி குழுமத்தின் இணைவு குறித்து, கருத்து தெரிவித்த கனெக்ட் மீடியாவின் வருண் மாத்தூர் கூறியதாவது, உலகளாவிய பொழுதுபோக்கு திரைத்துறையில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்று மெர்குரி. எங்களுக்கு ஒரு அற்புதமான கூட்டணியாக மெர்குரி இருந்து வருகிறது, மேலும் அவர்களுடன் இணைந்து பல மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிப்பதிலும் ஒரு மிகச்சிறந்த இசை மேதையின் வரலாற்றைத் திரைப்படமாக உருவாக்குவதிலும், நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறினார்.
பல நாட்களாக இளையராஜா வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது இது உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
- சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய விருதை காளிதாஸ் பெற்றார்.
- இவர் தமிழில் மீன் குழம்பும் மண்பானையும், நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம். இவரும் நடிகராகவே உள்ளார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு தனது 7 வயதில் கொச்சு கொச்சு சந்தோஷங்கள் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
என்டே வீடு அப்புவின்டேயும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய விருதை காளிதாஸ் பெற்றார். அதன் பிறகு பல்வேறு மலையாள திரைப்படங்களில் நடித்தார். தமிழில் மீன் குழம்பும் மண்பானையும், நட்சத்திரம் நகர்கிறது போன்ற படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் காளிதாஸ் ஜெயராமுக்கும், தமிழ்நாட்டை சேர்ந்த மாடல் அழகியான தாரிணிக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர். தாரிணி மிஸ் யுனிவர்ஸ் இந்தியா-2021-இன் மூன்றாவது ரன்னர் அப் ஆவார்.

அவரை தனது குடும்பத்தினருக்கு கடந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் போது நடிகர் காளிதாஸ் ஜெயராம் அறிமுகம் செய்திருக்கிறார். இந்த ஆண்டு காதலர் தினத்தில் தாரிணியை தனது காதலி என்று அறிவித்தார். இதனைத்தொடர்ந்து இருவரும் பொது மேடைகளில் தங்களை பற்றிய தகவல்களை வெளியிட்டு வந்தனர்.
சென்னையில் நடந்த விருது வழங்கும் விழாவின் போது தாரிணியை திருமணம் செய்யப்போவதாக காளிதாஸ் தெரிவித்தார். இந்தநிலையில் தற்போது அவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதில் இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நடிகர் காளிதாஸ்-தாரிணி நிச்சயதார்த்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு சினிமா துறையினர் உள்ளிட்ட கலைத்துறையினர் ஏராளமானோர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- ஆந்திராவின் பல்வேறு இடங்களில் இந்தியன்-2 காட்சிகள் படமாக்கியுள்ளனர்.
- கமல்ஹாசன் விஜயவாடாவில் பணிபுரிவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் நடந்து வருகிறது. இதில் நடிகர் கமல் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
ஆந்திராவின் பல்வேறு இடங்களில் இந்தியன்-2 காட்சிகள் படமாக்கியுள்ளனர். கமல்ஹாசன் விஜயவாடாவில் பணிபுரிவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
கமல் ஊரில் இருக்கிறார் என்று தெரிந்ததும், அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது படக்குழுவினருக்கு சவாலாக மாறியது, ஒருவழியாகத் கூட்டத்தை தடுத்து நிறுத்தினர்.
4 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு, ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல், விஜயவாடா நகரில் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் சிலையை நேற்று காலை திறந்து வைத்தார்.
- டி.ராஜேந்தரின் உயிருள்ள வரை உஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கங்கா
- தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்தவர் கங்கா.
சென்னை:
பன்முகக் கலைஞரான டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'உயிருள்ள வரை உஷா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கங்கா (63). பி.மாதவன் இயக்கி, தயாரித்த 'கரையைத் தொடாத அலைகள்', விசுவின் இயக்கத்தில் 'மீண்டும் சாவித்திரி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமானவர் கங்கா.
மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள இவர், சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த இவர், தன்னுடைய சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் கங்காவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார் என்பதை அவரது குடும்பத்தினர் உறுதிசெய்துள்ளனர். இவரது மறைவு திரையுலகைச் சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இறுதிச்சடங்குகள் அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஜி.வி. பிரகாஷின் ரெபெல் படம் குறித்த புதிய அப்டேட் வெளியீடு.
- ரெபெல் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெபெல்' என்ற திரைப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில், ரெபெல் படத்தின் டீசர் வெளியீடு குறித்த புதிய தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. அதன்படி ரெபெல் படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெபெல் படத்தின் டீசர் நாளை (நவம்பர் 11) மாலை 5.00 மணிக்கு வெளியாக இருக்கிறது.
- ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும், இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

லால் சலாம் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'லால் சலாம்' திரைப்படத்தின் டீசர் 12-ஆம் தேதி காலை 10.45 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Adding a spark to your Diwali celebration ?✨
— Red Giant Movies (@RedGiantMovies_) November 10, 2023
Get ready, #LalSalaam teaser releasing on Nov 12 at 10:45AM
In Cinemas ?️ PONGAL 2024 Worldwide ☀️? Releasing in Tamil, Telugu, Hindi, Malayalam & Kannada!@rajinikanth @ash_rajinikanth @arrahman @TheVishnuVishal @vikranth_offl… pic.twitter.com/Y3zL91Wver
- பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'லூசிபர் 2 எம்புரான்’.
- இந்த படத்திற்கு தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.
நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் 'லூசிபர்'. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமாகியிருந்தார். இதில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.

இப்படத்தின் இரண்டாம் பாகம் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகுகிறது.

'லூசிபர் 2 எம்புரான்' போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'லூசிபர் 2 எம்புரான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
#L2E #Empuraan First Look. Tomorrow 5pm IST@mohanlal #muraligopy @antonypbvr @aashirvadcine @Subaskaran_A @LycaProductions @gkmtamilkumaran @prithvirajprod #SureshBalaje #GeorgePius @ManjuWarrier4 @ttovino @Indrajith_S @deepakdev4u #sujithvaassudev #NirmalSahadev #Mohandas… pic.twitter.com/rJgWjjVl6P
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) November 10, 2023
- நடிகர் கார்த்தி பல படங்களில் நடித்துள்ளார்.
- இவர் நடிப்பில் ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான 'பருத்தி வீரன்' திரைப்படத்தின் மூலம கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கார்த்தி. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் கார்த்திக்கு பாராட்டையும் பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, கைதி என படங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'சர்தார்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளது. கார்த்தியின் 25-வது படமான 'ஜப்பான்' திரைப்படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், கார்த்தியின் 16 வருட சினிமா பயணத்தை விவரிக்கும் விதமாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், சூர்யாவுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என நினைக்கிறீர்களா? என்று கவுதம் மேனன் கார்த்தியிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு கார்த்தி, "சூர்யாவுடன் நடிக்க எனக்கு பயமாக இருக்கு. ஆனால், சில நேரங்களில் ஏன் ஒன்றாக ஒரு படத்தில் நடிக்கக் கூடாது என யோசிப்போம். சில வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இருவரும் சேர்ந்து நடிக்குமாறு கூறினார். நல்ல கதை அமைந்தால் நடிப்போம்" என்று பேசினார்.
- வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார்.
- 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெருமளவில் ஈர்த்தது. 'சலார்' திரைப்படம் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சலார் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.
இப்படத்தின் முதல் காட்சியை எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தனர். மேலும், திரைப்பிரபலங்கள் பலர் இப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "யானையும் சினிமாவும் கடவுள் நமக்கு கொடுத்த சிறந்த பரிசு. சினிமாவின் சக்தியையும் அதன் பார்வையாளர்கள் குறித்த எங்களின் மனப்பூர்வமான வெளிப்பாடு இது.
இந்த படத்தை நாங்கள் உருவாக்கும் போது கொடுத்த அன்பை நீங்களும் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். 4.5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வருவதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். படத்தில் இருக்கும் சர்ப்ரைஸை தயவு செய்து உடைத்து விடாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'.
- இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'ஜெயிலர்' திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஹுக்கும்' பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோவை பகிர்ந்து அறிவித்துள்ளது.






