என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ’ஜிகர்தண்டா 2’ திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது.


    இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன் 'ஜிகர்தண்டா 2' படத்தின் முதல் காட்சியை பார்த்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

    நேற்று நடிகர் தனுஷ் 'ஜிகர்தண்டா 2' படத்தை பார்த்துவிட்டேன் என்றும் படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்களின் மனங்களை கொள்ளையடித்துவிடும் என்றும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை ரித்திகா சிங் பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவர் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக உள்ளார்.

    கடந்த 2016-ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ரித்திகா சிங். இயல்பிலேயே கிக் பாக்சிங் விளையாட்டு வீராங்கனையான ரித்திகா, அந்த படத்தில் அதே வேடம் என்பதால் கனகச்சிதமாக பொருந்தினார். இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.


    இதைத்தொடர்ந்து அசோக் செல்வன் - ரித்திகா நடிப்பில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இவரது கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டது. மேலும், இவர் 'ஷிவலிங்கா', 'குரு', 'கொலை' போன்ற படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரித்திகா சிங் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக உள்ளார். இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.


    இந்நிலையில், ரித்திகா சிங் தனது சிக்ஸ் பேக்ஸ் புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.


    • நடிகர் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.


    'ஜப்பான்' திரைப்படம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. இதையடுத்து நடிகர் கார்த்தி இப்படத்தின் முதல் காட்சியை காசி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • ஜிகர்தண்டா 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    இந்த நிலையில், ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டதாக நடிகர் தனஷ் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்து இருக்கிறார். மேலும் படம் குறித்த தனது கருத்துக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பான பதிவில், "ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்துவிட்டேன். கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான படைப்பு. அற்புதமாக இருப்பது எஸ்.ஜே. சூர்யாவுக்கு வாடிக்கையான விஷயமாகிவிட்டது. ராகவா லாரன்ஸ்-இன் நடிப்பு சிறப்பு. சந்தோஷ் நாராயணின் இசை அழகு. படத்தின் கடைசி 40 நிமிடங்கள் உங்களின் மனங்களை கொள்ளையடித்துவிடும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்," என்று தெரிவித்து இருக்கிறார்.

    • ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜப்பான்’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஜப்பான்'. இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.



    'ஜப்பான்' திரைப்படம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டச்சிங் டச்சிங்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.




    • ‘அறம்’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார்.
    • இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

    கடந்த 2017-ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான 'அறம்' படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் கோபி நயினார். இப்படத்தை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மனுஷி' படத்தை இயக்கினார். இப்படம் குறித்த தகவல் எதுவும் பின்னர் வெளியாகவில்லை.


    கருப்பர் நகரம் போஸ்டர்

    இயக்குனர் கோபி நயினார் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜேடி சக்கரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ஆர்.ஆர்.பிலிம் மேக்கர்ஸ் மற்றும் ஏ.ஜி.எல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'கருப்பர் நகரம்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும் இது தொடர்பான போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் 'மாமதுர' பாடலின் வீடியோ இன்று வெளியானது. இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தின் வெற்றிக்காக படக்குழு திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


    • அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடர் 'லேபில்'.
    • இந்த வெப்தொடர் நாளை ஒளிப்பரப்பாகவுள்ளது.

    பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த வெப்தொடர் நாளை (நவம்பர் 10) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகவுள்ளது.


    இதையடுத்து இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் சாம் சி.எஸ் பேசியதாவது, ஹாட் ஸ்டாருக்கு நான் செய்யும் இரண்டாவது சீரிஸ் இது. சீரிஸ் என்றாலே டிவி நாடகத்துக்கு அடுத்த கட்டம் என்று நினைக்கிறார்கள். ஆனால், இது சினிமாவை தாண்டிய அடுத்த கட்டம். வரும் காலத்தில் சினிமாவை விட வெப் சீரிஸ் தான் பெரிதாக இருக்கும். நான் செய்து வரும் சீரிஸ்களே அதற்கு சாட்சி. அதில் ஒன்று தான் லேபில்.


    நமக்கு என்று ஒரு அடையாளம் தேவை என்பதை எல்லோருமே நினைப்போம், அது மாதிரி அடையாளப் பிரச்சனையைச் சொல்லும் சீரிஸ் தான் இது. இதில் மூவி மாதிரி தான் வேலை பார்த்தோம். பாடல் எல்லாம், ஒரு கமர்ஷியல் படம் போலவே இருக்கிறது. எங்கள் டீமின் உழைப்பு உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன். அருண் ராஜாவுடன் உழைத்தது மிக மகிழ்ச்சி. ஜெய் உடன் படம் செய்திருக்கிறேன், ஆனால் இந்த சீரிஸில் அவர் தன்னை அந்த கதாபாத்திரமாகவே மாற்றி நடித்திருக்கிறார். எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். மிகச்சிறப்பான சீரிஸாக இருக்கும் என்று பேசினார்.

    • தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்துள்ளார். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


    இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' மூன்று பாகங்களாக உருவாகவுள்ளதாக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,'கேப்டன் மில்லர்' படத்தின் சீக்குவல் மற்றும் பிரீக்குவல் கதைகள் இருக்கின்றன. இப்போது வெளியாகும் பாகம் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த பாகத்தை தொடரலாம். தனுஷிடம் கதை சொல்லும் போதே பிரீக்குவலுடன் சேர்த்து தான் கூறினேன். ஆனால், அது இன்னும் பெரிய பட்ஜெட் என்பதால் தான் இரண்டாம் பாகத்தை எடுத்தோம் என்று கூறினார்.

    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிகர்தண்டா 2’.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது.

    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படத்தில் இடம்பெற்றுள்ள 'மாமதுர' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.




    • தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாக பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை.
    • இந்த நிகழ்வில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் கலந்து கொண்டுள்ளேன்.

    தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தீபாவளி மலர் வெளியீட்டு விழா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீபாவளி சிறப்பிதழை வெளியிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக நடக்கும் இந்த தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாகவும் தமிழ் திரைப்பட நிகழ்வுகள் சார்பாகவும் பலமுறை என்னை அழைத்தும் என்னால் வர இயலவில்லை. இந்த நிகழ்விலாவது நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்துடன் இன்று இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளேன்.


    தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தை துவங்கி இன்று விளையாட்டு நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஆலோசனைகளை பெற்று திரைப்படத்துறையில் ஏராளமான செயல் திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இன்று தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக வைக்கப்பட்ட கோரிக்கைகளும் செய்தியாளர்களுக்கான நலனில் தேவைப்படும் செயல் திட்டங்களும் கூடிய விரைவில் முதலமைச்சர் ஆலோசனைபடி நிறைவேற்ற தேவையானதை செய்வோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ஜிகர்தண்டா 2'.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    இப்படம் நாளை (நவம்பர் 10) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இதில், தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ போன்ற வசனங்கள் இடம்பெற்று ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது.


    மம்முட்டியை சந்தித்த ஜிகர்தண்டா 2 படக்குழு

    இந்நிலையில், 'ஜிகர்தண்டா 2' படக்குழு பிரபல மலையாள நடிகரான மம்முட்டியை நேரில் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×