என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஜிகர்தண்டா 2 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
    • ஜிகர்தண்டா 2 படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஜிகர்தண்டா- 2 படத்திற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில், இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர், ஜிகர்தண்டா 2 படம் குறித்து கருத்து தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பான பதிவில், "ஜிகர்தண்டா 2 - திரைக்கதை மற்றும் இயக்கத்தை பொருத்தவரை கார்த்திக் சுப்பராஜின் சிறப்பான மற்றும் புத்திசாலித்தனமான படைப்பு. கதை- சினிமாவுக்கு மரியாதை. எதிர்பார்த்திடாத 2-ம் பகுதி - கதாபாத்திரங்கள் இடையே நேர்த்தியான நகர்வு. சந்தோஷ் நாராயணனின் அதரடியான பின்னணி இசை. ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா சிறப்பான நடிப்பு. ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • சைரன் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
    • ஆண்டனி பாக்யராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

    ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

    இந்த நிலையில், சைரன் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வெளியான சைரன் படத்தின் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகிறது.

    • தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார்.

    ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

    மோகனா லஷ்மி என்ற சிறுமி நடிகர் ரஜினிகாந்த்தை பார்க்க பல தடவை வந்ததாகவும் ஆனால் இன்று தான் தன்னால் பார்க்க முடிந்தது என்று கண்கலங்கினார்.

    • லால் சலாம் படத்தில் விக்ராந்த், விஷ்னு விஷால் நடித்துள்ளனர்.
    • இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து விட்டது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

    லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று, பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் லால் சலாம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    • பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

    தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்களை பார்த்து ரஜினிகாந்த் கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறினார்.

    ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் ரசிகர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.

    • லூசிபரின் இரண்டாம் பாகம் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது.
    • இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுதியிருக்கிறார்.

    2019-ம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான படம் 'லூசிபர்'. இப்படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். இதில் நடிகர் மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தின் இரண்டாம் பாகம் 'லூசிபர் 2 எம்புரான்' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்த படத்தை லைகா மற்றும் ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.

    இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது. இந்த நிலையில், லூசிபர் 2 எம்புரான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. புதிய போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. 

    • ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ரெபெல்’.
    • இப்படத்தை அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கியுள்ளார்.

    அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபெல்'. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், மமிதா பைஜு, வெங்கிடேஷ் வி.பி, ஷாலு ரகிம், கருணாஸ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.


    இந்த நிலையில், 'ரெபெல்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கவனம் ஈர்க்கும் வகையில் உருவாகியுள்ள இந்த டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    • 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் நேற்று வெளியானது.
    • இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம் நேற்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது. மேலும், இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், இயக்குனர் பார்த்திபன் 'ஜிகர்தண்டா 2' திரைப்படம் பார்த்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜிகர்தண்டா -3'

    பார்த்தேன் -FDFS

    என என்றாவது ஒரு நாள் நான் பதிவிடுவேன். காரணம்… ஜிகர்தண்டா -2 !

    நான் விமர்சகன் அல்ல.

    நிறை குறை சொல்ல!

    தெரியாமல் போய்,போன இடத்தில் பிடித்து விட்டால்

    அதன் பெயர் பேய்!

    இது கார்த்திக் சுப்புராஜ் என்ற பேயை பிடித்து போய் தானே படத்திற்கே போகிறேன்.நினைத்தபடியே மனதை உலுக்கி விட்டது.

    நண்பர் Mr larence

    நண்பர் mr s j surya

    நண்பர் திரு சந்தோஷ் நாராயணன்

    நண்பர் திரு திரு

    நண்பர் திரு கதிரேசன்

    இன்னும் நாயகி உட்பட பலரும்

    யானை பலத்துடன் மிரட்டுகிறார்கள்.

    மிரட்டும் யானைகளோ நம் கண்களில் நீர் சுரக்க நடிக்கிறார்கள்.

    பெரும்பாலான காட்சிகளில் கரைந்தேன்

    Jigarthanda -1 நான் நடித்திருக்க வேண்டிய படம்.

    முதல் பட அறிமுகத்திற்கு முன்பே நண்பர் திரு கார்த்திக் சுப்புராஜை எனக்கு அறிமுகம் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி

    தியேட்டரில் வெடித்த கைதட்டல்களை தீபாவளி பட்டாசாக ரசித்தேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • ஜெயம் ரவி ‘சைரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இந்த படத்தை ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார்.

    ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம்ரவி நடித்திருக்கும் படம் 'சைரன்'. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். யோகிபாபு, சமுத்திரகனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    குடும்ப அம்சங்களுடன் ஆக்ஷன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம்ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வ குமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.


    சைரன் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சைரன்' படத்தின் டீசர் இன்று பிக்பாஸ் வீட்டில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. மேலும், இந்த டீசரை நடிகர் கமல்ஹாசன் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    • தெலுங்கில் பழம்பெரும் நடிகராக வலம் வந்தவர் சந்திரமோகன்.
    • இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

    பழம்பெரும் நடிகர் சந்திரமோகன் (82) உடல்நலக்குறைவால் காலமானார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் சந்திரமோகன். இவர் 900-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் 1975-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'நாளை நமதே' திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடித்து புகழ்பெற்றார். இப்படத்தின் மூலம் இவர் தமிழிலும் அறிமுகமானார். இதேபோல் மறைந்த பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் மகனாக 'அந்தமான் காதலி' திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். தொடர்ந்து இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.


    இதயநோய் காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்திரமோகன், சிகிச்சை பலனின்றி இன்று (நவம்பர் 11) காலை உயிரிழந்தார். இவரது இறுதிச்சடங்கு ஐதராபாத்தில் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சந்திரமோகன் மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • இயக்குனர் ஷங்கர் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
    • இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' வெற்றியைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக மட்டும் ரூ.90 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' பாடல் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    கேம் சேஞ்சர் அறிக்கை

    இந்நிலையில், இந்த பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதாவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாடல் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பாடல் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாடலுக்காக ஆர்வமாக காத்திருந்த ரசிகர்கள் இந்த அறிவிப்பால் சற்று ஏமாந்துவிட்டனர்.


    • ராம் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மூன்றாம் மனிதன்'.
    • இப்படத்திற்கு வேணு சங்கர், தேவ் ஜி இசையமைக்கின்றனர்.

    இயக்குனர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மூன்றாம் மனிதன்'. இந்த படத்தில் இயக்குனர் கே. பாக்யராஜ் துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் சோனியா அகர்வால், ஸ்ரீநாத், சூது கவ்வும் சிவக்குமார், பிரணா, ரிஷிகாந்த், ராம்தேவ் ராஜகோபாலன், மதுரை ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    இப்படத்திற்கு வேணு சங்கர், தேவ் ஜி இசையமைக்கின்றனர். இதன் மூலம் இவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றனர். பின்னணி இசையை பி.அம்ரிஷ் என்ற புதுமுகம் கவனிக்கிறார். ராம் தேவ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இணை தயாரிப்பாளராக டாக்டர்.எம் . ராஜகோபாலன், டாக்டர்.டி. சாந்தி ராஜகோபாலன், டாக்டர்.பி அழகுராஜா, மதுரை. சி . ஏ.ஞானோதயா ஆகியோர் இணைந்துள்ளனர்.


    மூன்றாம் மனிதன் போஸ்டர்

    சஸ்பென்ஸ்  த்ரில்லருடன் உருவாகும் இப்படத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்னைகளும் அலசப்பட்டிருக்கிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல்,  சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. 

    இந்நிலையில், 'மூன்றாம் மனிதன்' திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை பிரபல இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராமன், இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் வெளியிட்டனர்.

    ×