துப்பறியும் அதிகாரியாக பாக்யராஜ்- போஸ்டர் வெளியிட்ட திரைப்பிரபலங்கள்

ராம் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மூன்றாம் மனிதன்'.இப்படத்திற்கு வேணு சங்கர், தேவ் ஜி இசையமைக்கின்றனர்.
துப்பறியும் அதிகாரியாக பாக்யராஜ்- போஸ்டர் வெளியிட்ட திரைப்பிரபலங்கள்
Published on

இயக்குனர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மூன்றாம் மனிதன்'. இந்த படத்தில் இயக்குனர் கே. பாக்யராஜ் துப்பறியும் அதிகாரியாக நடிக்கிறார். மேலும் சோனியா அகர்வால், ஸ்ரீநாத், சூது கவ்வும் சிவக்குமார், பிரணா, ரிஷிகாந்த், ராம்தேவ் ராஜகோபாலன், மதுரை ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு வேணு சங்கர், தேவ் ஜி இசையமைக்கின்றனர். இதன் மூலம் இவர்கள் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றனர். பின்னணி இசையை பி.அம்ரிஷ் என்ற புதுமுகம் கவனிக்கிறார். ராம் தேவ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் இணை தயாரிப்பாளராக டாக்டர்.எம் . ராஜகோபாலன், டாக்டர்.டி. சாந்தி ராஜகோபாலன், டாக்டர்.பி அழகுராஜா, மதுரை. சி . ஏ.ஞானோதயா ஆகியோர் இணைந்துள்ளனர்.

மூன்றாம் மனிதன் போஸ்டர்

சஸ்பென்ஸ்  த்ரில்லருடன் உருவாகும் இப்படத்தில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்னைகளும் அலசப்பட்டிருக்கிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல்,  சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்துள்ளது. 

இந்நிலையில், 'மூன்றாம் மனிதன்' திரைப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை பிரபல இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராமன், இயக்குனர் எஸ் .ஏ.சந்திரசேகர், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் வெளியிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com