என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் யோகிபாபு முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்துள்ளார்.
- இவர் படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் யோகிபாபு. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள யோகிபாபு, தற்போது தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவர் ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிரிக்கெட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட யோகிபாபு படப்பிடிப்பு தளங்களில் கிரிக்கெட் விளையாடி மகிழ்வார். இது தொடர்பான வீடியோவையும் இவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும், கடவுள் மீது அதீத நம்பிக்கைக் கொண்ட யோகிபாபு அடிக்கடி கோவில்களுக்கு சென்று வழிபாடும் செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வந்தார். ராஜகோபுரம் அருகில் உள்ள கம்பத்திளையனார் சன்னதியில் நடிகர் யோகி பாபு மனம் உருகி முருகரை வழிபட்டார். பின்னர் அண்ணா மலையார் உண்ணாமலை அம்மனை வழிபட்டார். இதனை தொடர்ந்து பைரவர் சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். கோவிலில் இருந்து வெளியே வந்த போது நடிகர் யோகி பாபுவுடன் பக்தர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.
- சல்மான்கான் நடித்துள்ள திரைப்படம் ‘டைகர் 3’.
- இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. மேலும், இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.94 கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

'டைகர் 3' படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வரும் நிலையில் மகராஷ்டிராவில் உள்ள ஒரு திரையரங்கில் நடிகர் சல்மான் கானின் எண்ட்ரியின் போது அவரது ரசிகர்கள் திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சக ரசிகர்கள் தலைத்தெறிக்க ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்டாசு வெடித்த ரசிகர்கள்
இந்நிலையில், ரசிகர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக நடிகர் சல்மான்கான் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "டைகர் 3 படத்தின் போது திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்தது குறித்து கேள்விப்பட்டேன். இது ஆபத்தானது. நமக்கும் மற்றவர்களுக்கும் ஆபத்து ஏற்படாத வகையில் படத்தை ரசியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
I'm hearing about fireworks inside theaters during Tiger3. This is dangerous. Let's enjoy the film without putting ourselves and others at risk. Stay safe.
— Salman Khan (@BeingSalmanKhan) November 13, 2023
- நடிகை மாளவிகா பல படங்களில் நடித்து வருகிறார்.
- இவர் தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போல' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான 'மாறன்' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள் அதிக லைக்குகளை குவித்து வருகின்றனர்.
I think I clean up well ??✨@Tarun_Tahiliani pic.twitter.com/36Eo5AqpOG
— Malavika Mohanan (@MalavikaM_) November 13, 2023
- விஷால் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சாமி, அருள், ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹரி தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சமபந்தி கறி விருந்து அளித்த விஷால்
இந்நிலையில், நடிகர் விஷால் படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி கறி விருந்து அளித்துள்ளார். அதாவது, தீபாவளி பண்டிகையொட்டி 'விஷால் 34' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றதால், படப்பிடிப்பில் பணியாற்றிய அனைவருக்கும் விஷால் சார்பில் சமபந்தி கறி விருந்து அளிக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவு வழங்க வேண்டும் என்று கூறி வரும் நடிகர் விஷால், அதை செயல்படுத்தி உள்ளார்.
- மேற்கு தொடர்ச்சி மலை, தேன் உள்பட விருது பெற்ற படங்களுக்கு வசனங்கள் எழுதி பிரபலமானவர் ராசி தங்கதுரை.
- கதை, கவிதை எழுதுவதில் தீவிர ஆர்வம் கொண்ட ராசி தங்கதுரை சுமார் 200-க்கும் மேற்பட்ட சிறு கதைகள் எழுதியுள்ளார்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்காபுரத்தைச் சேர்ந்தவர் ராசி தங்கதுரை (வயது53). மேற்கு தொடர்ச்சி மலை, தேன் உள்பட விருது பெற்ற படங்களுக்கு வசனங்கள் எழுதி பிரபலமானார். இந்த நிலையில் இதய நோய் காரணமாக ராசி தங்கதுரை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இவருக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், ராசி பிரியன், சுகதேவ் திலிபன் என்ற இரு மகன்களும் உள்ளனர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை ஆண்டிப்பட்டியில் உள்ள சொந்த கிராமத்தில் நடக்கிறது.
பள்ளி படிப்பை மட்டுமே முடித்த ராசி தங்கதுரை இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தில் சிறு வயதிலேயே கதை, கவிதை எழுதுவதில் தீவிர ஆர்வம் கொண்டு சுமார் 200-க்கும் மேற்பட்ட சிறு கதைகள் எழுதியுள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் இடம் பெற்ற இவரது கதை களங்களும், வசனங்களும் அனைவரையும் கவர்ந்தது. மேலும் இவரது வசனத்தில் வெளியான தேன் படமும் விருதுகளை பெற்றுள்ளது. கெவி, தாக்கல், ஆதாரம் உள்ளிட்ட படங்களுக்கு வசனகர்த்தாவாக பணிப்புரிந்துள்ள ராசி தங்கதுரை பெயரிடப்படாத 4 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
- ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ’பைரதேவி’.
- இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இயக்குனர் ஸ்ரீ ஜெய், கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இயக்கும் திரைப்படம் 'பைரதேவி'. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா, அகோரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் ரங்காயன ராஜூ, ரவிசங்கர் (பொம்மலி), ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ் மற்றும் சுசித்ரா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே.கே.செந்தில் பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜே.எஸ். வாலி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வாரணாசி, காசி, ஹரித்துவார், ஐதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ராதிகா குமாரசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர்.
பல அகோராக்களுடன் சேர்ந்து ஒரு இறந்த உடலின் தலைப்பக்கம் அமர்ந்து ராதிகா குமாரசாமி தாந்த்ரீக பூஜை செய்வது போல இந்த டீசரின் வீடியோ துவங்குகிறது. அதன்பிறகு ஒரு ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறார்.
- உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான படம்.
- ராதிகா குமாரசாமி இந்தப்படத்தை வழங்குகிறார்.
இயக்குனர் லோஹித்.ஹெச் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் 'கேப்சர்'. இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் மனைவி பிரியங்கா நடிக்கிறார். சிவராஜ்குமாரின் டகரு படத்தின் மூலம் புகழ்பெற்ற மன்விதா காமத், மாஸ்டர் கிருஷ்ணராஜ் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பாண்டிக்குமார் கவனிக்க, படத்தொகுப்பை ரவிச்சந்திரன் மேற்கொள்கிறார்.

உலகிலேயே முதன்முறையாக முழுவதுமாக சிசிடிவி கேமராவின் கோணத்தில் படமாக்கப்பட்ட ஒரு தனித்துவமான பரிசோதனை முயற்சியிலான படம் இது. அதுமட்டுமல்ல இப்படம் உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட அரிதான படங்களில் ஒன்றும் கூட. ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரொடக்ஷன்ஸ் சார்பில் ரவி ராஜ், ஷாமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளார். ராதிகா குமாரசாமி இந்தப்படத்தை வழங்குகிறார்.
இந்தப்படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே சுற்றிலும் பல சிசிடிவி கேமராக்கள் சூழ்ந்திருக்கும் நிலையில் பிரியங்கா உபேந்திரா, முகம் முழுவதும் மிகுந்த ரத்தக்காயங்களுடன் காணப்படும் ஒரு புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
- சசிதர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம் 'அஜாக்ரதா'.
- இந்த படத்தின் பணிகளுக்காக மிகப்பெரிய அளவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இயக்குனர் சசிதர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகும் திரைப்படம் 'அஜாக்ரதா'. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான குட்டி ராதிகா என அழைக்கப்படும் ராதிகா குமாரசாமி கதாநாயகியாக நடிக்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்தப்படத்தில் ஸ்ரேயாஸ் தல்பேட், சுனில், ராவ் ரமேஷ், ஆதித்யா மேனன், தேவராஜ், வினய் பிரசாத், ஷ்ரவன் மற்றும் பல தென்னிந்திய நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். மேலும், பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் அவரது பெயர் அறிவிக்கப்படும்.

குட்டி ராதிகா
ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரொடக்ஷன் சார்பில் ரவிராஜ் தயாரிக்கும் இந்த படத்தின் பணிகளுக்காக மிகப்பெரிய அளவில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ராதிகா குமாரசாமியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் விதமாக ராதிகாவின் கதாபாத்திர போஸ்டரை ஹிந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிவப்பு நிற பட்டுப்புடவையில் மிகுந்த ஆபரணங்களுடன் அதிரடியாக காட்சியளிக்கிறார் ராதிகா.
- கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா -2’.
- இப்படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜிகர்தண்டா- 2 படத்திற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஒய்யாரம்' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
- நடிகர் விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு சமீபத்தில் பாங்காக் சென்றிருந்தது.

விஜய்
இந்நிலையில் நடிகர் விஜய் 'தளபதி 68' படத்தின் பாங்காக் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'டைகர் 3'.
- இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஏக் தா டைகர்'. இப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் 'டைகர் ஜிந்தா ஹே' திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதன் மூன்றாம் பாகமாக தற்போது 'டைகர் 3' உருவாகியுள்ளது. மணீஷ் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப் நடித்துள்ளனர். யஷ்ராஜ் பிலிம்சின் ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வெளியான ஒரே நாளில் ரூ.40 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பட்டாசு வெடித்த ரசிகர்கள்
இந்நிலையில், 'டைகர் 3' படத்தில் நடிகர் சல்மான் கானின் எண்ட்ரியை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் திரையரங்கில் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த சக ரசிகர்கள் தலைத்தெறிக்க ஓடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#भाई का जलवा ओर उनके फैंस का भी ❤️#आज लगा दी भाईजान के फैंस ने ?#Tiger3 । #SalmanKhan #Salmanics pic.twitter.com/NwqJmaQPCR
— KESHAV THAKUR ?? (@Keshu999999) November 13, 2023
- நடிகர் சூர்யாவின் கங்குவா படம் பத்து மொழிகளில் ரிலீஸ் ஆகிறது.
- கங்குவா படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி கங்குவா படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் சூர்யா கையில் நெருப்புடன் நிற்கும் காட்சி இடம்பெற்று இருக்கிறது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாக இருக்கிறது.






