அடுத்த கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்

நடிகர் விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த விஜய்
Published on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு சமீபத்தில் பாங்காக் சென்றிருந்தது.

விஜய்

இந்நிலையில் நடிகர் விஜய் 'தளபதி 68' படத்தின் பாங்காக் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com