என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 'கங்குவா' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.
    • படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது, நடிகர் சூர்யா விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நசரத் பேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில், விபத்துக்கு பிறகு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அன்பார்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் அன்பான ரசிகர்களுக்கு, சீக்கிரம் குணமடைய வாழ்த்தும் குறுந்தகவல்கள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது சிறப்பாக உணர்கிறேன்.. உங்களின் அன்புக்கு எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.

    • ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்.
    • நாளை காலைக்குள் வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

    இதற்கிடையே, சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும், ஆனால், படத்தையும் முடிக்கவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில், ஆல் இன் பிட்சர்ஸ் பங்குதாரர் விஜய் ராகவேந்திரா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், துருவ நட்சத்திரம் திரைப்படம் நிபந்தனையுடன் நாளை வெளியிட அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி, "ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை நாளை காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் துருவ நட்சத்திரம் வெளியிட அனுமதி வழங்கப்படுகிறது.

    நாளை காலைக்குள் வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.
    • ரஜினியின் புதிய படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அருகில் இருக்கும் மற்றொரு அரங்கில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பும் அங்கு நடைபெறுகிறது.


    கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரஜினிகாந்த், இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு கமல்ஹாசனை சந்திக்க வருவதாக தெரிவித்துள்ளார். இதனையறிந்த கமல்ஹாசன் "என் நண்பனைச் சந்திக்க நானே வருகிறேன்" என காலை 8 மணிக்கே உடனடியாக தலைவர் 170 ஷுட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் அடித்து ரஜினிகாந்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். கமல்ஹாசனை கண்ட ரஜினிகாந்த் மகிழ்ச்சியில், அவரை கட்டித்தழுவிக் கொண்டார். இருவரும் தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர்.


    இந்தியத் திரையுலகின் மாபெரும் உச்ச நட்சத்திரங்களின் இந்த நட்பும், அவர்களுக்கிடையேயான அன்பும், படப்பிடிப்பில் இருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக பாபா, பஞ்சதந்திரம் படங்களின் ஷுட்டிங் இதே இடத்தில் நடைபெற்ற போது இருவரும் சந்தித்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 21 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் ஒரே படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துள்ளனர்.

    • ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜர்.
    • மன்சூர் அலிகான் அளித்த வாக்குமூலத்தை வீடியோ பதிவாகவும், எழுத்த பூர்வமாகவும் பதிவு.

    நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆஜரானார்.

    தலைமறைவாகும் ஆள் நான் இல்லை என ஏற்கனவே நடிகர் மன்சூர் அலிகான் விளக்கம் அளித்திருந்தார்.

    பின்னர், உடல் நிலையை காரணம் காட்டி அவகாசம் கோரியிருந்த நிலையில் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார்.

    நடிகர் மன்சூர் அலிகானிடம் நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவுபெற்றுள்ளது.

    மன்சூர் அலிகானிடம் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவை காண்பித்து 35 நிமிடங்கள் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதில், உண்மையிலேயே தவறான நோக்கத்தில் தான் பேசினாரா என்பது தொடர்பாக மன்சூர் அலிகானிடம் விசாரணை நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

    மேலும், மன்சூர் அலிகான் அளித்த வாக்குமூலத்தை வீடியோ பதிவாகவும், எழுத்த பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அனிமல்'.
    • இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த படத்தில் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.


    பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 'அனிமல்' திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், இப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணிநேரம் 21 நிமிடம் 23 நொடி ஆகும்.



    • கதீஜா ரகுமான் 'மின்மினி' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
    • இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

    பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான். இவர் ஷங்கர் இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'புதிய மனிதா' என்ற பாடலில் ஒரு சிறிய பகுதியை பாடியிருந்தார். மேலும், சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இடம்பெற்ற 'சின்னஞ்சிறு நிலவே' பாடலையும் கதீஜா பாடியுள்ளார்.


    இதையடுத்து ஹலிதா ஷமீம் இயக்கி வரும் 'மின்மினி' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். கடந்த மாதம் இப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.


    இந்த நிலையில் பிரிட்டன் - இந்தியா நாடுகள் இணைந்து தயாரிக்கும் 'லயனஸ்' படத்திற்கு இசையமைப்பாளராக கதீஜா ஒப்பந்தமாகியுள்ளார். பிரிட்டிஷ் நடிகை பைஜ் சந்து மற்றும் அதிதி ராவ் நடிக்கும் இப்படத்தை பெண் இயக்குனர் கஜ்ரி பாபர் இயக்கவுள்ளார். இப்படத்தை இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகமும், பிரிட்டனின் பிரிட்டிஷ் திரைப்பட கழகமும் இணைந்து தயாரிக்கவுள்ளனர் .

    இந்நிலையில், இந்த படத்தின் போஸ்டர் கோவாவில் நடந்து வரும் 54-வது சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. இப்படம் மூலம் சர்வதேச அளவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் கதீஜா ரஹ்மான்.

    • நடிகர் சிவகார்த்திகேயன் புதிய படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
    • இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    அயலான் போஸ்டர்

    இந்நிலையில், 'அயலான்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயனுக்கு புதிய பெருமை கிடைத்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


    • நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    • மன்சூர் அலிகான் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாக வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மன்சூர் அலிகானின் பேச்சு தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து சென்னை மாநகர போலீசார் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் போலீ சார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. அவரது வீட்டுக்கு நேரில் சென்று போலீசார் சம்மனை வழங்கினார்கள். இதனை ஏற்றுக்கொண்டு மன்சூர் அலிகான் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


    ஆனால் மன்சூர் அலிகான் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் முன் ஜாமின் கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது.

    முன் ஜாமின் கேட்டு கோர்ட்டை நாடியுள்ள நிலையில், போலீசாரால் மன்சூர் அலிகானிடம் இன்று விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், எனது குரல்வளை

    15 நாட்களாக தொடர் இருமலாக இருந்து நேற்று மிகவும் பாதிப்பு அடைந்து பேச மிகவும் சிரமமாக உள்ளது. நான் மருத்துவ சிகிச்சையில் இருந்து மீண்டு நாளை தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் தங்களைச் சந்திக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    • நடிகர் சூர்யா ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னை ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த காட்சிகளை படமாக்குவதற்காக ரோப் கேமராக்கள் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது ரோப் கேமராவின் ஒரு பகுதி அறுந்து விழுந்தது. இதை பார்த்ததும் சக சண்டை பயிற்சியாளர்களும், ஸ்டண்ட் கலைஞர்களும் சத்தம் போட்டதையடுத்து சூர்யா அங்கிருந்து விலகினார்.


    இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நசரத் பேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.


    இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் இறுதி கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, முன்னாள் கிரிகெட் வீரர் கபில்தேவ் இந்த படத்தின் டப்பிங் பணியை முடித்துள்ளார். இதனை படக்குழு புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளது.


    • யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் குய்கோ.
    • இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    அருள் செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குய்கோ. இந்த படத்தில் விதார்த், யோகிபாபு, இளவரசு, ஸ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர். ஒரு கிராமத்தில் மாடு மேய்ப்பவராக உள்ள யோகிபாபு ஒரு பெண்ணை காதல் செய்ய மாடு மேய்ப்பவனுக்கு பெண் தர மாட்டேன் என்று பெற்றோர் கூறி விட சவுதிக்கு சென்று ஒட்டகம் மேய்ப்பவராக அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளது.


    இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் விதார்த், ஸ்ரீபிரியங்கா, இளவரசு, அந்தோணி தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் துர்கா பேசியதாவது:-

    யோகிபாபு திரையில் பார்ப்பது போல் நேரிலும் சிரிச்சுட்டே, சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பார். இளவரசு அவ்வளவு ஞானத்துடன் என்னிடம் பேசினார். அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். இவ்வாறு அவர் பேசினார். ஏ.எஸ்.டி. பிலிம்ஸ் எல்.எல்.பி. நிறுவனம் தயாரிந்த இந்த படம் நாளை (24-ந் தேதி) திரைக்கு வருகிறது.

    • ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’.
    • இப்படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


    லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.


    இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, விஜயவாடா, விசாகப்பட்டினத்தில் 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த 'இந்தியன்- 2'படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவுபெற்றுள்ளது. மேலும், இன்று முதல் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

    ×