என் மலர்
சினிமா செய்திகள்
- மனிஷா யாதவ் மீண்டும் என் படத்தில் நடிப்பார்.
- சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்.
திரையுலகில் நடிகைகள் பாலியல் ரீதியிலான தொந்தரவுகளை எதிர்கொண்டது பற்றி பல பிரபலங்கள் வெளிப்படையாக கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அந்த வரிசையில், நடிகை விசித்திரா தானும் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டதாக கூறி, முன்னணி நடிகர் மீது மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார்.
இதன் பின்னணியில் பத்திரிகையாளர் ஒருவர், தமிழ் சினிமா இயக்குனர் சீனு ராமசாமி நடிகை மனிஷா யாதவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட இயக்குனர் சீனு ராமசாமி, மனிஷா யாதவ் தன் படத்தில் நடிப்பார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், நடிகை மனிஷா யாதவ் இனி சீனு ராமசாமியுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான பதிவில் அவர், "சீனு ராமசாமியின் படத்தில் நான் நடிக்கிறேனா? இதனை இப்போது தான் முதல் முறையாக கேட்கிறேன். விழா மேடையில் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தை போன்று தான் அவருக்கும் நான் நன்றி தெரிவித்தேன். இது எதையும் மாற்றிவிடாது."
"ஒன்பது ஆண்டுகளுக்கு முன் நான் கூறிய கருத்தில் இன்றும் உறுதியாகவே இருக்கிறேன். என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவருடன் நான் ஏன் பணியாற்ற வேண்டும்? சீனு ராமசாமி சார், நீங்கள் கூறும் கருத்துகளில் உண்மை இருப்பதை உறுதிப்படுத்துக் கொள்ளுங்கள்," என்று தெரிவித்தார்.
- பணத்தை திரும்ப செலுத்தாததால், துருவ நட்சத்திரம் படம் இன்று வெளியாகவில்லை.
- இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. பல வருடங்களாக சில காரணங்களால் தள்ளிப்போன நிலையில், இப்படம் இன்று ரிலீஸாக இருந்தது.
ஆனால், கவுதம் மேனனுக்கு எதிரான வழக்கில் ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.2 கோடியை இன்று காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்காவிட்டால் படம் வெளியாக அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பணத்தை திரும்ப செலுத்தாததால், துருவ நட்சத்திரம் படம் இன்று வெளியாகவில்லை.
இதனால், இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், இதுதொடர்பாக இயக்குனர் கவுதன் மேனன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த விளக்கத்தில், " பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்பதால் இன்று படத்தை வெளியிடவில்லை.
ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் பெற்ற பணம் திங்கள் அல்லது புதன்கிழமைகளில் திரும்ப செலுத்தப்படும்.
பணத்தை செலுத்திய பிறகே துருவ நட்சத்திரம் படம் வெளியிடப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
- தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த வைத்தீஸ்வரன் கோவில்.
- கற்பக விநாயகர், தையல் நாயகி சன்னதிகளில் அர்ச்சனை செய்து சவுந்தர்யா வழிபட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அமைந்துள்ளது தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
நவ கிரகங்களில் செவ்வாய் பரிகார தலமான இக்கோவிலுக்கு நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தனது கணவர் மற்றும் மகனுடன் தரிசனம் செய்தார். கற்பக விநாயகர், தையல் நாயகி சன்னதிகளில் அர்ச்சனை செய்து சவுந்தர்யா வழிபட்டார்.
- வீரப்பன், என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார்.
- 'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸானது டிசம்பர் 8-ஆம் தேதி வெளியாகுகிறது.
மூன்று தசாப்தங்களாக தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளாவின் அடர்ந்த காடுகளை வேட்டையாடிய மிகப்பிரபலமான நபரான வீரப்பன், சிறப்பு அதிரடிப்படையின் (STF) என்கவுண்டரில் தனது முடிவை சந்தித்தார். இவரது வாழ்க்கை கதை 'கூச முனிசாமி வீரப்பன்' என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸாக உருவாகியுள்ளது.

இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூஸ் முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது. நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

'கூச முனிசாமி வீரப்பன்' சீரிஸானது டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த சீரிஸின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
Koose Munisamy Veerappan – A true crime docu-series with UNSEEN VEERAPPAN TAPES premieres on Dec 8th in Tamil, Kannada, Telugu and Hindi. pic.twitter.com/b3yFftzEpz
— ZEE5 (@ZEE5India) November 24, 2023
- பதானில் சல்மானும், டைகர்-3 படத்தில் ஷாருக்கும் கேமியோ செய்திருந்தனர்
- இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம் என்றார் சல்மான்
மும்பை திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் ஆமிர் கான், சல்மான் கான் மற்றும் ஷாருக் கான். இந்த 3 நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் வெளியாகும் நாட்களில் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பது வழக்கம்.
அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவில் இவர்களின் திரைப்படங்கள் பல திரையரங்குகளில் வெளியாவதால் அவற்றின் வர்த்தக எல்லையும் பரந்து விரிந்துள்ளது. இதன் காரணமாக இவர்களை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள், இத்திரைப்படங்களில் ரசிகர்கள் விரும்பும் அம்சங்கள் அனைத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு புகுத்த நினைக்கின்றனர்.
அதில் ஒன்றாக சமீப காலங்களாக சல்மான் கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்களில் ஷாருக் கானும், ஷாருக் கான் கதாநாயகானாக நடிக்கும் திரைப்படங்களில் சல்மான் கானும், சில நிமிடங்களே திரையில் தோன்றும் கேமியோ (cameo) காட்சியில் தோன்றுகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் வெளியான ஷாருக் கான் நடித்து திரைக்கு வந்த "பதான்" திரைப்படத்தில் சல்மான் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதே போல், நவம்பர் மாதம் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சல்மான் கான் நடித்த "டைகர்-3" திரைப்படத்தில் ஷாருக் கான் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஒரு முன்னணி கதாநாயகனின் திரைப்படத்தில் திரையில் வேறொரு முன்னணி கதாநாயகன் தோன்றுவது இரு தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து சல்மான் கான் கூறியதாவது:
நானும் ஷாருக் கானும் பரஸ்பரம் இருவர் படங்களிலும் கேமியோ வேடங்கள் செய்கிறோம். எங்கள் இருவரின் ரசிகர்களும் அதை விரும்புவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் இருவருக்கும் திரையை தாண்டியும் ஆழமான நட்பு உள்ளது; இது கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. எங்கள் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே அவ்வப்போது சமூக வலைதளங்களில் சச்சரவு நடைபெறுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால், நான் சமூக வலைதளங்களை அதிகம் பார்ப்பவன் இல்லை. ஆனால், நான் எப்பொழுதும் என் ரசிகர்களிடம் சொல்வது என்னவென்றால், ஷாருக் எனக்கு சகோதரன்; எனவே, உங்களுக்கும் சகோதரன் - அவருக்கு எந்த தீங்கும் நேர்ந்து விட கூடாது - என்பதுதான். நானும் ஷாருக்கும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம்.
இவ்வாறு சல்மான் தெரிவித்தார்.
பிரபல கதாநாயகர்கள், வேறொரு கதாநாயகரின் திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் வருவது திரைப்படங்களின் வெற்றிக்கும், அதிக வசூலுக்கும் உதவுவதாக திரைப்பட விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
- ’ஜவான்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான நயன்தாரா, ரஜினி, விஜய், சூர்யா என பல நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ஷாருக்கானுடன் இவர் இணைந்து நடித்திருந்த 'ஜவான்' திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

நயன்தாரா பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. தொடர்ந்து குழந்தைகளை கவனித்து வரும் நயன்தாரா நடிப்பு மற்றும் பிசினஸ் இரண்டிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா சமூக வலைதளத்தில், படப்பிடிப்பு தளத்தில் கேமராவுடன் படம் இயக்குவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, "புதிய தொடக்கத்தை நம்புங்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் நயன்தாரா இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
- திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையானது.
- இதனால் மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திரிஷா பற்றி நடிகர் மன்சூர்அலிகான் பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையாகி திரையுலகில் கடந்த சில தினங்களாக பரபரப்பாகி வந்தது. மன்சூர்அலிகான் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் அவர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இதையடுத்து மன்சூர் அலிகான் இன்று திரிஷா விடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "ஆம்!! அடக்க நினைத்தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன். என்னை மன்னித்துவிடு! ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்.
எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! " என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை திரிஷா தனது சமூக வலைதளத்தில், "தவறு செய்பவன் மனிதன். அதை மன்னிப்பவன் தெய்வம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் திரிஷா, மன்சூர் அலிகானை மன்னித்துவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
- அஜித் 'விடாமுயற்சி' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலே நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளார். அதாவது, 'விடாமுயற்சி' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் அஜித் சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.
- இவர் பல மொழிகளில் நடிக்கிறார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

ஃபீனிக்ஸ் வீழான் போஸ்டர்
இவரது மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் 'ஃபீனிக்ஸ் வீழான்'. பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
விஜய் சேதுபதியின் 'நானும் ரவுடி தான்', 'சிந்துபாத்' படங்களில் சூர்யா நடித்திருந்ததாக கூறப்படுகிறது.
- விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’.
- இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் இன்று (நவம்பர் 24) ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இதற்கிடையே, சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க கவுதம் மேனன், ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் ரூ.2.40 கோடியை பெற்றுள்ளதாகவும், ஆனால், படத்தையும் முடிக்கவில்லை பணத்தையும் திருப்பித் தரவில்லை என அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து, "ஆல் இன் பிட்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 2 கோடியை இன்று காலை 10.30 மணிக்குள் திரும்ப அளிக்க வேண்டும் அவ்வாறு திரும்ப வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக்கூடாது" என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கவுதம் மேனன் பதிவு
இந்நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மன்னிக்கவும். இன்று 'துருவ நட்சத்திரம்' படத்தை திரைக்கு கொண்டு வரமுடியவில்லை. நாங்கள் எங்களால் ஆன முயற்சிகளை செய்தோம். ஆனால் எங்களுக்கு இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுவது போல தெரிகிறது. உலகம் முழுக்க, அட்வான்ஸ் புக்கிங் மற்றும் முறையான திரைகள் வழியாக அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தருவோம் என்று நம்புகிறேன். படத்துக்கு கிடைக்கும் ஆதரவும் மகிழ்ச்சியும், எங்களை தொடர்ந்து இயங்கவும் வைத்தது. இன்னும் கொஞ்ச நாட்கள்தான். நாங்கள் வருகிறோம்" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
#DhruvaNatchathiram #DhruvaNakshathram pic.twitter.com/dmD4ndEnp9
— Gauthamvasudevmenon (@menongautham) November 23, 2023
- திரிஷா குறித்த மன்சூர் அலிகான் பேச்சு சர்ச்சையாகியது.
- மன்சூர் அலிகான் போலீஸ் நிலையத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
திரிஷா பற்றி நடிகர் மன்சூர்அலிகான் பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையாகி திரையுலகில் கடந்த சில தினங்களாக பரபரப்பாகி வந்தது. மன்சூர்அலிகான் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் அவர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் இன்று திரிஷா விடம் மன்னிப்பு கேட்டுள் ளார். இது தொடர்பாக நடிகர் மன்சூர்அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
ஆம்!! அடக்க நினைத் தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன். என்னை மன்னித்துவிடு!
ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!
எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந் தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அகிம்சை யை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.
காவல் அதிகாரி அம்மை யார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!
சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசி யுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமை களை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.
எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கல மாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்க ளாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!
என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயன உர மேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர் களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத் தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் ஜி.எஸ்.டி., எஸ்.டி., டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன் னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதா னிக்கு கப்பம் கட்ட முடியும். அதானிந்தியா மார்பில் தவமும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!
பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க் கம். தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார். பெண்மை புனிதம். கார ணத்தோடு தான் ஆண்மை யை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8' வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10-ம் வகுப்புவரை வளர்த்த வர். இனிமேலும் இம்மண் ணின் மீட்சிக்கு, சகோ தரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தை களின் நல்வாழ்க்கையை அருளும்!
எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!
இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
- 'கங்குவா' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது.
- படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டி முறையில் சரித்திர படமாக உருவாகும் கங்குவா 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'கங்குவா' படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கும் போது, நடிகர் சூர்யா விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் சூர்யாவின் தோள் பட்டையில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நசரத் பேட்டை போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விபத்துக்கு பிறகு நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "அன்பார்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் அன்பான ரசிகர்களுக்கு, சீக்கிரம் குணமடைய வாழ்த்தும் குறுந்தகவல்கள் அனைத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது சிறப்பாக உணர்கிறேன்.. உங்களின் அன்புக்கு எப்போதும் நான் கடமைப்பட்டுள்ளேன்," என்று தெரிவித்துள்ளார்.






