என் மலர்
சினிமா செய்திகள்
- பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' .
- இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD). இந்த படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார்.

மேலும், இதில் அமிதாப் பச்சன், கமல், திஷா பதானி, பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'கல்கி 2898- ஏடி' (KALKI 2898-AD) திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் புதிய வடிவிலான துப்பாக்கியை படக்குழு வடிவமைப்பது குறித்தும் அதன் தயாரிப்பு குறித்தும் இந்த வீடியோ உருவாகியுள்ளது. மேலும், இந்த வீடியொவில் படக்குழு ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்தும் தெரிவித்துள்ளது.
The gun should not look like a gun at all. ?
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) December 30, 2023
Presenting '???? ??????? ??????? ?: ??-????????? ?? ????': https://t.co/mFhYcJv1GA#Kalki2898AD #Prabhas @SrBachchan @ikamalhaasan @deepikapadukone @nagashwin7 @VyjayanthiFilms @Kalki2898AD pic.twitter.com/MnGRIi7RRR
- ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டங்கி’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'டங்கி'. இந்த படத்தில் ஷாருக்கான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேக கதாபாத்திரங்களுடன் நடித்துள்ளனர்.

ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் கதை எழுதி இருக்கிறார்கள். 'டங்கி' திரைப்படம் டிசம்பர் 21-ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி குறிப்பிடத்தக்க வகையில் அதன் முத்திரையைப் பதித்துள்ளது.

டங்கி போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'டங்கி' திரைப்படம் ரூ.323.77 கோடியை வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Nikle the kabhi hum ghar se... seedhe aapke dil mein pahoch gaye! ??
— Red Chillies Entertainment (@RedChilliesEnt) December 29, 2023
Thank you for showering endless love over Dunki. ?
Book your tickets right away!https://t.co/DIjTgPqLDI
Watch #Dunki - In Cinemas Now! pic.twitter.com/08bB4F6nFX
- ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அயலான்’.
- இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 'அயலான்' திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், 'அயலான்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 'அயலான்' படத்தின் வெற்றியை பொருத்து தான் அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும், அயலான் படத்தை காட்டிலும் அதனுடைய இரண்டாம் பாகம் எடுப்பதற்கு சுமார் 4 மடங்கு அதிகம் செலவாகும் என்றும் ஏற்கனவே சிவகார்த்திகேயனிடம் இரண்டாம் பாகத்திற்கான கதையை கூறி அவருக்கும் அது பிடித்துள்ளதாகவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
- இயக்குனர் ராம்கோபால் வர்மா புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார்.
- இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸாக இருந்தது.
ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கையை மையமாக வைத்து 'வியூகம்' திரைப்படம் உருவாகியுள்ளது. இதனை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கியுள்ளார். இதில் ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் அஜ்மல் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியான சந்திரபாபு நாயுடு, நடிகர் பவன் கல்யாண் ஆகியோரின் கதாபாத்திரங்களும் இடம்பெற்று உள்ளன. இவர்கள் இருவரையும் இழிவுபடுத்தும் விதமாக சர்ச்சை காட்சிகள் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் 'வியூகம்' படத்தின் போஸ்டர்களை தீ வைத்து எரித்தனர். அதுமட்டுமல்லாமல், பிலிம் நகரில் உள்ள ராம்கோபால் வர்மாவின் அலுவலகத்தில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தினர்.
இந்த நிலையில் வியூகம் படத்தை தடை செய்ய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜனவரி - 11 ம் தேதி வரை 'வியூகம்' படத்தை திரையிட தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

கேப்டன் மில்லர் போஸ்டர்
இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
U/A certificate #CaptainMiller ?
— Sathya Jyothi Films (@SathyaJyothi) December 29, 2023
KIDS, YOUTH & FAMILIES get ready for the biggest Action Extravaganza #CaptainMillerPongal ??
JANUARY 12th,2024 Blasting Theatres Worldwide@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @saregamasouth pic.twitter.com/ox4lg5x21c
- நானி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஹாய் நான்னா’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் நானி நடித்துள்ள திரைப்படம் 'ஹாய் நான்னா'. இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். அப்பா மகள் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு ஹசம் அப்துல் இசையமைத்துள்ளார்.

வைரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. 'ஹாய் நான்னா' திரைப்படம் டிசம்பர் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஹாய் நான்னா போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஹாய் நான்னா' திரைப்படம் ஜனவரி 4-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது.
Hi. Meetho eppudu undipodaaniki vacchesaaru Yashna, Mahi, and Viraj. ?
— Netflix India South (@Netflix_INSouth) December 30, 2023
Hi Nanna, streaming from 4th January in Telugu, Tamil, Malayalam, Kannada and Hindi on Netflix. ???#HiNannaOnNetflix pic.twitter.com/pbDnNaf19M
- விஜயகாந்தின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
- நடிகை சாக்ஷி அகர்வால் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை காலமானார்.
இன்று தீவுத்திடலில் வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடலுக்கு ஆயிரக்கணக்கான பொது மக்கள் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலரும் நேரில் வந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் வெளிநாடுகளுக்கு சென்ற திரை பிரபலங்கள் பலர் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகை சாக்ஷி அகர்வால் வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சாக்ஷி கூறியிருப்பதாவது:-
கேப்டன் விஜயகாந்த் சார்.. அவருக்கு இந்த நிலை ஏற்படும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் பல வருடங்கள் அவர் வாழ்ந்து எங்களையும் வாழ வைப்பார் என எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அவர் இறந்ததை எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
என்னைப் பொறுத்தவரை நான் ஓர் இளம் நாயகி.. என்னிடம் மூத்த கலைஞர்கள் சொல்லி நான் கேள்விப்பட்டதுண்டு. கேப்டன் இருந்த காலகட்டத்தில் சினிமா தலை சிறந்து விளங்கியது.
படப்பிடிப்பு தளத்தில் லைட்மேன்கள் முதல் கதாநாயகன் வரை அனைவரையுமே சமமாக நடத்துவற்கு காரணமானவர் கேப்டன். இன்று அவர் உயிரோடு இல்லை என்றாலும், அவரது ஆசீர்வாதம் எங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும் என நம்புகிறோம்.
கேப்டனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- விஜயகாந்தின் உடல் சென்னை, அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- இவரது உடல் மதியம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளது.
நடிகரும் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி நடிகர்களான, கமல், ரஜினி, விஜய், குஷ்பு, விஜய் ஆண்டனி என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் சென்னை, அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இவரது உடல் மதியம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தே.மு.தி.க. அலுவலகத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்த் மறைவிற்கு நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார். அதாவது, விஜயகாந்த் மனைவி பிரேமலதா மற்றும் சுதீஷிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். துபாயில் இருப்பதால் இறுதி அஞ்சலிக்கு வரமுடியவில்லை என அஜித் வருத்தம் தெரிவித்துள்ளார்.
- நடிகர் விஜகாந்த் மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி நடிகர்களான, ரஜினி, விஜய், குஷ்பு என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் சென்னை, அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள. தொடர்ந்து இவரது உடல் மதியம் 1 மணிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தே.மு.தி.க. அலுவலகத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்த் உடலுக்கு நடிகர் விஜய் ஆண்டனி நேரில் அஞ்சலி செலுத்த வந்தார். அப்போது ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கிக் கொண்ட விஜய் ஆண்டனி தடுப்புகளில் ஏறி குதித்து வந்தார். விஜய்காந்தின் உடலை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த விஜய் ஆண்டனி அவருக்கு முத்தமிட்டு அஞ்சலி செலுத்தினார். அனைவரும் மாலை அணிவித்து, தொட்டு கும்பிட்டு மரியாதை செலுத்திய நிலையில் விஜய் ஆண்டனி முத்தமிட்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
- ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’.
- இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது.
இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான திரைப்படம் 'பார்க்கிங்'.திரில்லர் ட்ராமாவான 'பார்க்கிங்' திரைப்படத்தை 'பலூன்' பட இயக்குனர் கே.எஸ்.சினிஷ், சோல்ஜர்ஸ் ஃபேக்டரி சார்பில் தயாரித்துள்ளார். மேலும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் கதாநாயகியாக இந்துஜா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். சிறிய பட்ஜெட்டில் உருவான இப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் ஓடிடி ரிலீஸிற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

பார்க்கிங் போஸ்டர்
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'பார்க்கிங்' திரைப்படம் டிசம்பர் 30-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது.
- நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார்.
- மேலாக பொதுமக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற வாகனத்துடன் நடந்து சென்றார்.
சென்னை:
விஜயகாந்த் நடிப்பில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் 1991-ம் ஆண்டு வெளியான 'கேப்டன் பிரபாகன்' படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடித்து இருந்தார். இப்படம் மன்சூர் அலிகானுக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு பல படங்களில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கண்டனங்களுக்கும், சர்ச்சையிலும் மாட்டிய மன்சூர் அலிகானின் நேற்றைய செயல் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி அறிந்த மன்சூர் அலிகான் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றார். அங்கு விஜயகாந்த் உடலுக்கு மன்சூர் அலிகான் அஞ்சலி செலுத்தினார். இதன்பின்னர், சாலிகிராமத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக மக்களின் வெள்ளத்தில் ஊர்ந்து சென்ற வாகனத்துடன் நடந்து சென்றார்.

பின்னர் விஜயகாந்த் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இரவு கடந்தும் அவரது உடலை விட்டு கொஞ்சம் கூட நகராமல் இருக்கிறார் மன்சூர் அலிகான். இன்று காலை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட்ட போதும் கூடவே சென்றார். இன்று மாலை விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யும்வரை மன்சூர் அலிகான் இருப்பார். இதன் மூலம் தனது ஆசானுக்கு தன்னால் இயன்ற மரியாதையை அவர் செலுத்துகிறார் என்பதே நிதர்சனம்.
- அன்பு நண்பர் விஜயகாந்த்-ஐ இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம்.
- ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார்.
நடிகரும் தே.மு.தி.க. நிறுவன தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிசம்பர் 28) காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் என பல தரப்பட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இடநெருக்கடி காரணமாக விஜயகாந்தின் உடல் தே.மு.தி.க கட்சி அலுவலகத்திலிருந்து அண்ணா சாலை அருகே உள்ள தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தூத்துக்குடியில் படப்பிடிப்புக்காக சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஷூட்டிங் ரத்து செய்துவிட்டு வந்துபோது அளித்த பேட்டியில், "அன்பு நண்பர் விஜயகாந்த்-ஐ இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம். அசாத்தியமான மனஉறுதி கொண்டவர். மீண்டும் உடல் ஆரோக்கியம் பெற்று திரும்பி வந்துவிடுவார் என்று நாம் அனைவரும் நினைத்தோம். பொதுக்குழுவில் அவரை பார்க்கும்போது வருந்தினேன். எனக்கு சற்று நம்பிக்கை குறைந்துவிட்டது. ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று கூறினார்.
இந்நிலையில், விஜயகாந்தின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி, "கேப்டன் அவருக்கு பொருத்தமான பெயர். விஜயகாந்த் நாமம் வாழ்க" என்று பேசினார்.






