என் மலர்
சினிமா செய்திகள்
- நடிகர் சித்தார்த் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
- நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூக கருத்துகளை பேசி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இரு தரப்பிலும் இதை மறுக்கவோ, ஏற்கவோ இல்லை. மேலும், இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவே பங்கேற்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.

இந்நிலையில், நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதளத்தில் அதிதி ராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் 'லவ் இருக்கா? இல்லையா?' என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நடிகை அதிதி ராவ், நடிகர் சத்யதீப் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில ஆண்டுகளிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். நடிகை அதிதி ராவின் முன்னாள் கணவர் சத்யதீப் மிஸ்ரா பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் பல படங்களிலும் நடித்துள்ளார்.
- இயக்குனர் சுதா கொங்கரா புதிய படம் இயக்குகிறார்.
- இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தன் தேர்ந்த நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது படமாகும். இந்த படத்தின் அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'சூர்யா 43' படத்தின் பாடல் ரெக்கார்டிங் தொடங்கியுள்ளதாகவும் முதல் ரெக்கார்டிங் வெற்றிகரமான பாடகி 'தீ'யுடன் தொடங்கி இருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
- இந்த படத்திற்கு பிறகு இவர் ஏராளமான படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.
- பிரேம்ஜிக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
நடிகர் சிலம்பரசன் இயக்கி, நடித்து பெரும் வெற்றி பெற்ற வல்லவன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரேம்ஜி. இதைத் தொடர்ந்து இவர் சென்னை 28 படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவர் ஏராளமான படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.
அந்த வகையில், இவர் மற்ற இயக்குனர்கள் படங்களில் நடித்ததை விட தனது சகோதரர் வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்டவை பிரேம்ஜிக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
தமிழ் திரையுலகில் சிங்கிளாக வலம்வரும் பிரேம்ஜி தனது திருமணம் பற்றி வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். புத்தாண்டு நாளில் இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், "புத்தாண்டு வாழ்த்துக்கள், இந்த ஆண்டு நான் திருமணம் செய்து கொள்கிறேன். டாட்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இதில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த நிலையில், புத்தாண்டு மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-இன் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது. இதில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன. லால் சலாம் படம் இந்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது.
- தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
- இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதிலேயே படத்தின் பெயர், "The Greatest Of All Time" என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்றே இந்த போஸ்டரிலும் விஜய் இரட்டை வேடங்களில் மிரட்டலாக காட்சியளிக்கும் படம் இடம்பெற்று இருக்கிறது.
- இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கின்றனர்.
- புதிய படம் குறித்த அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியீடு.
தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தனது 98-வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அறிமுக இயக்குனர் கிருஷ்ண மூர்த்தி இயக்கும் இந்த படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி காட்சிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் இணையும் புதிய படம் குறித்த அறிவிப்பு புத்தாண்டு தினத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில், இதன் தலைப்பு, ரிலீஸ் மற்றும் இதர அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்த் இல்லம் முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்வதற்காக சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டு முன்பு ரசிகர்கள் திரண்டனர்.
இதையடுத்து இன்று காலை 9.30 மணி அளவில் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். மெயின் வாசல் அருகில் வீட்டுக்குள் நின்றபடியே அவர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
வெள்ளை நிற உடையில் காணப்பட்ட ரஜினிகாந்த் இரு கைகளையும் மேலே கூப்பி, தனது பாணியில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். "பறக்கும் முத்தம்" கொடுத்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
ரஜினியை பார்த்ததும் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் தலைவா... தலைவா... என்று கோஷமிட்டபடியே ரஜினிக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட ரஜினி கைகளை அசைத்த படியே சில நிமிடங்கள் நின்று புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் அவர் வீட்டுக்குள் சென்றார். இதன் பிறகு ரசிகர்கள் ரஜினி வீட்டு முன்பு இருந்து கலைந்து சென்றனர்.
- கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
- தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதைதொடர்ந்து, தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வௌியானது. அந்த போஸ்டரில், "The Greatest Of All Time" என்று படத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளது.
இதில், நடிகர் விஜய் இரண்டு தோற்றங்களில் இருப்பதால், தளபதி 68-ல் விஜய் டபுள் ஆக்ஷனாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்கள் தளபதி 68-ன் ஃபர்ஸ்லுக் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைராக்கி வருகின்றனர்.
- கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
- படம் அடுத்தாண்டு கோடையில் வெளியாகிறது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ரத்னம்' திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் அடுத்தாண்டு கோடையில் வெளியாகிறது. இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான 'வாராய் ரத்னம்' நாளை காலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
- கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
- சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Are you ready for #Thalapathy68FirstLook ?@actorvijay Sir @vp_offl @thisisysr @aishkalpathi @Ags_production @TSeries @PharsFilm pic.twitter.com/4l3WiqIdqt
— Archana Kalpathi (@archanakalpathi) December 31, 2023
- ஹாலிவுட் நடிகர் டாம் வில்கின்சன் காலமானார்.
- இவர் ஆஸ்கார் விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்டார்.
வாஷிங்டன்:
ஆஸ்கார் விருதுக்கு இரண்டு முறை பரிந்துரைக்கப்பட்ட பிரிட்டிஷ் நடிகர் டாம் வில்கின்சன் (75), நேற்று காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஹாலிவுட் நடிகரான டாம் வில்கின்சன் தி ஃபுல் மான்டி, ஷேக்ஸ்பியர் இன் லவ் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்ற டாம் வில்கின்சன் 130க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இரண்டு முறை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இவர், பாஃப்டா, எம்மி மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்றுள்ளார். இவரது மறைவுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' .
- இந்த வெப்தொடர் நவம்பர் 10-ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.
பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியான வெப் தொடர் 'லேபில்'. இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும், மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அருண்ராஜா காமராஜின் முதல் வெப்தொடரான 'லேபில்' தொடருக்கு சாம் சி.எஸ் இசையமைக்க ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். பி.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர். இந்த வெப்தொடர் நவம்பர் 10-ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.

இந்நிலையில், 'லேபில்' தொடரின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து அருண்ராஜா காமராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நவம்பர் 10, 2023 முதல் இன்று வரை 8 வாரங்கள். எங்கள் உள்ளுணர்வுகளின் ஒரு "ரோலர் கோஸ்டர் ரைட்"
எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினர்கள் மற்றும் தயாரிப்புக்குழுவினருக்கு மாபெரும் மற்றும் மறக்க முடியாத படைப்பு.
லேபிலின் கருவாக்கம், உருவாக்கம் மற்றும் வெளியீடு இவை அனைத்தும் எங்களின் சிற்சிறு "பெருங்கனா".

இப்படைப்பின் கரு நம் அனைவரின் ஏதோ ஒரு குரலற்ற இயலாமையின் குரலின் தொடக்கமாய் துவங்கி, கதை கண்டு, களம் கண்டு, வடிவம் கண்டு, இன்று முதல் அத்தியாயம் இன்னும் சில கேள்விகளுடனேயே நிறைவு பெறுவது நீண்ட நெடிய சுமத்தலுக்குப் பின் பிரசவிக்கும் ஓர் உணர்வு.
பிரசவித்தலுக்கான காலமே எட்டு வாரங்கள் !!! அதை ஒரு நாளும் உணர்விக்கத்தவறவில்லை இக்குழந்தை. ஒவ்வொரு அரை மணியும் ஒரு பெரும் வாரமாய் மாறி எட்டி உதைக்கவும் தவறியதில்லை உங்களின் அன்பு மட்டுமே இக்குழந்தையை வளர்த்து இதில் உழைத்த அனைவருக்கும் சுகமாய் முழுதாய் பிரசவித்துக் கொடுத்திருக்கிறது.
இதை உங்கள் குழந்தையாய் பாவித்து உடன் உரையாடி, சீராட்டி, ஊட்டமளித்து, ஊக்கமளித்து, ஆர்ப்பரித்து, ஆதங்கப்பட்டு, அரவணைத்து, புறந்தள்ளி, கொண்டாடி. பரிசீலித்து, பரிந்துரைத்து, தீதென அக்கறைப்பார்வையோடும், நன்றென ஏற்றுக்கொண்டும், இன்னும்.. இன்னும்.. என்று எண்ணி தேடி வந்த உள்ளங்கள் எத்தனை எத்தனை...
எப்பேறு!!! இப்பேறு...
மழலையின் மகிழ்ச்சி அதை ஏற்றுக்கொள்ளும் அளவிலேயே தீர்மானிக்கப்படும், ஆம் !! இம்மழலை உங்கள் அன்பின் முதல் விதை...
உங்கள் அன்பைப் பெற பாடுபட்ட என்னுடன் தோள் சேர்த்து அதை கோபுரம் ஆக்க, என் அன்புக்காக மட்டுமே அயராது சுழன்ற ஒவ்வொருவரும்ஒவ்வொருவரும்.... ஒவ்வொருவரும் என்றுமே எனக்கான பொக்கிஷங்கள். உங்களால் மட்டுமே "லேபில்" சாத்தியம் ஆகியுள்ளது.

அருண்ராஜா காமராஜ் அறிக்கை
உங்கள் அன்பிற்கு எங்களால் முடிந்தவரை உடல், பொருள், ஆவி அனைத்தையும் இப்படைப்பிற்காக சமர்ப்பித்துள்ளோம்.
இனி "லேபில்" உங்களின் "முழுதாய் பிரசவித்த அன்புக்குழந்தை".
ஒவ்வொரு வாரமும் !!! நீங்கள் உங்கள் பல்வேறு எண்ண ஓட்டங்களில் இருந்திருப்பீர்கள், ஆவலைக் கட்டுப்படுத்தியிருக்க கூடும். அப்படியே அள்ளித்தழுவவோ!! அப்படியே திட்டித் தீர்க்கவோ வழிவகை செய்ய இயலாது போனதில் சிறு வருத்தமே.. இதில் உங்களுடனேயே நான்!!! எனக்கும் அதே உள்ளுணர்வே!! ஏன் என்றால் கொஞ்சுதலுக்கானதை சுமந்து கொண்டே இருப்பதிலே தானே பெரிய வலியினை காலம் தந்திருக்கும்... ஆயினும் அதையும் எனக்கு சுகமாக்கித் தந்த அனைவரின் அன்பினாலேயே நான் பிரமித்து நிற்கிறேன்....
பல்வேறு சிந்தனைகள், பல்வேறு மனநிலைகள், பல்வேறு நிலைப்பாடுகள், நெருங்கிய ஆளுமைகளின் மறைவுகள் பல்வேறு காலநிலை மாறுதல்கள்.. தொடர் இடர்கள், நிலையற்ற சூழ்நிலைகள், அடுத்தடுத்த முன்னெடுப்புகள், மாபெரும் இழப்புகள், சவால்கள் இவை அனைத்திற்கும் மத்தியில் வந்து நின்ற பொழுது அப்போதைய மனநிலையில் இப்படைப்பு வீரியம் மாறி மாறி, தொடர்பற்று, உங்கள் அன்பை இழந்திருக்கக் கூட ஒரு வாய்ப்பிருந்திருக்கும். அல்லது முற்றிலும் பெற முடியாமல் தவித்திருக்கும். இவை எதுவும் நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாது போனதாலேயே இந்த நீண்ட நெடிய விளக்கம். உங்கள் அன்பு மட்டுமே என்னை இதை எழுத வைக்கிறது.

அருண்ராஜா காமராஜ் அறிக்கை
'சரியென்றும் தவறென்றும் ஏதுமுண்டோ, அடங்கா அன்பின்பால் விளைந்த விதைக்கு"
அப்படியே இதை நானும் புரிந்து கொள்கிறேன்.. ஏனென்றால் அனைத்தையும் மாற்றும்,
முன்னெடுக்கும் சக்தி உங்களின் அன்பிலும், ஆதரவிலும் உள்ளது.
இதுவரை காத்திருந்து பார்த்தவர்களும், காண காத்திருப்பவர்களுக்கும் என்றுமே எங்கள் அனைவரின் அன்பையும் உரித்தாக்குகிறேன்.
எல்லா கலை படைப்புமே எல்லாரையுமே திருப்தி படுத்திவிடுமா அப்படி பண்ண முடியுமான்னு தெரியல.. ஆனா அத பண்ண ஒவ்வொரு முறையும் கலை தன்னை தயார் செய்து கொள்ளும். அதனை முடிந்தவரை முயன்று முடிப்போம், முடியும் வரை முயல்வோம்.
ஓர் பரிச்சார்த்த முயற்சிக்கான வெள்ளோட்டமாக, அன்பின் பதில்களோ, விருப்பு வெறுப்புகளோ அனைத்திற்கும் அப்பாற்பட்டு...தொடங்கிய நேரம் முதல் இன்று வரை எங்களோடு பயணிக்கும் என் உலகமென நான் பெரிதும் மதிக்கும் என் அன்பிற்கினிய திரைக்கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், படப்பிடிப்பு தள அலுவலர்கள், தயாரிப்பு நிறுவன அலுவலர்கள், உயிருக்கும், உணர்வுக்கும் நெருக்கமாக்கி ஆளுமை செலுத்தி படைத்து, உங்களுக்கு விருந்தளித்த அனைவருக்கும் அவர்களின் அயராது பணிச்சுமையைப் புரிந்து பின்னணியில் இருந்து முழுதாய் ஊக்கமளித்த அவரவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் .... இக்கணத்தில், மனதார நன்றி கூறிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Director Arunraja Kamaraj Thanks Note regarding his successful #Label Webseries @Arunrajakamaraj @teamaimpr pic.twitter.com/zHNIjwt6tV
— Team AIM (@teamaimpr) December 30, 2023






