அதிரடி தோற்றத்தில் விஜய்.. மிரட்டும் TheGoat 2nd Look போஸ்டர்

தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
அதிரடி தோற்றத்தில் விஜய்.. மிரட்டும் TheGoat 2nd Look போஸ்டர்
Published on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்ட இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இதிலேயே படத்தின் பெயர், "The Greatest Of All Time" என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போன்றே இந்த போஸ்டரிலும் விஜய் இரட்டை வேடங்களில் மிரட்டலாக காட்சியளிக்கும் படம் இடம்பெற்று இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com