ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த தளபதி 68-ன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த தளபதி 68-ன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
Published on

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். 'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். 

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இதைதொடர்ந்து, தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வௌியானது. அந்த போஸ்டரில், "The Greatest Of All Time" என்று படத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளது.

இதில், நடிகர் விஜய் இரண்டு தோற்றங்களில் இருப்பதால், தளபதி 68-ல் விஜய் டபுள் ஆக்ஷனாக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ரசிகர்கள் தளபதி 68-ன் ஃபர்ஸ்லுக் போஸ்டரை சமூக வலைத்தளத்தில் வைராக்கி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com