என் மலர்
சினிமா செய்திகள்
- படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' தயாரித்து வருகிறது.
- படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து உள்ளன.
'உறியடி', 'ஃபைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
'சேத்துமான்' புகழ் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜயகுமாருடன் பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' தயாரித்து வருகிறது. படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து உள்ளன.

இந்தநிலையில் இப்புதிய படத்திற்கு'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் முழுவதும் அரசியலை பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஜயகுமாருக்கு இளம் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். துணிச்சலாக ஆரம்பத்திலேயே அரசியல் கதையில் அவர் நடித்துள்ளது ரசிகர்களை வியக்க வைத்தது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- நார்வே தமிழ்த்திரைப்பட விழா தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விழா.
- விருது தம்பி கே.பி.ஒய். பாலாவுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி.
15-வது சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் 'வீரத்தின் மகன்' திரைப்பட திரையிடல் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.குகுநாதன், நடிகர் போஸ் வெங்கட், இயக்குநர் கெளரவ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், பி.ஆர்.ஓ சங்க முன்னாள் செயலாளர் பெரு துளசி பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் நடிகர் ரோபோ சங்கர் பேசுகையில், "கலைஞர்கள் மீது அன்பும், பேராதரவும் காட்டக்கூடியவர்கள் இலங்கை தமிழர்கள் தான், அவர்களை விட யாரும் இருக்க முடியாது. நார்வே தமிழ்த்திரைப்பட விழா தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விழா. அதில், புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் விருது வழங்குவது, அந்த விருது தம்பி கே.பி.ஒய். பாலாவுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அந்த விருதுக்கு தகுதியானவர் தம்பி பாலா.
புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் வழங்கப்படும் முதல் விருது அவருக்கு கிடைத்திருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி. இதுபோல் பலர் கலைஞர்களை நீங்கள் கெளரவிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும், தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும்" என்றார்.
- என்னைப்பற்றி நீங்கள் கூறிய அவதூறு கருத்துக்கள் எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் மூலமாகவும், டி.வி., யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்களின் மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.வி. ராஜு நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
இந்த விவகாரம் 2 நாட்களாக பெரும் சர்ச்சையாக வெடித்தது. குஷ்பு, சேரன், காயத்ரி ரகுராம் உள்பட பல திரை உலக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரிஷாவும், ராஜுவுக்கு கண்டன கருத்துக்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகை திரிஷா சார்பில் ஏ.வி. ராஜுக்கு வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-
என்னைப்பற்றி நீங்கள் கூறிய அவதூறு கருத்துக்கள் எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் என் மீது கூறப்பட்ட கருத்துக்களுக்கு 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் மூலமாகவும், டி.வி., யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்களின் மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தவறினால் உங்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
- சிவகார்த்திகேயனை சந்தித்து பேசும் ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாக தெரிவித்தார்.
- சிவகார்த்திகேயன், அவரை நேரில் வரவைத்து அவருக்கு சர்ப்ரைஸ் தந்தார்.
சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 10 கோலாகலமாகத் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தன்னைச் சந்திக்க ஆசைப்பட்டதாக கூறிய பாடகியை, நேரில் வரவைத்து சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
தமிழ் இசை உலகில் அதிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் பெரியவர்கள் மட்டும் கலந்து கொள்ளும் சூப்பர் சிங்கர் சீனியர் 10 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

பலதரப்பட்ட பின்னணியிலிருந்து தனித்துவமான பல பாடகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஆரம்ப கட்ட எபிசோடு ஒன்றில் பங்கேற்ற, கேரளாவைச் சேர்ந்த தன்ஷிரா எனும் பாடகி, சிவகார்த்திகேயனை சந்தித்து பேச வெண்டும் என்ற ஆசையில் தமிழ் கற்றுக்கொள்ள ஆரம்பித்ததாக தெரிவித்திருந்தார்.
தற்போது இவர் தமிழில் எம்.ஏ. பட்டப்படிப்பைப் படித்து வருகிறார். நிகழ்ச்சியில் இவரின் குரலும் பாடல்களும் அனைவரது பாராட்டையும் பெற்றது. இவரின் ஆசையை நிகழ்ச்சி மூலம் அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், அவரை நேரில் வரவைத்து அவருக்கு சர்ப்ரைஸ் தந்தார்.

அவருடன் உரையாடி மகிழ்வித்த சிவகார்த்திகேயன், இவர் என் சகோதரி பார்த்து மார்க் போடுங்கள் என நிகழ்ச்சியின் நீதிபதிகளிடம் வேண்டிய காட்சிகள் அனைவரையும் உருக வைத்தது.
- படத்தின் கதை, மதுரை மாவட்ட இளைஞர்களை மையப்படுத்தி நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் அமைந்துள்ளது.
- ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
கிராமத்து பின்னணியில் கதைகளை உருவாக்கி சினிமா எடுத்து புகழ் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கும் அடுத்த புதிய படத்தின் மூலம் தனது மகன் விஜய் முத்தையாவை திரை உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். கிராமத்து பின்னணியில் படமாக்கப்படும் இதன் படப்படிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
'குட்டிப்புலி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் புதிய இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. கொம்பன், மருது, கொடி வீரன், புலிக்குத்தி பாண்டி, விருமன் உள்ளிட்ட பல திரைப்படங்களை இவர் இயக்கி உள்ளார். கிராமத்து பின்னணி கதையில் சினிமா படம் எடுத்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் முத்தையாவின் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதில் தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார். இதற்கான பட பூஜை விழா நடந்து உள்ளது. இந்த படத்தின் கதை, மதுரை மாவட்ட இளைஞர்களை மையப்படுத்தி நடக்கும் சம்பவங்கள் அடிப்படையில் அமைந்துள்ளது. தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். பல புதுமுக நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. படத்தில் மிக முக்கிய சண்டைக்காட்சியை ஒருவாரம் படமாக்க உள்ளனர். இதற்காக பெரிய பொருட்செலவில் செட் உருவாக்கி உள்ளனர்.
இந்தப் படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இப்படத்திற்கு எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
- மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது.
- காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை தேவை.
நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளன.
இந்நிலையில், இயக்குனர் பேரரசு இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்!
அவர்களின் பேச்சில் விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது!
சமீபத்தில் ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட நடிகைகளின் பெயரைச் சொல்லி அயிட்டம் என்று சொன்னது,
ஏ.வி.ராஜூ என்பவர் இப்பொழுது திரிஷா அவர்களின் பெயரை குறிப்பிட்டு கூவத்தூர் கூத்தில் சம்பந்தப்படுத்தியது இதெல்லாம் அருவருக்க செயலாகும்!
ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசி அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது.
இந்த மாதிரியான அநாகரீக செயலுக்கு பாதிக்கபட்டவர்கள் புகார் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லாமல், காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்படிப்பட்ட அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்தவர்.
- 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ப்ரீத் சிங். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார்.
தொடர்ந்து, சூர்யாவுடன் என்ஜிகே, சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்தார்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை இன்று கரம் பிடித்தார்.
கடந்த 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்களுக்கிடையேயான உறவை அறிவித்தனர்.
இதைதொடர்ந்து, திருமண தேதி இன்று குறிப்பிட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது.

கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலலந்துக் கொண்டனர்.
திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
- இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 19ம் தேதி வெளியானது. டி50 என அறியப்பட்ட இப்படத்திற்கு ராயன் என பெயரிடப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு அண்மையில் துவங்கியது. அது தொடர்பான போஸ்டரை படக்குழு அப்போது வெளியிட்டிருந்தது. அதில் தலையில் கேப் அணிந்து தனுஷ் இருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் ராயன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, தமிழ், தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழியில் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளது.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் இந்த ஆண்டே வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், 'ராயன்' படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இன்று மாலை வெளியிட்டது.
- 'ரோமியோ' படத்தின் முதல் சிங்கிள் செல்லக்கிளி பாடல் வெளியானது.
- இந்த படத்தை வருகிற கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ரோமியோ' படத்தின் முதல் சிங்கிள் 'செல்லக்கிளி' பாடல் வெளியானது.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'ரோமியோ'. இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் மிருணாளினி ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
குட் டெவில் புரொடக்ஷன் சார்பில் விஜய் ஆண்டனி வழங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவு பெற்றுவிட்டது. இந்த படத்தை வருகிற கோடையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில், ரோமியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'செல்ல கிளி' என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
என் உயிர் செல்லக்கிளி ❤️https://t.co/KSGgSaafEw#ROMEO@vijayantonyfilm @RedGiantMovies_ @thinkmusicindia @mirnaliniravi @actorvinayak_v @prorekha @gobeatroute pic.twitter.com/llFdoyBo68
— vijayantony (@vijayantony) February 21, 2024
- எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.
- சங்கம், சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும்.
நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது. அதற்கு அவர் மன்னிப்பு கேட்டபோதிலும் பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்து உள்ளன.
இந்தநிலையில் இன்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் எம்.நாசர் விடுத்து உள்ள கண்டன அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தற்போது பொதுவலைதளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ் குறித்து கேட்பதற்கு கூசுகின்ற ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்தரமான, வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும் பொய் கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
திரைத்துறையை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர்.
எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

திரையிலும் பொதுவெளியிலும் இயங்கி வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் மீதும் தனது கடின உழைப்பாலும் திறமையாலும் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா மீதும் இப்படி அபாண்டமான அவதூறை அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் சுயலாபத்துக்காக பரப்புவது வேதனை அளிக்கிறது.
கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும் கேட்போரை கீழ்த்தரமானவராய் கருதியும் இத்தகைய செயல்கள் நடந்தேறுவது, இனியும் நடக்க கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும்.
சட்டரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும் பண்பு மென்மை காரணமாய் பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும்.
தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

- உலகத் தரம் வாய்ந்த 'அத்னா ஆர்ட்ஸ்' ஸ்டுடியோவில் டப்பிங் பணி.
- படத்தின் இறுதி தயாரிப்பைப் பார்த்த சூர்யா பாராட்டு.
தென்னிந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் சூர்யா தற்போது 'கங்குவா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா, இயக்குகிறார்.
இதில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் காட்சிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கி உள்ளன.

உலகத் தரம் வாய்ந்த 'அத்னா ஆர்ட்ஸ்' ஸ்டுடியோவில் இதற்கான 'டப்பிங்' பணிகள் நடந்து வருகின்றன. இதில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு 'டப்பிங்' பணியை தொடங்கினார்.
மேலும், சமூகவலைதளத்தில் 'கங்குவா' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ''டப்பிங்' பணியின்போது படத்தின் இறுதி தயாரிப்பைப் பார்த்த சூர்யா திருப்தி அடைந்து இயக்குநர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரை பாராட்டினார்.

'கங்குவா' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகின்றன. படம் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அதேநேரம், 'கங்குவா' படம் இந்த ஆண்டின் (2024) முதல் பாதியில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- மக்கள் பணியில் மக்களுக்காக நல்ல திட்டங்களை எப்படி வகுக்க முடியும்.
- பூமியில் உங்களை போன்ற மனித தன்மையற்ற நபர்களும் இருக்கிறார்கள்.
கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நடிகர் விஷால் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த பெருத்த ஒரு முட்டாள் நம் திரையுலகைச் சேர்ந்த சக கலைஞரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன்.
அந்த பெரும் முட்டாள் ஒரு விளம்பரத்திற்காக இதைச் செய்து இருக்கிறார். என்பதற்க்காக நானும் அவருடைய பெயரை குறிப்பிட்டு அவரை விளம்பரபடுத்த விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் சக கலைஞர்களை மதிக்கும் நல்ல பண்புள்ளவர்கள்.
மேலும், உங்களின் இதுபோன்ற மனசாட்சியற்று பேசிய சொற்களால் உங்கள் இல்லத்தில் உள்ள பெண்களின் மனநிலையை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். இந்த பூமியில் உங்களை போன்ற மனித தன்மையற்ற நபர்களும் இருக்கிறார்கள் என்பதை என்ணி வேதனை அடைகிறேன்.
இப்படி கீழ் தனம் உள்ள உங்களால் அரசியலில் மக்கள் பணியில் மக்களுக்காக நல்ல திட்டங்களை எப்படி வகுக்க முடியும் என்பதே கேள்விக்குறிதான். இந்த பதிவு நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இல்லை, சக கலைஞனாகவும், பெண்களை இழிவுபடுத்தி பேசிய உங்களை சக மனிதனாகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்குறிப்பு :- உங்களின் அறிவற்ற செயலினை புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு ஒரு வேலை புரியவில்லை என்றால் உங்களை விட அதிகமாக படித்த அருகில் உள்ள இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






