அரசியல் கதை களத்தில் மீண்டும் "உறியடி" புகழ் விஜயகுமார்

படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' தயாரித்து வருகிறது.படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து உள்ளன.
அரசியல் கதை களத்தில் மீண்டும் "உறியடி" புகழ் விஜயகுமார்
Published on

'உறியடி', 'ஃபைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

'சேத்துமான்' புகழ் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜயகுமாருடன் பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

படத்தை 'ரீல் குட் பிலிம்ஸ்' தயாரித்து வருகிறது. படப்பிடிப்புகள் முழுவதும் முடிவடைந்து உள்ளன. 

இந்தநிலையில் இப்புதிய படத்திற்கு'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தலைப்பிற்கு ஏற்றார் போல் படம் முழுவதும் அரசியலை பின்னணியாகக் கொண்ட கதைக்களமாக அமைக்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஜயகுமாருக்கு இளம் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ளனர். துணிச்சலாக ஆரம்பத்திலேயே அரசியல் கதையில் அவர் நடித்துள்ளது ரசிகர்களை வியக்க வைத்தது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 'எலெக்ஷன்' என பெயர் சூட்டப்பட்டு இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com