என் மலர்
சினிமா செய்திகள்
- They Call Him OG திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
- பிரியங்கா மோகனின் சில கவர்ச்சிகர புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.
பவன் கல்யாண் நடிப்பில் They Call Him OG திரைப்படம் அண்மையில் வெளியானது. இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
வழக்கமாக குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா மோகன் இப்படத்தில் முத்தக்காட்சிகளிலும் படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இதனிடையே பிரியங்கா மோகனின் சில கவர்ச்சிகர புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், இணையத்தில் பரவிய கவர்ச்சி புகைப்படங்கள் AI ஆல் உருவாக்கப்பட்டவை என்று பிரியங்கா மோகன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "என்னை தவறாக சித்தரிக்கும் வகையில் சில Al புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. பொய்யான காட்சிகளை பகிர்வதை தயவு செய்து நிறுத்துங்கள். AI-ஐ நல்ல படைப்பாற்றலை உருவாக்க பயன்படுத்துங்கள். நாம் எதை உருவாக்குகிறோம், எதை பகிர்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை.
- நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சிறை. டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், SS லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.
நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சிறை திரைப்படம் டிசம்பர் 25 முதல் உலகமெங்கும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
- இட்லி கடை படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். அண்மையில் வெளியான 'இட்லி கடை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், 'இட்லி கடை' படத்தின் 'என்ன சுகம்' வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
- 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
- 'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.
'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருவதால் இனி வரும் நாட்களில் மேலும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், காந்தாரா சாப்டர் 1 படத்தை பாராட்டி பேசிய இயக்குனர் அட்லி, "காந்தாரா சாப்டர் 1 படம் வெளியான அன்று நான் ஆம்ஸ்டர்டமில் இருந்தேன். அப்போது 2.5 மணிநேரம் பயணம் செய்து தியேட்டரில் படம் பார்த்தேன். உடனடியாக ரிஷப் ஷெட்டிக்கு போன் செய்து பாராட்டுகளை தெரிவித்தேன். ஒரு இயக்குனராக இந்த மாதிரி படத்தை உருவாக்குவதே மிக கடினம். அனால் ஒரு நடிகராகவும் ஹீரோவாகவும் அந்த ரிதத்தை அவர் கொண்டு வந்துள்ளார். இந்த படத்திற்க்காக ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருது கிடைக்கவேண்டும்" என்று தெரிவித்தார்.
- இந்தியாவின் முதல் மனநல தூதராக தீபிகா படுகோன் நியமிக்கப்பட்டார்.
- அனைவரும் ஒன்றிணைந்தால் மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்றார்.
புதுடெல்லி:
உலக மனநல தினத்தையொட்டி, நாட்டின் மனநல ஆதரவு அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நடிகை தீபிகா படுகோனை இந்தியாவின் முதல் மனநல தூதராக மத்திய சுகாதார அமைச்சகம் நியமித்துள்ளது.
மனநலம் சார்ந்த உரையாடல்களை முன்னெடுத்துச் செல்வதில் தீபிகா படுகோன் ஆற்றிய தீவிர பங்களிப்பின் காரணமாகவே அவர் இந்தப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா கூறுகையில், மனநல தூதராக தீபிகா நியமனம் செய்யப்பட்டிருப்பது, நமது நாட்டில் மனநலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். பொது சுகாதாரத்தில் மன ஆரோக்கியத்தின் பங்களிப்பை முன்னிலைப்படுத்த உதவிசெய்யும் என தெரிவித்தார்.
இதுகுறித்து தீபிகா படுகோன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உலக மனநல தினத்தன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் முதல் மனநல தூதராக நியமிக்கப்பட்டதில் மிகவும் பெருமை அடைகிறேன். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பொது சுகாதாரத்தின் முக்கிய பகுதியாக மன ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்துவதற்கு அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்பதை தெரிந்து கொண்டேன். சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்கீழ் பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- கருக்கலைப்பு, குழந்தையின்மை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவராமன்.
- நீதிபதியாக வரும் சோனியா அகர்வால், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார் சோனியா அகர்வால். பல வழக்குகளை விசாரித்து வரும் சோனியா அகர்வால், இறந்த ஒருவரின் அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தம் கொண்டாடி ஒரு பெண் வருகிறார். அந்த பெண் மீது சோனியா அகர்வாலுக்கு சந்தேகம் எழுகிறது. இதை விசாரிக்க போலீஸ் அதிகாரியான விக்ராந்திடம் சோனியா அகர்வால் கொடுக்கிறார்.
அந்த பெண் யார் என்பதை தேடி செல்கிறார் விக்ராந்த். இந்த தேடுதலில் அந்த பெண் பொய் சொல்லி சொத்தை அபகரிக்க உருவாக்கப்பட்ட பெண் என்பதை தெரிந்துக் கொள்கிறார். இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்புக்கு சொந்தமான பெண் யார் என்பதை தேடி செல்கிறார்.
இறுதியில் சொத்துக்கு சொந்தமான பெண்ணை விக்ராந்த் கண்டுபிடித்தாரா? யார் அந்த பெண்? சொத்தை அபகரிக்க நினைக்கும் கும்பல் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கும் விக்ராந்த், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அந்த பெண் யார் என்பதை தேடி செல்லும் காட்சியிலும், ஆக்ஷன் காட்சியிலும் கவனம் பெற்று இருக்கிறார்.
நீதிபதியாக வரும் சோனியா அகர்வால், அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவரது உடல் மொழி, வசனம் பேசும் ஸ்டைல் ரசிக்க வைக்கிறது. முழுகதையும் தோளில் தாங்கி பிடித்து இருக்கிறார் அலக்கியா. இவரை சுற்றியே கதை நகர்கிறது. இவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து ஓரளவிற்கு நடித்து இருக்கிறார். மற்றவர்களின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
கருக்கலைப்பு, குழந்தையின்மை ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிவராமன். திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை. சொல்லவந்த விஷயத்தை தெளிவாக சொல்லாதது வருத்தம். ஆரம்பத்தில் வேகம் எடுத்த திரைக்கதை, போக போக வேகம் குறைந்து செல்கிறது. தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு பலவீனம்.
பிரசன்னாவின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. சௌரப் அகர்வாலின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.
- சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்று செய்தி வெளியானது.
- என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
42 வயதாகிவிட்ட நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா யாரை திருமணம் செய்வார்? எப்போது திருமணம் செய்வார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் பல ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
அடிக்கடி அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரபரப்பாக வருகிறது. ஆனால் கடைசியில் அது வதந்தியாகவே நின்று விடுகிறது. தற்போது மீண்டும் அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று காலை முதல் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்றும் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் குறித்து திரிஷாவின் தாயாரை தொடர்பு கொண்டபோது, சிரித்தபடி இது அடிக்கடி வரும் தகவல்கள்தான். இதில் உண்மை இல்லை. திரிஷாவுக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான் என்றார்.
இந்த நிலையில் திரிஷா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் "என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் திரிஷா இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை எனத் தெரிகிறது.
- இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- பைசன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாவதற்கு இன்றும் 7 நாட்களே உள்ள நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் டிரெய்லர் வெளியாகி தேதியை மாற்றியது படக்குழு. அதன்படி வருகிற 13- ந் தேதி டிரெய்லர் வெளியாகும் என புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் உள்ளனர்.
- சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசல் படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா நடித்துள்ளனர்.
- இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.
பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் அதுல்யா உடன் நடிக்கும் `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், டீசல் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- கடனாளியாக இருப்பவர்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் ஜனா.
- வாங்கிய கடனுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.
நாயகன் ரஞ்சித் செய்து வந்த ஜவுளி வியாபாரம் நஷ்டம் ஏற்பட்டதால் கஷ்டப்பட்டு வருகிறார். இவருடைய மகனின் மருத்துவ ஆபரேசனுக்காக ரூ.80 லட்சம் வட்டிக்கு கடன் வாங்குகிறார். கடனை திருப்பி செலுத்த முடியாததால் வட்டி குட்டி போட்டு கோடி ரூபாய்க்கு மேல் கட்ட நேர்கிறது.
கடனும், கடன்காரனும் கழுத்தை நெரிக்க என்ன செய்வதென்று தெரியாமல் சிக்கி தவிக்கிறார் ரஞ்சித். கடன் கொடுத்தவர்களின் அட்டூழியங்களும், அக்கிரமங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து வேறு வழியின்றி ரஞ்சித் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்கிறார். இதே சமயம் ஊரையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் சைக்கோ கொலைகாரன் ரஞ்சித் வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் பதுங்கி இருக்கிறான்.
இறுதியில் தற்கொலைக்கு முயன்ற ரஞ்சித் குடும்பத்தின் நிலை என்ன? வீட்டுக்குள் பதுங்கி இருக்கும் சைக்கோ கொலையாளி யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் ரஞ்சித் சிறப்பாக நடித்து இருக்கிறார். கடன்காரர்களுக்கிடையே சிக்கி கொண்டு மனைவியும், மகளும் தன் கண் எதிரிலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை கண்டு துடிக்கும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும் காட்சிகளில் சமூகத்தில் நிலவும் பல குடும்ப தலைவர்களின் பிரதிபலிப்பாக தெரிந்து இருக்கிறார்.
மனைவியாக வரும் மேகாலி மீனாட்சி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். கணவரது சோகத்திற்கு பக்க பலமாகவும் இருக்கும் அவரது நடிப்பு நேர்த்தியாக அமைந்துள்ளது. மற்ற கதாபாத்திரத்தில் நடித்து இருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரங்களாக வரும் மவுனிகா, நிலேஷ் நடிப்பு படத்துக்கு கூடுதல் பலம்.
கடனாளியாக இருப்பவர்களை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் ஜனா. கடனில் சிக்கி கொண்டு வலியாலும், அவமானத்தாலும் தவித்து வரும் பல குடும்பங்களின் பரிதாப நிலையை காட்சிபடுத்தியதற்கு பாராட்டுகள். வாங்கிய கடனுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதை சொல்ல முயற்சி செய்து இருக்கிறார். திரைக்கதை வேகம் இல்லாமல் இருப்பது பலவீனம். அதுபோல் காட்சிகளின் அழுத்தம் குறைவாக அமைந்துள்ளது.
சுனில் வாசனின் இசையும், சூர்யகாந்தியின் ஒளிப்பதிவும் கதையோடு சேர்ந்து பயணிக்கிறது.
- இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
- பைசன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.
படம் வெளியாவதற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் இன்று 6 மணிக்கு படத்தின் டிரெய்லர் வெளியாகும் என இயக்குநர் மாரிசெல்வராஜ் போஸ்டரை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
- ‘காந்தாரா சாப்டர்1’ கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
- இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை குவித்தது.
இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' கடந்த 2-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியோ, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட 30 நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்பெற்றுள்ளது.

இந்த நிலையில், 'காந்தாரா சாப்டர்1' படம் உலக அளவில் இதுவரை ரூ.509.25 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் பாக்ஸ் ஆபிசில் வசூல் குவித்து வருவதால் இனி வரும் நாட்களில் மேலும் வசூலில் சாதனை படைக்கும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற 'காந்தாரா சாப்டர்1' படம் வருகிற 30-ந்தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.






