'பைசன்' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி மாற்றம்- புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு

இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.பைசன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது
'பைசன்' படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி மாற்றம்- புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இது கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று கதை ஆகும். இந்த படத்தை பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

படம் வெளியாவதற்கு இன்றும் 7 நாட்களே உள்ள நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் டிரெய்லர் வெளியாகி தேதியை மாற்றியது படக்குழு. அதன்படி வருகிற 13- ந் தேதி டிரெய்லர் வெளியாகும் என புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் அமீர், துருவ் விக்ரம் மற்றும் லால் ஆகியோர் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com