என் மலர்
சினிமா செய்திகள்
- இந்த படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
- படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவைப் பெற்றுப் பல விருதுகளையும் வென்றுள்ளது. இந்த படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது.
'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சூரி பகிர்ந்துள்ள அந்த போஸ்டரில் படம் வெளியாக இன்னும் 4 நாட்கள் தான் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- 'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
- வேட்டையன் படம் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வ அறிவித்துள்ளது.
'ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் , துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வேட்டையன் திரைப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் திரைப்படம் அக்.10-ந்தேதி ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை வேட்டையன் படம் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அக்.11-ந்தேதி ஆயுத பூஜை, விஜயதசமி, வார விடுமுறை என தொடர்ந்து விடுமுறை வருவதால் வேட்டையன் படம் அக்.10-ந்தேதி வெளியிடப்பட உள்ளது.
வேட்டையன் திரைப்படம் வெளியாகும் அக்.10-ந்தேதி தான் சூர்யாவின் 'கங்குவா' திரைப்படமும் ரிலீசாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- லோகேஷ் கனகராஜின் இயக்குனர் பயணம் மாநகரம் படம் மூலம் தொடங்கியது.
- தற்போது ரஜினிகாந்த்தை வைத்து `கூலி' படத்தை இயக்கி வருகிறார்.
லோகேஷ் கனகராஜின் இயக்குனர் பயணம் மாநகரம் படம் மூலம் தொடங்கியது. மிகச் சிறப்பான கதைக்களத்துடன் மாநகரம் படத்தை கொடுத்து அனைத்து தரப்பினரின் புருவத்தையும் உயர்த்த செய்திருந்தார்.

இவர் திரையுலகில் வந்த சில வருடங்களிலேயே கமல், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களை வைத்து மாஸ்டர், விக்ரம், லியோ, கைதி-1 படங்களை இயக்கினார். தற்போது நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து `கூலி' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டில் நடிகர் கார்த்தியை வைத்து `கைதி' எனும் படத்தை லோகேஷ் இயக்கிருந்தார். இந்த படம் வெளிவந்த போது கைதி-2 ம் பாகம் உருவாகும் என அறிவித்தனர்.
ஆனால், லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து உச்ச நடிகர்கள் படம் இயக்குவதில் பிசியாக இருந்ததால் கைதி-2 படம் உருவாகுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் நடிகர் அமீர் கானை வைத்து `பான் இந்தியா' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் லோகேஷ் கனகராஜ் கூலி படம் முடிவடைந்த பிறகு கைதி 2-ம் பாகத்திதை தான் இயக்குவார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மோகன்லால் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
- 3டி-யில் உருவாகும் இந்த படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால். இவர் தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.
குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்த படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்த படம் என்கிறார்கள். இந்நிலையில், இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காப்புரிமை பிரச்சினை இருப்பதன் காரணமாக படத்தினை வெளியிட தடை இருந்தது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி போனது.
இந்தநிலையில், நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் இப்படம் வருகிற அக்டோபர் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.
- திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிவடைந்துள்ளது.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைப்பெற்றது. இதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் வென்றார்.
சிறந்த நடனத்திற்கான விருதையும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் மேகம் கருக்காதா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி, சதீஷ் தேசிய விருதை வென்றனர்.
திரைப்படம் வெளியாகி இன்றுடன் இரண்டு வருடங்கள் முடிவடைந்த நிலையில் சன் பிக்சர்ஸ் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை நித்யா மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தில் எடுக்கப்பட்ட பிடிஎஸ் காட்சிகளை பகிர்ந்து அப்படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்திற்காக எனது முதல் தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. பார்ப்பதற்கு எளிமையான தெரியும் நடிப்பிதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு எளிமையானதல்ல என புரிந்துக்கொண்ட தேசிய விருது தேர்வுக்குழுவிற்கு நன்றி.
சிறந்த நடிப்பு என்பது எடை குறைப்போ , அதிகரிப்போ, செயற்கையான உடலை மாற்றிக்கொள்வதிலோ கிடையாது. அது நடிப்பின் ஒரு பகுதிதானே தவிர அதுவே நடிப்பு கிடையாது. இதை நிரூபிக்கவே முயற்சித்து வருகிறேன்.
இந்த விருது பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், தனுஷ், என எங்கள் 4 பேருக்கான விருது. ஏனென்றால் ஒரு படத்தில் நடிகருக்கு இணையாக நடிகைக்கும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நான் இதுவரை நடித்ததில்லை. உண்மையை விட வதந்திகள் அதிகம் பேசப்படும் ஒரு இடத்தில் முன்னேறுவது என்பது மிகவும் கடினம். என பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கொட்டுக்காளி படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது.
- படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட கூழாங்கல் படத்தை இயக்கிய அறிமுக இயக்குநர் பிஎஸ் வினோத்ராஜ் தனது அடுத்த படைப்பாக கொட்டுக்காளி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மக்களின் ஆதரவை பெற்று பல விருதுகளையும் வென்றுள்ளது. இதன் காரணமாக இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
படத்தில் இசையமைப்பாளர் இல்லாதது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
இதுக்குறித்து பெர்லின் டூ ராஜாக்கூர் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை சூரி அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ராஜாக்கூர் மக்களுடன் ஒரு திருவிழாப்போல் கொண்டாடி மக்களுடன் கொட்டுக்காளி டிரைலரை ஒளிப்பரப்பினர்.
உலகின் தலைச்சிறந்த பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை கொண்ட #கொட்டுக்காளி க்கு எங்க ராஜாக்கூர் மக்களின் மரியாதை!
மதுரை மண்ணின் கதையில் அதன் அசல் மனிதர்களையே நடிக்க வைத்து, உலக நாடுகளின் திரைப்பட விழாக்களில் அந்த ஊர் மக்களை பிரமிக்க வைத்த கொட்டுக்காளி, நம் சொந்த மண்ணின் மக்களின் ஆசி கோரி வந்த தருணம்!
எந்த ஒரு விழாவிற்கும் விருதுக்கும் இணையான தருணம் இது!
இறைவனுக்கும் ராஜாக்கூர் மக்களுக்கும் நன்றி! என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமான 'டிமான்ட்டி காலனி-II' வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.
- இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமான 'டிமான்ட்டி காலனி-II' வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.
இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,பிபின்,ஹுசைனி, உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதத்துடன் முழு படப்பிடிப்பும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகியுள்ளது.
அதனையொட்டி இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று(18-08-24) சென்னையில் நடைபெற்றது. திரைப்பட குழுவினர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நடிகர் இளவரசு
பின்னர் நடிகர் இளவரசு பேசும் பொழுது,"தயாரிப்பாளர்கள் எனக்கு பேசியதைவிட அதிக சம்பளம் கொடுத்தனர், நான் திரும்ப கொடுக்கிறேன் என்றவுடன் நாகரிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர். " என்றார்.
நடிகர் வைபவ்
நடிகர் வைபவ் பேசும்பொழுது," தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் மற்றும் மனோஜ் பெனோ இருவருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்து வாழ்த்திய சகோதரர் அருண் விஜய், இமான், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். "
தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் பேசும்போது,"எங்களது முதல் திரைப்படமான 'டிமான்ட்டி காலனி-II இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் எங்களது அடுத்த திரைப்படம் ஆன 'ரெட்ட தல' திரைப்படத்தின் ஹீரோ அருண் விஜய் இருவருக்கும் மிக்க நன்றி.
சிறப்பான நடிகர்களை ஒன்றிணைத்து, தரமான நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தை எடுத்துள்ளோம். அது உங்களை மகிழ்விக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என தன் பேச்சை நிறைவு செய்தார்.
வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ
வியூகத் தலைமையாளராக இருக்கும் மனோஜ் பெனோ பேசும்போது, "பாபி பாலச்சந்திரனை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். பாபி அவர்கள் இதுவரை ஈடுபட்டிருக்கும் அனைத்து தொழில்களும் வெற்றி அடைந்துள்ளன. அதேபோல இதுவும் வெற்றிடைய வேண்டும் என அவரது தந்தை விரும்பினார்.
"எங்களது அடுத்த படமான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் வெற்றியடைய உங்களது அனைவரது ஆதரவையும் வேண்டுகிறேன்", என முடித்தார்.
இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
- இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன் நடிக்கின்றனர்.
ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கூலி என்று பெயரிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.
இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன் நடிக்கின்றனர். மற்ற நடிகர்களை குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஒரு பான் இந்தியன் திரைப்படத்தை இயக்கப்போவதாகவும் அதில் நடிகர் அமீர்கான் கதாநாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போகும் படங்களுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கடைசியாக ரணம் அறம் தவறேல் திரைப்படத்தில் வைபவ் நடித்து இருந்தார்.
- டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
கப்பல் படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017 ஆம் ஆண்டு மேயாத மான் படத்தில் நடித்தனர்.
கடைசியாக ரணம் அறம் தவறேல் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து வைபவ் அடுத்ததாக சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ளனர்.அதுல்யா ரவி இப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனந்த் ராஜ், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, போன்ற முக்கிய நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது.
டீசர் காட்சிகள் மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது. ஒரு கேங் ஒரு திருட்டை செய்கிறார்கள் இதை சுற்றியே டீசர் காட்சிகள் அமைந்துள்ளது. விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- படத்தின் வசூல் மற்றும் முன்பதிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது,
- திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 3.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015 ஆம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 ஆம் பாகம் தற்பொழுது உருவாகி 15 ஆம் தேதி வெளியாகியது.
இதில் நடிகர் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் ரிலீஸான முதல் நாளில் 3.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அருள்நிதி நடித்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் பெற்று வருகிறது. இன்று சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்களில் டிமான்ட்டி காலனி 2 திரைப்படம், ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
படத்தின் வசூல் மற்றும் புக்கிங்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் படத்தின் அடுத்த பாகத்தை குறித்து இயக்குனர் அஜய் சமீபத்தில் நடந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
படத்தின் தொடர்ச்சியாக அடுத்து இரண்டு பாகங்கள் எடுக்கப்போவதாக கூறியுள்ளார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த வேறு ஒரு படம் இயக்கிவிட்டு மீண்டும் டிமான்ட்டி காலனி 3 படத்தை இயக்கப்போவதாகவும். அப்பாகம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார்.
- திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். படத்தின் முதல் பாடலான கரம் கரம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் தெலுங்கு டிரைலர் இரண்டு நாட்கள் முன்பு வெளியானது. படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் படக்குழு, நடிகர்களான நானி, பிரியங்கா மோகன், எஸ்.ஜே சூர்யா கலந்துக் கொண்டனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தமிழ்நாடு விநியோகிக்கும் உரிமையை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியான ஸ்டார், அந்தகன் மற்றும் பல ஹிட்டான திரைப்படங்களுக்கு விநியோகம் செய்த நிறுவனமாகும்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. தற்பொழுது படத்தின் டிரைலர் யூடியூபில் 20 மணி நேரத்தில் 24 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் இந்திய சினிமா டிரைலரில் வேகமான 10 லட்ச லைக்குகளை பெற்ற திரைப்படம் என சாதனை படைத்துள்ளது.
ரசிகர்கள் படத்தின் டிரைலரை கொண்டாடி வருகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






