மோகன்லால் இயக்கும் `பரோஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மோகன்லால் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.3டி-யில் உருவாகும் இந்த படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.
மோகன்லால் இயக்கும் `பரோஸ்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

பிரபல மலையாள நடிகர் மோகன்லால். இவர் தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும். இப்படத்திற்கு 'பரோஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அந்தோணி பெரும்பாவூர் தயாரிக்கிறார்.

குழந்தைகளைக் கவரும் விதமாக உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லிடியன் நாதஸ்வரம் இசை அமைக்கிறார். 3டி-யில் உருவாகும் இந்த படம், பான் இந்தியா முறையில் வெளியாக இருக்கிறது.

வாஸ்கோட காமாவின் மதிப்புமிக்க பொக்கிஷங்களைப் பாதுகாத்த, பாதுகாவலரான பரோஸ் என்பவரின் வாழ்க்கை கதைதான் இந்த படம் என்கிறார்கள். இந்நிலையில், இப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காப்புரிமை பிரச்சினை இருப்பதன் காரணமாக படத்தினை வெளியிட தடை இருந்தது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி போனது.

இந்தநிலையில், நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் தளத்தில் இப்படம் வருகிற அக்டோபர் 3-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com