என் மலர்
சினிமா செய்திகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்தை ஆபாச நடிகையுடன் ஒப்பிட்டு பேசியதால மிகவும் கோபமடைந்திருக்கிறார்.
நடிகை யாஷிகா ஆனந்த் நோட்டா, ஜாம்பி படங்களில் நடித்தவர். பிக்பாஸ் மூலம் பிரபலமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருப்பவர். அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அதில் சிலர் இவர் ஆபாச நடிகை மியா கலிபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது பற்றி ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் கடும் கோபத்தில் பேசியுள்ளார்.

’என்னை அப்படி விமர்சிப்பவர்களை ஆரம்பத்தில் அதிகம் திட்டினேன். என்னை அப்படி சம்மந்தமே இல்லாத ஒருவருடன் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அதிகம் கஷ்டப்படுகிறேன். இப்படி சொன்னால் கஷ்டமாகத்தான் இருக்கும்” என யாஷிகா கூறியுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் பிகில் படத்தின் ரிலீஸ் பற்றிய வதந்திகளை நம்பாதீர்கள் என்று தயாரிப்பாளர் அர்ச்சனா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் 19ம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் அர்ச்சனா, பிகில் படம் சென்சாருக்கு சென்ற பிறகு ரிலீஸ் தேதியை நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அதுவரை இப்படம் குறித்து வெளியாகும் ரிலீஸ் தேதி மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்றார். மேலும் இன்று 6 மணிக்கு இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட இருக்கிறோம் என்றும் கூறியிருக்கிறார்.

இப்படத்தின் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ரஜினி பட நடிகை நடிக்க ஒப்பந்தம் ஆக உள்ளார்.
அட்லீ இயக்கி வரும் ‘பிகில்’ படத்தில் தன் பணிகளை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்துக்காக தயாராகி வருகிறார் விஜய். இதன் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் முதல் வாரம் படப்பிடிப்பு என்பதால், நடிகர்கள் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க இந்தி நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், கால்ஷீட் பிரச்சினையால் யார் நாயகி என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேசியுள்ளனர். அவருக்கு கால்ஷீட் பிரச்சினை இருந்தாலும், அதை சரிசெய்து நடிக்கலாம் என்று விஜய் சேதுபதி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

மேலும் இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார். இவர் பேட்ட படத்தில் ரஜினியுடன் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். படப்பிடிப்பு தேதிகள் முடிவானவுடன் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார்.
7 ஆண்டுகளுக்கு முன்னர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி தமிழில் சூப்பர் ஹிட்டான படம் ஒன்று, தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா, அமலா பால், சமீரா ரெட்டி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான படம் வேட்டை. ரிலீசாகி சுமார் 7 ஆண்டுகள் ஆகிய நிலையில், இப்படம் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆக உள்ளது. பாஹி படத்தின் 3-ம் பாகமாக இது உருவாகிறது. இப்படத்தை அஹ்மத் இயக்க உள்ளார்.

ஆர்யா கதாபாத்திரத்தில் டைகர் ஷெரிப்பும், மாதவன் கதாபாத்திரத்தில் ரிதேஷ் தேஸ்முக்கும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சாஹோ படத்தில் நடித்த ஷ்ரத்தா கபூர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். ஏற்கனவே வெளியான பாஹி 1 மற்றும் 2-ம் பாகம், வர்சம், ஷனம் ஆகிய தெலுங்கு படங்களின் ரீமேக்காகும். இந்நிலையில் வேட்டை படத்தின் ரீமேக்காக பாஹி 3-ம் பாகம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேர்ல்டு பேமஸ் லவ்வர் எனும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.
தமிழில் அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், சமீபத்தில் ’கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி’ என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இது கனா படத்தின் தெலுங்கு ரீமேக்காகும். தற்போது மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கு ’வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்தரின் தெரசா, ராசி கண்ணா, இசபெல் லிட் ஆகிய நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். கிராந்தி மாதவ் இயக்க உள்ள இப்படத்தை கே.எஸ்.ராமா ராவ் தயாரிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற செப்டம்பர் 20ந் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தின் கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து, மீண்டும் அஜித் - எச்.வினோத் கூட்டணி இணைந்து படம் எடுக்கவுள்ளனர். இதன் முதல்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
காவல்துறை அதிகாரியாக இந்த படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். விரைவில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதையை முழுமையாக முடித்து அஜித்திடம் கூறியுள்ளார் எச்.வினோத். கதை அருமையாக இருக்கிறது. எனது முந்தைய 2 படங்களுமே பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தக் கதையும் நன்றாக இருக்கிறது. ஆனால், கொஞ்சம் குடும்ப சென்டிமெண்ட் மற்றும் எமோஷனல் காட்சிகள் குறைவாகவுள்ளது. அதை மட்டும் இந்தக் கதையில் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள் என வினோத்துக்கு அஜித் பரிந்துரை செய்துள்ளார். தற்போது இந்த கதையில் அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார்கள்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தற்போது அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபின் இயக்கும் இப்படத்தில் மம்முட்டி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து விஜய் சேதுபதிக்கு பதில் விஜய் ஆண்டனி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்மூலம் விஜய் ஆண்டனி மலையாளத்தில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் துவங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதர் இயக்கத்தில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் நடிப்பில் உருவாகி இருக்கும் திட்டம் போட்டு திருடுற கூட்டம் படத்தின் முன்னோட்டம்.
2 மூவி ஃபப்ஸ் சார்பில் ரகுநாதன் மற்றும் அக்ராஸ் பிலிம்ஸ் சார்பில் பிரபு வெங்கடாசலம் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்‘. அறிமுக இயக்குனர் சுதர் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கயல் சந்திரன், சாத்னா டைட்டஸ், பார்த்திபன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்திரமௌலி சுப்ரமணியன், சாம்ஸ், டேனியல் அனி போப், பிரின்ஸ் நித்திக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஷ்வத் இசை அமைத்திருக்கிறார்.
படம் குறித்து இயக்குனர் கூறியதாவது: கிரிக்கெட் உலகக் கோப்பையை திருடுவதே ஒரு தனித்துவமான யோசனை தான், அதையும் தாண்டி திட்டம் போட்டு திருடுற கூட்டத்தில் நான் என்ன தனித்துவம் பார்கிறேன் என்றால், இதில் எல்லா காட்சிகளும் இதுவரை யாரும் பார்க்காத காட்சிகளாக இருக்கும்.

பொதுவாக மற்ற படங்களில் சென்டிமென்ட் காட்சியோ, காதல் காட்சியோ தான் பொதுவாக இருக்கும், நடிகர்கள் மட்டும் தான் ஒவ்வொரு படத்திற்கும் மாறிக் கொண்டிருப்பாரகள். ஆனால் இந்த படத்தில் காட்சிக்கு காட்சி புதுமை இருக்கும், ஒரு காட்சியையும் வேறு எந்த படத்திலும் எந்த வடிவிலுமே பார்த்திருக்காத வகையில் இருக்கும் என்றார்.
பிக்பாஸ் பிரபலம் ஒருவர் அடுத்ததாக விஜய் சேதுபதி, சிபிராஜ் போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார். இவர் தற்போது அட்டகத்தி தினேஷூடன் நடித்துள்ள 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்ட ரித்விகா, தனது அடுத்தடுத்த திரைப்பட வெளியீடுகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது: அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி உடன் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறேன். இதன் பின்னர் நடிகர் சிபிராஜ் உடனும் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். இதைத்தொடர்ந்து நடிகை அமலாபால் உடன் பெண்கள் நலன் சார்ந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்” என கூறினார்.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ’நெற்றிக்கண்’ படம் கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.
இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

'பிளைண்டு' படத்தின் கதை என்ன என்றால், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ஒரே நபராக இருக்கிறார். காவல்துறை இந்த வழக்குகளுக்கு சாட்சி இருக்கிறதா என்று தேடுகிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி சூ-ஹா என்பவர் சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் அவர் ஒரு விபத்தில் தன் கண்பார்வையை இழந்தவர். ஒரு கார் விபத்து வழக்கு பற்றிய முக்கியமான ஆதாரத்தை அவர் தருகிறார்.
சூ ஹா வின் மற்ற புலன்கள் அவருக்குக் கை கொடுக்கின்றன. திடீரென இன்னொரு சாட்சி, கி-சியாப் காவல்நிலையத்துக்கு வருகிறார். இவர் சம்பவத்தை நேரில் பார்த்தவர். இவர் சொல்வதும், சூ ஹா சொல்வது முற்றிலும் வெவ்வேறு விதமான சாட்சியாக இருக்கிறது. இதனால் வழக்கு விசாரணை திசை திரும்புகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வந்தது என்பதே கதை.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அடுத்ததாக அஜித் பட இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான முகவரி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் வி.சி.துரை. இதையடுத்து இவர் விக்ரம் நடித்த காதல் சடுகுடு, சிம்பு நடித்த தொட்டி ஜெயா, பரத் நடித்த நேபாளி, ஷியாம் நடித்த 6 கேண்டில்ஸ், அதுல்யா நடித்த ஏமாலி போன்ற படங்களை இயக்கினார்.

இவர் இயக்கியுள்ள இருட்டு படம் வருகிற அக்டோபர் 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் இயக்குனர் சுந்தர் சி ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் வி.சி.துரை அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்புவை வைத்து தொட்டி ஜெயா படத்தின் 2-ம் பாகம் எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் குழுவினருக்கு சூர்யா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்து ‘மகளிர் மட்டும்’, ’நாச்சியார்’, ’செக்கச்சிவந்த வானம்’ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ‘ராட்சசி’, ஆக்ஷன் நாயகியாக நடித்திருந்த ‘ஜாக்பாட்’ போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து, அவர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் நடித்து வருகிறார். ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த சூர்யா, படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து படக்குழுவினர் அவரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






