என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ’நெற்றிக்கண்’ படம் கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.
    ‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.

    இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. 

    விக்னேஷ் சிவன், நயன்தாரா

    'பிளைண்டு' படத்தின் கதை என்ன என்றால், இரண்டு வெவ்வேறு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர் ஒரே நபராக இருக்கிறார். காவல்துறை இந்த வழக்குகளுக்கு சாட்சி இருக்கிறதா என்று தேடுகிறது. தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி சூ-ஹா என்பவர் சாட்சி சொல்ல வருகிறார். ஆனால் அவர் ஒரு விபத்தில் தன் கண்பார்வையை இழந்தவர். ஒரு கார் விபத்து வழக்கு பற்றிய முக்கியமான ஆதாரத்தை அவர் தருகிறார். 

    சூ ஹா வின் மற்ற புலன்கள் அவருக்குக் கை கொடுக்கின்றன. திடீரென இன்னொரு சாட்சி, கி-சியாப் காவல்நிலையத்துக்கு வருகிறார். இவர் சம்பவத்தை நேரில் பார்த்தவர். இவர் சொல்வதும், சூ ஹா சொல்வது முற்றிலும் வெவ்வேறு விதமான சாட்சியாக இருக்கிறது. இதனால் வழக்கு விசாரணை திசை திரும்புகிறது. ஒரு வழக்கு, இரண்டு சாட்சிகள், இரண்டு விதமான வாக்குமூலங்கள். உண்மை எப்படி வெளியே வந்தது என்பதே கதை.
    நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி அடுத்ததாக அஜித் பட இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அஜித், ஜோதிகா நடிப்பில் வெளியான முகவரி படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குனர் வி.சி.துரை. இதையடுத்து இவர் விக்ரம் நடித்த காதல் சடுகுடு, சிம்பு நடித்த தொட்டி ஜெயா, பரத் நடித்த நேபாளி, ஷியாம் நடித்த 6 கேண்டில்ஸ், அதுல்யா நடித்த ஏமாலி போன்ற படங்களை இயக்கினார்.

    வி.சி.துரை

    இவர் இயக்கியுள்ள இருட்டு படம் வருகிற அக்டோபர் 11-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் இயக்குனர் சுந்தர் சி ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், இயக்குனர் வி.சி.துரை அடுத்ததாக இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்புவை வைத்து தொட்டி ஜெயா படத்தின் 2-ம் பாகம் எடுக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
    ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் பொன்மகள் வந்தாள் படத்தின் குழுவினருக்கு சூர்யா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
    சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ‘36 வயதினிலே’ படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்து ‘மகளிர் மட்டும்’, ’நாச்சியார்’, ’செக்கச்சிவந்த வானம்’ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ‘ராட்சசி’, ஆக்‌ஷன் நாயகியாக நடித்திருந்த ‘ஜாக்பாட்’ போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

    இதையடுத்து, அவர் சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் நடித்து வருகிறார். ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    படக்குழுவினருடன் சூர்யா, ஜோதிகா

    இந்நிலையில், படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்த சூர்யா, படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து படக்குழுவினர் அவரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    ஜூலி நடிப்பில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவி அனிதாவின் வாழ்க்கை திரைப்படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டவர் திருச்சியை சேர்ந்த மாணவி அனிதா. இவரது வாழ்க்கையை அனிதா எம்பிபிஎஸ் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் வி.ராஜகணபதி ஈடுபட்டார்.

    பிக்பாஸ் ஜூலி கதாநாயகியாகவும், அஜய்குமார் என்பவர் இயக்குனராகவும் அறிவிக்கப்பட்டு முதல் பார்வையும் வெளியானது. தற்போது இப்படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.

    "மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் வி.ராஜகணபதி மற்றும் எஸ்.பாலாஜி தயாரிக்கும் திரைப்படம் 'டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்'. சமூகத்தில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அவரது சோகக்கதையை இளைஞர்களுக்கான, சமூகத்திற்கான சப்ஜெக்டாக எடுக்க விரும்பி இந்த டைட்டிலை செப்டம்பர் 2017ல் தயாரிப்பாளர் சங்கங்களில் முறைப்படி பதிவு செய்து இன்று வரை தன்னுடைய பேனரில் வைத்துள்ளார் ராஜ கணபதி.

    டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ் திரைப்படம் கடந்த வருடம் 'எஸ்.அஜய் குமார்' எனும் இயக்குனர் இயக்குவதாக திட்டமிடப்பட்டது. தயாரிப்பாளரின் முதல் முக்கிய கண்டிஷன் என்னவென்றால் அனிதா குடும்பத்தினரின் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் அதற்கான எந்த ஒரு முயற்சியையும் இயக்குநர் எடுக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது.

    அனிதா எம்பிபிஎஸ்

    மேலும் அனிதா குடும்பத்திற்கும், தயாரிப்பாளருக்கும் காட்டப்பட வேண்டிய பவுண்டடன் (BOUNDED) ஸ்கிரிப்ட்டும் அவரால் கொடுக்க இயலவில்லை. இது சம்பந்தமாக ஒரு கட்டத்தில் தயாரிப்பாளருடனும், அனிதா சகோதரருடனும் இயக்குனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

    இப்படிப்பட்ட முக்கியமான காரணங்களினால் `தயாரிப்பாளர் இயக்குனரிடமிருந்து விலகி தானே அனிதா குடும்பத்தாரிடம் அனுமதி பெற்ற பிறகு படம் எடுக்க போவதாக கூறிவிட்டார். இதனால் தயாரிப்பாளர் அனிதா குடும்பத்தினருடன் பல முறை நேரிலும் போனிலும் தொடர்பு கொண்டு தானே இப்படம் எடுப்பதற்கான முயற்சிகளை இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

    எஸ். அஜய்குமாருக்கும், டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்பதை தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    ராஜ கணபதி கூறும்போது, ‘அஜய்குமார் என்னுடைய டைட்டிலிலேயே புதிய படம் எடுக்க ஆரம்பித்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. எனக்கு சொந்தமான இந்த 'டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்' எனும் தலைப்பை அவரோ அல்லது வேறு எவரும் பயன்படுத்த கூடாது. ஏனெனில் இந்த தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் எமது தயாரிப்பு நிறுவனமான 'மாங்காடு அம்மன் மூவிஸ்' சார்பில் முறைப்படி பதிவு செய்துள்ளோம்.

    எங்கள் நிறுவனமான மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் நாங்கள் எடுக்கும் "டாக்டர். அனிதா எம்.பி.பி.எஸ்" படத்தில் அனிதாவின் தந்தையாக நான் நடிக்கிறேன். அனிதாவின் அண்ணன் மணிரத்னம் ஆக பெரம்பூரை சேர்ந்த எஸ்.ராஜன் என்பவர் அறிமுகமாகிறார். இப்படம் அனைத்து தரப்பு மக்களுக்கும், அரசுக்கும் நல்ல செய்தியை கொண்டு சொல்லும் என்பதுடன் விருதுகள் பலவும் பெற்றுத்தரும் வகையிலும் இருக்கும் என உறுதியளிக்கிறோம்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இப்படத்தில் அனிதா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.
    முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா, ஐஸ்வர்யா பழனி, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆண்கள் ஜாக்கிரதை படத்தின் மூன்னோட்டம்.
    ஜெமினி சினிமாஸ் மற்றும் ஜெம்ஸ் பிக்சர்ஸ் பட நிறுவனங்கள் இனணந்து தயாரித்துள்ள படம் ‘ஆண்கள் ஜாக்கிரதை’. இந்த படத்தில் முருகானந்தம், ஜெமினி ராகவா, சங்கீதா, ரோஜா, ஐஸ்வர்யா பழனி, மஹிரா, ரேஷ்மி, மூர்த்தி, இளங்கோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

    ஒளிப்பதிவு - சிவகுமார், இசை - பாலகணேஷ், எடிட்டிங் - G.V.சோழன், விளம்பர வடிவமைப்பு - அயனன், இணை தயாரிப்பு – க.முருகானந்தம், தயாரிப்பு – ஜெமினி ராகவா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - K.S.முத்துமனோகரன்

    படம் பற்றி இயக்குனர் முத்து மனோகரன் கூறும்போது, ‘இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். வழக்கமாக பேய் படங்களில் வரும் பங்களாவில் கதவு, ஜன்னல் கண்டிப்பாக இருக்கும். ஆனால் இதல் வித்தியாசமான காட்டவேண்டும் என்பதற்காக அந்த பங்களாவில் இருந்த கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் பல லட்சம் செலவு செய்து அப்புறபடுத்தி, பின் படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டு வைத்துக் கொடுத்தோம். கதவு, ஜன்னல்கள் இல்லா பேய்படம் இது. ராஜா காலத்து பங்களா என்பதால் அனைத்தும் தேக்கு மரங்களால் வைக்கப்பட்டிருந்தன.

    முழுக்க முழுக்க இரவு நேரத்தில் மட்டும் தான் அந்த பங்களாவில் படப்பிடிப்பை நடத்தினோம். இது மிரட்டலான திரில்லர் படம் மட்டுமல்லாமல் இன்றைய இளைய சமுதாயத்தின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் படமாக இந்த ஆண்கள் ஜாக்கிரதை இருக்கும் என்றார் இயக்குனர்.
    அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அஜ்மல், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு செகண்ட் ஷோ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் அஜ்மல். இவர் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

    முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக டார்க் ரூம் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது. சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை ஏ.டி.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

    அஜ்மல்

    அஜ்மலுடன் இப்படத்தில் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
    தமிழில் 50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள முருகன் மந்திரம், தற்போது படங்களுக்கு வசனகர்த்தாவாக மாறியிருக்கிறார்.
    50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள முருகன் மந்திரம், ரகுமான், நாடோடிகள் அபிநயா, டினி டாம் நடிப்பில், முன்னாள் கப்பல்படை வீரர் ப்ராஷ் இயக்கும் “ஆபரேஷன் அரபைமா” படத்தின் மூலம் வசன கர்த்தாவாகி இருக்கிறார்.

    வசனம் எழுதுவது குறித்து முருகன் மந்திரம் கூறும்போது, "பாடல் எழுதுவதை விட, வசனம் எழுதுவதற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு பாடல் எழுதும்போது அதன் சூழலை, இயக்குநரின் எதிர்பார்ப்பை, கதாபாத்திரங்களின் உணர்வை, நமது வார்த்தைகளின் மூலம் மெட்டுகளுக்கு பொருத்தினால் போதும்.

    ஆபரேசன் அரபைமா படத்தில் முருகன் மந்திரம்

    ஆனால், வசனம் எழுதும்போது, கதை, கதைக்களம், ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்விட பின்னணி, பேச்சு மொழி பின்னணி, கதாபாத்திரத்தின் அப்போதைய மனநிலை, இயக்குநர் பேச விரும்பும் கருத்து, இப்படி நிறைய விசயங்களை தெரிந்து வசனம் எழுதினால் தான், படம் பார்க்கிறவர்கள் அந்த படத்தோடு, கதாபாத்திரங்களோடு ஒன்ற முடியும். 

    ஆபரேஷன் அரபைமா, ஒங்கள போடணும் சார் என இரண்டு படங்களுக்கு வசனம் எழுதியது வேறு வேறு மாதிரியான அனுபவம். கதையின் தன்மை இரண்டு படங்களுக்கும் மொத்தமாக வேறுபட்டது. அந்தந்த படத்திற்கான தேவையைப் பொருத்து வசனங்களை எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து டைம் அண்ட் டைட் ஃப்ரேம்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் “பிரளயம்”, “மிலிடெரி” ஆகிய படங்களுக்கு வசனம் எழுதுகிறேன், என கூறுகிறார்.
    அருண்விஜய், பிரசன்னா நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாஃபியா’ படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தடம், சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.

    சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். டீசரை பார்த்த ரஜினி, பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருந்தார்.



    தற்போது இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இதில் அருண் விஜய்யும், பிரச்சன்னாவும் ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா? - நரியோட தந்திரமா? என்று பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் தற்போது இந்த டீசர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 
    ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், தற்போது எடுத்த போட்டோஷூட்டால் அவருக்கு பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
    ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய 'ஜோக்கர்', சமுத்திரக்கனி நடித்த 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், சமீபத்தில் தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது. `ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தவருக்கு, இந்த போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்துள்ளது. 

    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:- ’`இந்த போட்டோ ஷூட்டுக்கு இவ்வளவு வரவேற்பு வரும்ன்னு நான் நினைக்கவில்லை. பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பல பேர் மெசேஜ் பண்ணாங்க. சினிமாவில் இருந்தும் பல பேர் போன் பண்ணி, `போட்டோஸ் நல்லா இருந்தது’ன்னு சொன்னாங்க. 

    நடிகை ரம்யா பாண்டியன்

    `ஆண் தேவதை’ படத்துக்கு பிறகு சில பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால், இந்த போட்டோ ஷூட்டுக்கு அப்பறம்தான் நிறைய நல்ல பட வாய்ப்புகள் வர ஆரம்பிச்சிருக்கு. சில படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கு. படங்கள் மட்டுமில்லாமல் ஒரு வெப் சீரிஸ்லேயும் நடிக்க கேட்டிருக்காங்க. எல்லாமே இப்போ பேச்சுவார்த்தையில் இருக்கிறதால, இதெல்லாம் என்ன கதை, எந்த டீம்னு என்னால சொல்ல முடியாது’. இவ்வாறு அவர் கூறினார்.
    தமிழ், மலையாளம், கன்னடம் படங்களில் நடித்து பிரபலமான நடிகை, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் சேதுபதி படத்தில் ரீஎன்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
    பைவ் ஸ்டார் படத்தில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனிகா. அதன் பின்னர் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார் கனிகா. 

    சேரனுடன் ஆட்டோகிராப், அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற முக்கியமான படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். இவர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய போதே, டப்பிங்கும் கொடுத்து வந்தார். 

    கனிகா

    சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் படத்தில் சதாவுக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும் குரல் கொடுத்தது கனிகா தான். 2006 ஆம் ஆண்டில் வெளியான வரலாறு தான் தமிழில் கனிகா நடித்த கடைசி படமாகும். தொடர்ந்து மலையாளத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு வர உள்ளார். 
    கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
    இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் மூலம் படங்களை வெளியிட்டு வருகிறார். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் உருவாகும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் 2 படங்களை அடுத்து அடுத்து வழங்க இருக்கிறார். அஸ்வின், அபய் தியோல், ஐஸ்வர்யா ராஜேஷ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'இது வேதாளம் சொல்லும் கதை'. ரதிந்திரன் இயக்கிய இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால், சரியான வெளியீட்டுக்காக படம் காத்திருக்கிறது.

    இந்நிலையில், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பை ரதிந்தரன் தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு நீலகிரியில் தொடங்கப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தை முழுக்க ஹாரர் திரில்லர் பாணியில் உருவாக்கியுள்ளார்கள்.

    ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் அடுத்த படம்

    சில நாட்களுக்கு முன்பு ஸ்டோன் பென்ச் நிறுவனம் சார்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2-வது படமாக ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தின் பணிகளை தொடங்கியுள்ளனர். 
    அங்காடித்தெரு மகேஷ், ஷாலு, மனோபாலா, ஆடுகளம் நரேன் நடிப்பில் ராம் சேவா இயக்கத்தில் வெளியாகி உள்ள ’என் காதலி சீன் போடுறா’ படத்தின் விமர்சனம்.
    அப்பா, அம்மா இல்லாத மகேஷுக்கு அண்ணன், அண்ணி தான் ஒரே ஆறுதல். தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் ஷாலுவை காதலிக்கிறார் மகேஷ். ஆனால் வீட்டின் செல்லப்பிள்ளையான ஷாலு மிகவும் கோபக்காரர். மகேஷை கண்டு கொள்ளாமல் ‘சீன்’ போடுகிறார். மகேஷ் போராடி ஷாலுவை கரெக்ட் செய்கிறார். 

    அந்த நேரம் பார்த்து மகேஷ் அண்ணன் மீது முன்விரோதம் கொண்டிருக்கும் சக போலீஸ் அதிகாரி கோகுல் அறிமுகமாகிறார். மகேஷின் அண்ணனை பழி தீர்க்க வேண்டும் என துடிக்கிறார். இந்த நிலையில் மகேஷ் - ஷாலு நிச்சயதார்த்தம் ஒரு கோவிலில் நடக்கிறது. அந்த சமயத்தில் மகேஷின் அண்ணி மர்மமாக கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? கோகுலுக்கும், மகேஷ் அண்ணனுக்கும் இடையே உள்ள முன்விரோதம் என்ன? மகேஷ் - ஷாலு திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

    என் காதலி சீன் போடுறா

    ஒரு சின்ன கதைக்கருவை எடுத்துக்கொண்டு அதை கமர்சியலாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்சேவா. முதல் பாதி படம் ஜாலியாக நகர்கிறது. இரண்டாம் பாதி படம் விறுவிறுப்பாக மாறிவிடுகிறது. கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம், ‘அங்காடி தெரு’ மகேஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். 

    ஹீரோயின் ஷாலு அழகு பதுமை போல் வந்து போகிறார். வழக்கம் போல் தனது நகைச்சுவையால் சிரிக்க வைக்கிறார் மனோபாலா. போலீஸ் அதிகாரி வேடத்துக்கு ஏற்றதுபோல பிட்டாக இருக்கிறார் கோகுல். ஆடுகளம் நரேன் உள்பட படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

    என் காதலி சீன் போடுறா

    அம்ரீஷின் இசை தான் படத்திற்கு மிகப் பெரிய பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். குறைந்த பட்ஜெட் படம் என்பதால், அளவான லைட்களை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கேமரா மேன். எடிட்டிங்கில் இன்னும் நிறைய வேலை செய்திருக்கலாம்.

    மொத்தத்தில் ‘என் காதலி சீன் போடுறா’ காமெடியுடன் விறுவிறுப்பாக நகர்கிறது.
    ×