என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அங்காடித்தெரு மகேஷ், ஷாலு, மனோபாலா, ஆடுகளம் நரேன் நடிப்பில் ராம் சேவா இயக்கத்தில் வெளியாகி உள்ள ’என் காதலி சீன் போடுறா’ படத்தின் விமர்சனம்.
    அப்பா, அம்மா இல்லாத மகேஷுக்கு அண்ணன், அண்ணி தான் ஒரே ஆறுதல். தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் ஷாலுவை காதலிக்கிறார் மகேஷ். ஆனால் வீட்டின் செல்லப்பிள்ளையான ஷாலு மிகவும் கோபக்காரர். மகேஷை கண்டு கொள்ளாமல் ‘சீன்’ போடுகிறார். மகேஷ் போராடி ஷாலுவை கரெக்ட் செய்கிறார். 

    அந்த நேரம் பார்த்து மகேஷ் அண்ணன் மீது முன்விரோதம் கொண்டிருக்கும் சக போலீஸ் அதிகாரி கோகுல் அறிமுகமாகிறார். மகேஷின் அண்ணனை பழி தீர்க்க வேண்டும் என துடிக்கிறார். இந்த நிலையில் மகேஷ் - ஷாலு நிச்சயதார்த்தம் ஒரு கோவிலில் நடக்கிறது. அந்த சமயத்தில் மகேஷின் அண்ணி மர்மமாக கொல்லப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? கோகுலுக்கும், மகேஷ் அண்ணனுக்கும் இடையே உள்ள முன்விரோதம் என்ன? மகேஷ் - ஷாலு திருமணம் நடந்ததா? என்பதே மீதிக்கதை.

    என் காதலி சீன் போடுறா

    ஒரு சின்ன கதைக்கருவை எடுத்துக்கொண்டு அதை கமர்சியலாக தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்சேவா. முதல் பாதி படம் ஜாலியாக நகர்கிறது. இரண்டாம் பாதி படம் விறுவிறுப்பாக மாறிவிடுகிறது. கிளைமாக்ஸ் எதிர்பாராத திருப்பம், ‘அங்காடி தெரு’ மகேஷ் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். 

    ஹீரோயின் ஷாலு அழகு பதுமை போல் வந்து போகிறார். வழக்கம் போல் தனது நகைச்சுவையால் சிரிக்க வைக்கிறார் மனோபாலா. போலீஸ் அதிகாரி வேடத்துக்கு ஏற்றதுபோல பிட்டாக இருக்கிறார் கோகுல். ஆடுகளம் நரேன் உள்பட படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

    என் காதலி சீன் போடுறா

    அம்ரீஷின் இசை தான் படத்திற்கு மிகப் பெரிய பலம். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் கலக்கி இருக்கிறார். குறைந்த பட்ஜெட் படம் என்பதால், அளவான லைட்களை பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கேமரா மேன். எடிட்டிங்கில் இன்னும் நிறைய வேலை செய்திருக்கலாம்.

    மொத்தத்தில் ‘என் காதலி சீன் போடுறா’ காமெடியுடன் விறுவிறுப்பாக நகர்கிறது.
    அருவி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அதிதி பாலன், அடுத்ததாக நிவின் பாலிக்கு ஜோடியாக மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.
    நிவின் பாலி, நயன்தாரா நடிப்பில் வெளியான மலையாள படம் 'லவ் ஆக்‌ஷன் டிராமா'. ஓணம் பண்டிகை வெளியீடாக வந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதனிடையே கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடித்த 'மூத்தோன்' படத்துக்கு திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து நிவின் பாலி நடிப்பில் 'படவெட்டு' என்ற படம் உருவாகவுள்ளது. 

    நிவின் பாலி, அதிதி பாலன்

    இதனை அறிமுக இயக்குநர் லிஜோ கிருஷ்ணா இயக்கவுள்ளார். இதன் நாயகியாக நடிக்க அதிதி பாலனை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். 'அருவி' படத்துக்குப் பிறகு வேறு எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் அதிதி பாலன். 'படவெட்டு' படத்தின் கதையைக் கேட்டு உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
    எஸ்.கிருஷ்ணா இயக்கத்தில் சுதீப், அகன்ஷா, சுனில் ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பயில்வான்’ படத்தின் விமர்சனம்.
    ஆஞ்சநேயர் பக்தரான சுனில் ஷெட்டி குஸ்தி வாத்தியார். ஒருநாள் சாலையில் உணவிற்காக சண்டைபோடும் சிறுவனாக சுதீப்பை பார்க்கிறார். சுதீப் சண்டையிடும் விதம் இவருக்கு மிகவும் பிடித்துப்போக அவனிடம் விசாரிக்கிறார். அப்போது அவன் ஒரு அனாதை என்பது தெரியவருகிறது. 

    பின்பு சுதீப்பை கூட்டிவந்து அவனுக்கு பயிற்சி கொடுத்து தன் மகனாகவே வளர்த்து மிகப்பெரிய பயில்வான் ஆக ஆக்குகிறார். சுனில் ஆசை சுதீப்பை ஒரு நேஷனல் சாம்பியன் ஆக்கவேண்டும் என்பது. சுதீப் அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணத்தில் அவருக்கு கட்டுப்பட்டு இருக்கிறார். அப்போது கோவிலுக்கு செல்லும் இவர் அங்கு நாயகியை பார்க்கிறார். பார்த்தவுடன் காதலில் விழுகிறார், பின்பு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்கிறது. 

    பயில்வான்

    தந்தையின் பேச்சை மீறி நாயகியை கரம்பிடிக்கிறார் சுதீப். இதனால் தந்தை சுனிலுக்கும் சுதிப்பிற்கும் உறவில் விரிசல் விழுகிறது. சுதீப் குஸ்தி போடுவது இல்லை என்று சத்தியம் செய்கிறார். பின்பு நாயகியை அழைத்துக்கொண்டு மிகவும் ஏழ்மையான வாழ்க்கையை தொடங்குகிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. 

    மனைவி குழந்தை என குடும்பத்தினரோடு சந்தோஷமாக வாழும் சுதீப்பை மீண்டும் பிரச்சனை தேடி வருகிறது. இவரிடம் குஸ்தியில் தோல்வியடைந்த மகாராஜா ஒருவர் சுதீப்பை சீண்டி சண்டைக்கு அழைக்கிறார். ஆனால் தந்தைக்கு செய்த சத்தியத்தை காப்பற்ற சண்டை போடாமல் இருக்கிறார். 

    பயில்வான்

    இதேசமயம் பாக்ஸிங் கோச்சாரான சரத். இவரது மாணவனான கபீர் துகான் சரத்தை மிகவும் அசிங்கப்படுத்தி விடுகிறார். இதனால் கபீரை ஜெயிக்கும் அளவிற்கு ஒரு பாக்சரை உருவாக்க வேண்டும் என்று அதற்கு சரியான வீரர் ஒருவர் தேவை என்று தேடி அலைகிறார் சரத். இறுதியில் சுதீப் சண்டையிட்டு ராஜாவை வென்றாரா? சரத் தேடிக்கொண்டிருக்கும் பாக்ஸர் கபீரை தோற்கடித்தாரா? தந்தையின் உடனான பிரச்சனையில் விருந்து மீண்டு தந்தையுடன் சுதீப் ஒன்று சேர்ந்தாரா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை

    சுதீப், சுனிலுக்கு நல்ல மகனாகவும் நல்ல மாணவனாகவும் இடைவேளை வரை பொருந்தியிருக்கிறார். இடைவேளைக்கு பிறகு அன்பான கணவனாகவும், பாசமிகு தகப்பனாகவும் சென்டிமெண்ட் கலந்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக பயில்வானுக்கு உண்டான கட்டுமஸ்தான் உடலுடன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பது சிறப்பு. முதல் பாதியில் இளமை துள்ளளோடு ரசிக்க வைக்கும் நாயகி அகன்ஷா இடைவேளைக்கு பிறகு மகள் மீதான பாசம் என குடும்பப்பாங்கான பெண்ணாக வந்து கவர்ந்திருக்கிறார். 

    பயில்வான்

    சுனில் ஷெட்டி, படம் முதல் காட்சியில் இருந்து தோற்றத்தில் கவர்கிறார். ஒரு குஸ்தி வாத்தியாருக்கு உண்டான பொறுமை, உடல் மொழி என படம் இறுதிவரை வந்து மனதில் நிற்கிறார். சுதீப்பின் நண்பராக வரும் காமெடியன், பாக்ஸிங் கோச்சராக வரும் சரத், மகாராஜாவாக சுஷாந் சிங், பாக்ஸராக வரும் கபீர் துகான் சிங் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

    இயக்குனர் எஸ்.கிருஷ்ணா, பயில்வான் என்கிற தலைப்பிற்கு ஏற்றவாறு சண்டை காட்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், சுதீப்-சுனில் ஷெட்டி இடையேயான தந்தை மகன் சென்டிமெண்ட், மகள் மீதான பாசம் என அனைத்துவகை ரசிகர்களையும் கவரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளது சிறப்பு. குறிப்பாக தனது மகளை சிறிது நேரம் தொலைத்ததற்கே பதறும் சுதீப், நாயகியின் தந்தையை நினைத்து வருந்தும் காட்சி அல்டிமேட். காட்சிகள் நீளமாக இருப்பது படத்திற்கு பெரும் பின்னடைவு. பின்னணி இசை படத்திற்கு பலமாக இருந்தாலும் பாடல்கள் பலவீனம் தான். கருணாகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது.

    மொத்தத்தில் ‘பயில்வான்’ பலமில்லை.
    சிரஞ்சீவி நடித்துள்ள ’சைரா நரசிம்மா ரெட்டி’ என்கிற வரலாற்று படம் ரிலீசுக்கு முன்பே அதிக தொகைக்கு வியாபாரமாகியுள்ளது.
    ‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் வெற்றியை அடுத்து வரலாற்று கதைகளுக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார். 

    சைரா நரசிம்மா ரெட்டி படக்குழு

    அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த நிலையில், படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை ஒரு பிரபல நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் இதுவரை ரூ.40 கோடிக்கு வியாபாரமாகி இருக்கிறது. 
    ஜெயலலிதா வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்படும் தலைவி படத்தில் கங்கனா ரணாவத் 4 தோற்றங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ஜெயலலிதா வாழ்க்கை ‘தலைவி’ என்ற பெயரில் படமாகிறது. விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. கங்கனா ரணாவத்தால் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

    இந்தியில் ஜெயலலிதா வாழ்க்கை படத்துக்கு ஜெயா என்று தலைப்பு வைத்தனர். அதனை கங்கனா ரணாவத் ஏற்காமல் தலைவி பெயரையே வைக்கும்படி வற்புறுத்தினார். ஜெயலலிதா வாழ்க்கையை ‘குயின்’ என்ற பெயரில் கவுதம் மேனன் வெப் தொடராக தயாரிப்பதால் தலைவி படத்துக்கான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்ற கருத்து நிலவுகிறது.

    கங்கனா ரணாவத், ஜெயலலிதா

    தலைவி படத்தை 3 மொழிகளிலும் எடுக்க ரூ.55 கோடி பட்ஜெட் நிர்ணயித்து உள்ளனர். ஆனால் கங்கனா ரணாவத் ரூ.20 கோடி சம்பளம் கேட்டுள்ளார். இந்த பிரச்சினைகளால் தலைவி படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் தரப்பில் மறுத்தனர்.

    இந்த வருடம் இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நான்கு காலகட்டங்களில் நான்குவிதமான தோற்றங்களில் வருகிறார் என்றும் அவரது தோற்றங்களை ஹங்கர் கேம்ஸ், கேப்டன் மார்வல், பிளேட் ரன்னர் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய ஒப்பனை கலைஞர் ஜேசன் காலின்ஸ் வடிவமைக்கிறார் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
    மன அழுத்த நோயில் இருந்து விடுபட முடியாமல் தவிப்பதாக நடிகை ஸ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.
    இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோனே மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு குணமடைந்ததாக தெரிவித்து இருந்தார். இதுபோல் மேலும் சில நடிகைகளும் இதே நோயில் சிக்கியதாக கூறினார். இப்போது நடிகை ஸ்ரத்தா கபூரும் மன அழுத்த வியாதியால் கஷ்டப்படுவதாக தெரிவித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கில் சமீபத்தில் திரைக்கு வந்த சாஹோ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

    ஸ்ரத்தா கபூர் கூறியதாவது:- “எனது நடிப்பில் ‘ஆஷிக் 2’ என்ற இந்தி படம் 2013-ல் திரைக்கு வந்தது. அப்போது எனக்கு மன அழுத்த நோய் பாதிப்பு ஏற்பட்டது. இப்போதும் அதில் இருந்து விடுபட முடியாமல் போராடிக்கொண்டு இருக்கிறேன். ஆனாலும் ஆரம்பத்தில் இருந்ததை விட இப்போது பரவாயில்லை. கொஞ்சம் குறைந்துள்ளது. முழுமையாக அதில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை. 

    ஸ்ரத்தா கபூர்

    வாழ்க்கையில் ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு நிலையில் பரபரப்பு மன அழுத்தம் போன்றவை பின்னால் துரத்திக்கொண்டே இருக்கும். அதில் இருந்து விடுபட மருந்துகளை தேடி போவதில் பிரயோஜனம் இல்லை. நான் தினமும் யோகா, தியானம் செய்கிறேன். பாடல்கள் கேட்கிறேன். இவற்றில் மனதை செலுத்தி மனஅழுத்தத்தில் இருந்து விடுபட கஷ்டப்பட்டு போராடுகிறேன். இன்றுவரை அந்த போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.” இவ்வாறு ஸ்ரத்தா கபூர் கூறினார்.
    இனி பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து அஜித் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.
    சென்னையில் பேனர் விழுந்து இளம் என்ஜினீயர் சுபஸ்ரீ பலியான சம்பவத்தின் அதிர்ச்சியால் பேனர் கலாசாரத்தை ஒழிக்க வேண்டும் என்று பலரும் வற்புறுத்தி வருகிறார்கள். அரசியல் கட்சிகள் பேனர்கள் வைப்பதை தவிர்க்குமாறு தொண்டர்களை வற்புறுத்தி உள்ளன. முன்னணி நடிகர்கள் படங்கள் ரிலீசாகும்போது ரசிகர்கள் பேனர் கட்-அவுட்கள் வைத்து அமர்களப்படுத்துகிறார்கள்.

    பாடல் வெளியீட்டு விழாக்களிலும் கட்-அவுட்கள் அமைக்கின்றனர். திருமணம், மற்றும் பிறந்த நாள் விழாக்களிலும் நடிகர்கள் படங்களுடன் சாலைகளில் பிரமாண்ட பேனர்களை வைக்கின்றனர். இதுபோல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் ரசிகர்களுக்கு தடை விதித்து உள்ளனர்.

    அஜித் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்

    வருகிற 19-ந்தேதி சென்னையில் நடைபெறும் விஜய்யின் பிகில் பட பாடல் வெளியீட்டு விழாவில் கட் அவுட் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளார். இந்த நிலையில் அஜித்குமார் ரசிகர்களும் பேனர் கலாசாரத்துக்கு எதிராக களம் இறங்கி உள்ளனர். அஜித்துக்கு பேனர்கள் வைக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

    அதில், “பேனர் கவிழ்ந்து சகோதரி சுபஸ்ரீ உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. அஜித் படங்களுக்கு அவரது புகழை பரப்பும் விதமாக எந்த ஒரு நிகழ்விலும் பொது இடங்களில் பேனர் வைக்க மாட்டோம் என்று உறுதி மொழி எடுக்கின்றோம்” என்று குறிப்பிட்டு உள்ளனர்.
    சினிமாவில் தனது வளர்ச்சிக்கு காரணம் மக்கள் சக்திதான் என்று நடிகர் வடிவேல் தெரிவித்துள்ளார்.
    ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிடிப்பில் வடிவேலுக்கும் இயக்குனர் சிம்பு தேவனுக்கும் மோதல் ஏற்பட்டு படம் நின்று போனது. இதனால் தனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக படத்தின் தயாரிப்பாளரான இயக்குனர் ஷங்கர் பட அதிபர்கள் சங்கத்தில் புகார் அளித்தார். பேச்சுவார்த்தையில் மீண்டும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று வடிவேல் உறுதியாக மறுத்து விட்டார்.

    இதனால் புதிய படங்களில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்ய தடை விதித்தனர். 3 வருடங்களுக்கு மேலாக படங்களில் அவர் நடிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்க இருப்பதாக வடிவேல் தற்போது அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:- “மக்களை நகைச்சுவையால் சிரிக்க வைப்பதால் தினமும் நான் பிறந்து கொண்டுதான் இருக்கிறேன். எனது வளர்ச்சிக்கு காரணம் மக்கள் சக்திதான். மக்கள் சக்தி இல்லை என்றால் இந்த வடிவேலு கிடையாது. நீங்கள் ஏன் இன்னும் நடிக்காமல் இருக்கிறீர்கள் என்று என்னை பார்த்து கேள்வி எழுப்பலாம்.

    வடிவேல்

    விரைவில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறேன். இந்த மாதம் முடிவதற்குள் நான் நடிக்க வருவேன். வாழ்க்கை என்றால் சைத்தான், சகுனி என்று இருக்கத்தான் செய்யும். எல்லோருடைய வாழ்க்கையிலும் அது உண்டு. அது என் வாழ்க்கையில் இல்லாமல் இருக்குமா? ஆங்காங்கே ஒன்றிரண்டு இருக்கத்தான் செய்யும். ஆனால் மக்கள் சக்தி இருக்கிறது. மறுபடியும் சொல்கிறேன். நான் மீண்டும் நடிப்பேன். இவ்வாறு வடிவேல் கூறி உள்ளார்.

    இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    அரசியலுக்கு வரும் எண்ணம் தனக்கு துளிகூட இல்லை என காப்பான் பட பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா கூறினார்.
    கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’, செப்டம்பர் 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. 

    இதில் சூர்யா அளித்த பேட்டி: காப்பான் படம் நிறைய நாடுகளில் எடுத்தோம். எனக்கு தனி மனிதனின் வளர்ச்சி பற்றிய சுயமுன்னேற்ற கதைகள் மிகவும் பிடிக்கும். சமூகத்தில் நடந்துகொண்டு இருக்கும் இதுவரை பதிவு செய்யாத களம் கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன். அப்படி அமைந்தது தான் காப்பான். ஒவ்வொரு மனிதனும் ஹீரோ தான். எல்லோருமே கற்றுக்கொண்டுதான் மேலே வருகிறோம். அப்படி சமூகத்துக்கு அதிகம் தெரியாத ஒரு பணியில் இருப்பவர்களை பற்றிய கதைதான் காப்பான். 

    காப்பான் இசை வெளீயீட்டு நிகழ்ச்சியில் ரஜினி என்னிடம் இது எத்தனையாவது படம் என்று கேட்டார். 37 என்று சொன்னதும் 37 தானா? என்று கேட்டார். முன்பு எல்லாம் ஒரே ஆண்டில் 20, 25 படங்களில் நடிப்பார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை என சொன்னார். எனக்கு அரசியல் வரும் எண்ணம் துளிகூட கிடையாது. என் படத்தில் வேண்டுமானால் அரசியல் இருக்கலாம். 

    காப்பான் படக்குழு

    கல்விமுறை பற்றிய எனது கருத்து 14,15 ஆண்டுகளாக நான் தினம், தினம் பார்த்து அனுபவித்ததை தான் பேசினேன். நான் பேசியதில் சிலருக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் எனது கருத்து என் நேரடி அனுபவத்தில் இருந்து வந்தது. ஆண்டுக்கு சுமார் 15 ஆயிரம் மாணவர்களை பார்க்கிறோம். அவர்கள் எந்த சூழலில் இருந்து வருகிறார்கள் என்பது தெரியும். இந்த விஷயங்கள் வந்தால் பாதிக்கப்படுவோம் என்ற பயமும் கவலையும் அவர்களிடம் இருந்தது. 

    நான் அவர்களுக்காக பேசவேண்டிய இடத்தில் இருந்தும் பேசவில்லை என்றால் எப்படி? எனவே அவர்களது குரலாக தான் நான் பேசினேன். கல்வியாளர்கள் எல்லோரும் பேசிக்கொண்டு இருந்ததுதான். அந்த மேடையிலேயே அவர்கள் பேசிய பின்னர்தான் நான் பேசினேன். நான் வெளிச்சத்தில் இருப்பதால் அது மக்களிடம் நன்றாக போய் சேர்ந்தது. தீமை நடக்கிறது என்று தெரிந்தும் கூட அதை கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதும் தீமை தான். கல்விக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அது எனது வீட்டில் நடப்பதுதான். அதற்காக நிச்சயம் குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.
    விக்னேஷ் சிவனின் மேனேஜர் மயில்வாகனனை தனது அடுத்த படத்தில் இணைத் தயாரிப்பாளராக்கி இருக்கிறார் நடிகை நயன்தாரா.
    நடிகைகளில் ரொம்ப வித்தியாசமானவர் நயன்தாரா. விளம்பரங்களில் அதிகம் தோன்றுவதில்லை. படப்பிடிப்பு முடிந்ததும் வேலை செய்த அத்தனை பேருக்கும் உதவி செய்வது. தனது முன்னாள் மேனேஜருக்கு கார் பரிசளித்தது என ஏதாவது ஒருவகையில் நல்லது செய்துகொண்டே இருப்பார். அந்த வகையில் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனின் மேனேஜரான மயில்வாகனனை இணைத் தயாரிப்பாளர் ஆக்கியிருக்கிறார். 

    மயில்வாகனன்

    நயன்தாராவின் ரவுடிபிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவன் தயாரிக்க, நெற்றிக்கண் படத்தை கே.எஸ்.மயில்வாகனன் இணைந்து தயாரிக்கச் செய்து அழகு பார்த்திருக்கிறார் நயன்தாரா. இப்படத்தை அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார்.
    பிகில் படம் மூலம் விஜய் உடனான தனது கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க அட்லி ஆயத்தமாகி இருக்கிறார்.
    2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லி. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்தார், அட்லி. இதில் ‘தெறி’ படம் ரூ.150 கோடியும், ‘மெர்சல்’ படம் ரூ.250 கோடி வசூலையும் குவித்தது.

    விஜய், அட்லி

    இந்தநிலையில் 3-வது முறையாக விஜய்யை வைத்து ‘பிகில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தின் மூலம், விஜய் உடனான தனது கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க அட்லி ஆயத்தமாகி இருக்கிறார். இந்த படத்திலும் மிகப்பெரிய வசூலை பெற்று பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அட்லி பெறுவார் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
    சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது, குறிப்பாக மாலைக்காட்சி கிடைப்பது என்றால் மிக கஷ்டமான ஒன்று என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.
    சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்க படத்தொகுப்பு செய்துள்ளார் கணேஷ். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி கலந்து கொண்டனர். 

    நடிகர் ஆரி பேசும்போது, “இதுபோன்ற பட விழாக்களில் இருக்கும் கலகலப்பு கூட தற்போது வரும் பல படங்களில் இருப்பதில்லை என்பதே உண்மை. ‘வீராபுரம் 220’ என்ற மண்ணின் பிரச்சனையை, மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ள இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இங்கே படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது, அதிலும் குறிப்பாக சின்ன படங்களுக்கு மாலைக்காட்சி கிடைப்பது என்றால் மிக கஷ்டமான ஒன்று. 

    வீராபுரம் 220 பட பாடல் வெளியீட்டு விழா

    பெரிய தயாரிப்பாளர்கள், பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேரும்போது சினிமா நன்றாக இருக்காது. சிறிய தயாரிப்பாளர்களிடம், உழைப்பவர்களிடம் பணம் சென்று சேரும் போது தான் இந்த இடத்தில் ஒரு வளர்ச்சி இருக்க முடியும். எல்லா நடிகர்களும் தங்களது சம்பளத்தை வெளிப்படையாக சொல்லி வாங்கிக்கொள்ள நினைக்கவேண்டும். நான் அப்படித்தான். 

    என்னுடைய தயாரிப்பாளர்கள் என்னுடைய படத்திற்கு என்ன வியாபாரமோ அதற்கான சம்பளத்தை கொடுங்கள் என வெளிப்படையாகவே கூறி விடுகிறேன். எனது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், இன்னும் 5 வருடங்களில் இந்த சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கும் முயற்சிகள் வெகுவாக குறைந்துவிடும். இப்போது வெப் சீரிஸ்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. பல இயக்குநர்கள் அதை தேடி செல்கின்றார்கள்’ என்றார்.
    ×