என் மலர்
சினிமா செய்திகள்
பிகில் படம் மூலம் விஜய் உடனான தனது கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க அட்லி ஆயத்தமாகி இருக்கிறார்.
2013-ம் ஆண்டு வெளியான ‘ராஜா ராணி’ எனும் தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர், அட்லி. இந்த படம் ரூ.50 கோடி வசூல் குவித்தது. அதனைத்தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’ என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் அங்கம் வகித்தார், அட்லி. இதில் ‘தெறி’ படம் ரூ.150 கோடியும், ‘மெர்சல்’ படம் ரூ.250 கோடி வசூலையும் குவித்தது.

இந்தநிலையில் 3-வது முறையாக விஜய்யை வைத்து ‘பிகில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தின் மூலம், விஜய் உடனான தனது கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க அட்லி ஆயத்தமாகி இருக்கிறார். இந்த படத்திலும் மிகப்பெரிய வசூலை பெற்று பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை அட்லி பெறுவார் என்பது ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது, குறிப்பாக மாலைக்காட்சி கிடைப்பது என்றால் மிக கஷ்டமான ஒன்று என நடிகர் ஆரி தெரிவித்துள்ளார்.
சுந்தர்ராஜ் பொன்னுசாமி தயாரிப்பில் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வீராபுரம் 220. அங்காடித்தெரு மகேஷ், மேக்னா, சதீஷ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவை பிரேம்குமார் கவனிக்க படத்தொகுப்பு செய்துள்ளார் கணேஷ். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கே.பாக்யராஜ், ஆர்வி.உதயகுமார், பேரரசு, நடிகர் ஆரி கலந்து கொண்டனர்.
நடிகர் ஆரி பேசும்போது, “இதுபோன்ற பட விழாக்களில் இருக்கும் கலகலப்பு கூட தற்போது வரும் பல படங்களில் இருப்பதில்லை என்பதே உண்மை. ‘வீராபுரம் 220’ என்ற மண்ணின் பிரச்சனையை, மக்கள் பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுத்துள்ள இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். இங்கே படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பது, அதிலும் குறிப்பாக சின்ன படங்களுக்கு மாலைக்காட்சி கிடைப்பது என்றால் மிக கஷ்டமான ஒன்று.

பெரிய தயாரிப்பாளர்கள், பணம் இருப்பவர்களிடம் மட்டுமே பணம் சேரும்போது சினிமா நன்றாக இருக்காது. சிறிய தயாரிப்பாளர்களிடம், உழைப்பவர்களிடம் பணம் சென்று சேரும் போது தான் இந்த இடத்தில் ஒரு வளர்ச்சி இருக்க முடியும். எல்லா நடிகர்களும் தங்களது சம்பளத்தை வெளிப்படையாக சொல்லி வாங்கிக்கொள்ள நினைக்கவேண்டும். நான் அப்படித்தான்.
என்னுடைய தயாரிப்பாளர்கள் என்னுடைய படத்திற்கு என்ன வியாபாரமோ அதற்கான சம்பளத்தை கொடுங்கள் என வெளிப்படையாகவே கூறி விடுகிறேன். எனது நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், இன்னும் 5 வருடங்களில் இந்த சின்ன பட்ஜெட் படங்கள் எடுக்கும் முயற்சிகள் வெகுவாக குறைந்துவிடும். இப்போது வெப் சீரிஸ்கள் உருவாக ஆரம்பித்து விட்டன. பல இயக்குநர்கள் அதை தேடி செல்கின்றார்கள்’ என்றார்.
ஜே.பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மிருகா’ படத்தின் முன்னோட்டம்.
ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ பி வினோத் ஜெயின் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜே பார்த்திபன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி நடிப்பில் ‘மிருகா’. இப்படத்தில் தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். எம்.வீ.பன்னீர்செல்வம் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு செய்ய, இயக்குனர் பாலாவின் ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் பணியாற்றிய
ஜே பார்த்திபன் இயக்கியிருக்கிறார்.
சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன் மற்றும் எஸ்.ராஜாமோகன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொள்ளாச்சி, மூணாறு, தலைக்கோணம், சென்னை, ஊட்டி, மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களில் அருமையான காட்சியமைப்புகளுடன் உருவாகியிருக்கிறது.

இத்திரைப்படம் ஒரு வித்தியாசமான குரூர எண்ணங்கொண்ட ஒரு கொலைகாரன், தனது அழகு, பண்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறான். அப்படி ஒரு முயற்சியின் போது, ஒரு பெண்ணை, காதலித்து திருமணமும் செய்து கொள்கிறான். அவளையும் ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக நினைக்கிறது. இப்படி ஒரு பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதை, ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா
ஆக்ஷன் படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் அடுத்த படத்திலும் அவருக்கு ஜோடியாக 2 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.
‘ஆக்ஷன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் விஷால். இந்தப் படம் ‘இரும்புத்திரை 2’ என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினர் வேறொரு தலைப்பைத் தேர்வு செய்யவுள்ளதாகக் கூறினார்கள்.
இந்தப் படத்தைப் புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கி வருகிறார். முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காகக் கோயம்புத்தூர் சென்றுள்ளது படக்குழு. அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

ரோபோ ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யுவன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் ‘துப்பறிவாளன் 2’ படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஷால். இதையும் தன் நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார். இதற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.
ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் நயன்தாராவின் 65-வது படத்திற்கு ரஜினி பட தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து திரில்லர் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘நெற்றிக்கண்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதே டைட்டிலில் கடந்த ஆண்டு 1981ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷின் தாயார் மேனகா தான் நாயகி என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் டைட்டிலுக்கு அனுமதி கொடுத்து வாழ்த்து தெரிவித்த கவிதாலயா நிறுவனத்திற்கும் ரஜினிகாந்த் அவர்களுக்கும் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. இப்படத்தில் நயன்தாராவுடன் ஒரு நாய்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் உள்ள வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குனர் மிலிந்த் ராவ் தெரிவித்துள்ளார். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.
30 ஆண்டுகளுக்கு முன்பே பேனர் வைக்க கூடாது என்று ரசிகர்களுக்கு கடும் உத்தரவை பிறப்பித்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் சாலையின் இருபுறமும், சாலைத் தடுப்புகளிலும் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இளம்பெண் சுபஸ்ரீ மீது பேனர் ஒன்று விழுந்தது. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியது. இதில் அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்துக்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களுடைய கட்சியினரைக் கடுமையாக எச்சரித்துள்ளனர். இனிமேல் கட்சி தொடர்பான பேனர்கள் எதுவும் வைக்க வேண்டாம் எனத் தொண்டர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த பேனர் விவகாரம் குறித்து பேசியதாவது:- சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. என் படத்துக்காக கட் அவுட் வைக்க முயற்சித்த ரசிகர் தவறி மேல் இருந்து விழுந்துவிட்டார். விழுந்த இடத்தில் கூரான கம்பிகள் இருந்ததால் அவை கழுத்தில் குத்தி இறந்துவிட்டார்.
அவரது வீட்டுக்கு ஆறுதல் சொல்ல போனேன். அப்போது அந்த ரசிகரின் அம்மா தனது மகன் பற்றி கூறியது கலங்க வைத்தது. என் மீது அந்த ரசிகருக்கு எவ்வளவு பிரியம் என்பதை விளக்கினார்கள். அந்த வீட்டில் இருந்து வெளியில் வந்த உடனேயே ரசிகர்ளிடம் இனி கட் அவுட் வைப்பதோ பால் அபிஷேகம் செய்வதோ கூடாது என்று கடும் உத்தரவை பிறப்பித்தேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கக்கூடாது என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை:
குரோம்பேட்டை நெமிலிச்சேரி பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது ஒரே மகள் சுபஸ்ரீ (23). கம்ப்யூட்டர் என்ஜினீயர். நேற்று முன்தினம் பணி முடிந்து பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் ஸ்கூட்டருடன் ரோட்டில் விழுந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அந்த இடத்திலேயே சுபஸ்ரீ பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரசிகர்கள் எந்த ஊரிலும் பேனர் வைக்கக்கூடாது என நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ரசிகர்கள் எந்த ஊரிலும் பேனர்கள் வைக்கக் கூடாது என தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன். பேனர்கள் வைப்பதற்கு ஆகும் செலவை கல்வி உதவிக்காக பள்ளிகளுக்கு வழங்குங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.
என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்க அனிகா ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. உனக்கென்ன வேணும் சொல்லு என்ற பாடல் பெரும்பாலான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது.
இந்த படத்தை அடுத்து அப்பா - மகள் பாசத்தை மையப்படுத்தி உருவான விஸ்வாசம் படத்திலும் அனிகா அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60-வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தே தனது 60ஆவது படத்தில் அனிகாதான் மகளாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு ஒரு முக்கியமான காரணம் கூட இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதாவது, அனிகாவை தனது குடும்பமாகவே கருதும் தல அஜித்தின் மகள் அனோஷ்காவிற்கு நெருங்கிய நண்பரும் கூட. இதன் காரணமாக, அவ்வப்போது அஜித்தின் வீட்டிற்கு அனிகா சென்று வருவாராம். அனோஷ்கா மட்டுமல்ல, அனிகாவும் ஷாலினிக்கு செல்லப்பிள்ளையாம். இதன் காரணமாக, அஜித் தனது படங்களின் வெற்றிக்கு அனிகாவை ஒரு சென்டிமென்ட்டாக கருதுகிறாராம்.
பிகில் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் விஜய் 64 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசை அமைக்கும் விஜய்யின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு, அக்டோபரில் தொடங்குகிறது. கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. விஜய்க்கு 64வது படமாக இது உருவாக உள்ளது. இந்த நிலையில், இப்போது படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்துக்காக, விஜய் இதுவரை இல்லாத ஒரு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார் என்றும், அதற்காக தனியாக ஒரு மேக்கப் டெஸ்ட்டும் மேற்கொள்ளப்படுவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், எப்போதும்போல் சென்னையில் இல்லாமல், இந்த முறை செங்கல்பட்டில் படப்பிடிப்பு நடத்தப்போவதாகவும், அதற்காக அங்கே ஒரு பிரமாண்ட செட்டும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த படத்தின் கதை வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதால் படத்தில் பணிபுரியும் உதவி இயக்குநர்களை வெவ்வேறு அணிகளாகப் பிரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு அணிக்கும் ஒரு வேலை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், கதைக்கான ஆராய்ச்சிகளைச் செய்வது ஒரு அணியின் முக்கியக் கடமையாக இருக்கும்.

இந்த அணியில் இருப்பவர்களுக்குக்கூட கதையின் வெவ்வேறு அம்சங்கள்தான் தெரியும். இயக்குநர் தரப்பிலிருந்து ஒரு தலைப்பு தரப்படும். அதுகுறித்த தகவல்களை அவர்கள் சேகரித்து, இயக்குநரிடம் விளக்க வேண்டும். அதிகபட்சம் அவர்களுக்கே இவ்வளவுதான் கதை தெரியுமாம். மற்ற அணிகளுக்கெல்லாம் படத்தின் பிற வேலைகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இயக்குநர், முக்கிய நடிகர்கள், தலைமை தொழில்நுட்பக் கலைஞர்களைத் தவிர வேறு யாருக்கும் படத்தின் முழுக் கதையும் தெரியாது என்கிறார்கள்.
அஜித், விஜய் உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்த அசின், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார்.
கமல், விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த அசின் திடீர் என்று இந்தியில் நடிக்க சென்றார். இந்தியில் ரீமேக் ஆன கஜினி படத்தில் அமிர்கானுடன் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அடுத்து ஐந்தாறு படங்களில் மட்டுமே இந்தியில் நடித்துவிட்டு தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணந்துகொண்டு செட்டில் ஆனார்.
ஒரு பெண் குழந்தைக்கும் தாய் ஆனார். இனிமேல் நடிக்க வரமாட்டார் என்று ரசிகர்கள் முடிவு செய்திருந்த நிலையில் அவர் மீண்டும் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தை, கணவருடன் இருக்கும் படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் அசின், சமீபத்தில் ஒரு படத்தை பகிர்ந்தார். இது யாருடைய படம் என்று உற்றுநோக்கியபோது அது அசின்தான் என்பது தெரிய வந்தது. அந்த அளவுக்கு அவரது ஹேர் ஸ்டைல், உடல்தோற்றம், முகச்சாயல் எல்லாமே மாறி விட்டது.
இந்த படம் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது. ரீ என்ட்ரிக்கு தயாராகி இருக்கும் அசினை விரைவில் இந்தி படத்தில் பார்க்கலாம், தமிழ் படத்திலும் அவருக்கு வாய்ப்புகள் காத்திருக்கிறது. ஆனால் அதை ஏற்பாரா என்பதுபற்றி எதுவும் தெரியவில்லை.
தமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ராய் லட்சுமிக்கு வில்லனாக முன்னணி நடிகர் ஒருவர் நடித்துள்ளார்.
சவுகார்பேட்டை படத்தில் ஸ்ரீகாந்தும் ராய் லட்சுமியும் இணைந்து நடித்தனர். அடுத்து மிருகா என்ற படத்தின் மூலம் 2வது முறையாக இணைந்துள்ளனர். இதில் ராய் லட்சுமி குழந்தையுடன் தனியாய் வசிக்கும் பெண்ணாகவும் அவருக்கு வில்லனாக ஸ்ரீகாந்தும் நடித்துள்ளனர்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் பி.வினோத் ஜெயின் தனது ஜாக்குவார் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கிறார். எம்.வீ.பன்னீர் செல்வம் கதை, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்ய பாலாவின் முன்னாள் உதவியாளர் ஜே.பார்த்திபன் இயக்குகிறார். படம் பற்றி இருவரும் கூறியதாவது:-
வித்தியாசமான எண்ணம் கொண்ட ஒரு கொலைகாரனான ஸ்ரீகாந்த், தனது அழகு, பண்பு, படிப்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறார். அப்படி ராய்லட்சுமியை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார்.

அவரை ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக விளையாடுகிறது. இப்படி பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதையில் ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.
ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன், எஸ் ராஜாமோகன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்’ என்றார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஃபியா’ படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
தடம், சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
“Brilliant work kanna. Semaya irukku. Loved it” These were Rajini sir’s words after watching the teaser of Mafia. Thank god I did not faint. Blown away by his humility. Thalaivar for a reason 🤟🏻 pic.twitter.com/e6pdZtOjbI
— Karthick Naren (@karthicknaren_M) September 14, 2019
இந்நிலையில், இப்படத்தின் டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். டீசரை பார்த்த ரஜினி, பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.






