என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ராய் லட்சுமிக்கு வில்லனாக முன்னணி நடிகர் ஒருவர் நடித்துள்ளார்.
    சவுகார்பேட்டை படத்தில் ஸ்ரீகாந்தும் ராய் லட்சுமியும் இணைந்து நடித்தனர். அடுத்து மிருகா என்ற படத்தின் மூலம் 2வது முறையாக இணைந்துள்ளனர். இதில் ராய் லட்சுமி குழந்தையுடன் தனியாய் வசிக்கும் பெண்ணாகவும் அவருக்கு வில்லனாக ஸ்ரீகாந்தும் நடித்துள்ளனர். 

    தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் பி.வினோத் ஜெயின் தனது ஜாக்குவார் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிக்கிறார். எம்.வீ.பன்னீர் செல்வம் கதை, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்ய பாலாவின் முன்னாள் உதவியாளர் ஜே.பார்த்திபன் இயக்குகிறார். படம் பற்றி இருவரும் கூறியதாவது:- 

    வித்தியாசமான எண்ணம் கொண்ட ஒரு கொலைகாரனான ஸ்ரீகாந்த், தனது அழகு, பண்பு, படிப்பு ஆகியவற்றை முதலீடாக வைத்து, ஒரு ஒட்டுண்ணி போல பெண்களை ஏமாற்றி, வாழ்ந்து வருகிறார். அப்படி ராய்லட்சுமியை காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார்.

    ராய் லட்சுமி - ஸ்ரீகாந்த்

    அவரை ஏமாற்றிட நினைக்கும் போது, விதி வேறு விதமாக விளையாடுகிறது. இப்படி பூனையும் எலியும் கதை போல வேகமாக நகரும் கதையில் ஒரு கட்டத்தில் இவனது எல்லை மீறுகிறது. ஒரு பெண் தனக்கு சிக்கலான சூழல் ஏற்படுமானால், எதையும் எதிர்த்து நிற்பாள் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘மிருகா’.  

    ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி உடன் இணைந்து தேவ் கில், நைரா, வைஷ்ணவி சந்திர மேனன், த்விதா, பிளேக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சுதர்சன் படத்தொகுப்பை கவனிக்க, மிலன், எஸ் ராஜாமோகன் கலை இயக்கத்திற்குப் பொறுப்பேற்க, அதிரடி சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் மற்றும் ஸ்ரீதர் அமைத்திருக்கிறார்கள். அருள் தேவ் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்’ என்றார்.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘மாஃபியா’ படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
    தடம், சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘மாஃபியா’. `துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.

    விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 



    இந்நிலையில், இப்படத்தின் டீசரை ரஜினிக்கு பிரத்யேகமாக காண்பித்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் நரேன். டீசரை பார்த்த ரஜினி, பிரில்லியண்ட் ஒர்க் கண்ணா, செம்மையா இருக்கு என்று இயக்குனரையும் மாஃபியா படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார். 

    லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது. 
    ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படக்குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார்.
    இந்தியன் படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானிசங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகியோரும் நடிக்கின்றனர்.

    ரூ.200 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடந்தது. சித்தார்த், ரகுல் பிரீத்சிங் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. பின்னர் தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வயதான சேனாதிபதி தோற்றத்தில் கமல்ஹாசன் வருவதுபோன்ற காட்சியை படமாக்கினர்.

    கமல், ஷங்கர், காஜல் அகர்வால்

    அதன்பிறகு, வளசரவாக்கத்தில் வில்லன்களை வயதான கம்லஹாசன் வர்ம கலையால் தாக்கி சண்டை போடும் காட்சியையும் படம் பிடித்தனர். அடுத்த கட்டமாக ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியன்-2 படத்தில் வயதானவராகவும் இளமை தோற்றத்திலும் 2 வேடங்களில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

    முதல் பாகத்தில் இளம் வயது கமல் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியாக வந்தார். 2-ம் பாகத்தில் இளம் வயது கமல்ஹாசன் கதாபாத்திரத்தையும் நல்லவராக சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படப்பிடிப்பை தாமதம் இல்லாமல் வேகமாக நடத்தி முடிக்குமாறு படக்குழுவினரை கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட வேலைகள் வேகமெடுத்துள்ளன.
    இயக்குனர்கள் மற்றும் பட அதிபர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு வம்புக்கு இழுத்திருக்கிறார்.
    நடிகர்கள் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பட உலகை அதிர வைத்த ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். பின்னர் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறி சென்னையில் குடியேறினார். அவரது வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது.

    இயக்குனர் லாரன்சும் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்துள்ளார். பாலியல் கொடுமையில் சிக்கும் பெண்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் ஸ்ரீரெட்டி குரல் கொடுக்கிறார்.

    ஸ்ரீ ரெட்டியின் பதிவு

    இந்த நிலையில் நடிகை சமந்தாவை இப்போது வம்புக்கு இழுத்து இருக்கிறார். தனது முகநூல் பக்கத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் சமந்தாவின் புகைப்படத்தையும் தனது புகைப்படத்தையும் வெளியிட்டு சமந்தா பெரிய நடிகையாக இருக்கலாம் ஆனால் எங்கள் இருவரில் யார் கவர்ச்சி? என்று கேள்வி எழுப்பி உள்ளார். சமந்தாவை விட தனது தோற்றம் கவர்ச்சியாக இருப்பதாக அவர் சுட்டி காட்டி உள்ளார்.

    இது சமந்தா ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீரெட்டியை அவர்கள் கண்டித்து வருகிறார்கள். கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்த பிறகு நோயாளிபோல் இருக்கிறார். நடிகையர் திலகம் படம் டைரக்டரால் வெற்றி பெற்றதே தவிர கீர்த்தி சுரேசால் அல்ல என்று அவரையும் ஏற்கனவே சாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    தமிழில் முன்னணி காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, அடுத்ததாக பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்த தர்ம பிரபு, கூர்கா போன்ற படங்கள் ஏற்கனவே ரிலீசான நிலையில், பன்னி குட்டி, மண்டேலா, பப்பி போன்ற ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், பாலிவுட் படத்தில் அமீர் கானுடன் யோகி பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    விஜய் சேதுபதி, யோகி பாபு

    ஆஸ்கர் விருது வென்ற ஆங்கில படமான ‘பாரஸ்ட் கம்ப்’ என்ற படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கான் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக தான் யோகி பாபுவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள ‘கன்னி ராசி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் விமல் கதாநாயகனாகவும், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார். 

    விமல், வரலட்சுமி சரத்குமார்

    காதல், காமெடி, மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகி இருக்கும் இப்படம் செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் வெளியாகவில்லை. மேலும் இம்மாதம் இறுதியில் குடும்பங்களை மகிழ்விக்க ‘கன்னிராசி’ திரைப்படம் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
    ஏ.டி.ஞானம் இயக்கத்தில் அஜ்மல், பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே நடிப்பில் உருவாகும் “செகண்ட் ஷோ” படத்தின் முன்னோட்டம்.
    அஞ்சாதே, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடிக்கும் படம் “செகண்ட் ஷோ”. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கபடவுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக டார்க் ரூம் கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

    சஸ்பென்ஸ், த்ரில்லர், பேண்டஸியாக உருவாகும் இப்படத்தை ஏ.டி.ஞானம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். அஜ்மல் கதாநாயகனாக நடிக்க உடன் பல்லவி சுபாஷ், அக்ஷதா சோனவானே, பூஜா மான்டலே, ஹேமல், வித்யா, பிளாக் பாண்டி, இஷா சப்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

    தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்: தயாரிப்பு - டார்க் ரூம் கிரியேசன்ஸ், இயக்கம் - ஏ.டி.ஞானம், ஒளிப்பதிவு – எல்.கே.விஜய், படத்தொகுப்பு – ரங்கிஸ், பாடல் - பா.விஜய், நடனம் - சூரஜ் நந்தா, மக்கள் தொடர்பு – சதிஷ்.
    மான்ஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புதிய படத்தை பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்க உள்ளார்.
    இயக்குநர் ராதாமோகன் இயக்கும் புதிய படத்தினை ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து, நடிக்கவிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. குடும்பங்கள் ரசிக்கும் பல வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்த இயக்குனர் ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக  இந்தப் படத்தை இயக்க உள்ளார். சமீபகாலமாக  மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, முதல் முறையாக இயக்குனர் ராதா மோகனுடன் இணைந்து இப்படத்திலும் ஒரு மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். 

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் அலுவலக பூஜை இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். சென்னையில் வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பட விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள்
     
    ராதா மோகன், எஸ்.ஜே.சூர்யா, யுவன் ஷங்கர் ராஜா இணையும் இந்த பிரம்மாண்ட கூட்டணி 2020  பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. தற்போது எஸ்.ஜே.சூர்யா 'உயர்ந்த மனிதன்' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் 'இரவாக்காலம்' மற்றும் 'நெஞ்சம் மறப்பதில்லை' படங்கள் தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
    கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
    ‘சர்கார்’ படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் இந்திப் படங்களை ஒப்புக்கொண்ட கீர்த்தி சுரேஷ், தமிழில் மட்டும் எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை. ‘மைதான்’ இந்திப் படத்தில் நடித்துவரும் அவர், முதல் பாலிவுட் படம் என்பதால் அதில் கவனம் செலுத்தி வந்தார். இதற்கிடையே கடந்த மாதம் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தமிழ்ப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. 

    ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தை, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய, அனில் க்ரிஷ் எடிட் செய்கிறார். 

    டுவிட்டர் பதிவு

    முழுக்க த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு, கொடைக்கானலில் இன்று தொடங்கியது. விரைவில் படப்பிடிப்பை முடித்து, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
    இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனனுடன் ஜி.வி.பிரகாஷ் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளார்.
    கே புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ராஜராஜன் தயாரிக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கிறார். இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். 

    இவர் சீமதுரை, 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இவர்களுடன், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கவுதம் வாசுதேவ் மேனனும் இப்படத்தில் நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாசுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.

    ஜி.வி.பிரகாஷுடன் கவுதம் மேனன்

    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்‌ஷன் என முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது.
    ஆரியின் நெடுஞ்சாலை படத்தில் ஹீரோயினாக நடித்த ஷிவதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
    ஆரி நடித்த நெடுஞ்சாலை, கலையரசன் நடித்த அதே கண்கள் உட்பட ஒருசில தமிழ்ப் படங்களிலும், மலையாள திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷிவதா. இவர் சமீபத்தில் தனது நீண்டநாள் காதலரான முரளிகிருஷ்ணை என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை ஷிவதா கர்ப்பமான நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 

    ஷிவதா

    ஷிவதாவுக்கு கடந்த ஜூலை 20ந் தேதியே குழந்தை பிறந்திருந்தாலும் அவர் தற்போதுதான் இந்த தகவலை தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஷிவதாவின் குழந்தைக்கு அருந்ததி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஷிவதாவுக்கும் அவரது குழந்தைக்கும் உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ஷிவதா தற்போது பாபி சிம்ஹா நடித்த வல்லவனுக்கு வல்லவன், எஸ்.ஜே.சூர்யாவின் இரவாக்காலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
    கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திராவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 வருடங்களுக்குப் பிறகு தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானிசங்கர், சித்தார்த், ரகுல் ப்ரீத்சிங், நெடுமுடி வேணு, சமுத்திரக்கனி, விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

    ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகப் பணியாற்றும் இந்த படம், 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என தெரிகிறது. சித்தார்த் - ரகுல் ப்ரீத்சிங் சம்பந்தப்பட்ட காட்சிகள், இந்தியன் தாத்தா பங்குபெற்ற சண்டைக்காட்சி ஆகியவை முதல் கட்டப் படப்பிடிப்பில் படமாக்கப்பட்டுள்ளன. 

    இந்தியன் 2 பட போஸ்டர்

    சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இந்த சண்டைக்காட்சியை வடிவமைத்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் இந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ள படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக ஆந்திரா செல்ல உள்ளது. ‘பிக் பாஸ் 2’ மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையேயும் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்துக்காக நேரம் ஒதுக்கி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். 
    ×