என் மலர்
சினிமா செய்திகள்
பார்வையற்ற இளைஞரின் பாடும் திறமையை அங்கீகரிக்கும் விதமாக தனது அடுத்த படத்தில் பாடும் வாய்ப்பளிக்க உள்ளதாக டி.இமான் அறிவித்துள்ளார்.
பார்வையற்ற இளைஞர் ஒருவர் விஸ்வாசம் திரைப்பட பாடலை பாடிய காட்சி சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டனர். அதை கண்ட இசை அமைப்பாளர் டி. இமான், வலைதளவாசிகளின் உதவியுடன் அந்த இளைஞரை தொடர்பு கொண்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நொச்சிப்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி என்ற அந்த இளைஞரை தமது அடுத்த படத்தில் பாட வைக்கப்போவதாக கூறியுள்ளார். திருமூர்த்தியின் தொலைபேசி எண் கிடைக்க காரணமான அனைத்து நெட்டிசன்களுக்கும் டி.இமான் நன்றி தெரிவித்து கொண்டார். டி.இமானின் இந்த செயலை பாராட்டி ஏராளமானோர் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
Dear Online World! Kindly share this talent’s contact pls👍 https://t.co/OVFLAe76CD
— D.IMMAN (@immancomposer) September 21, 2019
அஜித்தின் விவேகம் படத்திற்கு வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்ஷராஹாசன் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகிய படம் ‘விவேகம்’. இயக்குனர் சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டமில்லை என்றே கூறப்பட்டது.
இந்நிலையில் விவேகம் படத்தின் வெளிநாட்டு உரிமை வழங்கியதில் மோசடி செய்ததாக தயாரிப்பாளர் தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியா, தாய்லாந்து, புரூனே உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் வெளியீட்டு உரிமையை, மலேசியாவைச் சேர்ந்த டி.எஸ்.ஆர். பட நிறுவனம், தியாகராஜனிடம் நான்கு கோடியே 25 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.

ஆனால், படத்தை வெளியிடும் உரிமையை வேறு நிறுவனத்துக்கு வழங்கி மோசடி செய்து விட்டதாகக் கூறி, அந்த நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், தியாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்நிறுவனம் தற்போது தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கி வரும் ‘பட்டாஸ்’ படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் பேட்ட படத்தின் வசூல் சாதனையை சூர்யா, மோகன்லால் நடிப்பில் வெளியான காப்பான் திரைப்படம் முறியடித்துள்ளது.
சூர்யா-கே.வி.ஆனந்த் 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த படம் ’காப்பான்’. மோகன்லால், ஆர்யா, சாயீஷா, பொம்மன் இரானி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20-ந் தேதி வெளியான காப்பான் படம் முதல் நாளில் 2.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன்மூலம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் ரஜினியின் பேட்ட படம் முதல் நாளில் 2.1 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. தற்போது காப்பான் படம் அதனை முறியடித்துள்ளது.
ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் உருவான 'கல்லி பாய்' திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரன்வீர் சிங், ஆலியா பட் நடிப்பில் ஸோயா அக்தர் இயக்கிய படம் 'கல்லி பாய்'. இந்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளியானது. ரூ. 230 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்தப் படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த சர்வதேச படம் என்ற பிரிவுக்கு இந்தியா சார்பில் இப்படம் ஆஸ்கர் விருதுக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருதைப் பெறுவதற்கு இந்தியப் படங்கள் போட்டியிட்டன. 28 படங்கள் அந்தப்பட்டியலில் இருந்த நிலையில், கல்லி பாய் பரிந்துரை செய்யலாம் என்று தேர்வுக்குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளது. 9 தேசிய விருதுகள் பெற்ற வங்காள இயக்குநர் அபர்ணா சென், தேர்வுக்குழுவின் தலைவராகச் செயல்பட்டார்.
வீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கில் நடிகர் மோகன்லால் மீது கேரள வனத்துறை சார்பில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்:
பிரபல நடிகர் மோகன்லாலுக்கு எர்ணாகுளம் மாவட்டம் தேவராவில் சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் அனுமதியின்றி யானை தந்தங்கள் வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் மோகன்லாலுக்கு யானை தந்தங்கள் பரிசாக கிடைத்ததாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவுலோஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இதில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டு இருப்பதாகவும், இதற்கு வனத்துறையினர் துணை போவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இதுதொடர்பான விவரங்களை தாக்கல் செய்யும்படி கேரள வனத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து நடிகர் மோகன்லால், ஓலூரை சேர்ந்த கிருஷ்ணகுமார், திருப்புனித்துறாவை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது கேரள வனத்துறை பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் நடிகர் மோகன்லால் உள்பட 4 பேர் விதிமீறலில் ஈடுபட்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.
பிரபல நடிகர் மோகன்லாலுக்கு எர்ணாகுளம் மாவட்டம் தேவராவில் சொந்த வீடு உள்ளது. இந்த வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் அனுமதியின்றி யானை தந்தங்கள் வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் மோகன்லாலுக்கு யானை தந்தங்கள் பரிசாக கிடைத்ததாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவுலோஸ் என்பவர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இதில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மீறப்பட்டு இருப்பதாகவும், இதற்கு வனத்துறையினர் துணை போவதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.
வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு இதுதொடர்பான விவரங்களை தாக்கல் செய்யும்படி கேரள வனத்துறைக்கு உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. இதனைத்தொடர்ந்து நடிகர் மோகன்லால், ஓலூரை சேர்ந்த கிருஷ்ணகுமார், திருப்புனித்துறாவை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னையை சேர்ந்த நளினி ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது கேரள வனத்துறை பெரும்பாவூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972-ன் கீழ் நடிகர் மோகன்லால் உள்பட 4 பேர் விதிமீறலில் ஈடுபட்டு இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்தனர்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
திரிஷா நடிப்பில் தற்போது `சதுரங்கவேட்டை 2', `கர்ஜனை' `பரமபதம் விளையாட்டு', ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதில் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சென்சாருக்கு சென்றுள்ளது. படத்தை பார்த்த குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிரம் காண்பித்து வருகின்றனர்.

திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார். நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
24 Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.
'பெட்ரோமாக்ஸ்', 'ஆக்ஷன்', 'சைரா நரசிம்மா ரெட்டி என பல படங்களில் நடித்து வரும் தமன்னா, தற்போது திடீர் முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
இந்தியில் தமன்னா நடிப்பில் வெளியான படம் 'காமோஷி'. இந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தமிழில் 'பெட்ரோமாக்ஸ்', 'ஆக்ஷன்', தெலுங்கில் 'சைரா நரசிம்மா ரெட்டி' உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, புதிதாக நடிக்கவுள்ள படங்களுக்காகக் கதைகளைக் கேட்டு வருகிறார்.
இதில் தமன்னாவிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகவுள்ளன. ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, நாயகியை மையமாகக் கொண்ட இரண்டு, மூன்று கதைகளை தமன்னா கேட்டிருக்கிறார். கதை பிடித்திருந்தால் கணிசமாகத் தனது சம்பளத்தைக் குறைக்கவும் அவர் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

முக்கியத்துவம் இல்லாத காட்சிகள் கொண்ட கதைகள் என்றால், அது பெரிய நாயகர்கள் நடிக்கும் படமாக இருந்தாலும் ஆர்வம் செலுத்த வேண்டாம் என்ற முடிவிலும் அவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'பெட்ரோமாக்ஸ்' படம் தீபாவளி வெளியீடாகவும், 'ஆக்ஷன்' படம் நவம்பர் வெளியீடாகவும் திரைக்கு வரவுள்ளது.
தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரசன்னா, மனைவி சினேகாவால் தான் இந்த மாற்றம் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார்.
சினேகாவும் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டு 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் விஹான் என்ற ஆண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு சினேகா குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
பிரசன்னா திருட்டுப்பயலே-2 படத்தில் வில்லன் வேடத்தை ஏற்று நடித்திருந்தார். மலையாளத்தில் அறிமுகமான பிரதர்ஸ்டே படம் சமீபத்தில் திரைக்கு வந்து கேரளாவிலும் பிரபலமாகி இருக்கிறார். மலையாள படத்தில் நடித்தது குறித்து பிரசன்னா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சிறுவயதிலேயே எனக்கு ஆசை இருந்தது. என்ஜினீயரிங் படித்த போதும் அந்த எண்ணம் மனதில் இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த லட்சியம் நிறைவேறியது.

எனது வாழ்க்கையை சினேகாவுக்கு முன்பு சினேகாவுக்கு பின்பு என்று பிரிக்கலாம். சினேகாவை மணந்த பிறகு வாழ்க்கையில் நல்ல நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக திட்டமிட்டேன். பிரதர்ஸ்டே படம் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது. இது மலையாளத்தில் எனக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். மலையாளத்தில் சரளமாக பேச கற்றுக்கொண்டேன்.
இவ்வாறு பிரசன்னா கூறினார்.
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது அவர் ஓய்வுக்காக வெளிநாடு சென்றுள்ளார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் கதிர், டேனியல் பாலாஜி, யோகிபாபு, இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதையடுத்து தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் வெளிநாடு சென்றுள்ளார். ஏர்போட்டில் விஜய் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறது.
விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத், அமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இயக்குனர் விஜய், ‘தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதா வாழ்க்கை படத்தை இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். ஜெயலலிதாவின் இளமைக் காலம் முதல் முதுமை பருவம் வரை நான்கு விதமான தோற்றங்களில் அவர் நடிக்கவுள்ளார்.
இதற்காக தமிழ் மொழி உச்சரிப்புக்கு பயிற்சி பெற்று வரும் அவர், பரத நாட்டியம் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளார். படத்தில் ஜெயலலிதா போல தோற்றமளிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். கங்கனாவுக்கான தோற்றங்களை வடிவமைக்க ஆலிவுட் ஒப்பனைக் கலைஞர் ஜேசன் காலின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபலமான பிளேட் ரன்னர், கேப்டன் மார்வெல் உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றியவர்.

ஜெயலலிதா போல உருவத்தை மாற்றுவதற்கான லுக் டெஸ்டிற்காக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு கங்கனா சென்றுள்ளார். லுக் டெஸ்ட் புகைப்படங்களை கங்கனா ரனாவத்தின் குழு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.
அதில், கங்கனா ரனாவத்தின் ஆடையின் மீது வெள்ளை நிற பேஸ்ட் முதலில் பூசப்படுகிறது. அதன் மேலேயே பச்சை நிற பேஸ்ட்டுடன் ஊதா நிற பேஸ்டை சேர்த்து முகம் மற்றும் தோள்பட்டைகளில் பூசப்படுகிறது.
இதுதொடர்பாக கங்கனா ரனாவத்தின் சகோதரி ரங்கோலி, “ப்ராஸ்தடிக்ஸுக் மேக்கப்புக்கான அளவீடுகள் இப்படித் தான் எடுக்கப்பட்டது. நடிகையாக இருப்பது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. கங்கனாவைப் பார்த்த எங்களுக்கே மிகவும் மூச்சுத் திணறக்கூடிய அளவில் இருந்தது. ஆனால், அவர் அந்த சமயத்தில் மிகவும் அமைதியாக இருந்தார்” என்று தெரிவித்துள்ளார்.
மான்ஸ்டர் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
விஷ்ணு விஷால் நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்லா அய்யாவு. இவர் விஷ்ணு விஷாலின் நெருங்கிய நண்பர். மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.
தற்போது 'ஜெர்சி' தமிழ் ரீமேக் மற்றும் 'எப்.ஐ.ஆர்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷ்ணு விஷால். இதனை தொடர்ந்து செல்லாவின் படம் தொடங்கும் எனத் தெரிகிறது. இதில் நாயகியாக நடிக்க பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நாயகன் - நாயகி கூட்டணி இணைந்து பணிபுரியும் முதல் படமாக இது அமைந்துள்ளது. 'மான்ஸ்டர்' வெற்றிக்குப் பிறகு பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். 'குருதி ஆட்டம்', 'களத்தில் சந்திப்போம்', 'கசடதபற', 'மாஃபியா' மற்றும் 'இந்தியன் 2' ஆகிய படங்களில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படங்கள் அனைத்தையும் முடித்துவிட்டு, விஷ்ணு விஷால் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிய ஸ்ரீரெட்டி, தற்போது ஒரு புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. ஆந்திராவில் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் ஸ்ரீரெட்டி பாலியல் புகார் பட்டியலில் சிக்கினர். தற்போது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகி வருகிறது.
சமூக வலைத்தளத்தில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளையும், கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. சமீபத்தில் சமந்தா மற்றும் தனது புகைப்படங்களை வெளியிட்டு இருவரில் யார் கவர்ச்சியாக இருக்கிறோம் என்று கேட்டு இருந்தார். சமந்தாவை வம்புக்கு இழுத்து இருப்பதாக அவரது ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்தனர்.

இந்த நிலையில் இன்னொரு சர்ச்சை படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதில் ஸ்ரீரெட்டி குட்டை உடை அணிந்து இருக்கிறார். கழுத்தில் செயின், மூக்கில் மூக்குத்தியும் அணிந்து இருக்கிறார். கையில் சிகார் சுருட்டு வைத்துக்கொண்டு ஆபாசமாக போஸ் கொடுத்து இருக்கிறார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு வழக்கம் போல் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது. சிலர் சுருட்டுடன் போஸ் கொடுத்ததை கண்டித்துள்ளனர்.






