என் மலர்
சினிமா செய்திகள்
தர்பார் படப்பிடிப்பு தளத்தில் மனைவி லதாவுடன் ரஜினிகாந்த் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக கூட்டணி சேர்ந்துள்ள ரஜினிகாந்த் 'தர்பார்' படத்தில் நடித்துவருகிறார். படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். படம் 2020 பொங்கல் அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் வெளியாகி ரஜினி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து மற்றுமொரு புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருக்க, அவரை பின்னால் இருந்து அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கட்டி அணைத்தவாறு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது வட மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜீவி திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதிய பாபு தமிழ் ’க்’ என்ற படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார்.
கால்பந்தாட்ட வீரனின் வாழ்க்கையை மையமாக வைத்து ’க்’ என்ற படம் உருவாகிறது. தர்மராஜ் பிலிம்ஸ் நவீன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பாபு தமிழ் எழுத்து இயக்கத்தில், அறிமுக நாயகன் யோகேஷ், குரு சோமசுந்தரம், அனிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் பாபு தமிழ் சமீபத்தில் வெளியாகி பாராட்டுகளையும், நல்ல விமர்சனங்களையும் பெற்ற ஜீவி திரைப்படத்திற்கு கதை, திரைகதை, வசனம் எழுதியவர்.

தனது முதல் பெரிய போட்டியிலேயே பலமாக காயமடைந்து விடும் ஒரு கால்பந்து வீரரின் வாழ்வில், அதன்பின் நடக்கும் சம்பவங்கள், அதன் மூலம் கிடைக்கின்ற சில நுண்ணிய தகவல்கள், தனக்கு ஏன் இப்படி நடந்தது, எதனால் இந்த கதிக்கு ஆளானோம் என அவன் ஆராய முற்படுகிறான். அதன் முடிவில் அவன் தனது வாழ்வை சீரமைத்துக் கொண்டானா இல்லையா என்பதே படத்தின் கதை.
மோத்தி பா இயக்கத்தில் விக்கி ஆதித்யா, ஹரிணி நடிப்பில் வெளியாகி இருக்கும் ’கோலா’ படத்தின் விமர்சனம்.
நகரில் போதை மருந்து நடமாட்டம் அதிகமாக இருக்கிறது என்றும், அதை ஒழிக்க காவல் துறை தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் மற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிடுகிறார். இந்த நிலையில், போதை மருந்து தயாரிக்கும் ரெட்டியும், அதை வினியோகிக்கும் கஜாவும் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது, போதை மருந்துகளை தன்னை தவிர வேறு யாருக்கும் கொடுக்க கூடாது என்று ரெட்டியிடம் ஒப்பந்தம் போடுகிறார், கஜா.
அதற்கு சம்மதிக்கும் ரெட்டி, போதை மருந்தை வினியோகிக்கும் ஒட்டுமொத்த உரிமையை கஜாவுக்கு கொடுக்கிறார். கஜா, போதை மருந்துகளை மருத்துவ கல்லூரி மாணவர்-மாணவிகள் மத்தியில் பரவ விடுகிறார். அந்த போதை மருந்துகளுக்கு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு இளைஞரும், கமிஷனரின் மகளும் அடிமை ஆகிறார்கள். அதில், நடுத்தர குடும்பத்து இளைஞர் பாதிக்கப்பட்டு உயிரை விடுகிறார். கமிஷனரின் மகள் கவலைக்கிடமான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகிறார்.

போதை மருந்து கலந்த உணவை சாப்பிட்ட குழந்தைகளும் பாதிக்கப்படுகிறார்கள். அதை நேரில் பார்த்த கஜா, போதை மருந்துகளை வினியோகிக்கும் தொழிலையே விட்டு விடுகிறார். அவருக்கு பதில் கஜாவின் வலது கையாக இருந்த பதி, அந்த தொழிலை ஏற்கிறார். இதனால் ஏற்படும் மோதல்களும், அதன் விளைவுகளும்தான், ‘கோலா.’
படத்தின் தயாரிப்பாளர் மோத்தி பா 'கஜா' கதாபாத்திரத்தில் நடித்து, படத்தை இயக்கியும் இருக்கிறார். ‘கஜா’ கதாபாத்திரத்தில் அவர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அவருடைய வசன உச்சரிப்பே மிரட்டலாக இருக்கிறது. போதை மருந்தின் பாதிப்புகளை சொல்லியிருக்கும் விதத்தில், படத்தின் விறுவிறுப்பு கூடுகிறது.

கதாநாயகன் விக்கி ஆதித்யாவுக்கு அதிக வேலை இல்லை. மருத்துவ கல்லூரி மாணவியாகவும், கமிஷனரின் மகளாகவும் வரும் ஹரிணி, கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். கமிஷனராக ஜீவா ரவி, கஜாவின் வலதுகையாக பாபு, மனைவியாக சந்தானலட்சுமி ஆகியோரும் கதாபாத்திரங்களாக கவனம் ஈர்க்கிறார்கள்.
ரெட்டி கதாபாத்திரத்தில் தருண் மாஸ்டர் வருகிறார். அவரை இன்னும் பயன்படுத்தி இருக்கலாம். அமுதவாணன், ஜீவா பாலா ஆகிய இருவரும் சிரிக்க வைக்க முயற்சித்து இருக்கிறார்கள். தமீன் ஜே.அலெக்சின் ஒளிப்பதிவும், கண்மணி ராஜாவின் பின்னணி இசையும் படத்துக்கு வேகம் கூட்டுகின்றன.
மொத்தத்தில் ’கோலா’ நல்ல முயற்சி.
தேவர்மகன் 2-ம் பாகத்திற்கான கதை தயாராக இருப்பதாகவும் கமல் சம்மதித்தால் அப்படத்தை இயக்குவேன் என்றும் இயக்குனர் சேரன் தெரிவித்துள்ளார்.
ஆட்டோகிராப், வெற்றிக்கொடி கட்டு, பொற்காலம் என தமிழில் வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் தன் திறமையை நிரூபித்தவர். பிக்பாஸ் 3-வது சீசனில் சேரன் போட்டியாளராக கலந்து கொண்டது மக்களை பெரிதும் ஆச்சர்யப்படுத்தியது. அவர் இந்த முறை டைட்டில் வெல்வார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் 2 வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் சென்னை வடபழனியில் ஒரு தனியார் திரையரங்கில் நடைபெற்ற ‘வெல்கம் பேக் சேரன்’ என்ற நிகழ்வில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- ‘பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் பங்குபெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரையும் பற்றி நன்றாக தெரியும். நான் இயக்குநர் என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதன் என்பதை மக்களுக்கு புரிய வைத்துவிட்டேன்.

நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போக காரணம் நடிகர் விஜய்சேதுபதி தான். அவரை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளேன். என்னிடம் ஒருநாள் போனில் பேசிய அவர், ‘நீங்கள் வெற்றி இயக்குநர் என்பது இப்போது இருக்கும் இளம் தலைமுறைகளுக்கு தெரியாது. அவர்கள் மனதில் எல்லாம் இடம் பிடிக்க வேண்டும். எல்லோர் இல்லத்திலும் சேரன் எளிதாக நுழைய வேண்டும். அதற்கு நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டும்‘ என்றார்.
அவர் ஆலோசனையின்படி தான், நான் பிக்பாஸ் நிகழ்ச்சில் பங்கு பெற்றேன். பிக்பாஸ் நிகழ்ச்சி எழுதி இயக்கப்படும் நிகழ்ச்சி அல்ல. கூடிய விரையில் விஜய்சேதுபதியை வைத்து படம் இயக்குவேன்” என சேரன் தெரிவித்தார். கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்குவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சேரன், “பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது கமலை வைத்து தேவர் மகன் 2 படத்தை இயக்க வேண்டும் என விரும்பினேன். அதற்கான கதையும் என்னிடம் உள்ளது. கமல் சம்மதித்தால் தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுப்பேன். இதை கமல்ஹாசனிடமும் தெரிவித்து விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெப் தொடர் ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் படங்களாக வெளிவந்துள்ளன. தற்போது வெப் தொடர்களாகவும் தயாராகின்றன. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கையை இயக்குனர் கவுதம் மேனன் வெப் தொடராக எடுத்து வருகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.
தற்போது காமராஜர் வாழ்க்கை வரலாறும் வெப் தொடராக தயாராக உள்ளது. ஏற்கனவே காமராஜர் வாழ்க்கையை 2004-ல் திரைப்படமாக எடுத்து வெளியிட்டனர். அந்த படம் அரசியல் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தமிழக அரசின் சிறப்பு விருதையும் பெற்றது.

இதுபோல் ‘த கிங்மேக்கர்’ என்ற பெயரில் டி.வி தொடராகவும் ஒளிபரப்பானது. தற்போது காமராஜர் வாழ்க்கையை வெப் தொடராக எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. 40 பாகங்களாக இந்த வெப் தொடர் தயாராகிறது. பிரதீப் மதுரம் காமராஜர் வேடத்தில் நடிக்க உள்ளார். ரமணா கம்யூனிகேஷன் தயாரிக்கிறது. பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள காட்சிகளை தற்போதைய டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பித்து புதிய காட்சிகளையும் படமாக்கி இந்த வெப் தொடர் உருவாக்கப்படும் என்று அறிவித்து உள்ளனர். காமராஜரின் அரசியல் சுயநலமற்ற அணுகுமுறை, பல தலைவர்களை அதிகாரத்தில் அமர்த்திய தன்மை, நிறைவேற்றிய நலத்திட்டங்கள் போன்றவை இந்த வெப் தொடர் மூலம் மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கப்படும் என்று இயக்குனர் பாலகிருஷ்ணன் கூறினார்.
மும்பையை சேர்ந்த தொழில் அதிபருடன் தமன்னாவுக்கு திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது.
தற்போது பெட்ரோமாக்ஸ் என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. தமிழ் தெலுங்கில் திரைக்கு வர உள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தட் இஸ் மகாலட்சுமி என்ற இன்னொரு படமும் தமன்னா நடிப்பில் வெளியாக இருக்கிறது. இந்தி படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

தமன்னாவுக்கு தற்போது 29 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் அவசரப்படுவதாகவும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக திட்டமிட்டு உள்ளார் என்றும் கூறப்பட்டது.
இதற்கு தமன்னா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “மும்பை தொழில் அதிபருடன் எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக வெளியான தகவல் வதந்திதான். நான் சினிமாவில் இருந்து விலகவும் மாட்டேன். எனக்கு எதிராக திட்டமிட்டு இந்த வதந்திகள் பரப்பப்படுகிறது. இப்போது நான் திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை” என்றார்.
அமிதாப்பச்சன், தர்மேந்திரா நடித்த ஷோலே திரைப்படத்தில் காளியா கதாபாத்திரத்தில் நடித்த பழம்பெரும் நடிகரான விஜு கோட்டே மும்பையில் காலமானார்.
பழம்பெரும் நடிகரான விஜு கோட்டே (வயது 77) 1964 ஆம் ஆண்டில் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். 300க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ஷோலே திரைப்படத்தில் காளியா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
அண்டாஸ் அப்னா , கயாமத் சே கயாமத் டக் , வெண்டிலேட்டர், கித்னே ஆத் மே, டு சர்கார் ஆகியவை விஜு கோட்டே நடித்த திரைப்படங்களில் நல்ல வரவேற்பை பெற்றவை ஆகும். அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜு கோட்டேவுக்கு பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட்டில், உறக்கத்திலேயே விஜு கோட்டேவின் உயிர் பிரிந்தது. மருத்துவமனையில் உயிரிழப்பதை விஜு கோட்டே விரும்பாத காரணத்தால் தான் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் டிரைலர் நடிகர் விஜய், பட விழாவில் பேசிய குட்டிக் கதையில் இருந்து ஆரம்பிக்கிறது.
தமன்னா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பெட்ரோமாக்ஸ்’. ஈகிள் ஐ புரொடக்ஷன் தயாரித்திருக்கும் இப்படத்தை 'அதே கண்கள்' இயக்குநர் ரோஹின் வெங்கடேஷன் இயக்கியுள்ளார்.
யோகிபாபு, மன்சூர் அலிகான், பகவதி, காளி வெங்கட், சத்யன், முனீஸ் காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, டானி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் தெலுங்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு டாப்ஸி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'அனந்தோ பிரம்மா' படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும். இந்நிலையில் இப்படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் அக்டோபர் 11 தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. இந்த டிரைலர் ஆரம்பத்தில் விஜய்யின் குட்டி கதை சொல்வது போல் தொடங்குகிறது. அதன்பின் கதை மற்றும் கேரக்டர்கள் விளக்கி சொல்லப்படுகிறது.
ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தை பார்த்த மலேசிய கல்வி அமைச்சர் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டை தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளின் நிலையையும், அரசு ஆசிரியர்களின் நிலையையும் நடைமுறை மாறாமல் கூறிய படம் ‘ராட்சசி’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், ஜோதிகா நடிப்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.
இப்படத்தைப் மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக், ஒரு கல்வி அமைச்சராக இப்படத்தைப் பார்க்கும்போது எங்கள் நாட்டு சூழலோடு பொருத்திப் பார்க்கிறேன், நாம் செய்ய வேண்டிய பலவகையான திட்டங்களும், மாற்றங்களும் பற்றி இந்த படத்தில் கூறியிருக்கிறார்கள். ஒரு நாட்டில் கல்வியை வளர்ப்பதே அனைத்துக் கட்சியினருடைய இலக்காக இருக்க வேண்டும். அதைதான் நாங்கள் செய்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

மேலும், இப்படக்குழுவினருக்கும், நாயகியாக நடித்த ஜோதிகாவிற்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்திருந்தார். இதற்கு ஜோதிகாவும், இந்திய படத்தைப் பார்த்து அதில் கூறியதுபோல், தங்கள் நாட்டில் மாற்றம் கொண்டுவர விரும்பும் தங்களுக்கு நன்றி என்று பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார் மலேசியா நாட்டின் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக். இது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.
நடிகை தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் பெட்ரோமாக்ஸ் திரைப்படம் விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களுக்கு முன்பே வெளியாக இருக்கிறது.
அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘பெட்ரோமாக்ஸ்’. ஹாரர் காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிப்ரான இசையமைத்துள்ள இப்படத்தை ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் தமன்னாவுடன் யோகிபாபு, மன்சூர் அலிகான், பகவதி, காளி வெங்கட், சத்யன், முனீஸ் காந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். டானி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லியோ ஜான்பால் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். இப்படம் தீபாவளி தினத்தில் விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி படங்களுடன் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இதில் தீபாவளிக்கு முன்பு அக்டோபர் 11ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர், துருவ் விக்ரம் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ந்தேதி ரிலீஸ் ஆகிறது. ஆனாலும் தற்போதே துருவ் விக்ரமிற்கு அதிக அளவில் ரசிகர்கள் சேர்ந்துவிட்டார்கள். குறிப்பாக துருவ்வுக்கு இளம் ரசிகைகள் அதிகமாகி உள்ளனர்.
இந்த நிலையில் துருவ் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக பிரபல மலையாள நடிகை பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். ஒரு அடார் லவ் மலையாள படத்தில் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு ஜோடியாக ரோஷன் நடித்திருந்தார்.

பிரியா வாரியர் தற்போது இந்தியில் நடித்து வருகிறார். ஆனாலும் தன்னுடன் முதல்படத்தில் இணைந்து நடித்த ரோஷனுடன் டேட்டிங் செய்வதாகவும் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
அட்லீ இயக்கி வரும் ‘பிகில்’ படத்தில் தன் பணிகளை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்துக்காக தயாராகி வருகிறார் விஜய். இதன் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் முதல் வாரம் படப்பிடிப்பு என்பதால், நடிகர்கள் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விஜய் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது படக்குழுவினர் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
We are overwhelmed and excited to have our versatile star, '#MakkalSelvan’ @VijaySethuOffl sir on board for #Thalapathy64 🔥 #VJSjoinsThalapathy64#Summer2020@actorvijay@Dir_Lokesh@anirudhofficial@SonyMusicSouthpic.twitter.com/JyFFosIVbj
— XB Film Creators (@XBFilmCreators) September 30, 2019
தொடர்ந்து மூன்று நாட்கள் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிடுவதாக கூறிய படக்குழு, தற்போது முதல் அறிவிப்பாக விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.






