என் மலர்
சினிமா செய்திகள்
ஒரு அடார் லவ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை பிரியா வாரியர், துருவ் விக்ரம் மீது ஈர்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்.
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் ஆதித்ய வர்மா படம் நவம்பர் 8ந்தேதி ரிலீஸ் ஆகிறது. ஆனாலும் தற்போதே துருவ் விக்ரமிற்கு அதிக அளவில் ரசிகர்கள் சேர்ந்துவிட்டார்கள். குறிப்பாக துருவ்வுக்கு இளம் ரசிகைகள் அதிகமாகி உள்ளனர்.
இந்த நிலையில் துருவ் மீது தனக்கு ஈர்ப்பு இருப்பதாக பிரபல மலையாள நடிகை பிரியா வாரியர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். ஒரு அடார் லவ் மலையாள படத்தில் கண்ணடித்து பிரபலமான நடிகை பிரியா பிரகாஷ் வாரியருக்கு ஜோடியாக ரோஷன் நடித்திருந்தார்.

பிரியா வாரியர் தற்போது இந்தியில் நடித்து வருகிறார். ஆனாலும் தன்னுடன் முதல்படத்தில் இணைந்து நடித்த ரோஷனுடன் டேட்டிங் செய்வதாகவும் இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 64’ படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
அட்லீ இயக்கி வரும் ‘பிகில்’ படத்தில் தன் பணிகளை முடித்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் படத்துக்காக தயாராகி வருகிறார் விஜய். இதன் முதல்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் முதல் வாரம் படப்பிடிப்பு என்பதால், நடிகர்கள் தேர்வும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விஜய் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது படக்குழுவினர் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
We are overwhelmed and excited to have our versatile star, '#MakkalSelvan’ @VijaySethuOffl sir on board for #Thalapathy64 🔥 #VJSjoinsThalapathy64#Summer2020@actorvijay@Dir_Lokesh@anirudhofficial@SonyMusicSouthpic.twitter.com/JyFFosIVbj
— XB Film Creators (@XBFilmCreators) September 30, 2019
தொடர்ந்து மூன்று நாட்கள் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிடுவதாக கூறிய படக்குழு, தற்போது முதல் அறிவிப்பாக விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக கூறியிருக்கிறார்கள்.
ஐ, 2.0 படங்களில் நடித்து மிகவும் பிரபலமான எமி ஜாக்சன், ஒரு வாரத்திற்கு முன்பு தனக்கு பிறந்த குழந்தையை வைத்து போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
மதராசப்பட்டினம், ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த இவர் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. ஜார்ஜ் பெனாய்டோ என்ற தொழிலதிபரை காதலிப்பதாக அறிவித்தார். பின்னர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானதாக கடந்த மார்ச் மாதம் எமி கூறினார்.
அதனை தொடர்ந்து கர்ப்பிணியான எமிக்கும், அவரது காதலருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குழந்தை பிறந்த பின்னர் அவர்களது திருமணம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Just a little something to brighten up your Monday! Good morning from Andreas Jax Panayiotou ❤️ pic.twitter.com/hoLw8m1jS2
— Amy Jackson (@iamAmyJackson) September 30, 2019
கடந்த செப்டம்பர் 23ம் தேதி எமி ஜாக்சனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆன்ட்ரியேஸ் என்று பெயர் வைத்து குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
தற்போது ஒரு வாரம் மட்டுமே ஆன குழந்தைக்கு போட்டோஷூட் நடந்தி இருக்கிறார். அதில் ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் எமி ஜாக்சன்.
பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 64’ படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லி இயக்கியுள்ள இப்படம் தீபாவளி விடுமுறையில் வெளியாக இருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.
இப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்க இருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முடிந்துள்ள நிலையில், அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

இந்நிலையில், தொடர்ந்து மூன்று நாட்கள் இப்படத்தை பற்றிய அறிப்பை வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அதாவது 30, 1, 2 ஆகிய தேதிகளில் தினமும் 5 மணிக்கு படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட இருக்கிறார்கள். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் அவர்களது திருமணம் டிசம்பர் 25-ந் தேதி நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், சிலர் அவர்களுக்குள் திருமணம் நடந்துவிட்டது அதனால் தான் ஒன்றாக வசிக்கிறார்கள் என்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டாதகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை நயன்தாராதான் அருகில் இருந்து கவனித்துக் கொண்டாதாகவும் செய்திகள் வருகின்றன. கடந்த சில நாட்களாக அவர்கள் இருவரது திருமணம் பற்றி பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இருவருக்கும் டிசம்பர் 25-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல் பரவி வருகிறது. அது இந்து முறைப்படி நடக்குமா, கிறிஸ்துவ முறைப்படி நடக்குமா என்பது வரை கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
விக்னேஷ் சிவன் இந்து மதத்தை சேர்ந்தவர். நயன்தாரா கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை முன்னிட்டு பிரம்மாண்டமான பார்ட்டி ஒன்றை நடத்தினார் நயன்தாரா. அது கூட திருமணத்திற்கு முந்தைய ஒரு சிறப்பு அழைப்பு என்று சொல்கிறார்கள்.
மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ள நெற்றிக்கண் படத்தில் வடசென்னை பட பிரபலம் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார். லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை கவனிக்கிறார். கமலநாதன் கலை இயக்கத்தில் நவீன் சுந்தரமூர்த்தி வசனத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.
இப்படத்தில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்க உள்ளார். மேலும் இப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ’பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வட சென்னை படத்தில் நடித்து பிரபலமான சரண் சக்தி இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஜில்லா, கடல் போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்த இவர் சகா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் தற்போது கன்னடத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கே.ஜி.எப். படத்தின் 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார்.
ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா, யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தின் முன்னோட்டம்.
அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘பெட்ரோமாக்ஸ்’. ஹாரர் காமெடி படமாக உருவாகி உள்ள இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜிப்ரான இசையமைத்துள்ள இப்படத்தை ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தில் தமன்னாவுடன் யோகிபாபு, மன்சூர் அலிகான், பகவதி, காளி வெங்கட், சத்யன், முனீஸ் காந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். டானி ரேமண்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு லியோ ஜான்பால் படத்தொகுப்பு பணிகளை கவனித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ஆனந்தோ பிரம்மா படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
பிகில் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்த இறைச்சி வியாபாரிகளுக்கு கறி வெட்டும் கட்டை மற்றும் கத்தியை இலவசமாக வழங்கி விஜய் ரசிகர்கள் சமாதானம் செய்துள்ளனர்.
விஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி பிகில் படம் திரைக்கு வருகிறது.
இதனிடையே, நடிகர் விஜய் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இறைச்சியை வெட்டும் கட்டை மீது செருப்பு அணிந்து கால் வைத்திருப்பது இறைச்சி வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக இறைச்சி வியாபாரிகள் கோவை கலெக்டரிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, இறைச்சி வியாபாரிகளுக்கு கறி வெட்டும் கட்டை மற்றும் கத்தியை விஜய் ரசிகர்கள் இலவசமாக வழங்கியுள்ளனர். இதனையடுத்து பிகில் படத்திற்கு எதிரான போராட்டங்களை இனி செய்ய மாட்டோம் என இறைச்சி வியாபாரிகள் தரப்பில் இருந்து உறுதி மொழி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆங்கில தொடரில் நடிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், இந்திய மொழி படங்களில் நடிப்பதையே விரும்புவதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த், திரிஷா நடித்து திரைக்கு வந்த ‘பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இந்தி, மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள் ஆவார்.
மலையாளத்தில் துல்கர் சல்மானுடன் நடித்த ‘பட்டம் போல’ என்பதுதான் மாளவிகாவுக்கு முதல் படம். அந்த படத்துக்கு பிறகு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தன. இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இவர் அடுத்ததாக விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 64’ படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்காவில் தயாராகும், ஆங்கில இணைய தொடர் ஒன்றில் நடிக்கிறார். இது குறித்து மாளவிகா கூறியதாவது:- ’ஆங்கில தொடரில் நடிப்பது மகிழ்ச்சி அளித்தாலும், இந்திய மொழி படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.
விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் புதிய படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக நடிக்க உள்ளார்.
தமன்னா வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். பாகுபலி சரித்திர கதையில் வாள் சண்டையிடும் போர் வீராங்கணையாக வந்தார். திரைக்கு வர உள்ள பெட்ரோமாக்ஸ், சைரா நரசிம்ம ரெட்டி, தட் ஈஸ் மகாலட்சுமி படங்களிலும் அழுத்தமான வேடம். விஷால் ஜோடியாக நடிக்கும் ஆக்ஷன் படத்தில் ராணுவ உளவு அதிகாரி கதாபாத்திரம்.
தற்போது தெலுங்கில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதை 'பெங்கால் டைகர்' வெற்றி படத்தை எடுத்து பிரபலமான சம்பத் நந்தி இயக்குகிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் இந்த படத்தில் தமன்னா கபடி பயிற்சியாளராக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் கபடி விளையாடி பயிற்சி எடுத்து வருகிறார். ஏற்கனவே தமிழில் வெண்ணிலா கபடி குழு உள்பட பல படங்கள் கபடி விளையாட்டை மையமாக வைத்து வெளியாகி வெற்றி பெற்றுள்ளன.

அதுபோல் தெலுங்கில் தயாராகும் இந்த படமும் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள். இதில் நடிப்பது குறித்து தமன்னா கூறும்போது, “விளையாட்டை மையமாக வைத்து தயாராகும் படத்தில் பயிற்சியாளராக நடிப்பது மகிழ்ச்சியான விஷயம். அதுமாதிரி ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைப்பதை பெருமையாக நினைக்கிறேன். இந்த கதாபாத்திரம் எனது மனதுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது” என்றார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளார்.
நடிகர் தனுஷ் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள அசுரன் படம் வருகிற அக்டோபர் 4-ந் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் துரை செந்தில்குமார் இயக்கும் பட்டாஸ் படத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுத்து முடிக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார். இப்படத்தை தொடர்ந்து பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படம் தொடர்பாக விவாதிக்க மாரி செல்வராஜ் லண்டன் சென்றுள்ளார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த கொடி படத்திற்கு இசையமைத்திருந்தார். லண்டனில் மாரி செல்வராஜ், தனுஷுடன் சந்தோஷ் நாராயணன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யோகிபாபு நடித்த இருட்டு, பப்பி, பெட்ரோமாக்ஸ், பட்லர் பாபு ஆகிய 4 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் அஜித், விஜய், ரஜினி உள்பட அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி முக்கிய கேரக்டரிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு நடித்த நான்கு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன.

வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளிவரும் ‘பட்லர் பாபு’ , சுந்தர் சி-யின் ’இருட்டு’, வருண் நடித்த ’பப்பி’, தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் யோகி பாபு நடித்துள்ளார். இதுபோக அவர் தற்போது சுமார் பத்து படங்களில் காமெடி நடிகராகவும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






