என் மலர்tooltip icon

    சினிமா

    இறைச்சி வியாபாரிகளுக்கு கறி வெட்டும் கட்டை வழங்கிய விஜய் ரசிகர்கள்
    X
    இறைச்சி வியாபாரிகளுக்கு கறி வெட்டும் கட்டை வழங்கிய விஜய் ரசிகர்கள்

    பிகில் போஸ்டர் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் ரசிகர்கள்

    பிகில் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்த இறைச்சி வியாபாரிகளுக்கு கறி வெட்டும் கட்டை மற்றும் கத்தியை இலவசமாக வழங்கி விஜய் ரசிகர்கள் சமாதானம் செய்துள்ளனர்.
    விஜய்-நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள படம் பிகில். அட்லீ இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தீபாவளியை முன்னிட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி பிகில் படம் திரைக்கு வருகிறது. 

    இதனிடையே, நடிகர் விஜய் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இறைச்சியை வெட்டும் கட்டை மீது செருப்பு அணிந்து கால் வைத்திருப்பது இறைச்சி வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக இறைச்சி வியாபாரிகள் கோவை கலெக்டரிடம் புகார் அளித்திருந்தனர். 

    விஜய் ரசிகர்கள் வழங்கிய கறி வெட்டும் கட்டை

    இந்நிலையில், கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, இறைச்சி வியாபாரிகளுக்கு கறி வெட்டும் கட்டை மற்றும் கத்தியை விஜய் ரசிகர்கள் இலவசமாக வழங்கியுள்ளனர். இதனையடுத்து பிகில் படத்திற்கு எதிரான போராட்டங்களை இனி செய்ய மாட்டோம் என இறைச்சி வியாபாரிகள் தரப்பில் இருந்து உறுதி மொழி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×