என் மலர்
சினிமா செய்திகள்
யோகிபாபு நடித்த இருட்டு, பப்பி, பெட்ரோமாக்ஸ், பட்லர் பாபு ஆகிய 4 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் அஜித், விஜய், ரஜினி உள்பட அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி முக்கிய கேரக்டரிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் யோகி பாபு நடித்த நான்கு திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன.

வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளிவரும் ‘பட்லர் பாபு’ , சுந்தர் சி-யின் ’இருட்டு’, வருண் நடித்த ’பப்பி’, தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’ ஆகிய நான்கு திரைப்படங்களில் யோகி பாபு நடித்துள்ளார். இதுபோக அவர் தற்போது சுமார் பத்து படங்களில் காமெடி நடிகராகவும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தது ஏன் என்பது குறித்து விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் எஸ்.ஏ.சந்திரசேகர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:- "நடிகர் விஜய் ஜனநாயக நாட்டின் குடிமகன் என்ற முறையில் சுபஸ்ரீ மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அதற்கு எதிராக யார் பேசினாலும் எங்களுக்கு கவலையில்லை. தமிழ் திரைத்துறை வளர்ச்சிக்காக தமிழக அரசு தற்போது எடுத்துவரும் சில நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. பிகில் படத்தை வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது" என்றார்.

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குறித்து பேசிய நடிகர் விஜய் தமிழக அரசை மறைமுக சாடினார். அதற்கு தமிழக அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தி சினிமாவை விட தென்னிந்திய சினிமாவே மேல் என நடிகை மந்திரா பேடி தெரிவித்துள்ளார். இவர் தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
90களின் ஆரம்பத்தில் சாந்தி என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் புகழ்பெற்றவர் மந்திரா பேடி. தொடர்ந்து பல தொடர்களில் நடித்தாலும் 2003-ல் ஆரம்பித்து, தொடர்ந்து பல்வேறு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் ஒளிபரப்பில் தொகுப்பாளராக மந்திரா பேடி தோன்றியது, அவருக்கு சர்வதேச அளவில் புகழைத் தேடித்தந்தது.
இதன் காரணமாக 2004-ல் தமிழில் ‘மன்மதன்’ படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘சாஹோ’ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வரும் மந்திரா பேடி தென்னிந்திய சினிமாவில் சில படங்கள் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது:- “அங்கு எனக்கு தரப்படும் கதாபாத்திரங்கள் நவீனமாக இருக்கின்றன. வேலை கலாச்சாரம் பல வகைகளில் மும்பையை விட மேம்பட்டதாக இருக்கிறது. அவர்கள் சுறுசுறுப்புடன் வேலை செய்கின்றனர்.

ஒரு பட வேலைக்கான கால நேரம் சரியாக திட்டமிடப்படுகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள முடிகிறது. எனக்காக கதாபாத்திரங்கள் எழுதப்படுகின்றன. இந்த அனுபவங்கள் என் திறமைகளை பட்டை தீட்ட உதவியதற்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். மொழிப் பிரச்சினையைத் தாண்டி வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாஹோ’ படத்தில் நடித்ததற்காக நடிகர் பிரபாஸ் ரூ.70 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 பிரமாண்டமான படங்களில் கதாநாயகனாக நடித்தவர், தெலுங்கு நாயகன் பிரபாஸ். இந்த 2 படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு பட உலகில் பிரபாசின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்தது. இந்த சூடு குறைவதற்குள் அவர், ‘சாஹோ’ என்ற மற்றொரு பிரமாண்டமான படத்தில் நடித்தார்.
சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாஹோ’ படம், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் படுதோல்வி அடைந்தது. ஆனால், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ‘சாஹோ’ வெற்றி பெற்றது. ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. ‘சாஹோ’ படத்துக்காக கதாநாயகன் பிரபாஸ் ரூ.70 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது, மற்ற தெலுங்கு நாயகர்களுக்கு சவாலாக அமைந்து இருக்கிறது. பிரபாசை விட ஒரு ரூபாயாவது அதிக சம்பளம் வாங்கிவிட வேண்டும் என்று மனதுக்குள் சபதம் எடுத்து இருக்கிறார்களாம்.
சைரா நரசிம்ம ரெட்டியின் வரலாறு இந்திய சரித்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, ராம் சரண், தமன்னா உள்ளிட்டோருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் சிரஞ்சீவி பேசும் போது, “நான் நடிகராக பிறந்தது சென்னையில் தான். அந்த இடத்துக்கு நீண்ட இடைவேளைக்குப் பின் வந்துள்ளேன். 12 ஆண்டுகளாக இந்தக் கதை பண்ண காத்திருந்தேன். அப்போது படத்தின் பொருட்செலவு அதிகமாக இருந்தது. பின்பு அரசியல் சென்றேன். 9 ஆண்டுகளாக எந்தவொரு படத்திலும் நடிக்காமல் இருந்தேன். பின்னர் தமிழ் படமான ‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் நடித்தேன். படம் ஹிட். மீண்டும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

’பாகுபலி’ பார்த்தவுடன், ’சைரா’ படத்தைப் பல கோடி பொருட்செலவில் எடுக்க முடிவு செய்தோம். என் மகனே படத்தைத் தயாரித்தார். பொதுவாக சினிமாவில் மகனை அப்பா தான் விளம்பரப்படுத்துவார். ஆனால் இந்த படத்தை தயாரித்து என் மகன் என்னை விளம்பரம் செய்து வருகிறான். என் மகன் ராம் சரணுக்கு 2 வது படமே வரலாற்று படமாக அமைந்து விட்டது. ஆனால் எனக்கு இப்போது தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. என் நண்பர் கமல்ஹாசன் தமிழ் பதிப்புக்கு படத்தின் அறிமுக காட்சிக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். எனக்கு தமிழில் அரவிந்த்சாமி டப்பிங் பேசியிருக்கிறார்.
சைரா வரலாறு இந்தியச் சரித்திரத்தில் மறைக்கப்பட்டுள்ளது. வெள்ளையர்களுக்கு எதிராக பலருக்கு முன்னதாகவே போர் தொடுத்தவர் சைரா. இது எந்த மொழி படமும் அல்ல. இந்தியா முழுக்க பார்க்க வேண்டிய இந்தியப் படம். ‘சைரா’வில் நடித்த அமிதாப்புக்கு நன்றி. மிகுந்த பிசியான நேரத்திலும் இந்தப் படத்தில் எங்களுக்காக நடித்த கொடுத்த விஜய் சேதுபதிக்கு நன்றி. என்னை தான் எளிமையானவர் என கூறுவார்கள். ஆனால், என்னைவிட விஜய் சேதுபதி தான் எளிமையானவர். நயன்தாரா, தமன்னா சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர்” என்று பேசினார் சிரஞ்சீவி.
பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் கமல்ஹாசனும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, ராம் சரண், தமன்னா உள்ளிட்டோருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் சிரஞ்சீவி பேசும் போது, ”என் நண்பர் கமல்ஹாசன் சைரா படத்தின் தமிழ் பதிப்பிற்கு அறிமுக காட்சிக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இந்த காட்சிக்கு தெலுங்கில் பவன் கல்யாண் குரல் கொடுத்துள்ளார். மலையாளத்தில் மோகன் லால் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ் பதிப்பிற்கு குரல் கொடுக்குமாறு நான் அணுகிய உடனே சம்மதம் தெரிவித்தார் கமல்ஹாசன். அவருக்கு நன்றி” எனக் கூறினார்.
இளையராஜாவுடன் மோதல் ஏற்பட்டதாக செய்திகள் பரவி வந்த நிலையில், அது குறித்து இயக்குனர் சீனு ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாமனிதன்’. யுவன் சங்கர் ராஜா தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைத்து வருகிறார்கள்.
இந்த படம் தொடங்கப்பட்ட போது, ‘மாமனிதன்’ மூலமாக இளையராஜா - வைரமுத்து மீண்டும் இணைவார்கள் என்று செய்திகள் வெளியானது. ஆனால், அது நடைபெறவில்லை. மேலும், வைரமுத்து குறித்து பேச்சை எடுத்ததால் இயக்குநர் சீனு ராமசாமி மீது கோபமாக இருக்கிறார் இளையராஜா என்று இப்போது செய்திகள் வெளியாகி வருகிறது. இதனால், ‘மாமனிதன்’ இசைக் கோர்ப்பு பணிகளில் கூட சீனு ராமசாமியால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் சிலர் குறிப்பிட்டார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக சீனு ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நான் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய ’மாமனிதன்’ படத்தில் இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைப்பது அனைவரும் அறிந்ததே.இளையராஜாவிடம் அவரது புதல்வர் யுவன் என்னை அழைத்து சென்றார். இசை மூத்தவர் பாதம் தொட்டு வணங்கினேன்.”

திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டது, நீங்கள் தான் பெயர் வைக்க வேண்டும்“ என்றேன் ‘அது சரி’ என்று சிரித்தபடி வந்தார். பாடல் காட்சிகளோடு சேர்த்து 2 மணி நேரம் 17 நிமிடம் ஓடக்கூடிய முழு படத்தையும் அவருக்கு காட்டினோம். படத்தின் இடைவேளைக்கு கூட அனுமதிக்காமல் முழு படத்தையும் ஒரே மூச்சில் பார்த்து முடித்தார். படத்தில் பாடல் காட்சி வரும் போது மட்டும் உதாரணத்திற்கு “உன்ன விட இந்த உலகத்தில் உயர்த்தது ஒன்னும் இல்ல” அது மாதிரி சார் என்று மட்டும் கூறுவேன். அவ்வளவுதான்.
1000 படங்களுக்கு மேல் இசை அமைத்த இளையராஜாவுக்கு இதற்கு மேல் விளக்கம் சொல்லி நான் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.இளையராஜா பாடலுக்கு மெட்டு போடுகிறார் .அதற்கு யுவன் இசை கோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். பின்னணி இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா, எனினும் பின்னணி இசையில் எனது எண்ணங்களைக் கடிதமாக எழுதி தந்தேன். அவர் அன்போடு பெற்றுக் கொண்டார்.
படத்தில் பாடல்கள் என்று வந்த போது “அண்ணன் பழனி பாரதிக்கும் கவிஞர் ஏகாதேசிக்கும் கொடுக்கலாம்“ என்றேன் யுவன் தரப்பில் “பா. விஜய்” என்றார்கள். நான் சம்மதித்தேன். ரெக்கார்டிங் தருவாயில் “பாடல் வரிகளில் ஏதேனும் மாற்றம் வேண்டுமெனில் நீங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்றார். எனக்கு இயக்குநராக முழு சுதந்திரம் தயாரிப்பாளராக வழங்கியிருக்கிறார் யுவன். இது நான் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணி புரியும் 4-வது படம். இளையராஜாவுடன் பணிபுரியும் முதல் படம் .
’மாமனிதன்’ எனக்கு 7-வது படம். இளையராஜா மீது எனக்கு இருக்கிற நேசத்தால் அவர் பிறந்த பண்ணைபுரத்தில் கதாநாயகன் வாழும் ஊராகப் படம் பிடித்திருக்கிறேன். இளையராஜாவின் சொந்த ஊரில் அவர் நடந்த தெருக்களில் படம் பிடித்த பெருமையில் இருக்கிறேன். இதில் என் பெயரை வைத்து இளையராஜாவைச் சிறுமை படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் மேலும் நான் யாரையும் அவருக்குச் சிபாரிசு செய்யவில்லை.
என் மீது அவருக்கு கோபம் இருப்பதாகவும் கூறுவது உண்மையல்ல. நானும் யுவனும் கவிஞர் வைரமுத்துவுடன் நான்கு படத்தில் பணி புரிந்தோம்.’தர்மதுரை’யில் வைரமுத்து பாடல் வரிகளுக்குத் தேசிய விருது கிடைத்தது இந்த முறை நானும் யுவனும் இசைஞானியுடன் பணிபுரிகிறோம், நிச்சயமாக இந்த படத்தின் கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைக்குமெனக் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், தற்போது ஹாலிவுட் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்திய நாயகிகளான தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் ஹாலிவுட் திரைப்படங்கள், தொடர்களில் நடித்து வருகின்றனர். இந்தியாவை போல அங்கும் அவர்கள் தங்களுக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்குகின்றனர். தமிழிலிருந்து சுருதி ஹாசனும் ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார். தற்போது காஜல் அகர்வால் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

‘லி டோக்யோ ரிப்போர்ட்டர்’ என்ற குறும்படம் மூலம் சர்வதேச கவனம்பெற்ற இயக்குநர் ஜெப்ரி ஜீ சின் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு ‘கால் சென்டர்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. ஒரு சம்பவம் ஒரு தம்பதியரின் வாழ்க்கையை எவ்வாறு மாற்றுகிறது என்ற கதையே காஜலின் ஹாலிவுட் சினிமாவின் கதையாகும்.
ஞானவேல்ராஜாவிடம் ரூ.10 கோடி வாங்கவில்லை என்றும் இது தொடர்பாக விளக்கம் அளிக்காவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கமல் தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கமல்ஹாசன் நடிப்பில் 2015-ம் ஆண்டு “உத்தம வில்லன்” படம் வெளியானது. ரமேஷ் அரவிந்த் இயக்கி இருந்தார். இப்படத்தை கமல்ஹாசன், லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் ஆகியவை தயாரித்து இருந்தன. இதற்கிடையே “உத்தம வில்லன்” படம் வெளியீட்டின் போது கமல்ஹாசன் ரூ.10 கோடி வாங்கியதாகவும், அதை திருப்பி தரவில்லை என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இது தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தரப்பில் கூறும்போது, “தங்களுக்கும், ஞானவேல்ராஜாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திடம் மட்டுமே எங்களின் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கமல்ஹாசனுக்கு, ஞானவேல்ராஜா எந்த பணமும் வழங்கவில்லை. அவருக்கும் கமலுக்கும் எந்த விஷயத்திலும் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை இருந்தது இல்லை. கமலின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் புகார் அளித்து இருக்கிறார். இவ்விவகாரத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:- “கடந்த 2 நாட்களாக நீங்கள் (ஞானவேல்ராஜா) கமல்ஹாசனுக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக செய்திகள் ஊடகங்களில் வந்து கொண்டு இருக்கிறது. கமல்ஹாசன் ரூ.10 கோடி வாங்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். நீங்கள் கூறுவதை நாங்கள் மறுக்கிறோம்.
உங்களது தயாரிப்பு நிறுவனத்துக்கு கமல்ஹாசன் படம் நடித்து தருவதாக உறுதி அளித்தார் என்பதில் கூட உண்மையில்லை. கமல்ஹாசனுக்கு நீங்கள் ரூ.10 கோடி அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் உங்களுக்கு படம் நடித்து கொடுப்பதாக கமல்ஹாசன் உறுதி அளித்ததாக நீங்கள் கூறுவதற்கான ஆதார விவரங்களையும் உடனடியாக அளிக்குமாறு வலியுறுத்துகிறோம் அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் நீங்கள் அளித்த புகாரை வாபஸ் பெற்று அது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இதனை நீங்கள் செய்ய தவறும்பட்சத்தில் உங்கள் மீது ராஜ்கமல் பிலிம் நிறுவனம் சிவில் மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
வரலாற்று பின்னணியில் உருவாகி இருக்கும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ராம் சரண், சிரஞ்சீவி பற்றி சுவாரஸ்யமாக பேசியிருக்கிறார்.
ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ’சைரா நரசிம்மா ரெட்டி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக சிரஞ்சீவி நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தில் தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, தயாரிப்பாளர் ராம்சரண், தமன்னா மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர்கள் லிங்குசாமி, சசி, விக்ரமன், தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

ராம் சரண் பேசும்போது, ‘இந்த படம் கதையை அப்பா சிரஞ்சீவி 9 வருடங்களுக்கு முன்பாக கேட்டார். இதை பண்ண முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. பின்னர் அப்பா அரசியலில் நுழைந்ததால் தாமதமானது. மீண்டும் கதை கேட்டு இப்படத்தை தொடங்க ஆரம்பித்தோம். அப்பா என்னிடம் தமன்னாவுடன் நான் நடிப்பேன் என்று கூறினார். அதற்கு என்னுடன் நடித்த தமன்னா உங்களுடன் எப்படி நடிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால், சினிமாவில் எல்லாம் சாத்தியம், என்னுடன் நடித்த தமன்னா, இப்படத்தில் அப்பாவுடன் நடித்திருக்கிறார்.
சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் முன்னோட்டம்.
ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தயாராகி வரும் படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’. இப்படத்தில் சைரா நரசிம்மா ரெட்டியாக தெலுங்கு திரையுலகின் உச்ச நட்சத்திரமான சிரஞ்சீவி நடித்துள்ளார்.
அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை ராம் சரண் தயாரித்துள்ளார். தமிழ் நாட்டில் இதன் வெளியீட்டு உரிமையை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

ரத்னவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி வெளியாக இருக்கிறது.
கமல் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் பிரபல நடிகர் ஒருவர் சிபிஐ அதிகாரியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் - சங்கர் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம், 23 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த், ரகுல் பிரீத்சிங், சமுத்திரக்கனி, விவேக், வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் விவேக் சி.பி.ஐ. அதிகாரியாக நடிக்கவுள்ளார் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது, இதை அவரே ஒரு பேட்டியில்
தெரிவித்துள்ளார். இந்த படம், 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






